Posts

முதல் முதலாய் ஒரு மெல்லிய- 6

Image
💘 6       எல்லோரும் வேறு உடைக்கு மாற்றி தன்யா உறங்கும் வரைக் காத்திருந்தனர். பவித்ரா சுவாதி அருகே விசும்பலோடு அமர்ந்து இருந்தாள். அஸ்வின் கீழே வந்து , விஸ்வநாதனுக்கு எதிரே அமர்ந்து என்ன கேட்க வேண்டுமோ கேளுங்க என்பது போல் பார்த்திருந்தான்.    '' என்னடா இது ? இப்படி என்ன அவமானப்படுத்தற மாதிரி வீட்டுக்கு வந்தப் பெண்கிட்ட.. '' எனச் சொல்லி முடிக்கக் கூட வில்லை .    '' பவித்ராவை எனக்கு முன்னாடியே தெரியும். அந்த விஷயம் அவளுக்கும் தெரியும். நான் ஒன்னும் நீங்கக் கூட்டிட்டு வந்த கெஸ்டை விரும்பல , நான் விரும்பினப் பெண்ணை தான் நீங்க கூட்டிட்டு வந்திங்க '' என எழுந்து உள்ளே சென்று பவித்ரா கைப்பிடித்து அழைத்து வந்தான்.      இப்படி ஒருவன் தாய் தந்தை முன் அழைத்து வர கைப்பிடிப்பாநென நினைத்தாள்.   '' என்ன உனக்கு முன்னாடியே தெரியுமா ? தெரியாதா ?’’ என்று அழுத்தமாய் கேட்டான்.         பவித்ரா '' கண்ணீர் வழிய திக்கித்திணறி '' தெரியும்... ஒரு முறை பார்த்திருக்கேன் ஆனா ''    '' நான் விரும்பறேனு நேரிடைய சொன்னதில்லை சரிய

அனுவும் டினுவும்

Image
சங்கமம் என்னும் தளத்தில் "தனிமை" என்ற தலைப்பின் கீழ் எழுதி பரிசு பெற்ற கதை.                          அனுவும் 👧 டினுவும் 🐻     சுற்றிலும் இருட்டு எங்கோ தவளை எழுப்பும் சத்தம் அந்த அறையில் தெரிந்த நிழல்கள் வேறு அச்சத்தை பரவச் செய்தது.     அங்கே அதை தவிர்த்து நிசப்தம் இருக்க அந்த ஜோடிக் கண்கள் இங்கும் அங்கும் மருண்டு பார்த்து பயத்தில் இருந்தன அந்த தளிரான மொட்டுக் கண்கள்.      வெளியே தவளை சத்தம் கேட்டு வானில் இடி ஓசையெழுப்பி அதற்கு தாளம் சேர்த்தது. இம்முறை அந்த சின்னச்சிறு கண்கள் படபடத்தது. பயத்தின் காரணமாக தொண்டையில் எச்சிலைக் கூட்டி விழுங்கியது.           பற்றாதக் குறையாக இதுவரை மெல்லிய வெளிச்சம் கொடுத்த அந்த இரவு நேரம் ஒளிர்விடும் விளக்கு மின்சார நிறுத்தத்தினால் ஒளியிழந்தது.        அந்த சின்னச் சிறு கண்கள் பயத்தில் விரிந்தது. சட்டென ஜன்னல் புறத்தில் இருந்து வந்த மின்னல் வெட்டில் அந்த கண்கள் அஞ்சி ஒடுங்குவது அங்கிருந்த பல்லி அறிந்து இருக்கலாம்.         கண்களில் அச்சம் தவிர்த்து வேறு காணாத இமைகள் மெல்ல மெல்ல இருட்டினை சற்றே காண செய்ய தைரியத்தை மனதின் ஆழத்தி