முதல் முதலாய் ஒரு மெல்லிய-9

💘 9 ஆடை மாற்றி வந்தவளை பார்த்து '' போகலாமா ?'' என்று கேட்க கார் கிளம்பியது. பின்னரே , '' உங்களுக்கு என் பெயர் எப்படி தெரியும் ?'' என்று கேட்டாள். கொஞ்சம் நேரம் எடுத்தே , '' அன்னைக்கு காலேஜில உங்க அங்கிள் பெயர் சொல்லி கூப்பிட்டாங்க தட்ஸ் இட் '' என்றான். '' ஓ '' என்றவளுக்கு இத்தனை நாள் கழித்து நினைவு வைத்திருகின்றானே என அதிசயித்தாள். '' உங்க பெயர் என்ன ?'' என்று அறிந்திடும் ஆவல் பிறக்க கேட்டாள். '' அப்பாடி இப்பவாது கேட்டிங்களே... '' என சிரித்தான். தனக்கு இவ்வளவு உதவி செய்தவன் பெயரை தாமதமாக கேட்ட தன் நிலையை நினைத்து வருந்தினாள். '' என் பெயர் ஸ்ரீராம். நம்ம காலேஜில எம்.பி.ஏ கரெஸ்ல பண்றேன். '' என்று கூறினான். '' ஓ '' என்றவள் சற்று நேர அமைதிக்கு பிறகு “இந்த வீடு தான்” என்று குறிப்பிட அஸ்வின் வீட்டில் கார் நுழைந்தது. '' ரொம்ப நன்றி இத லைப் லாங் மறக்கமாட்டேன். வீட்டுக்கு வந்துட்டு போங்க , அங்கிள் , ஆன்ட்டி சந்தோஷப்படு...