Posts

ஈகோவினுள்...ஒளிந்துயிருக்கின்றன

ஒளிந்து கொண்டு இருக்கின்றன அரையுறக்கத்தில் உந்தன் அணைப்பும் உன்னிதயத்தில் என் முகப்பதிப்பும்... கசந்த குழவி இனிப்பை அள்ளி கொட்டியதாக எண்ணவைக்கும் சமயலறையில் இடைப்பற்றிய உந்தன் யிறுக அணைப்பால் கரண்டியில் துழாவி குழம்பை ருசிப்பார்த்து கண்களை உருட்டுமென்னை தாயங்கள் ஆடுகின்றாய் என்பாய் நீ... மிக பிடித்த பாடல்வரிகளில் உன் புருவத்தை ஏற்றயிறக்கம் செய்து என் போலி சினத்தில் குறுநகை செய்திடுவாய்... சட்டென சங்கமிக்கும் இதழ் ஒற்றலால் வெட்கம் சிவந்துவோட செய்வாய்... உந்தன் வருகைக்காக நேரங்களை நெட்டிமுறித்து இனிய நினைவுகளோடு காத்திருப்பேன் இவை யெல்லாம் ஒளிந்து கொண்டு யிருக்கின்றன நீயும் நானும் போடும் சண்டைகளில் யார் முதலில் பேசுவது என்ற ஈகோவினுள்...                              -- பிரவீணா தங்கராஜ் .

பொய்கள்

அடுக்கடுக்கான பொய்கள் முழுமனதுடன் இயல்பாக கதைக்கிறேன் என்னை முழுமையாக அறிந்த மனதிடமே நலமாக வளமாக இருக்கின்றேன் நகைகள் பல அணிந்து நகர்வலமாக ஊர் சுற்றி பார்க்கின்றேன் காதலுடன் ? பெற்ற குழந்தையை கைப்பிடித்தே கேட்டதை வாங்கி கொடுக்கின்றேன் இப்படியாக என் சில பொய்கள் என்னை அறிந்த மனதிடம் இயல்பாக கதைகின்றேன் எந்தன் நலனின் அக்கரையில் பாதிக்கும் மேலாக முழுதும் கரைந்த பணமும் மனமும் இனியாவது இருதங்கையை கவனிக்க வேண்டியே என்னை அறிந்த என் தாயின் மனதிடமே திடமாக பொய் கதைக்கிறேன் என் நலனில் எக்குறையும் இல்லையென ...                 --- பிரவீணா தங்கராஜ்

உறவாக வருவாயா

Image
             உறவாக வருவாயா                                         அது பிரபலமான மருத்துவமனை சௌம்யா அங்கே அமர்ந்திருந்தாள். அங்கே அவளது பெயரை உச்சரித்து வென்னிற ஆடை அணிந்த செவிலி அழைக்க,  தனது வெறுமைக் கொண்ட பார்வையை தரையிலிருந்து எடுத்து பார்த்து எழுந்தாள்.    "சௌம்யா நீங்களா?" என்றதற்கு "ம்.." என்று தலை அசைத்து அங்கிருந்த அறைக்குச் சென்றாள்.                             அங்கிருந்த அறையில் கண்ணாடி அணிந்து மருத்துவ உடையணிந்த பெண் மருத்துவர்,    '' உங்க ரிப்போர்ட் வந்துடுச்சு சௌம்யா உங்களுக்கு .... ''  என ஆரம்பித்து பேசிக் கொண்டே போக அந்த பதில் அவள் இதற்கு முன் சென்ற மருத்துவமனையின் பதிலையே கூறினர்.              அதனால் சுவாரஸ்யமின்றி இருந்தாள். இருதுளி கண்ணீர் வர அதை துடைத்துக் கொண்டு ரிப்போர்ட் பெற்றுக் கொண்டு எழுந்தாள் . ஏற்கனவே பணம் செலுத்தியதால் நேராக தனக்காக வெளியே காத்திருக்கும் கணவனிடம் காரில் ஏறி அமர்ந்தாள்.       ''நான் தான் ஹாஸ்பிட்டலே வேண்டாம் என்றேனே . நீ தான் கேட்க மாற்ற சௌம்யா''       ''ப்ளீஸ் கௌதம் பக்கத்

மனசாட்சி என்று பெயர்

எனக்கு வெளியே இருந்து கொண்டு எதிர் மறையாக நடப்பவன் நீ நான் உள்ளே கொதித்திருப்பேன் நீயோ வெளியே போலியாக சிரிப்பாய் பிறர் பார்க்க வேடமிடும் வேடதாரி உள்ளுக்குள் இரட்டைவேடம் என்கின்றாய் நான் நானாக தான் இருக்கின்றேன் நல்லவனோ தீயவனோ உள்ளிருக்கும் எனக்கு நான் உண்மையானவன் வெளியே இருக்கும் நீ தான் மனிதருக்கு மனிதன் வித்தியாசம் காட்டி பாகுபாடு கொண்டே நடிக்கின்றாய் விருப்பமின்றி இருப்பினும் சிரிக்கின்றாய் புகழ்கின்றாய் பொய்யாக எனக்கு வெளியே இருந்து கொண்டு எதிர் மறையாக நடப்பவன் நீ பிறருக்கு எப்படியோ கண்ணாடி முன் இருக்கும் உன்னிடம் மட்டுமாவது உண்மையாக நட அப்பொழுது தான் உள்ளிருக்கும் எனக்கு மனசாட்சி என்று பெயர் சொல்லிக்கொள்வேன்                                          -- பிரவீணா தங்கராஜ் .  

👉தலைப்பு --இலக்கியத்தில் இளைஞர்களின் ஈடுபாடு

Image
         👉தலைப்பு --இலக்கியத்தில் இளைஞர்களின் ஈடுபாடு                                  ஆயிரம் மொழிகள் தோன்றி மறைந்தாலும் தமிழ் மொழியினை போல இன்சுவை கொண்ட மொழி எதுவுமில்லை . அத்தகைய தமிழ் மொழியில் இலக்கியம் பெரும் பங்கு கொண்டது . அக்காலத்தில் இலக்கியம் பலரும் அறிந்தே இருந்தனர் . தற்காலத்தில் இலக்கியம் பேசும் இளைஞர்களை பார்க்கும் பார்வையே வேறு தான் .                                           என்ன தான் ஆங்கிலம் , இந்தி , பிரெஞ்சு என்று திணித்து கற்றுக் கொண்டாலும் தமிழ் தாயை மறக்க முடியுமா ? தாய் தமிழ் இலக்கியத்தை தாலாட்டாத இளைஞர்கள் இல்லை எனலாம் .               இளைஞர்கள் கருத்துப்பிழை , எழுத்துப்பிழையின்றி இலக்கியத்தில் காலூன்றவில்லை என்றாலும் கவிதை , கதை , கட்டுரை போன்ற இலக்கியம் சார்ந்தவற்றில் ஈடுபாடு கொண்டு தான் இருக்கின்றார்கள் .                                                        பாரதி அறியாத சமூகம் இல்லை . திருக்குறள் தெரியாத மனிதன் இல்லை . அப்படி யிருக்க இலக்கியத்தில் இளைஞர்கள் பங்கு உண்டே ...                     சங்கம் வைத்து முன்பு போல இலக்கியம் வளர்க்காவிட்டாலும் சில

எழுதுகோல் பேசுகின்றேன்

Image
உன் எண்ணத்தை எல்லாம் மையாக ஊற்றி கொட்டிவிடு அது உந்தன் பட்டாம்பூச்சி கனவாக இருக்கட்டும் உந்தன் பாவாடை தாவானி பருவமாகட்டும் உள்ளுக்குள் ஒளித்த ஒரு தலை காதலாகட்டும் நல்கிய நல்லறமாக இருக்கட்டும் வலி தந்த தாய்மையாகட்டும் செவி தாக்கிய வன்சொற்களாகட்டும் இப்படி இப்படியே பல என்னவாகவோ இருக்கட்டும் கொட்டிவிடு என்னிடம் கண்ணீரை மையாக தாளில் நிறைத்து உன் மனதை இலகுவாக்குகிறேன் நான் தான் எழுதுகோல் பேசுகின்றேன்.                  -- பிரவீணா தங்கராஜ் .

விழிவாளால் - காதல் பிதற்றல் 32

விழியாலே உயிரை வதைக்க செய்ய முடியும் என்பதை உன் விழிவாளால்  தான் அறிந்தேன் .           -- பிரவீணா தங்கராஜ் .

குடும்பம்

 உறவுகள் தொலைக்கின்ற நேரத்தில் உன்னத குடும்பமென காட்டுங்கள் பஞ்சாய் பறந்திடும் கவலைகள் நெஞ்சை இனித்திடும் குடும்பங்கள் தங்கை  தமயன் உறவுகள் வேண்டும் தனக்கென துணையாய் நின்றிட வேண்டும் ஒன்று பெற்று உருகிடும் அன்பில் ஒற்றுமை சற்றே குறைந்திடும் உலகில் பல்க பெற்றே வாழ்த்திடுங்கள் பகிர்ந்தே மனதை விதைத்திடுங்கள் அன்பை விதைத்து மகிழ்ச்சி பெறுக கண்ணை போலவே நற்குடும்பம் சிறக்க...!                        -- பிரவீணா தங்கராஜ்

@ நான் விரும்பும் என் முகம் @

முகமூடி அணிந்து    பேசிடும் பழக்கமில்லை அகம் நாடும் உள்ளுணர்வு    சொல் கேட்டுடும் வழக்கதினால் புன்னகையே எந்தன்    விருப்பமான அணிகலன் தன்னம்பிக்கை தைரியமும்     எந்தன் சொத்து இன்னலை இனிதே      கையாள்வேன் இசைக்கு மட்டுமே      தலை அசைப்பேன் பொய் பேசி பிரச்சனையை      முடக்குவதை விட மெய் பேசி பிரச்சனையை        எதிர் கொள்வேன் எல்லாம் நன்மைக்கே     என்பதை ஏற்பேன் நற்கவியில் வாசித்து     என்னை லயித்திடுவேன் கடலளவு கவிதையில்   ஒரு சொட்டு கிணற்று நீர் நான் ஆம் ...    எழுத்து உலகில் ஒரு      துளி மையாக படைத்திடவே நான் விரும்பும் என் முகம்.             -- பிரவீணா தங்கராஜ் .

பன்றி ஹைக்கூ

Image
பன்றி – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum