உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...! 💟(௧)1 தனது வெண்ணிற புரவியில் சப்தம் வந்த திசையை நோக்கி விரைந்துச் சென்று கொண்டுயிருந்தான் மித்திரன். திசை வந்த இடம் நோக்கி புரவியில் இருந்து குதித்து தனது உடைவாளை எடுத்தான். அந்த பாழடைந்த கோவிலில் யாருமில்லை என்று சொன்னாலும் அவனது உள்ளுணர்வு யாரோ இருப்பதாகவே எடுத்துரைக்கச் சுற்றிமுற்றி கண்களை சுழல விட்டவன் ஒரு தூணில் அருகே வந்ததும் அவனின் மீது வாள் ஒன்று வர நொடியில் சுதாரித்து தனது உடைவாளால் அதனைத் தடுத்தான். ''பின்னிருந்து தாக்கும் வீரன் எவனோ? முன்னே வந்து நேருக்கு நேராக வாள் வீச அச்சமோ?'' என்ற மறுநொடி அந்த வாளுக்குச் சொந்தமான கைகள் முன்னே வந்து நின்றது....