முரண்

முரண் மாதத்தின் முதல் நாளே மளிகை பொருட்கள் வாங்க சுபாவும் வனிதாவும் புறப்பட்டார்கள். வனிதா சுபா இருவருமே 'க்ரீன் லீவ்ஸ் அப்பார்ட்மெண்ட்' வாசிகள். பெரும்பாலும் இருவரும் இங்கு குடிப்புகுந்து ஆறுமாதமாகின்றது. இருவருக்கும் எதிரெதிர் வீடு என்பதாலும் ஒரே வயது கொண்ட மங்கைகள் அதிலும் இருவரும் கேரம்போர்டு சாம்பியன் என்று நல்ல சிநேகிதம் உருவாகியது. இருவரின் கணவர்களும் சென்றப்பின், தனியாக இருப்பதால் இருவரின் பொழுது போக்கில் பாதி நேரம் கேரம்போர்டு தான் ஆக்கிரமித்து இருக்கும். இப்படி சில நேரம் மளிகை கடைக்கு, காய்கறி கடை, டிரஸ் வாங்குவது என்பதற்கு சேர்ந்து போகவும் இவர்களின் கணவர்மார்களுக்கு பாதி டென்ஷன் அகன்றது. சுபா போகும் போதே மளிகை கடைக்கு சென்று அண்ணாச்சி கடையில் லிஸ்டு கொடுத்து விட்டு போட்டு வையுங்க அண்ணா" என்று கூறி நகர்ந்தாள். வனிதாவோ சூப்பர் மார்க்கெட் போகவும...