பஞ்சதந்திரம்-3
பஞ்சதந்திரம்-3 முதலில் யாரை பற்றி அறிவதென மீண்டும் தலையாய பிரச்சனை எழும்பியது. நைனிகா தான் கடைசியாக கூறுவதாக தோளைக் குலுக்கினாள். ரஞ்சனாவோ "அப்போ நான் இவளுக்கு முன்ன சொல்லிக்கறேன்." என்று அவளை போலவே தோளைக் குலுக்கவும் நைனிகா எரிச்சலடைந்தாள். "என் பேரண்ட்ஸே பரவாயில்லை." என்று சலித்தபடி நைனிகா மெத்தையில் படுத்து காலாட்டி, "யார் சொல்லறிங்களோ சொல்லுங்க. விருப்பமில்லையா விடுங்க. ஐ டோண்ட் கேர். பட் தூங்கிட்டு காலையில எழுந்துப்போம். அதான் இறப்பை தள்ளி போட வச்சிட்டிங்களே." என்று ஆதங்கப்பட்டாள். "நீ வேண்டுமின்னா உன் ரூம்ல இங்கயே தூக்கு போட்டுக்கோ" என்று ரஞ்சனா ஐடியா தர, "என்ன நீ என்னை நோண்டிட்டே இருக்க?" என்று எகிற, "கொஞ்சம் நிறுத்துங்க" என்றார் மஞ்சரி பாட்டி. வயதில் பெரியவர் என்பதால் சற்று அமைதியாக இருந்தார்கள். "மூச்சு வாங்குதுடா... என்னைலையும் இப்ப பகிர முடியலை. குழந்தையும் தூங்கறா. திரிஷ்யா உன்னை பத்தி சொல்லலாமே. குழந்தை இருக்குனு சொன்ன. குழந்தை தேடாது. அப்படியென்னமா ஆச்சு." என்று மஞ்சரி கேட்டதும் திரிஷ்யா அழுதாள்....