Posts

முதல் முதலாய் ஒரு மெல்லிய-5

Image
  💘  5        அடுத்த நாள் கல்லூரி கிளம்பும் போதே , இன்று எப்படியாவது அஸ்வினோடு போவதை தவிர்க்க லேட்டாக செயல்பட்டாள். ஆனால் அவளுக்கு தெரியாது அஸ்வின் அவளது சிறு அசைவையும் கவனித்து அவனும் தாமதம் ஏற்படுத்திக் கொண்டான். பவித்ரா விஸ்வநாதனிடம் '' அங்கிள் எனக்கு டைமாகும் போல இருக்கு அவரை வேணும்னா கிளம்பிப் போகச் சொல்லுங்க அங்கிள் '' எனக் கூறினாள். கல்லூரி என்பதால் முதல் வகுப்பு தாமதமாக சென்றாலும் கவலையில்லை. அலுவலகம் அப்படியில்லையே. '' இதே தான் அவனும் சொன்னான். டைமாகும்னா சேர்ந்தேப் போங்க நான் கிளம்பறேன் '' என சென்றார். இது என்னடா வம்பா போச்சு , எப்பவும் போல கிளம்பி இருந்தாலும் நான் முன்னாடிப் போய் இருப்பேனென தன்னையே நொந்துக் கொண்டாள் பவித்ரா   . பைக்கில் அமர்ந்தப் பின்னும் எப்பொழுதும் போலப் பேசாது வந்தனர். பவித்ராவுக்கு சற்று அச்சம் ஏற்பட இறங்கும் போது தொலைப்பேசி எடுத்து ‘’ஹலோ அப்பா” என தானாக பேசிக் கொண்டு கல்லூரிக்குள் நுழைந்தாள்.      அஸ்வின் அவளை '' பவித்ரா '' என மெதுவாக கூற கேட்டும் கேட்காது போல் நடந்தாள். வகுப்பறை வந்தும் பதட்ட

முதல் முதலாய் ஒரு மெல்லிய-4

Image
       💘  4        நாலு நாட்கள் ஓடின... ஞாயிறு வந்தது.  பேப்பர் படித்து மடித்து வைத்த விஸ்வநாதன் நிமிர '' என்ன பவித்ரா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமே ?'' என்றார். '' இந்த சில்லுனு கிளைமேட் , எனக்கு ரொம்ப பிடிக்கும் அங்கிள். அதுவும் இல்லாமல் பழகிடுச்சு. '' என்றாள் பவித்ரா.       தன்னை யாரோ கவனிக்கின்றனரென உணர பால்கனியைப் பார்க்க அஸ்வின் அறையில் இருந்த திரைசீலை அசைந்தது. தனு எழுந்தப் பின் ஆகாஷ் , சுவாதியும் வந்து விட அரட்டைக்கு பஞ்சமின்றி இருந்தன. அஸ்வின் மட்டும் வெளியேச் செல்ல , ஆகாஷ் என்.வி வாங்க கடைக்குச் சென்றான். டிவியில் நிகழ்ச்சி போர் அடிக்க யாருக்கு என்ன படம் பிடிக்கும் என தனு , சுவாதி , பவித்ரா கூடிப் பேசினார்கள்.     தனுவோ '' ரெண்டு அண்ணா ரூம்லயும் நிறைய மூவி கலெக்சன்ஸ் இருக்கும் வாங்க போய் பார்த்து எடுத்துட்டு வரலாம் '' னு ஐடியா கொடுக்க சுவாதியும் ஆமோதித்தாள். ராதை யோ '' போ பவித்ரா நீ இன்னும் மேல ரூமைப் பார்க்கலை போய் பாரு '' என அனுப்பினார். கீழே கேட் திறந்தாள் கொஞ்சம் தோட்டம் நாலு இ

முதல் முதலாய் ஒரு மெல்லிய -3

Image
  💘  3         இனிதாக இரு நாட்கள் நகர்ந்ததே அறியாதுச் சென்றன. திங்கள் காலை வேளை உதித்தது .  பவித்ரா இன்று இயல்பானா பணி முடிந்து பரபரப்பாக இயங்கினாள். தலை குளித்து நீண்டப் பின்னலில் , ராதை கொடுத்தப் பூவைச் சூடி , இளஞ்சிவப்பு சுடிதாரில் ஹாலுக்குள் நுழைந்தாள்.   '' அங்கிள் எந்த பஸ் எப்படி போகணும்னு தெளிவா சொன்னிங்கன்னா கொஞ்சம் ஈஸியா இருக்கும். '' என்று வந்து நின்றாள்.     '' முதல் நாள் பயப்படாம ரிலாக்ஸா போகணும். அதனால  அஸ்வின்கிட்ட கேட்டேன் ,  அவன் ஆபீஸ் போகற வழி என்பதாலா உன்னை பிக் அப் பண்ணிக்கறதா சொல்லிட்டான் '' என்றார் அவர். தங்கள் வீட்டில் இருக்கும் பெண் தங்கள் மகன் அழைத்து செல்வதில் அவருக்கு ஒரு கருத்தும் தோன்றவில்லை. அதுவும் அஸ்வின் பேசுவதே அரிது. அதனால் கொண்டு சென்று அமைதியாக வருவான் பவித்ராவும் பேசாமல் இருப்பாள். இங்கு வந்த நாளில் அப்படி ஒன்றும் தனது இரு மகனிடமும் பேசி அவர் பார்த்ததே இல்லை. எல்லாம் மகள் தன்யாவிடம் மட்டுமே.     பவித்ராவுக்கோ ‘அஸ்வினா ? ’ என மனத்திரையில் ஒரு கேள்வி எழும்பியது.        '' பரவாயில்லை அங்கிள் நான்