Posts

முதல் முதலாய் ஒரு மெல்லிய-10

Image
    💘  10           காலை ராதை எழுந்து தினசரி பணியை மேற்கொள்ள , நேரம் ஆனபோதும் பவித்ரா எழுந்து வராததைக் கண்டு ராதை எழுப்ப , பவித்ரா உடல் காய்ச்சல் அடித்தது. அஸ்வின் மாத்திரை கொடுத்தும் வாங்க மறுத்திட , ராதை கொடுத்த பாலையும் அருந்த மறுத்தாள். தன்யா, ஆகாஷ் , விஸ்வநாதன் , அஸ்வின் என பள்ளி , அலுவலகம் சென்ற பின்னர் ராதை சாப்பிட கூப்பிட்டும் , ஸ்ரீராமை உள்ளே கூப்பிடாததை சொல்லி சாப்பிட வர மறுத்தாள். தொலைப்பேசி மணி அடிக்க ராதை எடுத்து பேசினாள் . அஸ்வின் பவித்ராவைப் பற்றிக் கேட்க , பவித்ரா சொன்னதை அஸ்வின்கிட்ட சொன்னாள் , காய்ச்சல் அதிகம் ஆனதையும் கூற , நான் அரை மணி நேரத்தில் வர்றேன் என அஸ்வின் போனை வைத்தான். அரை மணி நேரத்தில் அஸ்வின் ஸ்ரீராம் இருவரும் வந்துச் சேர்ந்தனர் . '' உள்ள வா... வாங்க '' என அஸ்வின் வரவேற்க , ஒரு வெற்றிப் புன்னகையோடு ஸ்ரீராம் உள்ளே வந்தான். அஸ்வின் , ராதையிடம் ஜூஸ் , டிபன் எடுத்து வர சொன்னான். '' பவித்ரா அடம் பிடிக்காம சாப்பிடு '' '' எனக்கு ஏதும் வேணாம் '' என திரும்ப ஸ்ரீராம் அங்கே நின்றிருந்தான். '&

முதல் முதலாய் ஒரு மெல்லிய-9

Image
  💘 9         ஆடை மாற்றி வந்தவளை பார்த்து '' போகலாமா ?'' என்று கேட்க கார் கிளம்பியது. பின்னரே , '' உங்களுக்கு என் பெயர் எப்படி தெரியும் ?'' என்று கேட்டாள். கொஞ்சம் நேரம் எடுத்தே , '' அன்னைக்கு காலேஜில உங்க அங்கிள் பெயர் சொல்லி கூப்பிட்டாங்க தட்ஸ் இட் '' என்றான்.  '' ஓ '' என்றவளுக்கு இத்தனை நாள் கழித்து நினைவு வைத்திருகின்றானே என அதிசயித்தாள்.   '' உங்க பெயர் என்ன ?'' என்று அறிந்திடும் ஆவல் பிறக்க கேட்டாள். '' அப்பாடி இப்பவாது கேட்டிங்களே... '' என சிரித்தான். தனக்கு இவ்வளவு உதவி செய்தவன் பெயரை தாமதமாக கேட்ட தன் நிலையை நினைத்து வருந்தினாள். '' என் பெயர் ஸ்ரீராம். நம்ம காலேஜில எம்.பி.ஏ கரெஸ்ல பண்றேன். '' என்று கூறினான். '' ஓ '' என்றவள் சற்று நேர அமைதிக்கு பிறகு “இந்த வீடு தான்” என்று குறிப்பிட அஸ்வின் வீட்டில் கார் நுழைந்தது. '' ரொம்ப நன்றி இத லைப் லாங் மறக்கமாட்டேன். வீட்டுக்கு வந்துட்டு போங்க , அங்கிள் , ஆன்ட்டி சந்தோஷப்படு

முதல் முதலாய் ஒரு மெல்லிய-8

Image
                                💘  8                                அடுத்த நாளும் பெயருக்கு சாப்பிட்டுக் கிளம்பினாள். அஸ்வின் பைக்கில் ஸ்டார்ட் செய்கையில் வேண்டுமென்றே பிரேக் போடா அவளது தோல் அஸ்வினை இடித்தது. பவித்ரா சற்றுத் தள்ளி அமர்ந்து வண்டியை இறுகப் பற்றினாள்.      விஸ்வநாதன் ஜன்னல் வழியாக இதை எல்லாம் கவனிக்கத் தவறவில்லை. ஆனால் அஸ்வினை கண்டிக்கத் தான் இயலவில்லை. அவர் மனதிலும் பவித்ராவை இந்த வீட்டு மருமகளாக ஏற்கும் ஆசை தான் அதற்குக் காரணம். எப்பொழுதும் போல் கல்லூரி அடைந்தவுடன் திரும்பி பார்க்காது நடந்தாள். அஸ்வின் ' எவ்வளவு தூரம் ஓடுறியோ ஓடு ' என மனதில் நினைத்துக் கொண்டான். இப்பொழுது தான் வந்து பயில்வது போல் இல்லாமல் சூழ்நிலையாவும் இயல்பாக மாறியது புது மாணவி என்ற நினைவேயின்றி கல்லூரியிலும் தோழிகளிடமும் ஐக்கியம் ஆனாள். ஆசிரியர் யாரோ இறக்க நேரிட , இன்று எப்பொழுதும் விடும் நேரத்தை விட அரை மணி நேரம் முன்னதாகவே கல்லூரி மணி ஒலித்தது. கல்லூரியில் இருந்து சற்றுத் தள்ளி இருந்த பஸ் ஸ்டண்டில் காத்திருந்தாள். திடீரென பின்னாளில் இருந்து அவளது கண்ணை யாரோ மூட திரும்பிப் ப