🩸-3 டெய்சி மருத்துவமனையில் ஸ்டக்சரில் கொண்டு செல்ல அவ்விடம் பார்த்தவளுக்கு இதயம் தாறுமாறக துடித்தது. மூச்சிரைக்க திரும்பி "இவ்விடம் வேண்டாம்" என்றாள். டெய்சியின் தமிழ் நியூயார்க் மக்களின் அறிவுக்கு சென்றடையவில்லை. ஆண்டர்சனுக்கு மட்டும் டெய்சியின் பேச்சு எங்கோ எதிரொலித்தது போன்ற உணர்வு. சுவாசக்காற்றை பொருத்தி அங்கே டாக்டரும் செவிலியும் உயிரை காக்க போராட, அங்கே பனியில் உருவான புகையில் இருந்து கண்கள் அற்ற உருவம் மருத்துவ உடையணிந்து வாயினை பொத்தி அருகே வந்தது. அது டெய்சியினை சிகிச்சையளிக்கும் மருத்துவர் உடலில் சென்று கலந்தது. டெய்சி இதயம் வேகமெடுத்தது... உபகரணங்கள் பொருத்தி இதயத்துடிப்பை சரிபடுத்த முயன்றனர் செவிலியர்கள். மருத்துவ உடையணிந்த மருத்துவரோ டெய்சி அருகே வந்து அவளுக்கு மட்டுமே கேட்கும் விதத்தில், அவ்வறையே அதிர உச்சபட்ச குரலில், "மனதின் எண்ணங்கள் நற்நாற்றம் வீச வேண்டும். அதுயில்லயேல் இதயம் தீய எண்ணங்களை தூவி மூளைக்கு கெடுதல் செய்தி அனுப்பி, விசுவாசமாக இருக்க வேண்டிய இடத்தில் உயிரை குடிக்க ஏற்றுவிக்கும். ஆதலால் இதயம்