மர்ம நாவல் நானடா-23 (முடிவுற்றது)

  அத்தியாயம்-23    யாஷிதா அவனின் முனங்கல் கேட்டு மாடி ஹாலில் நடந்தவள் திரும்ப, வேகமாய் வந்தவன் அவளை இடித்து, அணைத்து உருண்டப் பின்னே சுதாரித்தான்.    அவள் மீது தன் தேகத்தை மொத்தமாய் சரித்திருந்தான். அந்த களோபரத்திலும் அவள் தலைக்கு முட்டுக்கொடுத்து அவள் சிரத்தை தாங்கியிருந்தது வலது கை. இடது கையோ அவளது இடையை வளைத்திருந்தது.   அவளோ சுற்றம் மறந்திருக்க, ஹரிஷின் கணம் தாளாமல் எழ முயன்றாள். ஹரிஷே வேகமாய் பதறிவிட்டு எழுந்திட, இருவருக்கும் மூச்சு வாங்கியது.    "நான் என்ன இன்னும் இன்விசிபிளாவா இருக்கேன்." என்று யாஷிதா கேட்க, "இ.. இ..ல்லை என்று தலையாட்டவும் அவனது முகமாறுதல் அவளுக்குள் ரசிப்பை ஏற்படுத்த, அளவிடாத காதலை நெஞ்சில் எடுத்துரைத்தது.    இதற்கு மேல் மனக்கடலில் காதல், கடலணை  உடையவும், யாஷிதா அவன் காலரை பற்றி இழுத்து, அலமாரி கதவை திறந்து, உள்ளே நுழைந்து சாற்றினாள்.      "உன்கிட்ட நிறைய பேசணும். என்னால இதுக்கு மேல மறைக்க முடியலை.     ஏதாவது கிறுக்குதனமா பேசிட்டு பிறகு நீ பின்வாங்கிட்டா? அதனால கேட்கவே தயக்கமாயிருக்கு. ஆனா கேட்காமலும் இங்கிருந்து போக முடியலை. நானும் இந்த பேச

மர்ம நாவல் நானடா-10

 அத்தியாயம்-10

    தமிழ்நாட்டில் தேனி மாவடத்தில் மேகமலை அமைந்துள்ளது. சின்னமனூர் நகரத்திலிருந்து மலைப்பாதை வழியாக பெரிய மலைகளும் பசுமையான மரங்களும், தேயிலை பயிர்களும் காபி தோட்டங்களும் கண்ணுக்கு குளிர்ச்சியாக, அழகாவும், ஆழமான பள்ளதாக்குகளும் சூழ்ந்தபடி மேகமலை இருக்க அங்கே வாகனத்தை மெதுவாக, கவனமாக செலுத்தினான் ஹரிஷ்.

   அப்பொழுதும் அந்த வழி சாலையை கண்டு, பயந்து தான் பயணித்தான். ஒரளவு சீராக இருந்தாலும் ஆங்காங்கே கல்லும் குழியுமாக இருந்தது.

   ஊட்டி, கொடைக்கானல், மூனாறு வரிசையில் மேகமலையும் சேர்த்துக் கொள்ளலாம். அப்படி மேகங்கள் தழுவிய பனிமலை, அழகாக ரசிக்கும் படி இடங்கள் இருந்தது. பறவை சரணாலயங்கள், பாம்பு வவ்வால்கள் என்று இங்கும் அரிதான தனிஇனங்களில் இருக்க தான் செய்தது.

    ஆங்கிலயர்களின் 1920-ல் இவ்விடத்தை கண்டறிந்து இங்கே தேயிலை தோட்டத்தை நியமித்திருந்தனர்.
  
   18 வகையான கொண்டை ஊசிவளைவுகள் இருக்கும் என்பதால் பாம்பை போல மெதுவாக தான் ஊர்ந்து வண்டியை செலுத்தினான். அப்படியிருந்தும் இரண்டு மூன்று இடத்தில் இடிப்பது போல சென்றுவிட்டு நிதானித்தான் ஹரிஷ்.

    ரஞ்சனோ "டேய்... உன் காதலியை பார்க்க போறேன்னு என்னை எமனோட காதலிக்கு வாக்கப்பட வச்சிடாத டா." என்று கண்ணை இறுக மூடிக்கொண்டான்.

   "நீ மூடிட்டு இருந்தாலே வண்டியை ஒழுங்கா ஓட்டுவேன்" என்று ரஞ்சனை திட்டிவிட்டு பாதைகளை பக்குவமாய் கடந்தான்.

ஹைவேஸில் மேல் ஆணை கீழ்அணை, தூவாணம் அணை, வெள்ளியாறு, இரவங்கலாறு மணலாறு என ஐந்து வகையான அணைகள் இருந்தது.

   ஹைவேஸில் பிடிக்கப்படும் மீணை பிடித்து அங்கேயே வறுத்து தர, அதன் வாசம் ரஞ்சனை இழுக்க வண்டியை நிறுத்தி சுவைத்தார்கள்.

    டீத்தூள் மற்றும் காபி மணமும் ஹரிஷை வசமிழுக்க செய்ய, அவனுக்கு யாஷிதா நினைவு தாக்கியது.

   இப்பொழுது அவள் என்ன செய்து கொண்டுயிருப்பாளோ. தன் வீட்டில் தன்னறையில் வயசு பெண். தன்னை அணைத்த சுகத்தை காபி மணதோடு, தற்போதும் அவள் அணைப்பை எண்ணி சிலிர்த்தான். தனக்குள் அவளை பற்றிய எண்ணங்கள் கைகால்கள் முளைத்து காதலெனும் பறவையாக சிறகை விரிக்க தயாராக, அது காதல் அல்ல என்று தனக்குள்ளே விழுங்கினான்.

   அக்னி பழமாக அவனுக்குள் வேரூன்றி தீஞ்ஜூவலையாக அவள் வளர்வதை அறியாத ஹரிஷோ 'இது உதவி' என்ற எண்ணத்தை அழுத்தமாய் கூறிக்கொண்டான்.

    ஹரிஷை தொடர்ந்து வந்த அருள் கும்பலும் மெதுவாக அதேயிடத்தில் டீயை பருக காட்டு யானைகள் அந்த பக்கம் ஊர்வலமாக நடந்தது. ஹரிஷ் அதனை தன் செல்லில் படமெடுத்தான்.

    யானைகளில் ஒன்று அருள் கும்பலிருக்கும் திசையை கடக்க வண்டியை இடித்தது.

  உள்ளிருந்த அருளின் கூட்டாளி நட்ராஜ் உயிர் பயத்தில் தவிக்க, யானை காரின் பக்கவாட்டு கண்ணாடி மட்டும் சேதாரமாக்கியது.

    "நல்ல வேளை சார். காரை பள்ளத்துல தள்ளி விட்டுடுமோனு பயந்துட்டேன்" என்று ஹரிஷ் தான் கதவை திறந்து நட்ராஜை வெளியே நிற்க வைத்தான். நட்ராஜூக்கு கைகள் நடுக்கம் கொண்டது. ஒரு செகண்டில் மரணவிளிம்பில் சென்றது போல இறப்பை கண்டுவிட்டார் யானை உருவத்தில்.

   "தேங்க்ஸ் தம்பி... ஒன்னும் ஆகலை." என்று பதில் தர ரஞ்சனோ தண்ணீரையும் டீயும் வாங்கி தந்தான்.

    அதன் பின்னரே சற்று தொலைவில் இருந்த அருளும் மற்ற மூவரும் வந்தார்கள்.
  
    "அட நம்ம ஹோட்டல்ல சந்திச்சிருக்கோம். நீங்களும் மேகமலைக்கு தான் வந்திங்களா?" என்று ஹரிஷ் கேட்க அருளோ "ஆமா தம்பி" என்று பேச்சை வளர்க்காமல் துண்டிக்க முனைய, யானையால் அரண்ட நட்ராஜோ சகஜமாய் ஹரிஷிடம் தன் பயத்தை தற்போதைய மனநலத்தை விவரித்தான்.

     அருளோ ஹரிஷ் தங்களை கண்டறிந்து விட்டானோ என்று தான் பயந்து ஒளிந்தான். நட்ராஜனுக்கோ தனக்கொன்று என்றதும் வந்த ஹரிஷ் மீது லேசாய் பிடித்தம் ஏற்பட்டது.

   அப்படியிருந்தும் ஒரு கைக்குலுக்கலோடு பிரிந்தார்கள்.

     ஹரிஷ் தான் தங்கள் கார் அருகே வந்து, "அவங்களுக்கும் நமக்கும் ஜென்ம ஜென்மா பழகினவங்க போல இல்லை. நம்ம சென்னயிலயிருந்தே கூடவே வர்றாங்க" என்று சிலாகித்தான்.

   "ஆஹ்.. ஜென்ம ஜென்மா பழகியவங்களா இருக்க மாட்டாங்க. ஜென்ம பகையாளியா இருக்க போறாங்க. ஒவ்வொருத்தனும் எப்டடியிருக்காங்கானுங்க. முதல்ல ஒரு இடத்துல தங்கலாம் டா. இடம் பாரு." என்று ரஞ்சன் உண்மையை தான் அவனறியாது உளறினான். சில நேரம் இப்படி தான் நம்மை அறியாமல் உளறுவோம் அது உண்மையாக இருக்கும்.

     ரஞ்சனின் துளைக்கும் பேச்சால் தங்க இருப்பிடம் தேடினார்கள்.
  காட்டேஜ் ஆங்காங்கே சுற்றுலா ஆட்கள் வந்து தங்க இருந்தது. அதில் ஒன்றில் தங்குவதற்கு பணத்தை செலுத்தி அறை நம்பரை பெற்றார்கள்.

    இவர்கள் தங்கிய அதே காட்டேஜில் அருளும் வந்தான். எதச்சையமான சந்திப்பாக காட்டிக் கொண்டாலும், ஹரிஷுக்கு என்னவோ 'பின்னாடியே மோப்பம் பிடிக்கிறாப்ள லுக்குவிடறாங்க' என்று பெரிதாக யோசிக்கவில்லை.

அவனை பொறுத்தவரை புதுவீட்டில் தன்னை கண்கானித்து, யாஷிதா பிரச்சனையால் தன்னை பின் தொடர்ந்து வருவார்களென்று அவனுக்கென்ன ஜோசியமா தெரியும்.

   இங்கு வந்தப்பின் யாஷிதாவை பற்றி விசாரித்தப்பின் வேண்டுமென்றால் தன்னை பின் தொடர வாய்ப்புண்டு என்று எச்சரிக்கையாக மாறினான்.

    வெதுவெதுப்பான நீரில் ஒரு குளியலை வம்படியாக போட்டான். கார் ஓட்டி வந்ததன் காரணமாக முதுகும் உடலும் புத்துணர்வு பெறவே.

     ரஞ்சனும் ஹரிஷும் இன்றைக்கே எதுவும் ஆரம்பிக்காமல் உறக்கத்தை நாடினார்கள்.

    இரவில் ரஞ்சனோடு மெத்தையில் படுத்திருந்த ஹரிஷ். "யாஷி... ஆர்யூ ஓகே. உன்னை அணைச்சிக்கவா?" என்று தூக்கத்தில் உளர, "டேய் மாப்பி நான் ரஞ்சன் டா. என்னை வுட்டுடுடா." என்று ரஞ்சன் உறக்கத்திலிருக்கும் நண்பனிடமிருந்து தனித்து வந்து சோபாவில் படுத்து கொண்டான்.

    'யாஷி... யாஷி..' என்றவன் தலையணையை நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொள்வதை கண்டு தலையிலடித்தபடி ரஞ்சன் உறங்கினான்.

    அதிகாலை சில்லென்ற குளிர் பூமி மீது விழ மேகமலையில் மேகத்தின் பனிகள் செடிகளில் வைரமாய் மின்னியது.

     குளிருக்கு இதமாக போர்வையை உடலோடு சுற்றி படுத்து கொண்டான்.

  ஏன் வந்தோம் எதற்கு வந்தோமென்ற நினைவை மறந்தவனாக.

     மணி ஆறேகால் இருக்க யானை பிளிரும் சத்தம் கேட்கவும் திடுக்கிட்டு எழுந்தான்.

    வேகமாய் ஜன்னலை திறந்து பார்க்க, நேற்று மாலையில் பார்த்த யானை கூட்டங்களை போல இன்றும் சில கடந்து சென்றதும்.

    நேற்றே டீக்கடைக்காரன் காலையிலும் மாலையிலும் யானை கூட்டங்கள் அடிக்கடி கடப்பதை காணலாமென்ற பேச்சு அறிந்தமையால் யானையின் வருகையை சாதாரணமாக எடுத்து கொண்டு பல் விலக்க சென்றான்.

   'இன்னிக்கு காலையிலயே யானை முகத்துல முழிச்சிருக்கேன். பிள்ளையாரப்பா நீ தான் கூடவேயிருக்கணும்.' என்று மானசீகமாக கூறிவிட்டு ரஞ்சனை தட்டி எழுப்பினான். யானை பிளிறியது காட்டு கத்தலாய் இருக்க இப்படி உறங்குகின்றானேயென்று முதுகில் தட்டினான்.

    "தூங்க விடுடா... நைட்டு முழுக்க யாஷி யாஷினு புலம்பி தூங்க விடாம பண்ணின. இப்ப காலையிலயுமா?'' என்று ரஞ்சன் கொட்டாவி விடுத்தான்.

   ஹரிஷோ நைட்டு என்ன புலம்பினேன். என்று ரஞ்சனை எழுப்பாமல் பல் விலக்கி காட்டேஜிற்கு வெளியே வந்தான்.

   பனியால் போர்த்திய இடங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.

  பசுமையான மரங்களும் செடிகளும் பூக்களும் என்று கண்ணுக்கு விருந்து படைக்க, அனைத்தையும் ரசித்தான்.

      ஹவர்ஸ் சைக்கிளை வாங்கியவன் குகூளில் 'சுட்டிஸ் உலகம்' என்ற பெயரை போட்டு அலுவலக இடத்தை ஆராய்ந்தான். சற்று தள்ளி தான் காட்டியது. ஐந்து கிலோமீட்டர் தூரம் காட்டியது. அதிகாலை சைக்கிளில் பயணம் சென்றால் என்ன? என்று தோன்றவும் போனை எடுத்து கொண்டு குளிருக்கு இதமாக ஸ்வெட்டர் அணிந்து புறப்பட்டான்.

    சற்று ஆங்காங்கே இருந்த மனிதரிடம் கேட்டு கேட்டு 'சுட்டிஸ் உலகம்' என்ற பத்திரிக்கை நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

   இங்கு தான் யாஷிதா வேலை பார்த்திருப்பாளென்று அந்த இடத்தை ஆராய்ந்தான்.

     செக்கியூரிட்டி மற்றும் பணியாட்கள் ஒருவன் என்று இருவர் இருந்தார்கள். இந்த நேரத்தில் வேறு யாரும் இருக்க வாய்ப்பில்லையே.

    ஹாசினியின் எண்ணை ஏற்கனவே யாஷிதா கூறியிருக்க அதற்கு அழைத்தான். ரிங் போனது ஆனால் எடுக்கவில்லை. செக்கியூரிட்டியிடமே ஹாசினி விலாசத்தை கேட்டு பெற்றபடி சைக்கிளை மிதித்தான்.

   பழக்கமற்ற செயல் மூச்சு வாங்கியது. அதுவும் மேடும் பள்ளமாக இருந்த சாலைகள் ஹரிஷிற்கு சரிவரவில்லை.

    அவனை சோர்வுற செய்தது. அதே நேரம் ரஞ்சன் போனில் அழைத்து "எங்க டா இருக்க? காலங்காத்தால ஆளைக்காணோம்" என்று கத்தினான்.

    "மாப்பி.. இங்க தான் டா பக்கத்துல சைக்கிள்ல ஒரு ரவுண்ட் போகலாம்னு ஆசைப்பட்டேன். ஆனா மூச்சு வாங்குது. நான் வர ஒன் ஹவராவது ஆகும். நீ காபி குடிச்சிட்டு சாப்பிடு வந்துட்டே இருக்கேன்" என்று பேசினான்.

   "டேய்.. உடம்புக்கு ஒன்னுமில்லையே... நான் வேண்டுமின்னா கார் எடுத்துட்டு வர்றேன். லொகேஷன் சொல்லு." என்று கேட்டான்.

  "இல்லை மாப்பி.. நானே வந்துடுவேன்." என்று துண்டித்தான்.

   அருளோ "தம்பியை காணோம். நீங்க மட்டும் இருக்கிங்க" என்று லாவகமாக கேட்டான்.

   "அந்த பரதேசி இயற்கையை ரசிக்கறேன்னு வெளியே ஓடிட்டான் சார். என்னை தனியா விட்டுட்டு." என்று கடுப்பை மறைத்தபடி டீயை ருசித்தான்.

   நட்ராஜும் அருளும் ரஞ்சனை தொடர்ந்தவர்களாக இங்கே வர ஹரிஷ் இல்லாததில் கலிவரதனுக்கு அழைத்தனர்.

   கலிவரதனோ "அடேய் மடையன்களா.. அவன் பிரெண்டை இங்க இருக்க வச்சிட்டு அவன் உங்களை திசை திருப்பிட்டு போயிருக்கான். எங்க போனானு தேடுங்க. எதுக்கோ அந்த பொண்ணு ஹாசினி வீடு, இளையமான் வீடுனு போய் பாருங்க." என்று கூறி இவனுங்க திங்கறதுக்கும் தூங்கறதுக்கும் தான்  சரிபடுவாங்க" என்று முனங்கினார்.

   ஹரிஷ் மூச்சு வாங்க ஹாசினி கதவை தட்டினான்.

   மணி தற்போது எட்டு முப்பது ஆனாலும் இத்தனை விரைவில் தங்கள் வீட்டு கதவை யார் தட்டியது என்று திறந்தார் ஹாசினி தந்தை சந்திரன்.

   "யார் வேண்டும்?" என்று கண்ணாடியை அணிந்து பேப்பரை கையில் வைத்தபடி வந்தார்.

   "சார்... நான் ஹரிஷ்.. சென்னையிலயிருந்து வர்றேன். யாஷிதாவை பத்தி பேசணும்." என்றதும் சந்திரன் வெடுக்கென உள்ளுக்குள் இழுத்தார்.

  'என்ன இவரு ஏதோ வயசு பொண்ணை தள்ளிட்டு போற மாதிரி விசுக்குனு இழுக்கறார்.' என்று மனதில் எண்ணியபடி வீட்டுக்குள் வந்தான்.

   "யாஷிதா எப்படியிருக்காப்பா? எங்கயிருக்கா? நல்லாயிருக்காளா? ஹாசினி... இங்க வா." என்று யாஷிதாவை விசாரித்து மகளை ஆர்வமாய் அழைத்தார்.

    ஹாசினி வரவும் யார் இவன் என்ற ரீதியில் பார்த்து வைக்க, "யாஷிதா பத்தி பேசணும்னு சொன்னார்." என்றதும் ஹாசினியும் "யாஷிதா எப்படியிருக்கா? எங்கயிருக்கா? ஏன் போன் போட்டா எடுக்கலை. நீங்க யாரு?" என்று தொடர் வினாவை எழுப்பினாள்.

    "யாஷிதா நல்லாயிருக்கா பாதுகாப்பான இடத்துல. எங்க வீட்ல தான் மறைந்து இருக்கா.

   நான் ஹரிஷ்..." என்று யாஷிதா அருவுருவமான கதையை கூறாமல் மேலோட்டமாய் தன் வீட்டில் இருப்பதாகவும் அவள் இங்கே அனுப்பியதாகவும் கூறினான்.
  
   அதற்குள் கீதா காபி எடுத்து வந்து தர அதன் கடைசி மிடறை பருகியவாறு பேசினான்.

    "யாஷிதா என்னிடம் இங்க உங்களையும் இளையமானை பார்க்க சொன்னா. இளையமானோட வீட்டு விலாசத்தை தர்றிங்களா? அவரையும் பார்க்கணும்." என்று வந்த வேலையில் கண்ணும் கருத்தாய் கேட்டான்.

   "இளையமானையா? அவர் இங்க இல்லையே" என்று பெரிய குண்டை தூக்கி போட்டார் சந்திரன்.

   "என்னங்க சொல்லறிங்க" என்று ஹரிஷ் பதட்டமானான்.

"உயிரோட இருக்காரா செத்துட்டாரானு கூட தெரியலை" என்று மேலும் பதட்டத்தை கூட்டினாள் ஹாசினி.

   இதென்ன இளையமானை இல்லையா? உயிரோடு இருக்காரா இல்லையா என்று கூட தெரியலையா? என்று அதிர்ந்து தோல்வி அடைந்தவனாய் சோர்வாய் இருக்கையில் சரிந்தான்.

   யாஷிதாவுக்கு ஒரு வழியும் இல்லையா? என்ற கவலை அவனை பாடாய் படுத்தியது.
   அவளை உருவம் கொண்டு மீட்டெடுக்க இயலாதாயென பாதைகள் அடைப்பட்ட தினுசில் நெற்றியை தேய்த்து சோர்ந்தான்.

-தொடரும்.
   பிரவீணா தங்கராஜ்
  கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥 - 2

தீவிகை அவள்🪔 வரையானல் அவன்🔥 -3

பிரம்மனின் கிறுக்கல்கள்

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1