மர்ம நாவல் நானடா-23 (முடிவுற்றது)

  அத்தியாயம்-23    யாஷிதா அவனின் முனங்கல் கேட்டு மாடி ஹாலில் நடந்தவள் திரும்ப, வேகமாய் வந்தவன் அவளை இடித்து, அணைத்து உருண்டப் பின்னே சுதாரித்தான்.    அவள் மீது தன் தேகத்தை மொத்தமாய் சரித்திருந்தான். அந்த களோபரத்திலும் அவள் தலைக்கு முட்டுக்கொடுத்து அவள் சிரத்தை தாங்கியிருந்தது வலது கை. இடது கையோ அவளது இடையை வளைத்திருந்தது.   அவளோ சுற்றம் மறந்திருக்க, ஹரிஷின் கணம் தாளாமல் எழ முயன்றாள். ஹரிஷே வேகமாய் பதறிவிட்டு எழுந்திட, இருவருக்கும் மூச்சு வாங்கியது.    "நான் என்ன இன்னும் இன்விசிபிளாவா இருக்கேன்." என்று யாஷிதா கேட்க, "இ.. இ..ல்லை என்று தலையாட்டவும் அவனது முகமாறுதல் அவளுக்குள் ரசிப்பை ஏற்படுத்த, அளவிடாத காதலை நெஞ்சில் எடுத்துரைத்தது.    இதற்கு மேல் மனக்கடலில் காதல், கடலணை  உடையவும், யாஷிதா அவன் காலரை பற்றி இழுத்து, அலமாரி கதவை திறந்து, உள்ளே நுழைந்து சாற்றினாள்.      "உன்கிட்ட நிறைய பேசணும். என்னால இதுக்கு மேல மறைக்க முடியலை.     ஏதாவது கிறுக்குதனமா பேசிட்டு பிறகு நீ பின்வாங்கிட்டா? அதனால கேட்கவே தயக்கமாயிருக்கு. ஆனா கேட்காமலும் இங்கிருந்து போக முடியலை. நானும் இந்த பேச

மர்ம நாவல் நானடா-4

 அத்தியாயம்-4

     ஹரிஷ் காலையில் போதை தெளிந்து இமை திறக்க தரைக்கும் அவனுக்கும் இடைவேளி இருந்தது.

   யாஷிதா மேல் அரை உடலை சாய்த்து துயில் கொண்டவனுக்கு, எழுந்ததும் அதிர்ச்சி.

   வேகமாய் எழ துவங்க, யாரோ கட்டிபிடித்திருப்பது போல தோன்றியது.

   முத்து முத்தாய் வேர்வை சுரக்க, ஏதோ மர்மம் இருப்பதை நூறு சதம் நம்பியவனாய் எழப்போராடினான்.

   "அம்மா... தாத்தா.. அம்மா.. அப்பா.. யோவ் தாத்தா.." என்று உறவுகளை ஏலமிட்டு கத்தி அழைத்தான். அவன் கத்தலில் பதறி விலகி கையை எடுத்து யாஷிதா ஓரமாய் சென்றிருந்தாள்.

     ஹரிஷூம் விடுபட்ட உணர்வோடு எழுந்து கதவருகே ஓட, காஞ்சனாவும் சுப்ரமணியமும் ஓடிவந்தார்கள்.

     'யாரோ ஒரு பொண்ணு நம்ம வீட்ல என்னை கட்டி பிடிச்சிருக்கா?' என்ற குற்றச்சாட்டை தான் யாஷிதா எதிர்பார்த்து பதறி நின்றாள்.

    "இங்க இங்க ஏதோ பேய் இருக்கு. அதுயென்ன பிடிச்சு அமுக்குது." என்றான் ஹரிஷ்.

   அதைக் கேட்டதும் யாஷிதாவுக்கு சுருசுருவென கோபம் எழுந்தது. ஆனால் கோபத்தை யாரிடம் காட்டுவாள் அவள்.

   "ஆமாடா ஆமா... பேயுக்கு வேலையில்லை. உன்னை பிடிச்சு அமுக்கறதுக்கு.

    நேத்து நைட் குடிச்சிட்டு வந்து படுத்துட்டு, சோம்பேரித்தனமா இப்ப ஒன்பது மணிவரை தூங்கிட்டு, நான் ஏதாவது திட்டுவேன்னு, எழுந்ததும் முதல் வேலையா நாடகமா போடுற. படவா...   

  இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்க போற" என்று தனஞ்செயன் கோபமான முகத்தோடு வந்து கத்தவும், ஹரிஷுக்கு தன்னிலை விளக்கவே இயலாத கையாளாகத்தனமானது.

    "விமலுக்கு கல்யாணம் முடிவாச்சுப்பா. அதனால லைட்டா குடிச்சேன். ஆனா சத்தியமா நடிக்கலைப்பா. இங்க ஏதோவொன்னு இருக்கு. என்னை நம்புங்கப்பா" என்று கெஞ்சினான் ஹரிஷ்.

   "பல்லு கூட விலக்காம பொய் பேசற. முதல்ல நல்ல பழக்கவழக்கத்தை வளர்த்துக்கோ.  பேயு நாயுனு. இங்க என்னடி வேடிக்கை போய் சாப்பாடு கட்டு. வேலைக்கு போகணும்." என்று மனைவியும் மகனுக்கு ஆதரவு பேசுவாரென மனைவியையும் சேர்த்தே திட்டி தீர்த்தார்.

  தாத்தா சுப்ரமணியமோ, "ஏன்டா காலையிலேயே ஆரம்பிச்ச. ஒரு பத்து நிமிஷம் அமைதியா இருந்தா அவனே ஆபிஸ் போயிருப்பான். பிறகு கீழே இறங்கி வந்திருக்கலாம்ல, இப்ப பாரு" என்று பேரனை கடிந்தபடி கீழேயிறங்கினார்.

     "தாத்தா.. நான் நடிக்கலை நிஜமா தாத்தா." என்றவன் கையை உதறி, "பல் விலக்கிட்டு சாப்பிட வா" என்று சென்றிருந்தார் அவரும்.

   தன்னை ஒருவரும் நம்பாமல் திட்டி சென்றதும் அறையை அலசினான். யாஷிதா கட்டிலில் ஓரமாக அமர்ந்திருந்தாள். ஹரிஷ் கண்ணுக்கு தான் புலப்படவில்லை.

  தயக்கமாய் பல் விலக்கி, அதேயறையில் நடுக்கத்தோடு நடமாடியவனை எந்த தீங்கும், தனக்கு வராமல் எதுவும் தோன்றாமல் போக, 'நிஜமாவே நான் தான் போதை மயக்கத்துல உளறியிருப்பேனோ, பேசாம கீழே போய் ரூமை ஷிப்ட் பண்ணிடலாமா?' என்று ஆழ்ந்து யோசிப்பதாக வெளியே சத்தமாய் கூற, யாஷிதா 'புல் தடுக்கி பயில்வான் இவனை' என்று மனதில் அர்ச்சித்தாள்.

    காலையில் ஹரிஷை தழுவி உறங்கியதில் யாஷிதா சித்தம் லேசாய் கலங்கியது. அவனொரு ஆடவன். அவனை போய் அணைத்துவிட்டோமென்று.

    ஹரிஷ் அறையிலிருந்து கிளம்பவும், "டேய் போகாத... ப்ளிஸ்.. உன்கிட்ட பேசணும்" என்று கிசுகிசுப்பான குரல் வெளியானது.

    உருவம் தான் இல்லை குரலாவது சத்தமாய் வந்து தொலைய வேண்டியது தானே. அப்படி வந்தாலொழிய சத்தமாய் உள்ளதை உரைத்திருப்பாள். ஹரிஷிடம் கூற முடியாவிட்டாலும் முதல் முதலாக வீடெங்கும் சாம்பிராணி போட்டு, தீபாராதனை காட்டிய ஹரிஷ் அன்னையிடமாவது உரைத்திருப்பாள்.

      ஹரிஷிடம் பேசும் முன் காஞ்சனாவிடம் இரண்டு மூன்று முறை பேச முற்பட்டாள். ஒருயிடத்தில் நின்றாள் தானே. வீடெங்கும் தீபாராதனை, பால்காய்ச்சியதும் வீட்டு பொருட்கள் வரும் முன் வாசல் முன்னிருந்த பூக்களை பறித்து செடிக்கு நீரூற்றி, காய்ந்த சறுகுகளை நீக்கம் செய்து என்று வேலையை கவனித்தார்.

   செடியின் சறுகுகளை களைந்த போது, "எக்ஸ்கியூஸ் மீ ஆன்ட்டி... ஆன்ட்டி" என்று கூப்பிட கூப்பிட, 'பாம்பு இருக்குமோ உஸ்ஸுனு சத்தம் கேட்குது' என்று அகன்றாரே தவிர யாஷிதா திசையையே நோக்கவில்லை.

  சமையலில் இருந்த நேரமும் "ஆன்ட்டி இங்க பாருங்க ப்ளிஸ்" என்ற கணமும் திரும்ப குக்கூர் சத்தமென்று நினைத்து கொண்டார்.

  யாஷிதா 'எக்ஸ்கியூஸ்' என்று கேட்டதிலும் 'ப்ளிஸ்' என்றதிலும் 'ஸ்' என்ற வார்த்தை அவளை சதிசெய்தது.

    இந்த ஐந்து நாளில் வெள்ளிக்கிழமை குடிவந்தது ஆரன் சனி ஞாயிறு இருந்துவிட்டு சென்றதால் பேரனை கவனிக்கும் பொருட்டு கிச்சனிலேயே பம்பரமாய் சுற்றி சுழுலுகின்றாரென யாஷிதா எண்ணியிருக்க, கிச்சனிலேயே பிறப்பெடுத்த நளபாக தமயந்தியாய் காஞ்சனா சமையல் வேலை என்று தன் நேரத்திற்குள் அலைவதை தாமதமாய் அறிந்தாள்.
  
   திங்கள் அலைச்சலென்று விட்டது, செவ்வாய் ஹரிஷ் குடிப்போதையில் இருந்து விட்டான். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது. இந்த நாளை தவறவிடக் கூடாதென்று யாஷிதா காஞ்சனாவிடம் பேச முயன்று வந்தாள்.

   காஞ்சனாவிடம் நின்று நிதானமாக, "ஆன்ட்டி உங்களிடம் பேசணும். பயப்படாதிங்க.'' என்று பேச, மேல சொல்லு. பேயும் பூதமும் நான் பயந்ததில்லை' என்று யாஷிதாவை ஊக்குவிக்க, "ஆன்ட்டி ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால ஓரு மேஜிசியன் ஒரு புக் மூலமாக இங்க அனுப்பிட்டார்." என்று தனது மொத்த கதையையும் இங்கு வந்ததையும் உருவமற்று அல்லாடுவதையும் கோர்வையாக ஆங்கிலமும் தமிழும் கலந்து கட்டி கூறி முடித்தாள்.

  "மொத்தமும் சொல்லிட்டேன் ஆன்ட்டி. இப்ப நான் எப்படி என் உருவத்தை பிறர் பார்க்க மனுஷியா மாறுறதுனு தெரியலை." என்றாள்.

    நடுவில் வெங்காயம் காய்கறி என்று அரிந்து கண்ணீர் சிந்திய காஞ்சனா, "இத்தனை நடந்துடுச்சா" என்று கலங்கி சேலை முந்தானையில் கண்ணீரை துடைத்தார்.

    "ஆமா ஆன்ட்டி" என்று யாஷிதா கவலையோடு கூறினாள்.
  
காஞ்சனாவோ நெற்றி வேர்வையில் முகத்தில் விழுந்த சிறு முடியை ஒதுக்க ப்ளூடூத் கீழே விழுந்தது.

   "அச்சச்சோ... மைதிலி மைதிலி.. ஒரு நிமிஷம் டி. பையன் கொடுத்த ப்ளூடுத் காதுல இருந்து விழுந்துடுச்சு." என்று ஏர்பட்ஸை காதில் மீண்டும் பொருத்தி கொண்டு "மீதி என்னாச்சு... இந்த ஆரன் இரண்டு நாளா வீட்டுல இருந்தானா டிவி ரிமோட்டை தரலை. நேத்து இரண்டு நாளா என் மாமனார் டிவில மூழ்கிட்டார்.

     நம்ம ரோஜாவுக்கு அவளுக்கு
பிறந்த குழந்தைனு இன்னும் தெரியாதா? எத்தனை எபிஸோடு தான் இழுத்துட்டு போவானுங்களோ இந்த சீரியல் எடுக்கற கடன்காரனுங்க" என்று இதுவரை ப்ளூடுத் மூலமாக பழைய வீட்டின் பக்கத்து வீட்டு அக்கா மைதிலியிடம் பேசி சீரியல் கதையை கேட்டபடி சீரியல் எடுத்தவனையே கடன்காரனாக திட்டி முடித்தார்.

    யாஷிதாவோ 'ஆவென்று' வாய்பிளந்து 'காதுல ஏர்பட்ஸ் வச்சிட்டு இருந்த ஆன்ட்டியிடம் தான் இவ்ளோ நேரம் என் நொந்த கதையை விவரிச்சேனா.

   ஆண்டவா... இதுக்கு ஹரிஷே பரவாயில்லை. ஏதோ ஒரு வித்தியாசம் ரூம்ல இருக்குயென்ற வகையில் தெரிந்து வச்சிருக்கான். இந்த ஆன்ட்டி இருக்காங்களே. வீட்ல நான் ஒருத்தி உருவமில்லாம சுத்தறதை பீல் பண்ணறதேயில்லை.' என்று பல்லைக் கடித்தபடி காஞ்சனா செய்த முட்டைக் குழம்பில் நான்கு அவிச்ச முட்டைகள் மிதக்க அதில் இரண்டை எடுத்து திண்றுவிட்டாள்.

   'முட்டை எங்க எங்கனு தேடட்டும். ஒர் பயம் வேண்டாம் சே' என்று பானை நீரை குடித்து விட்டு மாடியேறினாள்.

     மதியம் ஹரிஷ் இன்டர்வியூ முடித்து வந்து போது, கூடவே சிநேகிதர்களான விமல் ரஞ்சனை அழைத்து வந்தான்.

    சாப்பாட்டை திறந்து பரிமாறிய காஞ்சனாவோ குழம்பிலிருந்த முட்டை இரண்டு மட்டும் இருக்க, விழித்தார்.

  காலையில் ஐந்து முட்டை வைத்து முட்டை குழம்பை தயாரித்து, தனஞ்செயனுக்கு ஒன்றை கொடுத்து அனுப்பினார். மீதி நான்கு முட்டையிருந்தது. மாமனாருக்கும் தனக்கும் வைத்து விட்டு, மீதி இரண்டை தன் மைந்தனுக்கு என்று வைத்திருக்க  தற்போது இரண்டு தான் உள்ளதென்றதும் சந்தேகமாய் கண்டது ஹரிஷை தான்.

    ஏனோ ஹரிஷின் பார்வைக்கு நேற்று இவர்களால் தான் குடித்துவிட்டு வந்தானென்ற கோபமாக சித்தரிப்பு தோன்றியது.

    "ம்மா.. வந்தவங்களை கவனி. பிறகு என்னவேன்னா திட்டு கேட்டுக்கறேன். இன்னிக்கு இன்டர்வியூ எல்லாம் போயிட்டு வந்தேன்." என்று காதில் ரகசியம் போல பேசினான்.

    காஞ்சனாவும் உடனடியாக ஆம்லேட் உடைத்து பரிமாறி சாப்பிட வைத்தார்.

   சாப்பிட்ட பின் ரஞ்சன் விமல் மாடிக்கு வந்து கிசுகிசுக்க இம்மூவரையும் பார்த்து யாஷிதா அறைக்குள் தான் இருந்தாள்.

விமல் அலமாரிக்கு பின்னிருக்கும் அறையை கண்டு "ஹேய் மச்சி ரூம் சூப்பர் டா. இதையா டா பேய் இருக்கு பூதமிருக்குமோனு பயந்த" என்றான்.

   ரஞ்சனோ "ஜன்னலை திறந்தா சில்லு காத்து வருது. செம பீலிங். டேய்... ஏன் உனக்கு இந்த அட்மாஸ்பியர் தாண்டி பயம் வருது" என்று கேட்டான்.
  
   "தெரியலை டா. அப்படி தோனுச்சு உங்களிடம் ஷேர் பண்ணினேன். இப்ப கிண்டல் பண்ணறிங்க." என்று சலித்தான்.

    தேவையற்று பேசி கேலி செய்து நேரங்கள் கழிய யாஷிதாவுக்கு பொறுமை பறந்தது.

   பேய் என்று அச்சுருத்தலாமா என்று கூட தவறாய் முடிவெடுக்க பார்த்தாள். ஆனால் பின்னர் யாரும் செவிக்கொடுத்து பேசுவதை கேட்காமல் பூசாரி அதுயிதுயென்று ஆட்களை தேடலாம். ஏன் அவசரவசரமாக இந்த வீட்டிலிருந்து இவர்கள் காலி செய்துவிட்டாள்.

   பிறகு இந்த வீடு இடிக்கப்பட்டு காம்பிளக்ஸ் என்று மாற்றினால்? அதென்னவோ இந்த வீட்டை தாண்டி ஒரடி எடுத்து வைக்கவும் முடியாதே என்ற ஒரே காரணத்திற்காக அமைதிக் கொண்டாள்.

   ரஞ்சன் விமல் இருவரும் விடைப்பெறுவதாய் சொல்லி கிளம்பவும், 'அப்பாடி' என்று தோன்றியது. ஹரிஷ் தாத்தாவேடு கீழேயே இருந்தான்.

    "இன்டர்வியூ எப்படி போச்சுடா" என்றார்.

   "எப்பவும் போல தான் பண்ணிருக்கேன் தாத்தா. புதுசா சொல்ல என்ன? நிறைய இடத்துல இன்டர்வியூ அட்டன் பண்ணினாலும் அதே ஆபிஸ்ல வேலை பார்க்கறவங்க தெரிந்தவங்களுக்கு ரெக்கமண்ட் பண்ணிடறாங்க தாத்தா.
  எப்பவும் வேலைக்குனு பெரிசா தவமிருக்க மாட்டேன். இந்த முறை அப்பா திட்டவும் கஷ்டமா போச்சு. காலையில அவரிடம் திட்டு வாங்கிட்டு போனதுல எனக்கே ரோஷம் வந்துச்சு.'' என்றான்.

    "மானம் அவமானம் எல்லாம் பார்த்தா ஒரு வெற்றியை ஈட்ட முடியாது. இதுல்லாம் வாழ்க்கை பாடம் டா ஹரிஷ். வேலைக்கு போனா சம்பளம் வரும். ஆனா நல்ல ஆட்களை சம்பாதிக்க முடியுமா? இந்த வயசுலயும் எனக்குனு ஒரு சிநேகிதன் இருக்கான். உனக்கு ரஞ்சன் விமல்னு இரண்டு பிரெண்ட்ஸ் இருக்காங்க. ஆனா தனஞ்செயனை பாரு... நல்ல படிப்பு வேண்டும், நல்ல வேலை வேண்டும்னு ஓடியவனுக்கு நல்ல நண்பனே கிடைக்கலை. இப்ப வரை வேலை முடிஞ்சி வீட்டுக்கு டான்னு வர்றானே ஏன். ஒரு சிநேகிதனும் நின்னு நிதானமா பேச இல்லை. நாம மனுஷனை சம்பாதிக்கணும் ஹரிஷ். பணத்தை இல்லை." என்று கூறவும் யாஷிதாவுக்குமே தனது தோழி ஹாசினி நினைவு வந்தது.

   அவள் பிறந்த நாளுக்கு சென்று திரும்பும் போது தானே இத்தனைக்கும் ஆரம்பமே. அருவுருமாக மாறவும், இந்த இடத்திலிருந்து எங்கும் செல்ல முடியாத காரணத்திற்கும் அந்த  நாட்கள் தான் விதையிட்டது.

    ஹாசினி தன்னை தேடியிருப்பாளா, தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவர் திரும்ப வருவதாக அல்லவா வாக்கு தந்தார்.
 
   "உங்கப்பா வந்துட்டான். இன்டர்வியூ பத்தி கேட்டா நல்லா பண்ணினேன்ப்பா.. வேலைக்கிடைக்கும்னு நம்பிக்கையா பேசு." என்று சுமப்ரமணியம் தெம்பூட்டி பேசினார்.

   தனஞ்செயன் வந்ததும் இன்டர்வியூ பற்றி எதுவும் கேட்கவில்லை. ஏன் ஹரிஷிடம் பேசவில்லை. ஹரிஷுக்கு கவலையாக இருந்தது. இதற்கு நாலு திட்டி தீர்த்திருக்கலாம்.

   மௌவுனத்தை விட பெரிய ஆயுதம் ஏது. இரவு உணவை மறுத்துவிட்டு மாடிக்கு வந்து கதவை சாற்றி கொண்டான்.

    மெத்தையில் நீட்டி நிமிர்ந்தவன் புரண்டு புரண்டு படுத்திட, உறக்கமே வரவில்லை. மாறாக வந்ததிலிருந்து கண்டெக்டர் பை போல இருந்ததை எடுத்தான். துடைத்ததும் புத்தகமென்று புரிந்தது.

    தாத்தா புத்தக வாசிப்பாளர்  இத்தனை வயதிலும் பேப்பரை ஒன்று விடாமல் வாங்கி உலக நடப்பை அறிந்து கொள்பவர். அவர் அடிக்கடி புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று தன்னிடம் அப்பழக்கத்தை திணிப்பார். அப்படி தான் இந்த புத்தகம் இருக்குமென்று அனுமானத்தால் அதனை திறந்தான்.

    "இது..இதுக்குள்ள இருந்து தான் நான் வந்தேன். எப்படி வந்தேன்னு போட்டிருக்கா பாரு. எனக்கு தமிழ் வாசிக்க கொஞ்சம் கஷ்டம் அன்டர்ஸ்டாண்ட் ஆகாது." என்று ஹரிஷ் அருகே அமர்ந்து யாஷிதா பேசவும், நெஞ்சில் எச்சியை விழுங்கி திகிலோடு தன்னருகே பார்வையை வீசினான்.

   அங்கே யாருமில்லையென்றாலும் தன்னோடு நெருக்கமாய் யாரோ அமர்ந்து புத்தகத்தை வாசிக்க தூண்டிவிடுவதை ஹரிஷ் உணர்ந்தான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ் 




கருத்துகள்

  1. பெண் என்றால் பேயும் இறங்குமாம் பேயாக அலையும் பெண்ணிடம் யாராவது இறங்கி அவள் பேச்சை கேட்கிறார்களா பாருங்கள்

    பதிலளிநீக்கு
  2. Yash pavam evolo feeling ah kanchana avanga kita ava story ah sonna ivanga serial story ah kettu irukaga Harish bayapada ma irukanumae

    பதிலளிநீக்கு
  3. Very interesting story sis...eppidi ippidilam ungaluku thoonthu...gud notification send me sis🥰👌

    பதிலளிநீக்கு
  4. யாஷிதா ரொம்ப பாவம். யாரோ செஞ்ச தப்புக்கு அவ பலிகடா ஆகிய இருக்காளோன்னு தோணுது. இதுல இருந்து எப்பத்தான்
    விமோசனம் கிடைக்குமோ தெரியலை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥 - 2

தீவிகை அவள்🪔 வரையானல் அவன்🔥 -3

பிரம்மனின் கிறுக்கல்கள்

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1