மர்ம நாவல் நானடா-8
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அத்தியாயம்-8
ஹரிஷ் அடுத்த நாள் காலையெழுந்து சோம்பல் முறிக்க, தன் மீது யாஷிதா அணைத்திருப்பது பாரத்தால் மட்டும் உணர்ந்தான்.
இமையை திறக்காதவன் கற்பனையாகவே அவள் மேலே ஒரு பக்கம் சாய்ந்து படுத்திருப்பது அறிந்தான். லேசாக புன்னகைகீற்று வந்தது. தன் கால் மேலும் அவள் கால் போட்டு உறங்குவதை உணர்ந்தவனாக பட்டென விழிதிறந்தான்.
தன் மீது ஒரு பெண் துயில் கொள்வதை உணர்ந்தாலும் காட்சிக்கு வாய்க்கும் பாக்கியம் இல்லையே என்று வருந்தினான்.
எந்த பெண்ணின் மீதும் காதலில் திளைக்காதவன், பருவ வயதில் இருப்பவன், தன் மெத்தையில் ஒரு பெண் தன்னருகே அவளாக உறங்க, ஆனந்தப்பட்டான்.
முகம் மட்டும் தெரிந்தா இன்னும் நல்லாயிருக்குல... என்று அவன் மனசாட்சி கேட்டது.
அருவுருவமாக இருந்தவளின் தேகத்தை தொட்டு பார்த்திடும் ஆவலில் ஹரிஷ் கைகள் மேலெழும்ப, அன்னையின் நற்போதனைகளின் பெண்களை எப்படி மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற ஹரிஷின் 'அன்னை வளர்த்த மகனான' ஒரு பாதி மனசாட்சி 'அவ உன்னிடம் உதவி கேட்டு இருக்கா. நீ உதவி பண்ணறியோ இல்லையோ ஆனா உபத்திரம் பண்ணி தொலைக்காத. பெண்ணா இருந்தா தான் ஆண்களின் கண்கள் கழுகாக கொத்துது. அருவுருவமா இருந்தாலும் விட்டு வைக்க மாட்டிங்களாடா என்று கேவலமா எண்ண வச்சிடாதே.' என்று அறிவுரை போதித்தது.
'ஆயிரம் பேரை கண் பார்வையில் ஏய்த்து காரியம் சாதிக்கும் வல்லமை கொண்டவன் ஆண் அல்ல. யாரின் பார்வையும் இல்லையென்றாலும் தனிப்பட்ட இடத்தில் பெண்ணுக்கோ அல்லது யாரின் மனவருத்தத்திற்கும் தேவையற்று காரணமாகமல் சக மனிதவுணர்வை மதிப்பவன் ஆண்.' என்ற எண்ணத்திற்கு ஏற்ப ஹரிஷ் சிந்தித்து மெதுவாய் அவளிடமிருந்து தள்ளி சென்றான்.
பல் விலக்கி கீழே ஓடிச்சென்றான். இம்முறை இரண்டு காபி கலக்க கூறலாம். அன்னை 'இன்னொன்னு யாருக்கு டா?' என்று வினா தொடுப்பார்கள்.
தேவையற்ற விளக்கம் கொடுக்காவிட்டாலும் கேள்விகள் துளைப்பார்கள்.
அதனால் குறும்புத்தனமாக யோசித்தவனோ தாத்தாவுக்கு வைத்திருந்த காபியை சத்தமில்லாமல் அருந்திவிட்டு தனது காபியை மாடிக்கு எடுத்து சென்றான்.
இன்னமும் தூங்கறாளா? எங்கயிருக்கா? என்று ஹரிஷ் காபியை டேபிளில் வைத்துவிட்டு மெத்தையிடம் வந்து தொட்டு பார்க்க வந்தான்.
அடுத்த நொடி வேறயேதாவது தொடக்கூடாத இடத்துல தொட்டுட்டா என்னடா பண்ணறது என்று பயத்து ஆரனின் விளையாட்டு பொருளான காரை எடுத்தான்.
தலையணை இருக்குமிடத்தில் வைத்து பரிசோதிக்க, "என்ன பண்ணற?" என்று பின்னாலிருந்து யாஷிதா குரல் கேட்க, நெஞ்சில் கை வைத்து மெத்தையில் தொபுக்கடீரென வீழ்ந்தான்.
எதிரே இருக்கின்றாளென்று திருப்தியில் "உன்னை தான் தெய்வமே தேடறேன்." என்று கூறியதும் "காபி வச்சியிருக்..கேன்" என்றதும் ஏற்கனவே காபியை குடித்தபடி நின்றாள்.
தனியாக காபி கப் மட்டும் கண்ணுக்கு தெரிய அதிசயமாக பார்த்தான்.
"என்ன பார்க்குற?" என்றதும் ஹரிஷ் சுதாரித்து "நான் எங்க பார்க்கறேன். இந்த மாயாஜால படங்கள்ல காட்டற மாதிரி உருவம் தெரியாம இருக்க. அட்லீஸ்ட் என் கண்ணுக்கு மட்டுமாவது தெரிந்திருக்கலாம்." என்று வருத்தம் மேற்கொண்டான்.
"ஏன் சைட் அடிக்கவா?" என்றதும் ஹரிஷ் உதடு விரிந்தது
"ப்ராங்கா சொல்லணும்னா சைட் அடிப்பேன்." என்றவன் உரைத்துவிட்டு "ஓகே யாஷி... நான் மேகமலை போக வீட்ல பர்மிஷன் வாங்கறேன். இந்த இன்டர்வியூ போனது ரிசல்ட் வர்ற வரை தான் வீட்ல விடுவாங்க. சப்போஸ்... நீ வந்த அதிர்ஷ்டம் எனக்கு வேலை கிடைச்சதுனு வையு. அப்பறம் எங்கயும் போக முடியாது."
"ஹே... காரணம் கேட்டா?" என்று யாஷிதா கேட்டதும் "சாரி யாஷி.. நீ பிரெண்ட்ஸ் கூட டிஸ்கஸ் பண்ணாதனு சொன்ன. நான் என் பிரெண்ட் ரஞ்சனிடம் மேகமலை போகணும்டா அங்க ஒருத்தரை தேடணும் சொல்லிட்டேன்." என்று கூறவும் யாஷிதா முறைத்திருப்பாளென யூகித்தாள்.
பக்கத்திலிருந்த சின்ன சின்ன பொருட்கள் பறந்துவர, "ஏய்.. உன்னை பத்தி எதுவும் சொல்லலைடி. நான் ஒரு பொண்ணை பேஸ்புக்ல லவ் பண்ணறேன். அவ அங்க இருக்கா டா. கமுக்கமா போய் பார்க்கலாமானு கேட்டேன். முதல்ல மறுத்தான். பிறகு வந்து தொலையுறேன்னு சொல்லிட்டான்." என்றதும் யாஷிதா கோபம் மட்டுப்பட்டிருக்க வேண்டும்.
"அப்பா அம்மாவுக்கு தெரிய வேண்டாம்னு ரஞ்சனோட போறதா சொல்லிட்டு கிளம்புவேன். விமலுக்கு கூட இப்ப சொல்லாதனு ரஞ்சனிடம் ரெக்வஸ்ட் பண்ணிட்டேன். பிகாஸ் அந்த பொண்ணை கண்டுபிடிச்சிட்டா என் லவ் அக்சப்ட் ஆகிட்டா அவன் நிச்சயதார்த்தம் அப்ப அவளை அழைச்சிட்டு போகலாம்னு கன்வின்ஸ் பண்ணிட்டேன்" என்று விமலுக்கு சொல்லாததையும் சேர்த்தே விளக்கிவிட்டான்.
யாஷிதாவோ "அறிவாளி" என்று புகழ, "ஏய்... அங்க போயிட்டு ஹாசினியிடம் இளையமானை கேட்டு அவரை பார்த்தா போதும் தானே?" என்று கேட்டான்.
"போதும் போதும்." என்று பறக்க துடிக்கும் பறவையாக குரல் கொடுத்தாள்.
கீழே "என் காபியை நான் குடிக்கலையே" என்று சுப்ரமணியம் கூற, காஞ்சனாவோ, "இங்க தானே மாமா வச்சேன்." என்று அப்பாவியாக கூறினார்.
"அச்சோ... சத்தியமா நான் குடிக்கலை." என்று யாஷிதா அலறாத குறையாக கூற, "நான் தான் குடிச்சேன்" என்று ஹரிஷ் சிரிக்க, "ஏன்டி... வளர்ந்த தடிமாடு ஒன்னை பெத்து வச்சியிருக்கியே. அது தான் அதோட பங்கு கையில வச்சிட்டு எங்கப்பாவோட காபியை குடிச்சிட்டு ஓடினான். குளிச்சிட்டு டிரஸ் போட்டப்ப ஜன்னல் வழியா கருப்பு பேண்ட் எங்கனு உன்னிடம் கேட்க திறந்தேன். உன் பிள்ளை தான் காபியை திருடறான். என்ன விளையாட்டோ. அவனை திட்டி திட்டி பிபி ஏறி இதயம் நொந்து என் மண்டையில இருக்குற மசிரு தான் கொட்டுது." என்று தலையிலடித்தபடி பேசுவது ஹரிஷ் அறை வரை கேட்டது.
யாஷிதாவோ சிரிக்கும் சப்தம் கேட்க, "பச்... எங்கப்பாவிடமே மாட்டுவேன்னு சத்தியமா நினைக்கலை. இப்ப எப்படி கீழே போறது" என்று குத்த வைத்து அமர்ந்தான்.
"முதல்ல கீழ போ. இல்லைனா அதுக்கு வேற திட்டப்போறார்.
இந்த வீட்ல எனக்கு ரொம்ப பிடிச்ச பெர்சன் உங்க அப்பா தான். ஏன் சொல்லு... உன்னை தட்டி கொடுப்பதை விட திட்டி விட்டு உன்னை மெருக்கேத்தறார்.." என்று நகைத்தாள்.
ஹரிஷோ "நீயொருத்தி தான் பாக்கி. சொல்லிட்டியா தேங்க்ஸ்." என்று கீழே சென்றான்.
அங்கே காபி குடித்ததற்கு எதற்கும் விளக்கம் தருவதாக இல்லை என்பது போல ஹரிஷ் அமர்ந்தான்.
சுப்ரமணிய தாத்தாவோ 'ஏன்டா... ஏன் இப்படி' என்ற பார்வையை வீசினார்.
காஞ்சனாவோ தோசையை வைத்து விட்டு, "அன்னைக்கு முட்டையை திண்ணது நீ தானே." என்று முனங்கியபடி கேட்க, யாஷிதா செயலென்பதால் "எனக்கு தானம்மா சமைச்ச? சாப்பிட கூடாதா?" என்று அன்னைக்கு பதில் கொடுத்தான்.
தனஞ்செயனோ "இன்னும் ஆறு மாசத்துல வேலைக்கு போய் சம்பாரித்து பொறுப்பா இருந்தா உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன். இல்லைனா எக்கேடு கெட்டோ போய் தொலைனு தண்ணி தெளிச்சி விட்டுடுவேன்.
அதுக்கு பிறகு என் பையனுக்கு ஒரு நல்லது செய்வோம்னு நீயோ, என் பேரனுக்கு கல்யாணம் பண்ணாம நான் சாகணுமானு நீங்க நாடகம் போட்டிங்க நானே உங்க இரண்டு பேரை கொன்றுட்டு ஜெயிலுக்கு போயிடுவேன்." என்று வசனம் பேசிவிட்டு அலுவலகம் சென்றார்.
புயல் அடித்து ஓய்ந்தது போல இல்லம் இருக்க ரஞ்சன் நுழைந்தான்.
"என்ன வீடு அமைதியா இருக்கு. ஏன் மாப்பிள்ளை டூருக்கு போறதை சொல்லிட்டியா?" என்னு வந்தமர்ந்தான்.
சுப்ரமணியமோ "இதென்னடா புது கூத்து." என்று கேட்க, "தாத்தா... அதை சொல்ல தான் வந்தேன். அப்பா மிலிட்டிரி மாதிரி பேசிட்டு போனார்.
நான் தான் தாத்தா காபி குடிச்சேன். அது ஏன்னு கொஞ்ச நாள்ல சொல்லறேன். நான் இப்ப டூர் போகணும். எனக்கு காசு வாங்கி தாங்க." என்று தாத்தாவை ஏறிட்டான்.
இம்முறை தாத்தாவும் அன்னையும் முறைத்தபடி நிற்க, "டூருக்கு போயிட்டு வந்ததும் நான் சொல் பேச்சு கேட்டு நடக்கறேன். தாத்தா இது கண்ணம்மா பாட்டி மேல பிராமிஸ்." என்று உரைத்தான்.
காஞ்சனாவோ "என்னடா விளையாடறியா.. அந்த மனுஷன் திட்டற மாதிரி தான் நீயும் பண்ணற.
உங்கண்ணாவும் படிப்பு முடிச்தி வேலைக்கு போனான். ஒருத்தியை பார்த்து கட்டிக்கொடுத்தோம். இதோ ஒரு குழந்தை பெத்துட்டு படிக்க வைக்கிறான்.
எங்களோட சேர்ந்து வாழலையென்றாலும் அவனோட வாழ்வாதாரம் வீட்டு வாடகை படிப்பு மளிகைனு அவனா சமாளிக்கறான்.
நீ... நீ... இன்னமும் என்னடா பண்ணற." என்றதும் ஹரிஷ் தலைகவிழ்ந்து நின்றான்.
லேசாக கலங்கிய விழியோடு, "ஏன்மா... அப்ப வேலைக்கு போய் சம்பாதிச்சு பணத்தை கொடுத்தா போதுமா?" என்று கேட்டான்.
"போதாதுடா... போதாது... என் மகன் நல்ல நிலையில இருக்கறான்னு நான் கண்ணாற பார்க்கணும். சாகறப்ப என் மகனை அம்போனு விடலை... என் மகனுக்கு நான் இல்லைனாலும் வாழ தெரிந்துடுச்சு. இனி பயமில்லைனு நிம்மதியா சாகணும். நீ உன்னை பார்த்துக்க நீ சம்பாதிக்கணும்" என்று உணர்த்தி உரைக்க ஹரிஷ் சிலையாக நின்றான்.
காஞ்சனாவோ அறைக்கு சென்று மற்றவேலையில் கவனம் செலுத்திட, சுப்ரமணியமோ இன்று மகன் மருமகள் இருவருமே பேரனை கடிந்துவிட்டாரேயென்று தவித்தவராய் அறைக்கு சென்றார்.
ஹரிஷுக்கு தேவையான அமைதி இருக்க, ரஞ்சனோ "என்ன மாப்பிள்ளை பிரச்சனையா? டூருக்கு போகணும் பொண்ணை பார்க்கணும்னு சொன்ன? அப்ப அது கேன்சலாடா?" என்று மெதுவாய் கேட்டான்.
"இல்லை... போகணும்" என்று ஆணித்தரமாக கூறினான்.
"டேய்... அம்மா ஏதோ பயங்கரமா பேசிட்டு போறாங்க. நீ என்ன பேஸ்புக்ல சாட் பண்ணின பொண்ணை பார்க்க இவ்ளோ தீவிரமா இருக்க? அந்தளவு ட்ரூ லவ்வா டா?" என்று கேட்டான்.
"ட்ரூவா தேடறேன். லவ்வா இல்லையானு முடிவு பண்ணிக்கோ" என்றவன் விரிவாக பேசாமல் சுருக்கமாக பதிலுரைத்தான்.
"டேய் மாப்பி... நீ ஏதோ விளையாட்டு போக்குல எதையாவது பண்ணி என்னை உங்க வீட்ல மாட்டி விடாதடா" என்றதற்கு, "எதுவும் மாட்டி விடமாட்டேன். ஊருக்கு போக கார் கேட்டேனே என்னாச்சு?" என்று ரஞ்சன் உசிரை வாங்கினான்.
"அதெல்லாம் எங்கண்ணா வண்டியை எடுத்துட்டு வர்றேன். எப்பவும் தாத்தாவிடம் எல்லாத்தையும் ஷேர் பண்ணுவியே... இந்த முகம் தெரியாத காதலியை சொல்லிட்டியா?" என்று கேட்டான்.
"முகம்.. தெரியாத காதலியா? உனக்கெப்படி தெரியும்?" என்று வினவினான். பேச்சு வாக்கில் யாஷிதா பற்றி உளறிவிட்டோமோ என்று.
"நீ தானடா பேஸ்புக்ல சாட் பண்ணினேன். முகம் தெரியாதவள் அவளை சந்திக்க ஆசையா இருக்கு. இப்ப மேகமலையில இருக்கா 'என்னை வந்து பாரு' சொன்னதா ஆர்வமா இருக்கனு சொன்ன?" என்று கேட்டதும் ஹரிஷ் தெளிவடைந்தான்.
"டேய் மாப்பி... இப்ப எதுவும் கேட்காத. போற வழியில சொல்லறேன்." என்று அடக்கினான்.
"மாப்பி.. பொண்ணு பெயர் கூட கேட்கலை. நீ சொன்னதும் ஓடிவர்றேன். இதுக்கு மேல என்னடா." என்று பேசவும் காஞ்சனாவோ இவனுங்களால தான் என் பையன் கெட்டு குட்டி சுவரா போறான்' என்பதாய் ஹாலை கடந்து சமையற்கட்டுக்கு அடைக்கலமானார்.
'எதுவும் நீ கேட்டு துருவ மாட்டனு தான் உன்னை செலக்ட் பண்ணிருக்கேன்' என்று ஹரிஷ் மனதோடு உறவாடினான்.
"சரிடா மாப்பி நான் கிளம்பறேன். ஏதோ வண்டி ரெடினு சொல்லிட்டு மதியம் லஞ்ச் சாப்பிடலாம்னு பார்த்தேன். ஆன்ட்டி சூடாயிருக்காங்க. எப்ப போறோம்னு போன் பண்ணு" என்று கேட் வரை வந்தான்.
"மேகமலை எங்கிருக்கு டா?" என்று வாசல் வந்தப்பிறகு ரஞ்சன் சற்று சத்தமாய் கேட்க கேட்டிலிருந்த ஹரிஷோ "உஸ் உஸ்" என்று ஆட்காட்டி விரலை உதட்டில் வைத்தபடி "தேனி மாவட்டம் டா" என்றான்.
"ஓகே டா ஓகேடா. பை மாப்பி" என்று அவ்விடம் விட்டு அகன்றான்.
ஹரிஷும் வீட்டுக்குள் நுழைந்தான். ஆனால் ஹரிஷ் வீட்டுக்கு வெளியே காவலாக இருந்த கலிவரதன் ஆட்களோ, "சார்... அந்த பொண்ணு இங்கயில்லை. ஆனா இங்கவொரு பையன் மேகமலைக்கு போறதா அவன் பிரெண்டிடம் பேசிட்டு இருக்கான்." என்று கலிவரதனிடம் தொடர்பு கொண்டு பேசினான்.
மறுபுறம் என்ன கூறியிருப்பனரோ, "நீங்க சொன்னா சரிங்க சார். அந்த பையனை நான் பாலோவ் பண்ணறேன். இங்க நம்ம ஆட்களை வேவு பார்க்க நிற்க வைக்கிறேன். அந்த பொண்ணு யாஷிதா கிடைத்தா உடனே அள்ளிட்டு வந்துடறேன்." என்று விசுவாசத்தோடு சூளுரைத்தான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
Epudi correct ah kalivaradhan oda aalu inga varaikum correct ah follow panni vandhan
பதிலளிநீக்குஅடப்பாவிங்களா..! காசிக்கு போயும் கர்மம்.விட ரைட் கன மாதிரி... இன்னுமாடா துரத்திட்டு இருக்கறிங்க..???
பதிலளிநீக்குவசந்தி ஜெயக்குமார்.
பதிலளிநீக்குஹரீஷ் அந்த கலிவரதன் ஆட்களிடம் மாட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்க ரைட்டர் மேடம்.
அடப்பாவி சத்தம் போட்டு பேசி வில்லனை வீட்டிற்கு வர வச்சிட்டீங்க யாஷிதாக்கு உருவம் வரனும் அப்படியே ஆரனும் யஆஷஇயஉம் குடும்பமாக இருக்கனும்
பதிலளிநீக்குInteresting
பதிலளிநீக்கு