மர்ம நாவல் நானடா-23 (முடிவுற்றது)

  அத்தியாயம்-23    யாஷிதா அவனின் முனங்கல் கேட்டு மாடி ஹாலில் நடந்தவள் திரும்ப, வேகமாய் வந்தவன் அவளை இடித்து, அணைத்து உருண்டப் பின்னே சுதாரித்தான்.    அவள் மீது தன் தேகத்தை மொத்தமாய் சரித்திருந்தான். அந்த களோபரத்திலும் அவள் தலைக்கு முட்டுக்கொடுத்து அவள் சிரத்தை தாங்கியிருந்தது வலது கை. இடது கையோ அவளது இடையை வளைத்திருந்தது.   அவளோ சுற்றம் மறந்திருக்க, ஹரிஷின் கணம் தாளாமல் எழ முயன்றாள். ஹரிஷே வேகமாய் பதறிவிட்டு எழுந்திட, இருவருக்கும் மூச்சு வாங்கியது.    "நான் என்ன இன்னும் இன்விசிபிளாவா இருக்கேன்." என்று யாஷிதா கேட்க, "இ.. இ..ல்லை என்று தலையாட்டவும் அவனது முகமாறுதல் அவளுக்குள் ரசிப்பை ஏற்படுத்த, அளவிடாத காதலை நெஞ்சில் எடுத்துரைத்தது.    இதற்கு மேல் மனக்கடலில் காதல், கடலணை  உடையவும், யாஷிதா அவன் காலரை பற்றி இழுத்து, அலமாரி கதவை திறந்து, உள்ளே நுழைந்து சாற்றினாள்.      "உன்கிட்ட நிறைய பேசணும். என்னால இதுக்கு மேல மறைக்க முடியலை.     ஏதாவது கிறுக்குதனமா பேசிட்டு பிறகு நீ பின்வாங்கிட்டா? அதனால கேட்கவே தயக்கமாயிருக்கு. ஆனா கேட்காமலும் இங்கிருந்து போக முடியலை. நானும் இந்த பேச

மர்ம நாவல் நானடா-11

 அத்தியாயம்-11

ஹாசினியோ "சார்... யாஷிதாவுக்கு என்ன பிரச்சனை? என் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் இதே போல மார்னிங் தான், ஒரு கும்பல் வந்துச்சு.

யாஷிதா எங்கனு கேட்டு வீடு முழுக்க தேடினாங்க. பொருட்களை சேதாரம் செய்து, வீட்டோட மூலை முடுக்கெல்லாம் துவசம் பண்ணிட்டாங்க.

யாஷிதாவுக்கு ஏதோ ஆபத்துனு அப்ப தான் எனக்கே தெரியும்.

இளையமனுக்கும் யாஷிதாவுக்கும் போன் போட்டா போகவேயில்லை.

அப்பாவும் நானும் தான் இளையமானையாவது வீட்ல போய் பார்க்கலாம்னு கிளம்பி போனா, அங்க இளையமானை ஸ்டக்சர்ல ஆம்புலன்ஸில் ஏத்திட்டு போனாங்க.

அதோட நாங்க இளையமான் சாரை கடைசியா பார்த்தது. போலீஸ்ல கம்பிளைன் பண்ணினா, அதெல்லாம் 'இளையமான் யாஷிதா பத்தி மூச்சு விடாதிங்கம்மா. பெரிய இடத்து விவகாரம்'னு எங்களை பேசவிடாம துரத்திட்டாங்க.

அன்னைக்கு வீட்டை துவசம் பண்ணிய ஆட்கள் மட்டும் திரும்ப வந்து இனி போலீஸ் கீலிஸ் போன சங்கை அறுத்துடுவோம்னு மிரட்டினாங்க. அதோட யாஷிதாவை பார்த்தா தகவல் சொல்ல சொன்னாங்க. அநேகமா இளையமான் அவங்க கஷ்டடில இருக்காரா இல்லை செத்துட்டாரானு டவுட் இருக்கு.

யாஷிதா வந்தா தான் மத்தது தெரியும். நானும் இப்பவரை பெரிய பெரிய ஆட்களை வச்சி யாஷிதாவை தேடறேன் முடியலை. உங்க வீட்ல இருக்கறவள் என்னிடம் போன்ல பேசியிருக்கலாம் இல்லையா?" என்று கேட்டாள்.

"போன்.. ஏன் பேசலைனு தெரியலை. ஒரு வேளை உங்க நம்பரை அவ மனப்பாடமா நினைவு வச்சிருக்க மாட்டா. அவளோட போன்ல தானே உங்க நம்பர் இருக்கும். அவ போன் தான்." என்றவன் அதை வேற எடுக்க போகணும் என்று சிந்தனையில் உதித்திட மௌவுனமானான்.

"ஹரிஷ் நான் இப்பவே யாஷிதாவை பார்க்கணும்." என்று உலுக்கினாள்.

"அவளை பார்க்க முடியாதே." என்று உண்மையை உரைக்க, "ஏன் பார்க்க முடியாது. உங்க வீட்ல தானே இருக்கா?" என்று ஹாசினி கேட்க, "என் வீட்ல தான் இருக்கா. ஆனாலும் பார்க்க முடியாது. இளையமானை பார்த்து சில விஷயத்தை க்ளியர் பண்ணினா தான் பார்க்க முடியும்" என்றான்.

"போன்லயாவது பேசறேன் என்ன தான் பிரச்சனை அவளுக்கு?" என்றாள்.

"சொன்னா புரியாது.. ஆனா அவ கலிவரதன் செய்த கொலையை நேர்ல பார்த்துட்டா. கொலையானவன் ஒரு போலீஸ்காரன்." என்றதும் ஹாசினி அதிர்ந்தாள்.

"கலிவரதன் என்றால் விளையாட்டு துறை அமைச்சர் ரவிதாஸனோட மச்சான் தானே?" என்று ஹாசினி கேட்க, ஆமா" என்று ஹரிஷ் ஆமோதித்தான்.

ஹரிஷ் கூறியதை கேட்டதும் சந்திரன் ஆடிப்போனார்.

ஏதோ யாஷிதா ஆபத்தில் இருக்கின்றாளென்று அறிந்தவருக்கு அவளை காப்பாற்றும் எண்ணம் இருந்தது என்னவோ உண்மை. ஆனால் இந்த கணம் யார் என்று அறிந்ததும் அவர் முகத்தில் பயம் கவ்வியது.

"தம்பி.. இங்கிருந்து உடனடியா போயிடுங்க. இனி அந்த பொண்ணை பத்தி எதுவும் என் மகளிடம் கேட்காதிங்க முடிஞ்சா இங்க வராதிங்க." என்றார் வெடுக்கென.

"அப்பா.." என்று ஹாசினி கத்த, "எனக்கு வேற வழி தெரியலைம்மா. பிரச்சனை ரொம்ப சீரியஸ். எனக்கு நீ முக்கியம்மா உனக்கு ஷ்யாமை கட்டிவச்சி வேற ஊருக்கு அனுப்பி நீ வாழறதை கண் குளிர பார்க்கணும்.

நீ சிக்கி சீரழியறதை பார்க்க முடியாது. தம்பி இங்கிருந்து கிளம்புங்க" என்று சந்திரன் விரட்டினார்.

"என்னம்மா இது அப்பா இப்படி பேசறார். அவ என் பிரெண்ட் மா. யாஷிதா ஆபத்துல இருக்கா" என்று ஹாசினி பேச, "அப்பா சரியா தான் சொல்லறார். அன்னைக்கு மூர்க்கதனமா வீட்டை துவசம் பண்ணியப்பவே இதென்ன இத்தனை கோபம் யாரிவங்கனு லேசா மனசுக்கு சரியாபடலை. இப்ப யாருனு தெரியவும் முழுசா விலகிடணும். நம்மால அரசியல்வாதியோடலாம் போராட முடியாது." என்று கீதாவும் அதட்டினார்.

ஹாசினி ஏதோ பேச சந்திரனோ ஹரிஷை தள்ளாத குறையாக வெளியே போக கூறினார்.

ஹரிஷிற்கு வீட்டிலிருந்து கிளம்பும்போதே தெரியும். தான் புலி வாலை பிடித்தால் புலி விடாதென்று. ஆனாலும் தன் வீட்டில் அருவுருவமாய் இருப்பவளுக்கு தன்னால் இயன்றதை செய்ய வேண்டுமென்ற உதவிக்குணம் அவனை இங்கு வரை அழைத்து வந்து விட்டது.

யாஷிதாவை காணும் ஆவல் அவனை இந்த பிரச்சனையிலிருந்து பின்வாங்க விடவில்லை.

ஏதேனும் ஆபத்து வரலாமென ஹரிஷுக்கு தெரியும். ஆனால் ஆபத்தை தாண்டி யாஷிதாவை காணும் எண்ணத்தையே அவன் மனம் உந்தியது.

"தேங்க்ஸ்... நான் கிளம்பறேன். எனக்கு யாஷிதா போட்டோ கிடைக்குமா?" என்றான்.

ஹாசினி "உங்க வீட்ல இருக்கானு சொன்னிங்க" என்று புரியாமல் கேட்டாள்.

"எங்க வீட்ல தான் இருக்கா. இருந்தாலும் எனக்கு ஒரு போட்டோ கிடைக்குமா? அதை வாங்கிட்டு கிளம்பிடறேன் அதோட இளையமான் வீட்டு விலாசமும் வேண்டும்" என்றான்.

ஹாசினி வேகமாய் உள்ளே சென்றாள். ஆனால் கண் மட்டும் தெரியும் வகையில் யாஷிதா உருவத்தை எடுத்து வந்தாள்.

"அன்னைக்கு வீட்டையே தலைகீழா புரட்டி சேதப்படுத்திட்டாங்க. யாஷியும் நானும் இருக்கற போட்டோஸ் எல்லாமே கிழிச்சி பறந்துடுச்சு. இது ஒன்னு தான் பேலன்ஸ்.

அப்பாவும் அம்மாவும் அன்னைக்கு நடந்த விஷயத்தை மனசுல வச்சிட்டு பயப்படறாங்க
அதோட கலிவரதன் ரவிதாஸன் ஆட்கள் என்பதால ஒதுங்க சொல்லறாங்க. இது இளையமான் விலாசம்." என்று நீட்டினாள்.

அந்த விலாசத்தோடு 'ஏதேனும் உதவி என்றால் அலுவலக எண்ணில் கேட்கவும்.' என்று அதிலிருந்தது.

ஹரிஷ் நன்றி கூறி அதனை பெற்று வெளியேறினான்.

ஹாசினியிடம் அவளது பெற்றோர்கள் "தயவு செய்து யாஷிதா விஷயத்தை மறந்துடு ஹாசினி. கல்யாண வேலை இருக்கு. அன்னைக்கு மாதிரி யாராவது வந்து இடத்தை சேதாரம் செய்தா பரவாயில்லை. உன்னை ஏதும் பண்ணிட்டா நாங்க உயிரோட இருக்க மாட்டோம். எங்களுக்கு நீ ஒரே பொண்ணு." என்று சந்திரன் பேசுவதும் கீதா ஆமோதிப்பதுமாய் மூளைச்சலவையாக பேசுவது செவியில் கேட்க ஹரிஷ் அவ்விடம் விட்டு கொஞ்சம் கொஞ்சமாய் தள்ளி வந்தான்.

அட்ரஸை பார்த்தான். ஏற்கனவே ஹாசினி வீட்டிலிருந்து சைக்கிளில் செல்லும் தூரமென்று யாஷிதா கூறியிருக்க அங்கு செல்லலாமா? என்று தான் யோசித்தான். மணி பத்துமுப்பது ஆகியிருந்தது. ரஞ்சன் வேறு தொடர்ந்து போன் போட்டு கொண்டிருந்தான். அதனை நிராகரித்தவனாக சைக்கிளை மிதித்தான்.

இளையமானின் விலாசத்திற்கு சென்றால் அவர் இருப்பாரா? ஹாசினி வீட்டாட்கள் சொன்னது போல என்றால் அவரை ஆம்பலன்ஸில் ஸ்டக்சரில் அழைத்து சென்றார்களாமே. எதற்கு அழைத்து சென்றிருப்பார்கள்? எதற்கும் விலாசத்திற்கு சென்று பார்ப்போம் என பயணித்தான்.

மேடுபள்ளமென சாலைகள் இருக்க மிதிவண்டியில் செல்ல கடினமாய் இருந்தது.

பசுமையான மலைகளை ரசிந்து கடந்தான். இங்குயெல்லாம் யாஷிதா வந்துயிருப்பாள் என்று முறுவலித்து கொண்டான்.

மிதிவண்டியை நிறுத்தி யாஷிதா கண் மட்டும் இருக்கும் புகைப்படத்தை கண்டான்.

அப்படியொன்றும் இதை வைத்து முழு உருவத்தை கிரகிக்க இயலவில்லை.

மெதுவாக மிதிவண்டியை அழுத்தி செல்ல, சிலையொன்று காட்சியளித்து.

யாஷிதா சொன்ன கோவிலாக இருக்குமோ என்று அங்கே சென்றான்.

அவள் வார்த்தையில் கூறிய அதே கோவில் என தெரிய மைல்கல்லை தேடினான். அதுவும் தென்பட, அங்கே மண்ணை கையாலே நோண்டினான்.

எங்கிருந்தோ திபுதிபுவென்று நிலத்தை அதிரவைக்கும் சத்தம் கேட்க பயந்து திரும்பினான்.

காட்டுமாடுகள் வரிசையாக நிலமே அதிர அவ்விடத்தை கடந்தது.

ஏதாவது ஒரு மாடு முட்டிவிடுமோயுன்று அஞ்சி மரத்தோடு மரமாக ஒன்றினான்.

காட்டு மாடுகள் சென்றதும் மூச்சை வெளியிட்டபடி, பாதி தோண்டிய இடத்தை மீண்டும் தோண்டினான். யாஷிதா கூறியது போல அங்கே ஸ்வீட் பாக்ஸ் இருந்தது.

அதிலிருந்து போனை எடுத்தான். நீண்ட நாட்களாக மாறியதால் தூசி லேசாக மேலிருந்தது.
தனது கைக்குட்டையை எடுத்து துடைத்தான். யாஷிதா போன் என்பதால் அவள் புகைப்படம் இருக்குமென்று ஆவலாக ஆன் செய்தான். கைரேகையை கேட்டு நிற்கவும் சலித்தபடி போனை பேண்ட் பேக்கெட்டில் வைத்தான்.

மீண்டும் பயணத்தை ஆரம்பித்த போதும் ரஞ்சன் கால் செய்ய அட்டன் செய்யும் நேரம் சுவிட்ச் ஆப் ஆனது.

இளையமான் வீட்டுக்கு செல்லும் வழியில் கடைகள் சில இருந்தன. அன்னைக்கு யாஷிதா புதர்குள்ள ஓடிவந்தாளோ? இந்த பக்கம் சில கடையாவது இருக்கு. இந்த திசைக்கு வந்திருந்தா தப்பிச்சிருப்பாளோ என்று சிந்தனைவயப்பட்டவனாக இருந்தான்.

வயிறு வேறு பசிக்க ஆரம்பிக்க, அங்கிருந்த பேக்கரி கடையில் பிளைன் கேக் சாப்பிட்டான். அருகே கொரியர் கடை இருக்கவும் கேக்கை திண்றபடி "போனை கொரியர் அனுப்ப முடியுமா?" என்று கேட்டான்.

புது போனை இப்படி அனுப்பலாம். ஆனால் உபயோகப்படுத்துவதை என்று சந்தேகம் இருந்தது.

"சுவிட்ச் ஆப் பண்ணிட்டு அனுப்புங்க அண்ணா. அதெல்லாம் கொரியர் மேல மென்ஷன் பண்ணிட்டா ஸ்கேன்ல புது போனா பழைய போனானு தெரியவா போகுது' என்று கடைப்பையன் கூறவும் போனை தனது வீட்டிற்கு கொரியர் அனுப்பிடும் செயலில் தீவிரமானான்.

அப்படியே தனது போனை அங்கேயே சார்ஜர் போட்டான்.

ஓரளவு அதுவும் கொஞ்சம் கொஞ்சமாய் சார்ஜர் ஏறிக்கொண்டிருந்தது.

கொரியர் அனுப்பிவிட்டு இரண்டு நாளில் சேர்ந்திடும் என்று அறிந்ததும் இளையமான் விலாசத்தை கையில வைத்து அங்கு சென்றிருந்தான்.

அங்கேயும் பொருட்கள் கலைந்திருந்தது.

ஹாலில் மத்தியமாக ஒரு புகைப்படம் பெரிதாக இருந்தது. பெண் புகைப்படம் என்று சொல்லாமல் சொல்லியது. என்ன கிழித்து தொங்கியிருக்க அதனை நேர்படுத்தி பார்த்தால் யாஷிதாவாக இருக்குமென்று ஆவலாக அதனை நிமிர்த்த முயல "மாப்பிள எங்க டா இருக்க?" என்ற ரஞ்சன் குரல் அந்த இடத்தில் எதிரொலித்தது.

புகைப்படத்தை பார்க்கும் ஆவலில் இருந்தவனுக்கு நண்பனின் அலறல் குரல் கேட்க திரும்பினான்.

அருளோ அவனை கட்டையால் அடிக்க, புகைப்படத்திலிருந்த பேப்பர் கிழிப்பட நெஞ்சில் யாஷிதா புகைப்பட தாளை சுமந்து விழுந்தான். விழுந்தப்பொழுதும் அவள் முகத்தை பார்க்கவில்லை. அதற்குள் அருளோ ஹரிஷ் சட்டை காலரை பிடித்து எழுப்ப தள்ளாடி நின்றவனின் மீது இருந்த புகைப்பட பேப்பரை எடுத்து சுக்குநூறாய் கிழித்து "எங்கடா அவ?" என்று அடிக்க, ஹரிஷிற்கு இவங்க முதல்ல இருந்தே துரத்தறாங்களே? என்று சிந்தனைக்குள் மூழ்கினான்.

'அப்படின்னா கலிவரதன் ஆட்களா?' என்றவன் பயத்தை மூட்டைக்கட்டி வைத்து, அடிதடி எல்லாம் இவர்களிடம் ஆகாதென்று ரஞ்சனிடம் கூறியதை அப்படியே மெயின்டெயின் செய்ய முனைந்தான். எப்படியும் ரஞ்சன் அதை தான் இத்தனை நேரம் கூறியிருக்க வேண்டும்.

"சார் நானும் யாஷிதாவும் பேஸ்புக் லவ்வர்ஸ் சார். அவ முகம் கூட நான் பார்த்ததில்லை. ஒரு மாசத்துக்கு மேல ஆளைக்காணோமேனு நேர்ல சந்திக்க ஆசையா வந்தேன். மத்தபடி யாஷிதாவை நான் பார்த்ததில்லை. நீங்க என்னடானா அவயெங்கனு என்னிடமே கேட்கறிங்க? நீங்க யாரு சார்? நீங்க என்னை சென்னையில இருந்தே பின் தொடருற மாதிரி இருக்கு" என்று சொன்னதே திரும்ப திரும்ப கூறினான்.

ரஞ்சனும் அதையே ஆமோதித்தான். நட்ராஜனுக்கோ 'ரஞ்சன் முகத்தில் பொய் தெரியலை. எதுக்கோ ஐயாவிடம் போன்ல சொல்லு' என்று கிசுகிசுத்தான்.

அருளுக்கும் வேறு வழி தெரியவில்லை. "யோவ் மருது செம்பட்டை இவனை பிடி" என்று ஹரிஷை சுட்டிக்காட்டினான்.

''சங்கரு நீ இவனை பிடி" என்று ரஞ்சனை சுட்டிக்காட்ட நட்ராஜனும் சங்கரும் ரஞ்சனை பிடித்தனர்.

அருள் கலிவரதனுக்கு போன் போட்டு காத்திருந்தான்.

"ஏன்டா... கொலம்பியா பொண்ணை காதலிச்ச. இங்க என்னடா வில்லங்கம் இருக்கும். அப்பவே முகத்தைகூட பார்க்காதவளை தேடி கிளம்பாறியேனு கேட்டேன். விவரம் தெரிந்து வரக்கூடாதா." என்று ரஞ்சன் புலம்பினான்.

ஹரிஷோ அதற்கேற்றார் போல, "எனக்கென்னடா தெரியும். கொலம்பியால இருந்தப்ப பேஸ்புக்ல லவ் பண்ணினேன். இங்க மேகமலை வந்ததும் சாட் பண்ணினா. சந்திக்கலாமானு கேட்டதுக்கு ஓகே சொன்னா ஆனா இந்த கொஞ்ச நாள்ல ஆளையே காணோம்னு தான் முன்ன அவ பிரெண்ட் அட்ரஸ் கொடுத்திருந்தா அங்க போய் பார்த்தேன்.

அங்கயே அந்த பொண்ணு ஹாசினி, யாஷிதா எங்கனு என்னை தான் கேட்டா. நான் அவ பேசியது புரியாம தான் இளையமான் அட்ரஸ் கொடுங்கனு வாங்கிட்டு வந்தேன். இங்க இப்படி துரத்திட்டு வந்து, இவங்க என்னை அடிக்கறிங்க" என்று அழகாய் கோர்வையாய் பேசி நடித்தான்.

அருளோ போன் அழைப்பு ஏற்கப்பட்டதும் "சொல்லு அருளு அங்க என்ன நிலவரம். அந்த பொண்ணு யாஷிதா கிடைச்சாளா? அந்த பையல் என்ன சொல்லறான்?" என்று கணீர் குரலில் உறுமினான்.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.










கருத்துகள்

  1. நல்ல வேளையாக புத்திசாலித்தனமாக போனை கொரியர் செய்து விட்டான். சூப்பர்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல வேளை போனை கொரியர்ல அனுப்பிட்டான். புத்திசாலியா முகம் பார்க்காத ஃபேஸ்புக் காதலின்னு சொல்லிட்டான். ஆனா, வீட்டுக்கு போன் கொரியர்ல போனா அங்க வாட்ச் பண்ற
    அடியாட்கள்
    கவனிச்சிட் டா...?

    பதிலளிநீக்கு
  3. Very nice story good move from Harish but paavam yasitha facesa pakamudila...enna panna porangalo

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥 - 2

தீவிகை அவள்🪔 வரையானல் அவன்🔥 -3

பிரம்மனின் கிறுக்கல்கள்

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1