மர்ம நாவல் நானடா-5

 அத்தியாயம்-5

 
   'புத்தகம் எடுத்துட்டாலும் நான் படிக்கணுமே.' என்ற வாட்டம் அவனை புத்தகத்தின் தாளை புரட்ட மட்டும் முடிந்தது.

    எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஆதிக்காலத்தில் தொடங்கப்பட்ட வட்டெழுத்து வடிவில் இருந்தது.

    ஹரிஷிற்கு தமிழில் இருந்தால் கூட கஷ்டப்பட்டு வாசிக்கும் முனைப்பில் இருந்தான்.
   இப்படி தமிழ் எழுத்தே ஜிலேபி வடிவத்தில் இருப்பதை கண்டு வாசிப்பை மூட்டை கட்டினான்.

    "ப்ளிஸ் சார் படிங்க சார் ப்ளிஸ்.. என்ன போட்டிருக்கு? உருவத்தை தெரியவைக்க மந்திரம் ஏதாவது இருக்கா?'' என்று ஹரிஷை போட்டு  உலுக்கினாள்.

  "இங்க பாருங்க யாரோ உலுக்கறிங்கனு தெரியுது. எதுக்கு உலுக்கறிங்கனு புரியலை. புக் படிக்க சொல்லறிங்க... ஐ நோ.. பட் இங்க எந்த எழுத்தும் புரியற மாதிரி இல்லை. இது தமிழ் தான். ஆனா படிக்க முடியாதது. பழைய காலத்து முறையில் இருக்கு.

   எதுவானாலும் பேசி தீர்த்துக்கலாம். நான் உங்களை கொலை செய்யலை. அதை நினைவு வச்சிக்கோங்க" என்று குறுட்டாம் போக்கில் ஒரு திசையை பார்த்து பேசினான்.

   "நான் இன்னமும் சாகவேயில்லைடா" என்று யாஷிதா முனங்கினாள்.

     "நீங்க ஏதோ சொல்லறிங்க... ஆனா அது சரியா கேட்கலை. நமக்குள்ள கம்யூனிகேட் குறைச்சலா இருக்கு. கொஞ்சம் சத்தமா பேசுங்க." என்று அறை முழுவதும் விழிகளை செலுத்தி ஒரு திசையில் முடித்தான்.  

     தனது மெத்தையில் தனதருகே மிக நெருக்கமாய் யாரோ வருவதை உணர்ந்தவன் அப்படியே பின்னால் நகர போனான்.

     "இங்க பாரு." என்று யாஷிதா ஆரம்பிக்க, "பார்க்க முடியாதுங்க கேட்க தான் முடியும்." என்று கவுண்டர் தந்தான்.

    "சரி...கேளு. நான் சாகலை. நானும் உன்னை மாதிரி மனுஷி தான்." என்று பேசவும் ஹரிஷோ "யாரை ஏமாத்த பார்க்கற?" என்று கேட்டான்.

    "நான் சொல்லி முடிக்கிற வரை கொஞ்சம் மூடிட்டு இருக்கியா?" என்று யாஷிதா திட்டவும், "மூடிட்டா... பேயுக்கு நம்ம வயசு இருக்குமோ..  ஏங்க முதல்ல உங்களை பத்தி ஆரம்பிச்சு முழுசா சொல்லுங்க. இன்னிக்கு சிவராத்தி தான்" என்று உறக்கம் தொலைய போவதை அறிந்து கூறினான்.

     நன்றாக ஹரிஷை பார்த்தபடி அமர்ந்த யாஷிதா தன்னை பற்றி கூறத் துவங்கினாள்.

   யாஷிதா கடந்தகாலம்

    "என் பெயர் யாஷிதா. எனக்கு வயசு 24. என் பேரண்ட்ஸ் என்னோட சின்ன வயசுலயே எங்க வீட்டு லேப்(lab) எரிந்து போனதில இறந்துட்டாங்க.
     கொலம்பிய நாட்டில் தான் வளர்ந்தேன். கொலம்பியா பல்கலைகழகத்துல கம்பியூட்டர் சயின்ஸ் முடிச்சேன். அதுக்கு பிறகு  அனிமேஷன் சம்மந்தமா வேலை பார்த்துட்டு இருந்தேன்.

     எனக்கு படிப்பு முடிஞ்சதும் இந்தியால இருக்கற கார்டியன் இளையமான் எனக்கு கல்யாணம் பண்ணி வச்சி, அப்பா அம்மாவோட சொத்தை என் பேர்ல மாத்தறதுக்காக இங்க வரவச்சார்.

    நானா இஷ்டப்பட்டு இங்க வரலை. எனக்கு கல்யாணத்துலயும் இன்ட்ரஸ்ட் இல்லை. சொத்து என் பேர்ல வந்ததும் அதை வித்துட்டு பணத்தை என் பேங்க் அக்கவுண்ட்ல மாத்திட்டு திரும்ப கொலம்பியாவுக்கு போறது தான் என் பிளான்.

     அதனால பெரிசா இந்தியா மேல எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

    கொலம்பியால என்னோட பிரெண்ட் ஹாசினி இங்க மேகமலையில படிச்சி முடிச்சிட்டு அவங்க அப்பாவோட பிரஸ் மூலமாக சின்னதா 'சுட்டிஸ் உலகம்' என்று மாதயிதழ் நடத்தறா. இங்க வந்ததும் அவ வீடும் என் கார்டியன் இளையமான் வீடும் பக்கம் என்பதால நானும் இங்க இருக்கற வரை அனிமேஷன் செய்து தந்துட்டு, அவளோட பொழுது போக்கறது தான் என்னோட வேலை.

   பெரிசா கமிட்மெண்ட்ஸ் எனக்கில்லை. அதனால தினமும் ஹாப்பியா லேடிபேட் சைக்கிளை எடுத்துட்டு மேகமலை பக்கமா சுத்திட்டு அன்றைய நாள் அழகா போனலே போதும்னு வாழ்ந்தேன்.

    என் கார்டியன் இளையமான் கல்யாணம் பண்ணினா தான் சொத்து தருவேன்னு வாதம் பண்ணிட்டு இருந்தார். அதனால எனக்கு அவரை கண்டாலே பிடிக்காது. ஏற்கனவே அவரை எனக்கு பிடிக்காது தான்.

     ஒரே வீட்ல அவரோட இருந்தாலும் பேச மாட்டேன். முகத்தை திருப்பிக்குவேன்.
   எனக்கு இந்தியாவுல ஒரே பிரெண்ட் ஹாசினி மட்டும் தான்.

   ஹாசினி பிறந்தநாளுக்கு அன்னைக்கு அவ வீட்டுக்கு போனேன். எனக்கு இந்த பகுதில வண்டி ஓட்ட தெரியாதுனு இளையமான் வண்டி வாங்கி தரலை. அதனால லேடிபேர்ட் சைக்கிளில் முன் பக்கம் கிப்ட் வாங்கி வச்சிட்டு ஹாசினி வீட்டுக்கு போனேன்.

அன்றைய நாள்....

"Happy birthday to you...
Happy birthday to you...
Happy birthday to dear one...
Happy birthday to you...
From good friends and true...
From old friends and new...
May good luck go with you..
And happiness too......

Happy birthday to you Hasini..." என்று தனக்குரிய ஆங்கிலம் நெடியில் யாஷிதா பாடி முடித்து ஹாசினியை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

    ஹாசினி ரெட் வெல்வெட் கேக் கட் செய்து முதல் துண்டை யாஷிதாவுக்கு கொடுத்து முடித்தாள்.

   "பஸ்ட் பேரண்ட்ஸுக்கு கொடு ஹாசினி." என்று கூறவும் "இட்ஸ் ஓகே டி. எனக்காக கேக் வாங்கிட்டு இந்த டெகரேட் பண்ணி, எங்கப்பா அம்மாவிடம் பர்மிஷனோட இந்த கார்டன்ல லைட்ஸ் அரேஞ்ச் பண்ணி, முக்கியமா என்னோட வுட்பி ஷ்யாமை வரவழைச்சி நிஜமாவே எனக்கு ஸ்வீட் சர்பிரைஸ் பண்ணினவள் நீ.

   உனக்கு பஸ்ட் இம்பார்டெண்ட் தந்து கேக் ஊட்டினா இங்க யாரும் கோவிச்சிக்க மாட்டாங்க." என்று கூறி தோழியை பெருமை பொங்க பார்த்தாள்.

       "இங்க இருக்கப்போவது ரொம்ப கம்மியா நாட்கள் ஹாசினி. சோ இருக்கற டேஸ்ல நான் பழகறவங்களோட நெஞ்சில் என்னை மறக்க முடியாத அளவுக்கு அன்பை வாறி பொழியலாம்னு இருக்கேன். என் வாழ்க்கையில முதல் இடத்துல இருக்கறவ நீ." என்று பேசி அவளுக்கு ஊட்ட வந்த கேக்கை இரு கன்னத்திலும் சந்தனம் போல  பூசினாள்.

   ஹாசினியோ "யாஷிதா... முகமெல்லாம் பிசுபிசுனு இருக்கும்." என்று சட்டென டிசு பேப்பரால் கன்னத்தை துடைத்தாள்.

      "இதே கன்னத்தோட உன் வருங்காலம் பக்கம் போனா அவர் (tongue)டங்ல உதவி செய்து துடைச்சிடுவார்." என்று கிசுகிசுக்க "அம்மா அப்பா காதுல விழப்போகுது சும்மாயிரு" என்று குரலை மெதுவாய் கூறி கேக் துண்டை கத்தரித்து தாய் தந்தையருக்கு கொடுத்து, மற்ற தோழிகளுக்கும், உறவுகளுக்கும் கொடுத்தாள்.

   பெரும்பாலும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் என்பதால் சின்ன சின்ன பரிசு பொருட்களை அன்பின் அடையாளமாக கொடுத்து முடித்தனர்.

    அதன் பின் ஷ்யாம் ஹாசினிக்கு தனிமை கொடுத்து வந்த பிள்ளைகளுக்கு ரிட்டர் கிப்ட் கொடுத்தாள் யாஷிதா.

    அவர்களின் பூரிப்பில் தன்னை தொலைத்தவள் ஹாசினியோடு சாப்பிட துவங்கினாள்.

  ஷ்யாம்-ஹாசினி மற்றும் ஹாசினி பெற்றோர் சந்திரன்-கீதா இவர்களோடு யாஷிதா உணவருந்த சந்திரன் பேச்சை ஆரம்பித்தார்.

   "ஏன் யாஷிதா... நீயும் இங்கிருந்து போகறப்ப மேரேஜ் பண்ணிட்டு போனா இளையமான் சாருக்கு சந்தோஷமாயிருக்குமே. எப்படியும் வாழ்க்கை துணை வேண்டும்லமா. அவர் தமிழ்நாட்டுல மட்டுமா வரன் பார்க்கறார்.

அவர் இந்தியால இருக்கறவனுக்கு உன்னை கட்டிக் கொடுக்க நீ  விரும்பலையோனு, உன்னை மாதிரியே வளர்ந்தது, வாழறது கொலம்பியால இருக்கறவனா பார்த்து டிசைட் பண்ணறாரே. ஓகே சொல்லிடலாமே.

   ஏன்மா அவர் எது சொன்னாலும் கேட்க மாட்டேங்குற? ஏதோ யாரோ மாதிரி பழகறதா சொல்லி கஷ்டப்பட்டார்.

   நீ என்னை ஹாசினி அப்பாவா மட்டும் நினைச்சி பழகறதா இருந்தா நான் பேசறதை இக்னோர் பண்ணிடுமா. ஆனா என்னை உன் இறந்து போன அப்பாவா நினைச்சிக்கிட்டா கொஞ்சம் நான் சொன்னதை கன்சிடர் பண்ணு. ஏன்னா எந்த அப்பாவும் மகளோட எதிர்காலத்துக்கு தான் துணையா நிற்பாங்க." என்று பேசவும் கண்கள் கலங்கியதை காட்டிக்காமல், "எங்கப்பா அம்மா இறந்ததுக்கு ஒருவிதத்துல இளையமான் தான் காரணம். எப்படி அங்கிள் அவர் விருப்பத்தை மதிப்பேன்." என்று கரகரப்பான குரலில் கேட்டாள்.

    "நீ மனசு வச்சா மன்னிக்கலாம். அவருக்கும் உன்னை விட்டா யார் இருக்கா.
  நான் உன்னிடம் போர்ஸ் பண்ணலைமா. இதனால ஹாசினினுக்கும் உனக்கும் நட்புல எந்த விரிசலும் வரக்கூடாது. நீ எப்பவும் போல இங்க வரணும் போகணும்.

    இந்த அட்வைஸ்லாம் இன்னொரு முறை சொல்ல மாட்டேன். ஏன்னா நீ புத்திசாலி பிள்ளை. உனக்கு அடிக்கடி சொல்ல தேவையிருக்காது." என்று கூறி ஆதுரமாய் தலையில் கைவைத்து நீயே யோசித்து முடிவெடு என்பது போல அகன்றார்.

   மெதுவாக ஸ்பூனால் உணவை அளந்தபடி விழுங்கினாள்.

    உண்மை தான் இளையமானுக்கும் தன்னை தவிர யார் இருக்கின்றார். தானாவது பரவாயில்லை. அவர் இறக்கும் அகவையின் விளிம்பில் நிற்கின்றார்.
   அவருக்கு இனியாவது நிம்மதியை தர முடிவெடுத்தாள்.

    ஹாசினி தன் வருங்கால அத்தைக்கு கணவர் மூலமாக கேக்கை தர பாக்ஸில் எடுத்து வைத்தாள்.

     "ஹாசினி இளையமானுக்கும் கேக் எடுத்து வை. கொண்டு போய் கொடுத்துட்டு அவர் பார்த்து வச்சிருக்கற அந்த நல்லவனை கல்யாணம் பண்ண ஓகே சொல்லிடறேன்." என்று கூறி தோழி மனதிற்கு மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்கினாள்.

   "ஏய்... யாஷிதா.. விளையாடலையே? இளையமானை மன்னிச்சு அவர் பார்த்த மேரேஜுக்கு ஓகே சொல்லிட போறியா?" என்று மீண்டும் ஒருமுறை கேட்டாள் ஹாசினி.

    "என்ன பண்ணறது... ஹாசினி பிறந்த நாளுக்கு அவள் மனதை தொடற மாதிரி ஒரு கிப்ட் என்னால முடிந்தது" என்று தோளைக்குலுக்கவும் ஹாசினி கட்டியணைத்தாள்.

  "எங்க அப்பா பேசியதை தப்பா எடுத்துப்பியோனு பயந்துட்டேன் யாஷிதா." என்று உள்ளதை சொன்னாள்.

   "சேசே கொஞ்ச காலமா இளையமானை நானும் கவனிச்சிட்டு தானே இருக்கேன். அதனால தான் மன்னிச்சு மறந்தேன். ஓகே கேக் கொடு நானும் கிளம்பறேன். லேட் நைட் ஆகிடுச்சு. இளையமான் எப்படியும் உன் வீடு என்பதால தான் இத்தனை நேரம் தேடாம, போன் பண்ணாம இருக்கார். இல்லை ஒரு செகண்டுக்கு ஒரு கால்ஸ் வந்து இம்சித்திருப்பார்." என்று யாஷிதா பேசினாள்.

   பிளாஸ்டிக் ஸ்வீட் பாக்ஸ் எப்பொழுதும் சேர்த்து வைத்திருக்கும் பழக்கம் ஹாசினி அன்னை கீதாவுக்கு உண்டு. அவை இது போல ஸ்வீட், கேக், சாக்லேட் என்று யாருக்காவது கொடுக்கும் போது உபயோகப்படுத்துவார். 
  
  இன்றும் ஸ்வீட் பாக்ஸ் ஒன்றில் கேக் எடுத்து கொடுத்து இலாஸ்டிக் ரப்பர்பேண்ட் போட்டு கொடுக்க அதனை வாங்கி கைப்பையில் வைத்து கொண்டாள்.

  ஹாசினி வுட்பி டிராப் பண்ணுவதாக கூறியும் மறுத்துவிட்டு தனது லேடிபேர்ட் சைக்கிளில் ஏறியமர்நது வீட்டுக்கு சென்றுவிட்டு போன் பண்ணுவதாக கூறி விடைப்பெற்றாள் யாஷிதா.

    ஹாசினி பெற்றோரும் மேகமலையில் சற்று தள்ளி வசிக்கும் யாஷிதா வீட்டில் எப்படியும் இளையமான் வாசலிலேயே காத்திருப்பார். சில நேரம் பாதி வழி வந்து யாஷிதாவை தேடுவார். கேட்டால் வாக்கிங் வந்தேன் என்று பெய்யுரைத்து யாஷிதா நலனில் அக்கறை கொண்டிருப்பார். அதனால் இளையமானின் செயலால் தைரியமாக வழியனுப்பி வைத்தார்.

   இதுவரை கதை கேட்டுயிருந்த ஹரிஷ் "அப்போ... அந்த இளையமான் தான் உன்னை கொன்னுட்டார் ஐ அம் ரைட்?" என்றான்.

  -தொடரும்.
 பிரவீணா தங்கராஜ் 

Comments

 1. Mrs Beena loganathanSeptember 5, 2023 at 9:35 AM

  Cashew nut.... சொல்றதை முழுசா கேளு man 😂😂😂.....

  ReplyDelete
 2. அடேய் கிறுக்கா...! அவ தான் சாகலைன்னு சொல்லிட்டா தானே..! திரும்ப, திரும்ப அரைச்ச மாவையே அரைச்சுக்கிட்டு.

  ReplyDelete
 3. Adei arvakollaru ava innum sagala da kadhai ah muzhusaa ketu apuram.unnoda doubt ah kelu

  ReplyDelete
 4. மிகவும் சுவாரசியமாக அருமையாக போகிறது கதை.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

நீ என் முதல் காதல் (On Going)

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

தீவிகை அவள் வரையனல் அவன்- 1