மர்ம நாவல் நானடா-14
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அத்தியாயம்-14
கண்ணாடியை துடைத்து விட்டு சுப்ரமணியம் "நான் நம்புவேன் ஏன்னா அவன் ஒரு புகழ்பெற்ற மாயாவியா வரவேண்டியது.
ஒரு கிரேட் மேஜிசியனா வந்து பெயரும் புகழும் எடுக்க அவனுக்கு திறமை இருந்தது. ஆனா... காலம் அவனை முடக்கிடுச்சு." என்று சோகத்தை தத்தெடுத்தார்.
எனக்கு 19 வயசுல கல்யாணமாகிடுச்சு, 22 வயசுல தனஞ்செயன் பிறந்தான்.
உங்க தாத்தாவுக்கு 23 வயசுல தான் கல்யாணமே ஆச்சு.
உங்க தாத்தாவுக்கு சின்ன வயசுலயிருந்தே சர்க்கஸ் வித்தைக்காட்டறது, பொருளை மாத்தறது இப்படி வேடிக்கையான விஷயத்துல ஆர்வம் அதிகம்.
அதுக்காக கத்துக்கற ஆர்வத்துல இளையமான் படிப்பை கோட்டை விட்டான். படிப்பில தான் கோட்டை விட்டானே தவிர இந்த ஊர்ல மேஜிக்-ஷோ நடத்தறவங்க யாரு என்னனு தெரிந்து அவங்களிடம் வித்தை கத்துக்க ஆரம்பிச்சான்.
அப்பயெல்லாம் இந்த தொப்பில முயலை எடுத்து காட்டறது, கலர் கலரா பேப்பர், பெட்டிலபடுத்து மறைந்து வர்றது, கையில இருந்த காயின் மாயமாகி கிடைக்கிறது. இதெல்லாம் செய்ய கத்துக்கிட்டான்.
கல்யாண வயசு தாண்டியும், எனக்கு குழந்தை பிறந்தும் இவன் இந்த சித்து வேலையில இருக்கானேனு அவனோட அப்பாவுக்கு கவலை. மந்திரம்தந்திரம் வச்சி பிழைப்பு ஓட்ட முடியாதே.
இளையமானுக்கு என்ன கத்துகிட்டாலும் இதெல்லாம் தந்திரம் தானே தவிர, மேஜிக் இல்லையே. இந்த தந்திரம் இல்லாம மேஜிக் கத்துக்கணும்னு தேடி தேடி இதுக்குன்னே இருக்குற படிப்பை டெல்லில படிக்க ஆரம்பிச்சான்.
அந்த வித்தை கத்துக்கற ஆர்வத்துல முதல் கரு தங்கி கலைந்து போனது. இளையமான் ரொம்ப துவண்டுட்டான். மனைவி உடல்நிலையும் தனக்கு ஒரு வாரிசும் வேண்டுமின்னு புரிய படிப்பை துண்டிச்சிக்கிட்டான். சென்னையில வாழ பிடிக்காம மேகமலைக்கு வந்துட்டான். இயற்கையோட கலந்து மனைவியோட அன்பை பெற்றான்.
அதோட உங்கப்பா பிறந்தார் மறுபடியும் வாழ்க்கை மலர்ந்ததா பீல் பண்ணினான்.
உள்ளுக்குள்ள இந்த மந்திரம் கத்துக்கற ஆசை விடலை. உங்கப்பாவுக்கு கல்யாணமானதும், உங்க பாட்டி இறந்ததும் இளையமானுக்கு தனிமையா பீல் பண்ணினான்.
மகனும் மனைவியோட தனிக்குடித்தனம் போயிட்டான். மனைவியும் இறந்துட்டா தன்னோட சின்னவயது ஆசை மந்திரம் கத்துக்கணும் என்றதாவது இப்ப கத்துக்கிட்டா என்னனு தான் டெல்லிக்கு போனான்.
அப்ப இருந்த காலமும் மாறிய காலமும் அவனை மலைக்க வைத்தது. முதல் முதல்ல கத்துக்கிட்ட மந்திரங்கள் தந்திரங்கள் எல்லாம் ஸ்கூல் பிள்ளைங்க கூட கத்துக்கும் என்பது போல கருத்துக்கு வந்தான்.
கணினி அறிமுகமாகி வளர்ந்த காலத்தால வெளிநாட்டுல மேஜிசியன் கத்துக்கணும்னு வந்தான். வெளிநாட்டுல மேஜிக்-ஷோ வரவேற்க தகுந்த இடத்த்ல மேடையில அங்கீகாரம் பண்ணுவாங்க.
உங்கப்பாவும் வெளிநாட்டு வாழ்க்கை என்பதால குடும்பமா ஷிப்ட் ஆனிங்க. அப்ப நீ பிறக்கலை.
மேஜிசியன் கத்துக்கணும் என்ற ஆர்வம், இந்த வயசுல கத்துக்க வந்த ஆர்வம் என்று பலரும் அவங்க அவங்களுக்கு தெரிந்த மேஜிக்கை கற்று தந்தாங்க.
பிரட்டிஷ் ஆளான 'மார்க் லூயிஸை' சந்திக்காத வரை இளையமான் மந்திரதந்திரங்கள் ஏமாற்று வேலை அது ஒரு மாயமும் இல்லை. வெறும் ட்ரிக்ஸ் என்று தான் நினைச்சிருந்தான்.
மார்க்லூயிஸ் ரொம்ப பெரிய மெஜிசியன். தாய்லாந்து ஜப்பான் பிரான்ஸ் இப்படி பல நாட்ல உலகளவிய மேஜிக்-ஷோல மேடையேறி கண்கட்டு வித்தையா அதிசயத்தை நிகழ்த்தியவர்.
ஒருத்தரை மறைய வைத்து திரும்ப கொண்டுவருவது எல்லாம் சிலர் ட்ரிக்ஸ் வச்சி மாற்றுவழில போய் பண்ணுவாங்க. ஆனா அவர் நிஜமாவே பண்ணினார்.
இதுல என்ன ஆபத்து வந்துச்சுனா... ஒரு முறை சிறைச்சாலையில் இதை செய்து காட்ட, இந்த மேஜிக் நிஜமானதுனு மக்களுக்கு தெரியவந்தது. அப்ப அந்த செய்தி அந்த ஊர் பேப்பரில் பிரபலமாச்சு.
சிறைக்கைதியை மறைய வச்சி திரும்ப மேடையில் நிறுத்தியதும் கைதியிடம் அனுபவத்தை கேட்டப்ப, "இந்த சக்தி மட்டும் எனக்கிருந்தா நான் என்னை மாயமாக்கி கொள்ளையடிச்சி எனக்கான வாழ்க்கையை சிறப்பா அமைச்சிட்டு செட்டிலாகிடுவேன். இப்படி போலீஸிடம் மாட்டி சிறைக்கம்பிக்குள்ள மாட்டியிருக்க மாட்டேன்" என்று கைதி அனுபவத்தை பகிர்ந்தான்.
இந்த மேஜிக்கால பலரும் தங்கள் வாழ்வில் திருடறது கொள்ளையடிப்பது செய்துட்டு தப்பிக்க வசதியா இருக்கும்னு பல கருத்துகள் வந்துச்சு. சிலரோ இதெல்லாம் சுத்த பொய். சிறைசாலையில கீழே சுரங்கபாதை வச்சி மறைய வச்சி எதிர்ல அழைச்சிருக்கலாம்னு கேலியா பேச்சுகள் வந்துச்சு.
எதையும் நேர்ல பார்க்காதவரை தான் மக்கள் நம்ப மாட்டாங்க. ஒருமுறை அவங்க வாழ்வில் அந்த அதிசயம் மாயம் நிகழ்ந்துட்டா அதை பலவருடத்துக்கு வாய் ஓயாம சொல்வாங்க. அப்படி சிலர் மார்க்லூயிஸ் செய்த மேஜிக்கை பார்த்து புகழ்ந்து பேசினாங்க. அதுக்கு அந்த கைதி தான் ஆதாரம்.
வசதி படைத்த முதலைகள், டார்க் உலக ஜாம்பவான்கள் இந்த மேஜிக்கை தங்களுக்கு லாபமா மாத்த முடியுமானு ஆதாயம் தேடினாங்க.
பலரும் மார்க்லூயிஸிடம் வித்தை கத்துக்க வந்து, அவன் கற்றுதர மறுத்திடவும் சலித்து போயிட்டாங்க.
இதுக்கிடையே நீ பிறந்திருந்த.
எல்லா கலையும் தனக்குள்ளேயே அழிந்திட, எந்த மனிதனும் விரும்ப மாட்டான். அப்படி தான் மார்க்லூயிஸும் நினைச்சி, தனக்கான சீடன்களாக சிலரை தேர்ந்தெடுத்தார். அவங்களில் ஒருத்தர் தான் இளையமான். உன்னோட தாத்தா.
தனக்கு தெரிந்ததை சிலருக்கு சிலதை கற்றுதர ஆரம்பிச்சார் மார்க்லூயிஸ்.. எல்லாத்தையும் கற்றுதர முடியாதே. நம்பகத்தன்மை என்று உண்டுயில்லையா?! ஒரு ஐந்து வருஷம் அந்த நம்பிக்கை யார் மேல வருதுனு நோட்டமிட்டார்.
அந்த நம்பகத்தன்மை மார்க்லூயிஸுக்கு இளையமான் மேல வந்ததும் அவனுக்கு இந்த இன்விசபிள் கலையை கத்துக்கொடுத்தார்.
உங்க தாத்தா அதை கற்றுக்க முயன்றார். இரண்டு வருஷம் அதுக்கே போச்சு. மார்க்லூயிஸ் சொல்லிக் கொடுத்த சில காலத்திலேயே இறந்துட்டார். உங்க தாத்தா அதை முயற்சி செய்வான். நிறைய சொதப்பும்.
நீயும் வளர ஆரம்பிச்ச. உனக்கு அப்ப சரியா ஏழு வயசிருக்கும்.
பலதடவை என்னிடம் இன்னிக்கு லேப்ல செய்து பார்க்க போறேன்னு போன்ல சொல்வான். நானும் வாழ்த்து சொல்வேன். அன்னைக்கும் போன் பண்ணி சொன்னான்.
ஆனா லேப்ல இருந்து மறைந்து வெளியே போய் ஆய்வு செய்து தன்னை யாருக்கும் தெரியலைனு ஊர்ஜிதமாகவும் கற்றுத்தேர்ந்ததை ஆர்வமா செயல்படுத்தி வெற்றியோட வந்தான்.
ரொம்ப வேதனையான விஷயம் லேப் பற்றி எரிந்திட்டு இருந்துச்சு.
உங்க அப்பா அம்மா கரிக்கட்டையா எடுத்துட்டு வந்தாங்க.
நீ அப்ப தான் உங்க தாத்தாவோட சந்தோஷமான முகமும், "என் மேஜிக் சக்சஸ் ஆகிடுச்சு. நான் கத்துக்கிட்டேன்னு" சந்தோஷமா சொல்லிட்டு வந்தவனை பார்த்த.
நீ கடைசியா உன் தாத்தா சிரிச்சதை வச்சி தான் அவர் மேல உனக்கு கோபம் வந்திருக்கும். உங்க அப்பா அம்மா இறந்து போனதை விட அவர் ஆய்வு ஏதோ சக்சஸ் ஆச்சேனு சந்தோஷப்பட்டாரேனு.
ஆனா அது அப்படியில்லைம்மா. அவன் பேசி முடிச்ச பிறகே உங்கம்மா அப்பா இறந்ததை பார்த்தான்.
உன்னை எல்லாரும் அங்கயிருக்க வேண்டாம்னு அழைச்சிட்டு போயிட்டாங்க. அவன் கதறி துடிச்சதை நான் டிவில பார்த்தேன்.
அவன் வாழ்க்கையில மந்திரம் மாயம் கத்துக்கிட்டது முக்கியம்னு தேடுதலில் இறங்கியவன். அதே மாயம் மந்திரம் தன் மகன் மருமகளோட உயிரை காப்பாத்த முடியலை என்றதும். அவன் அதை அதுக்கு பிறகு செய்ய முயலலை.
இதெல்லாம் நீ ஏழு வயசாக இருக்கறப்ப தாத்தாவிடம் வரமாட்டேன். என்னை ஹாஸ்டல்ல சேர்த்துடுங்கனு சொன்னதால் என்னிடம் ஷேர் பண்ணினான்
உனக்கு பதினைந்து வயசு வரை அங்க இருந்தும் நீ நீயா வளர்ந்ததால வந்துட்டதா சொன்னான். சின்ன பொண்ணை தனியா விட்டுட்டு வந்தேனு ஒரே அழுகை. அவனை மாத்தி சரிப்படுத்த ரொம்ப கஷ்டப்பட்டேன். அங்கிருந்து வந்தப்ப தான் இந்த வீட்டை கட்டினான். பிறகு என்ன நினைச்சானோ நான் சொந்த ஊருக்கே போறேன்டானு மேகமலைக்கு போயிட்டான்.
உங்க அப்பா அம்மா லேப்ல இறந்து போகலைனா, இளையமான் விரும்பிய மேஜிசியன்ல அச்சீவ் ஆனதை, பெருமையா....ஒரு கிரேட் மேஜிசியனா உலகத்துக்கு அடையாளப்படுத்தி ஒரளவு பெயர் புகழ் பெற்றிருப்பான்.
இளையமானுக்கு அந்த கனவு நினைவானதை வெளிக்காட்டிக்க பிடிக்காம தன்னையே முடக்கிக்கிட்டான்.
உனக்கு கல்யாணம் பண்ணினா தான் சொந்து கிடைக்கும் ரூடா இங்க வரச்சொன்னான். அப்படியாவது அவன் சாகற காலத்துக்கு நீ கூடயிருக்கணும்னு ஆசைப்பட்டான்.
ஆறு மாசம் முன்ன ஹரிஷை முதல்ல கட்டிக்கொடுக்க ஆசைப்பட்டான். ஆனா உன்னோட எதிர்பார்ப்பு எப்படினு தெரியலைனு அந்த பேச்சை நாங்களே துண்டிச்சிட்டோம்.
இளையமான் உன்னை மறைய வச்சது நீ எதிரிகள் கண்ணுக்கு தெரியகூடாதுனு தான். மத்தபடி அவன் உன்னை இன்னமும் ஏன் எல்லாரும் பார்க்கற மாதிரி மாத்தலைனு தெரியலை.
ஒருவேளை அவன் அவங்களிடம் மாட்டிட்டு இருக்கணும்." என்று சுப்ரமணியம் இளையமானின் வரலாற்றை விவரித்து முடித்தார்.
யாஷிதா எந்தவிதமா உணர்ச்சிக்கு கட்டுப்பட்டு இருக்கின்றாளென்று கூட அறிய இயலாது. ஆனால் அவள் தாரை தாரையாக அழுதாள். இளையமானுக்காக...
அதன் பிறகு தான் யாஷிதா அருவுருவமாய் நடமாடி கலிவரதன் போலீஸ்காரனை அடித்தே கொன்றதை காட்டினாள். அந்த வீடியோவில் ஒரு பகுதியில் காரில் ஒரு பெண் தலையிருக்கவும் தனஞ்செயன் "இந்த இடத்தை ஜூம் செய்ய முடியுமா மா" என்று கூறிவிட்டு தன்னருகே அங்கும் இங்கும் அசைவு தெரிகிறதாயென தேடினார்.
"லேப்டாப் ப்ளீஸ்" என்று யாஷிதா ஆரனின் ஸ்லைடிங் ஸ்லேட்டில் கேட்டாள்.
ஹரிஷ் லேப்டாப் காஞ்சனா தரவும் வீடியோவை அதில் போட்டு ஜூம் செய்தாள்.
"இது ரவிதாஸன் தங்கையாச்சே. கலிவரதன் என்றதும் யாரோ எவரோனு இருந்தேன். அது இந்த ரவிதாஸனோட மச்சான் என்றதும் ஏதோ அரசியல் கொலைனு நினைச்சேன். இப்ப சொந்த பொண்டாட்டியே கொன்று கார்ல வச்சிருக்கான். இது அந்த ரவிதாஸனுக்கு தெரியுமா?" என்று வாய் விட்டு தனஞ்செயன் புலம்பினார்.
"அது தெரியுறது இருக்கட்டும். இந்த பிள்ளையை எப்படி தெரியவைக்கிறது" என்று காஞ்சனா கேட்டார்.
அதன் பொருட்டே இளையமானை பார்க்க சுப்ரமணியம் முனைந்தார்.
இளையமானை சந்தித்து யாஷிதா உருவத்தோடு நடமாட முடிந்தால் மட்டும் அடுத்து என்னனென்ன செயல்படுத்த வேண்டுமென்று தனஞ்செயன் யாஷியாவுக்கு திட்டம் தீட்டி தந்தார்.
கலிவரதனும் ஹரிஷ் அல்லது சுப்ரமணியத்திடம் இந்த கிழவன் இளையமான் வாய் திறக்கட்டும் யாஷிதா இருக்குமிடம் அறிந்தால் போதுமென்று வர கூறிவிட்டான்.
இதோ மூவரும் சந்திக்க ஹரிஷிடமிருந்த எலக்ட்ரிக் டிவைஸ் மூலமாக ஒட்டு கேட்கும்படி இளையமான் பேசிடுவாரா? அல்லது ஹரிஷ் சுப்ரமணியம் நாசூக்காய் பேசி அலார்ட் செய்வார்களா? அப்படியே செய்தாலும் யாஷிதா நிலை மாற என்ன முற்படுவது? என கேள்விகளை தாங்கினான் வேள்வி நாயகன் ஹரிஷ்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
மிகவும் சுவாரசியமான இளையமான் கதை அருமை. கதை மிகவும் சுவாரசியமாக அருமையாக போகிறது.
பதிலளிநீக்குசூப்பர்... சூப்பர்..! திறமைகள் எங்க இருந்தாலும் உலகம் ஒருநாள் அதை வெளிச்சம் போட்டு காட்டிடும். ஸோ...இப்ப இளையமானுக்கும் அப்படி ஒரு நிலைக்கு தான் தோணுது. கண்டிப்பா பேரனும் தாத்தாவும் சேர்ந்து இளையமானுக்கு சூழ்நிலையை புரிய வைச்சிடுவாங்கன்னு தோணுது.
பதிலளிநீக்குஅருமை அருமை..... மேஜிக் தகவல்கள் அருமை.... 👏👏👏👍🏻👍🏻👍🏻
பதிலளிநீக்குசூப்பர் சூப்பர் கதை நன்றாக இருக்கு ரொம்ப ஆர்வமாக இருக்கு அடுத்த அத்தியாயம் வரை காத்து இருக்கனுமே
பதிலளிநீக்குWow Wow sema interesting ah iruku yae
பதிலளிநீக்குஇளையமான் கதை ரொம்ப சுவாரசிய மான கதை
பதிலளிநீக்குInteresting sis
பதிலளிநீக்கு