மர்ம நாவல் நானடா-23 (முடிவுற்றது)

  அத்தியாயம்-23    யாஷிதா அவனின் முனங்கல் கேட்டு மாடி ஹாலில் நடந்தவள் திரும்ப, வேகமாய் வந்தவன் அவளை இடித்து, அணைத்து உருண்டப் பின்னே சுதாரித்தான்.    அவள் மீது தன் தேகத்தை மொத்தமாய் சரித்திருந்தான். அந்த களோபரத்திலும் அவள் தலைக்கு முட்டுக்கொடுத்து அவள் சிரத்தை தாங்கியிருந்தது வலது கை. இடது கையோ அவளது இடையை வளைத்திருந்தது.   அவளோ சுற்றம் மறந்திருக்க, ஹரிஷின் கணம் தாளாமல் எழ முயன்றாள். ஹரிஷே வேகமாய் பதறிவிட்டு எழுந்திட, இருவருக்கும் மூச்சு வாங்கியது.    "நான் என்ன இன்னும் இன்விசிபிளாவா இருக்கேன்." என்று யாஷிதா கேட்க, "இ.. இ..ல்லை என்று தலையாட்டவும் அவனது முகமாறுதல் அவளுக்குள் ரசிப்பை ஏற்படுத்த, அளவிடாத காதலை நெஞ்சில் எடுத்துரைத்தது.    இதற்கு மேல் மனக்கடலில் காதல், கடலணை  உடையவும், யாஷிதா அவன் காலரை பற்றி இழுத்து, அலமாரி கதவை திறந்து, உள்ளே நுழைந்து சாற்றினாள்.      "உன்கிட்ட நிறைய பேசணும். என்னால இதுக்கு மேல மறைக்க முடியலை.     ஏதாவது கிறுக்குதனமா பேசிட்டு பிறகு நீ பின்வாங்கிட்டா? அதனால கேட்கவே தயக்கமாயிருக்கு. ஆனா கேட்காமலும் இங்கிருந்து போக முடியலை. நானும் இந்த பேச

மர்ம நாவல் நானடா-17

 அத்தியாயம்-17

       ரஞ்சன் ஹரிஷ் வீட்டு வாசலில் கால் வைக்கும் போதே, "ஹரிஷ்... ஹரிஷ்.." என்று கூவியபடி வந்தான்.

    "வாடா.. நல்லவனே." என்று ஹரிஷ் வரவேற்றான்.

   "மாப்பி... உன்னை அங்க அருளோட தனியா விட்டுட்டு போனப்பவே பயந்தேன் டா. நான் நினைச்ச மாதிரியே அவன் மூக்கை உடைச்சி விட்டிருக்க, ஏன்டா... என்னாச்சு...? கறிச்சோறுலாம் வாங்கி தந்தாங்க டா. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணிட்டியே  அவனை அடிக்கலாமா நீ" என்று சிலாகித்தான்.

   "பார்த்தியா.. அப்ப நீ பார்த்த பார்வை 'அய்யோ பிரெண்டை தனியா விட்டுட்டு போறோமே'னு இல்லை. 'அவனை நான் ஏதாவது பண்ணிடுவேன்னு தானே? நல்லா வருவடா." என்று ஹரிஷ் நண்பனை சாப்பிட கூட்டு சேர்த்தான்.

    "ஏன்டா ஐந்து தடியன்கள் உன்னை ஆட்டிவைச்ச மாதிரி சீனை போட்ட? நீ நினைச்சா அப்பவே அடிவெளுத்திருப்பனு தெரியும். எல்லாம் அந்த பொண்ணுக்காக அமைதியா இருந்த? அந்த பொண்ணு கிடைச்சிட்டாளா? இளையமானை பார்த்தியா." என்று கேட்க, புருவத்தால் 'அக்கட சூடு' என்று சுட்டிக் காட்டினான்.

      "என்னடா உங்க தாத்தா வயசுல இருக்கார். அப்ப யாஷிதாவோட அப்பா இல்லையா? நீ அந்த பொண்ணுக்காக ரூட் விடவும்" என்று அப்படியே பேச்சை சுருக்கி திருட்டு விழி விழித்தான்.

   "அந்த பொண்ணோட தாத்தா. நான் அப்ப நடிச்சேன்" என்று ஹரிஷ் பற்கடித்து பேசினான்.

     "நடிச்சியா" என்று இளையமானை பார்த்து தலை சொரிந்து அசடு வழிந்தான்.

     "அதுவொன்னுமில்லைடா மாப்பி... யாஷிதாவுக்கும் அருள் சம்மந்தப்பட்ட ஆட்களுக்கும் கொஞ்சம் லந்து போயிட்டு இருக்கு." என்றது மட்டும் உரைத்தான்.

    ஒருவருக்கொருவர் பேசியபடி "தாத்தா... உங்க பேத்தி முகத்தை நான் பார்க்கணும். கொஞ்சம் போட்டோ காட்டுங்களேன்" என்று ரஞ்சன் இயல்பாய் கேட்டான்.

        அச்சோ.. அந்த தடியன்கள் போனை பிடுங்கி உடைச்சிட்டாங்கப்பா. ஹரிஷ்.. என் பேஸ்புக்ல இருக்கு. லாகின் பண்ணினா பார்க்கலாம்" என்றதும் கையை கழுவ உடனே எழுந்து சென்றான்.

    காஞ்சனாவும் தனஞ்செயனும் ஆவென பார்த்தனர். சாப்பிடும் போது அந்த கடவுளே வந்து கூப்பிட்டாலும் எந்திரிக்க கூடாது. வச்சதை சாப்பிட்டு தான் எழணும்' என்று வீரவசனம் பேசுபவன் அப்படியே ஓடுவதை கண்டு அர்த்தம் பொதிந்த பார்வையை வீசிக்கொண்டார்கள்.

   இளையமானும் சுப்ரமணியமும் கூட அதனை கவனித்தார்கள்.

   சுப்ரமணியத்திற்கு லேசான பயம் சூழ்ந்தது. பேரன் யாஷிதாவை எப்படி நினைத்து உதவுகின்றானோ? அவள் நாளைப்பின் கைகுலுக்கி கொலம்பியா சென்றால்? இதே மனதில் எண்ணி கலங்கினார்.

இளையமானோ ஜீமெயிலும் பாஸ்வோர்டும் போட்டு முகநூல் கணக்கை திறந்தார்.
  
    அதில் ஹாசினி ஷ்யாம் நிச்சயத்தில் குடும்பத்தோடு எடுத்தவை இருந்தது. ஹாசினியிடம் சற்று நேரம் பேசவிட்டால் யாஷிதா போட்டோவை அங்கே இதுபோல ஏதேனும் ஆப்பில் கண்டிருப்பான். சந்திரன் தான் கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக தள்ளிவிட்டாரே.

    தோள்வரை கத்தரித்த கூந்தலும், முட்டிவரை இருந்த 'ஜம்சூட்டில்' தினவெடுத்த ரேஸ் குதிரையாக காட்சியளித்தாள்.

     "சேலை கட்டும்மா' அன்னைக்கு சொன்னேன். அதனால வேண்டுமின்னே இப்படி ஒரு டிரஸ்ல வந்துட்டா. எதுவும் நான் சொல்லறதை கேட்க மாட்டா. என்னை பிடிக்காது. கடைசியா தாத்தானு அழுதுட்டா." என்று கலங்கினார் இளையமான்.

    "அதெல்லாம் உன்னை பத்தி சொன்னப்ப இப்ப புரிஞ்சியிருப்பா டா" என்று தோழன் மணி தட்டிக் கொடுத்தார்.

   ஹரிஷ் இவ்வுலகத்தில் இருந்தால் தானே? அவளை தான் பார்வையில் விழுங்கினான்.

   "மாப்பி.. நல்லாயிருக்கா டா" என்று ரஞ்சன் ஆரம்பிக்க முழங்கை முட்டியால் ரஞ்சன் நெஞ்சை இடித்து 'போதும் நீ பார்த்து கிழிச்சது' என்பது போல வினையாற்ற, "புரிஞ்சிடுச்சு டா.. புரிஞ்சிப்போச்சு" என்று நெஞ்சை நீவியபடி சாப்பாட்டை கவனித்தான்.

   மணி தாத்தாவோ "டேய் ஹரிஷ்... யாரோ காலீங் பெல் அடிக்கிறாங்க" என்று நினைவுலகத்திற்கு உசுப்பவும், "யாராவது திரும்ப வந்துட்டாங்களா?" என்று காஞ்சனா நெஞ்சில் கை வைத்து பயந்தார்.

   ஹரிஷோ சினம் உச்சம் பெற வேகமெடுத்தான். மீண்டும் சாப்பாட்டில் கைவைத்தவன் சாப்பிட்டவனை எழவைத்து பாக்கியம் காலிங்பெல்லையே சாரும். கைகளில் உள்ள பருக்கைகள் சிதற, கதவை வேகமாய் திறந்தான்.

   அங்கே யாஷிதா தெருவை நோட்டமிட்டு திரும்பினாள்.

   தன்னிடம் சொல்லாமல் சென்றுவிட்டாளேயென்ற எண்ணத்தில் ஹரிஷ் இருக்க, அவனது சினத்தை கண்ட யாஷிதாவோ பேச தடுமாறி இருந்தாள்.

    "யாஷிதா" என்று இளையமான் அழைக்க, "தாத்தா..." என்றவள் ஹரிஷை தாண்டி வந்து அணைத்து கொண்டாள்.

   "ஏன் தாத்தா.. என்னை மறைய வச்ச மாதிரி நீங்களும் மறைந்து வந்திருக்கலாம்ல. நான் எப்படி பயந்துட்டேன் தெரியுமா?" என்று அழுதாள்.

    "ஒருத்தர் மறைந்து இருந்தா அடுத்து அவங்களை ரிலீப் பண்ணிட்டு தான் மற்றவரை மறைய வைக்க முடியும் டா. அந்த புக் வேற வேண்டும்." என்று தெளிவுப்படுத்தினார்.

   "என்னடா சொன்னதுப்போல புகார் அளிச்சிட்டு வந்தியா?" என்று தனஞ்செயன் கேட்டதும் "யா அங்கிள் பண்ணிட்டேன். நான் ரவிதாஸை மீட் பண்ண கேட்டது கலிவரதனுக்கு தெரிந்துடுச்சு அங்கிள். வெளியே வந்தப்ப போலீஸ் ஒருத்தன் எவ்ளோ பேமண்ட் தேற்ற போற? அதிகமா கேளு. அப்படின்னு சொன்னாரு." என்று கூறவும் "மடப்பசங்க பணத்தால மடக்கிடலாம்னு யோசிக்கறாங்க'' என்றார் மணி.

    "ஆமா தாத்தா... இப்பவும் மனைவியை கொன்றோமே அதை வைத்து பிரச்சனை வரும்னு யோசிக்கலை பாருங்க" என்று யாஷிதா கைகட்டி திரும்ப, ஹரிஷ் அவளை தான் எகத்தாளமாய் அளவெடுத்தான்.

    உருவம் இல்லாதப்போது ஹரிஷை தனியாக கட்டி பிடித்திருக்கின்றால், அவனை அணைத்து ஆரத்தழுவி உறங்கியிருக்கின்றாள். நெடுநாள் தோழியை போல கதைத்து அவனை கலாய்த்து விளையாடியிருக்கின்றாள். அப்பொழுது எல்லாம் ஹரிஷின் இந்த பார்வையை விழியோடு கலந்து பார்த்ததில்லை.
    தற்போது ஹரிஷ் பார்வை அவளை விழுங்க, மெதுவாய் நாணிப் பார்க்கவே தயங்கினாள்.

    "அம்மா... நானும் ரஞ்சனும் வெளியே போறோம். விமலை பார்க்க" என்றவன் வெளியே செல்ல யாஷிதா அவனையே நோக்கவும் சரியாக இருந்தது.

   இருவர் கண்களும் பார்வை மோதிக்கொண்டு உரசியது.

   இளையமான் யாஷிதாவிடம் மேற்படி சென்று வந்த கதையை கேட்க, அவள் விவரித்தாள்.

   கலிவரதன் வீடியோவை யாஷிதா ரவிதாஸனிடம் காட்டி பேரம் பேசி பணத்தை கேட்க போவதாக அந்த மடையன் சொன்னதை கூறவும் இளையமான் யோசனைவயப்பட்டார்.

   "ஏம்மா... அந்த பொண்ணும் இந்த வீடியோல இருப்பதை அவன் கவனிக்கலையா?" என்று கேட்டார் இளையமான்.

     "இல்லை தாத்தா... நானே வீடியோ எடுக்கும் போது அந்த பொண்ணு முகம் அங்க இருப்பதை கவனிக்கலை. அவனுங்க கார்ல தானே இருந்துச்சுனு கேர்லஸா இருந்திருக்காங்க. பட் லைட்டா கதவு மூவ் ஆகி தலை வெளியே விழுந்திருக்கு. அங்கிள் தான் பார்த்திருக்கார்." என்று விவரிக்கவும் அதன் பிறகு ஹரிஷ் குடும்பத்தோடு ஒன்றாக கலந்தாள்.

   ஹாசினியிடம் போனில் பேசினாள். ஹரிஷ் வந்து சென்றதை  கூறினாள் அவள்.
ஹரிஷ் பெயர் எடுத்தாலே லேசான தித்திப்பு அடிநெஞ்சில் இனிக்க ஆரம்பித்தது.

     அதோடு ஹாசினி வேறு "ஏய்... அவன் யாரு... நிஜமாவே லவ்வா? அரவிந்த் சாமி கலர்ல லைட்டா புதர்தாடி வச்சிட்டு, துறுதுறுனு இருக்கான் டி. அப்பா அவனை வெளியே தள்ளினாரா அப்ப ஒரு பார்வை பார்த்தான். ஸப்பா... ஒரு மாதிரி ரூடா.. 'தெரிந்த பொண்ணுக்கு ஆபத்து இப்படி பேசறிங்களே'னு அந்த பார்வை கேட்டுச்சு. இப்ப அவன் வீட்ல தான் இருக்கியா?" என்றதும் யாஷிதா போனை காதில் வைத்துவிட்டு பதில் பேசாமல் அப்பொழுது நுழைந்த ஹரிஷை வெறித்தாள்.

    "தாத்தா.. அம்மா.. தாத்தா எங்க?" என்று தேட, "அவர் அவரோட  பிரெண்ட் கூட மாடில பேசிட்டு இருக்கார்.

    அப்பா ரூம்ல இருக்கார்" என்று கூற, கிச்சனிலிருந்து ஹாலுக்கு வந்து மாடிக்கு போகலாமா இல்லை இங்கே அமரலாமா என்று பூவா தலையா என்று மனதிற்குள் போட்டிருந்தான்.

    ஹரிஷ் வந்ததும் தோழியிடம் கதைக்க மறந்தவளாக, "ஹா..ஹாசினி.. ஐ கால் யூ பேக்." என்று தொலைப்பேசியை அணைத்தாள்.
 
     ஹரிஷ் பேச தயங்கி மாடிக்கே அடியெடுத்து வைக்க, "ஒரு நிமிஷம்." என்று கூப்பிட ஹரிஷ் நின்று மெதுவாய் திரும்பினான்.

    "நான் உங்களை மெட்ரோ ரயில்ல பார்த்தேன். உங்களை கூட மோதிட்டு சாரி கேட்காம போனேன்" என்றதும் ஹரிஷ் இன்று நடந்தவையை ரீவையீண்ட் செய்து முடித்தான்.

   "பார்த்தும் பேசாம போனிங்களா?" என்றான் ஒரு மாதிரி குரலில்.

   "அவசரமா அங்கிள் தான் முதல்ல புகார் கொடுக்க சொன்னாங்க. அதோட உங்களை யாராவது பாலோவ் பண்ணிட்டு இருந்தா.. சோ முதல்ல செய்யற கடமையை தேடி ஓடிட்டேன்.. நீங்க ரொம்ப பெரிய உதவி செய்திங்க. தேங்.." என்றவள் அவனது வெட்டுதல் பார்வையில் பேச்சை நிறுத்தினாள்.

     "நல்லது." என்று பேச்சை நிறுத்திக்கொண்டு மாடிக்கு விரைந்தான்.

   தனஞ்செயன் அறையிலிருந்து கேட்டவாறு நின்றார்.

தனது லேப்டாப்பில் மெயிலை திறந்து பார்க்க, அதில் கடைசியாய் சென்ற இன்டர்வியூவில் வேலைக்கு வர கூறி அப்பாயின்மெண்ட் கிடைத்தது. 

   மகிழ்ச்சியாக அதனை மாடியிலிருந்த சிறு ஹாலில் பேசியபடியிருந்த இளையமான் சுப்ரமணியிடம்  பகிர்ந்தான்.

அருகேயிருந்த மணி தாத்தாவோ "இந்த வேலையாவது தக்க வச்சிக்கோடா. உங்க அண்ணி சொந்தத்துல ஒரு வரன் வருது. பார்த்து பேசி முடிப்போம்." என்றதும் கொஞ்சம் கொஞ்சமாய் சிரிப்பு குறைந்தது.

    இளையமானுக்கு பின்னால் வந்து நின்றவளை நிதானமாக ஏறிட்டான்.

    யாஷிதா மற்றும் ஹரிஷ் இல்லாத நேரம் அவர்களை சேர்த்து வைத்து திருமண விவகாரம் பேசியவர்கள் அவர்கள் இருக்கும் நேரம் தவிர்த்தனர்.

   ஏற்கனவே ஹரிஷை காணாத போது ஹாசியிடம் 'எங்கப்பா அம்மா இறந்ததுக்கு அவர் தான் காரணம். அப்படிப்பட்டவர் கை காட்டுற ஒருத்தனை எப்படி வாழ்க்கை துணையா தேர்ந்தெடுப்பேன். இதுல இவரோட பிரெண்டோட பேரன். வேலை வெட்டி இல்லாம சும்மா சுத்திட்டு இருக்கறவனுக்கு கொலம்பியால படிச்ச நான் வேண்டுமா?

  புல்*ஷிட்.. சொத்தை மாத்தி பணத்தை போட்டதும் கையெழுத்து போட்டுட்டு வாங்கிட்டு அடுத்த பிளைட் ஏறிடுவேன்.' என்று மனதை கூறிவிட்டாளே. இன்று அதே ஹரிஷை எப்படி ஏற்பாள்? இது இளையமானின் மனவோட்டம்.

  சுப்ரமணியத்திற்கும் ஏற்கனவே இதெல்லாம் அறிந்ததால் அவரும் பேரனை பற்றி தூக்கிநிறுத்தி பேசவில்லை. இத்தனைக்கும் பேரன் மனம் லேசாய் பெண்ணவளை தேடுவதை உணர்ந்தும் வாய் திறக்கவில்லை.

   எதுவும் பதில் தராமல் ஹரிஷ் அன்னையிடம் தெரிவிக்க அவளை தாண்டி படியிறங்கினான்.

   படியில் ஒவ்வொரு அடியும் இறங்கும் பொழுதும் அவளை அளவிட்டபடி இறங்கினான்.

  அவளுமே இறங்கும் அவனை தான் அளவிட்டாள்.

     இதே போல சிற்சில பார்வைகளும் தழுவலும் ஏற்பட்டது.

   இரவு உணவை விழுங்கும் போதும் பேசி சிரித்து கடந்திட, ஹரிஷ் மடமடவென சாப்பிட்டு மாடியில் உறங்க சென்றான்.
 
    யாஷிதாவோ திக்கி திணறி அவனிடம் பேச எழுந்தாலும் அவளால் பேச முடியவில்லை. முன்பு தான் அவனை மட்டமாய் பேசியது அவன் அறிந்திருந்தால்...? கவலையாக சாப்பிட்டு எழுந்தாள்.

  காஞ்சனாவிடம் கிச்சனில் தட்டை  உருட்டிக்கொண்டு உதவினாள்.

   "நீ வேண்டுமின்னா மாடில போய் தூங்குமா" என்றார் காஞ்சனா.

    'மேல ஹரிஷ் இருப்பானே' என்று மாடியை ஏறிட்டாள்.

    காஞ்சனா பின்னரே மகன் இருப்பதை அறிந்து, "அச்சோ... ஹரிஷ் இருக்கான்ல.. நீ என்ன பண்ணற அவனிடம் நான் சொன்னேன்னு சொல்லி கீழே வந்து ஹால்ல படுத்துக்க சொல்லு. நீ அங்க ஸ்டே பண்ணிக்கோ. ஏற்கனவே அங்க தங்கியதால புதுசா இருக்காது தானே?" என்று கேட்க ஆமோதிப்பாய் தலையாட்டவும் "அப்ப போய் அவனை அனுப்பிட்டு நீ போய் தூங்கு. அவன் உடனே தூங்கிட போறான். அப்பறம் வீடே இடிந்து விழுந்தாலும் எந்திரிக்க மாட்டான்." என்று கூறவும் மாடிக்கு அன்ன நடையை எடுத்து வைத்தாள் யாஷிதா.

  அவன் வீட்டிலிருந்தே அவனை கீழே விரட்டி ஹாலில் படுக்க கூற தயங்கியபடி நடந்தாள்.

     "சும்மா மதியத்துல இருந்து ஓட்டாத. நான் சொன்னதுல பாதி உண்மை பாதி பொய். எது பொய் எது உண்மைனு இப்ப சொல்லற ஐடியாயில்லை." என்றவன் அலமாரி கதவு திறக்கும் சப்தம் கேட்டு திரும்பினான்.

     "நான் அப்பறம் பேசறேன் டா" என்று ரஞ்சனிடம் கூறி அணைத்துவிட்டு யாஷிதாவை காண, "ஆன்ட்டி உங்களை ஹால்ல படுத்துக்க சொன்னாங்க. என்னை இங்க தூங்க சொன்னாங்க" என்று கூறவும் போனை பேக்கெட்டில் வைத்து எழுந்தான்.

    'என் ரூம்ல என்னையே வெளியே தள்ளறியா?' என்ற பார்வையை வீசிவிட்டு ஓரளவு தனது மெத்தையை ஒழுங்குப்படுத்தி முடித்தான்.

    இரண்டெட்டு நடந்தவனிடம் "உங்க பில்லோ பெட்ஷீட்" என்று சுருட்டி தரவும் அதனை வாங்கிவிட்டு "அதுசரி" என்று வெளிநடப்பு செய்தான்.

    யாஷிதாவுக்கு அவன் முகபாவங்கள் கண்டு சிரிப்பாய் இருந்தது.

    மெத்தையில் படுத்தவள் அவன் கட்டியணைக்கும் தலையணையை தலைக்கு வைத்து அணைத்து கொண்டு, முன்பு நகைச்சுவையாக நடமாடியவனின் வதனத்தில் அவன் உறங்கும் போது தோன்றிய முகமும் வந்து மோதியது.

   இதே மெத்தையில் உருவமற்று அவனோடு உறங்கிய நாட்களில் அவன் கைகள் தீண்டிய இடங்களை எண்ணி பார்த்தவளுக்குள் சிறு முறுவல் கூடியது.

   கீழே வந்தவன் சோபாவில் தலையணையை போட்டுவிட்டு ஆங்கிலப்படத்தை டிவியில் ஓடவிட்டு பார்க்க ஆரம்பித்தான்.

   என் ரூம்ல என்னை தூங்கவிடாம துரத்தியடிச்சிட்டு அவளுக்கு தூக்கம் வருமா? என்ற ஆராய்ச்சியில் கிடந்தான். டிவி அது பாட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தது. இவன் சிந்தனை தனியாக கட்டவிழ்ந்து கனவை நாடியது.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ். 

கருத்துகள்

  1. Apram ena agum rendu perum pesunga pa aal theriyama iruntha ellam pesi share panitu ipo Yen ippadi irukanga pesa vainga sisy. Pavam harish

    பதிலளிநீக்கு
  2. முதல்ல ரெண்டு பேருல ஒருத்தர் முகம் கூட பார்க்கலை.... இப்ப முகம் பார்த்த பிறகும் ஒருத்தருக்கொருத்தர் பேசாமலே இருக்காங்க...என்ன கொடுமையடா..!

    பதிலளிநீக்கு
  3. சமாதானக் கொடி யார் முதலில் தூங்குகிறார்கள் என்று பார்க்கலாம். அருமையான நகர்வு.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥 - 2

தீவிகை அவள்🪔 வரையானல் அவன்🔥 -3

பிரம்மனின் கிறுக்கல்கள்

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1