மர்ம நாவல் நானடா-23 (முடிவுற்றது)

  அத்தியாயம்-23    யாஷிதா அவனின் முனங்கல் கேட்டு மாடி ஹாலில் நடந்தவள் திரும்ப, வேகமாய் வந்தவன் அவளை இடித்து, அணைத்து உருண்டப் பின்னே சுதாரித்தான்.    அவள் மீது தன் தேகத்தை மொத்தமாய் சரித்திருந்தான். அந்த களோபரத்திலும் அவள் தலைக்கு முட்டுக்கொடுத்து அவள் சிரத்தை தாங்கியிருந்தது வலது கை. இடது கையோ அவளது இடையை வளைத்திருந்தது.   அவளோ சுற்றம் மறந்திருக்க, ஹரிஷின் கணம் தாளாமல் எழ முயன்றாள். ஹரிஷே வேகமாய் பதறிவிட்டு எழுந்திட, இருவருக்கும் மூச்சு வாங்கியது.    "நான் என்ன இன்னும் இன்விசிபிளாவா இருக்கேன்." என்று யாஷிதா கேட்க, "இ.. இ..ல்லை என்று தலையாட்டவும் அவனது முகமாறுதல் அவளுக்குள் ரசிப்பை ஏற்படுத்த, அளவிடாத காதலை நெஞ்சில் எடுத்துரைத்தது.    இதற்கு மேல் மனக்கடலில் காதல், கடலணை  உடையவும், யாஷிதா அவன் காலரை பற்றி இழுத்து, அலமாரி கதவை திறந்து, உள்ளே நுழைந்து சாற்றினாள்.      "உன்கிட்ட நிறைய பேசணும். என்னால இதுக்கு மேல மறைக்க முடியலை.     ஏதாவது கிறுக்குதனமா பேசிட்டு பிறகு நீ பின்வாங்கிட்டா? அதனால கேட்கவே தயக்கமாயிருக்கு. ஆனா கேட்காமலும் இங்கிருந்து போக முடியலை. நானும் இந்த பேச

மர்ம நாவல் நானடா-16

 அத்தியாயம்-16

    ஹரிஷை தனஞ்செயனும் காஞ்சனாவும் "அந்த பிள்ளைக்கு ஏதோ வேலையிருக்காம் டா. கிளம்பி போயிட்டா." என்று கூறினார்.

    ஹரிஷ்  உடைந்து போய் விட்டான்.
  லேசான எதிர்பார்ப்பு இருந்தது. கடைசியாக அவள் கட்டித்தழுவிய போது ஒரு நேசம் பிறந்தவுணர்வு. இப்படி தான் வீட்டுக்கு வரும் முன்னே அவள் சென்றதை தாங்கயியலவில்லை.

    வீட்டில் தனஞ்செயன் "ஏன்டா எங்கயாவது போனா சொல்லிட்டு போக மாட்டியா? மனசு கிடந்து தவிச்சிடுச்சு." என்று கேட்க விசுக்கென எழுந்து மாடிக்கு சென்றான்.

    தாடைகள் இறுக, அறைக்கு வந்தவன் மெத்தையில் விழுந்தவாறு, மனதில் அவளை தான் திட்டிக்கொண்டிருந்தான்.

      'இப்படி சட்டுனு தன்னை விட்டு போவானு தெரிந்தா அருவுருவமாய் தன்னறையிலேயே இருக்க வைத்திருப்ப தானே' என்றதற்கு கண்ணாடியை பார்த்து 'ஆமா' என்பது போல பார்த்தான்.

    கீழே என்னங்க ஆச்சு இவனுக்கு? இப்படி பொசுக்குனு மேல போயிட்டான். எப்பவும் நீங்க திட்டினா பதில் பேசாம கடைசி வார்த்தை திட்டி முடிக்கிறவரை காது கொடுத்து கேட்பானே. இதென்ன புது பழக்கம்?" என்று காஞ்சனா வியந்தாரென்றால், "அடிப்போடி... அந்த தடியன்கள் கத்தியை கழுத்துல வச்சதா அப்பா சொல்லியும் உன்னையும் என்னையும் விசாரிக்காம போறானேனு நான் கவலையில இருக்கேன். இவ வேற" என்று தனஞ்செயன் தந்தை சுப்ரமணியத்திடம் வந்தார்.

      "அவனை நாமயெல்லாம் விளையாட்டு பையன்னு நினைச்சோம். இப்ப உருவம் தெரியாம தவித்தவளுக்கு உதவி பண்ணிட்டான்.

     அந்த தடியன்களோட இரண்டு நாள் பட்ட அவஸ்தையிருக்கும்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்" என்று சுப்ரமணியம் பேரனுக்காய் பதில் தந்தார்.

         வீடே நிசப்தமாய் இருந்தது. மதியம் உணவு தயாரித்து ஹரிஷை சாப்பிட அழைத்திருக்க, குளித்து முடித்து தலையை துவட்டியபடி சோகமாய் வந்தமர்ந்தான்.

    உணவு மேஜையில் முட்டை குழம்பு இருக்க முழுவடிவம் கொண்டு குழம்பில் இருந்ததை கண்டதும், இந்நேரம் அவயிருந்தா பசிக்குதுனு விழுங்கியிருப்பா. இப்ப அவயில்லை.. அவயில்லை.. அவயில்லவேயில்லை.. ஹரிஷ் அவ்ளோ தான்.' என்று வருந்தும் நேரம் திடுதிடுப்பென அருளும், நட்ராஜன், மருது, சங்கர், செம்பட்டை என்று ஐவரும் வந்து எங்கடா அந்த கிழவன்? இத்தனை நாள் ரூம்ல சக்கர நாற்காலில இருந்தவன். இன்னிக்கு தாத்தனும் பேரனும் வந்துட்டு போனதும் இன்னிக்கு அந்த இளையமான் காணாம போயிட்டான்.

     சொல்லு ஒழுங்கு மரியாதையா அந்த இளையமான் யாஷிதா எங்கனு சொல்லுடா?" என்று அருள் ஹரிஷ் கழுத்தில் கத்தி வைத்து நின்றான்.

   உணவு மேஜையிலிருந்து தட்டை தட்டிவிட்டிருந்தான்.

    ஏற்கனவே யாஷிதா அவனிடம் சொல்லாமல் போனதில் கடுப்பிலிருந்தவனோ தன் கழுத்திலும் அன்னையையும் மிரட்டி இருந்ததில் அதீத சினத்திற்குள் ஆளானான்.

   கோபத்தில் இதுநாள் வரை இருந்த பொறுமை பறந்தோட, அருளிடமிருந்து கத்தியை லாவகமாக மாற்றி அதனை கைப்பற்றி, அருள் கழுத்தில் வைத்து, "என்னடா பிரச்சனை உங்களுக்கு.. அவயிங்க இல்லை இல்லை.. இல்லை... எத்தனை முறை சொல்லறது. கூடவே வந்து தொல்லைப் பண்ணி உசுரை வாங்கறிங்க.

    நேத்தே எங்கம்மா கழுத்துல கத்தியை வச்சிங்களாம். சரி மிரட்டிட்டு போயிட்டிங்கனு விட்டா, பெரிய மயி*ரு மாதிரி திரும்ப திரும்ப என்னையே குடையுறிங்க.

    ஒடிப் போனவள் என்னிடம் சொல்லிட்டா போனா.. இல்லையே பின்ன என்னடா... ஆளாளுக்கு வளர்ந்திருக்கிங்களே.. அறிவில்லை.. தடிமாடுங்களா..." என்று காட்டு கத்து கத்த, நட்ராஜ் அடிக்க வந்தான்.

   ஹரிஷ் இந்த கத்தியை அருளிடமிருந்து பிடி இறக்காமல் நட்ராஜின் கையிலிருந்தவையை தட்டி விட்டு எட்டி உதைத்தான்.

   இதுவரை வேடிக்கையும் நகைச்சுவையும் பேசி தங்களுக்கு பயந்திருந்தவனின் ஆக்ரோஷமானவனாக மாறி அடிக்கவும் அரண்டனர்.

    மருது, செம்பட்டை சங்கரென வரவும் மாறி மாறி அடித்தான். அதில் அருளின் உடம்பில் சிறு சிறு கத்தி கீறல்கள் விழுந்தது.

  பெரிதாக உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் பொடிபையன் என்ற கருத்தை உடைத்திருந்தான்.

   "எவனாவது திரும்ப திரும்ப இங்க வந்திங்க. அடிச்சி எலும்பை உடைச்சிடுவேன்.

   இதான் கடைசி.. நான் இருந்தாலும் இல்லைனாலும் இங்க வரக்கூடாது.
திரும்பவும் எவனானாது சொன்னான் அதுயிதுனு கத்தியை தூக்கிட்டு வந்திங்க...  கையை கட்டி சும்மாயிருக்க மாட்டேன். ஆல்ரெடி வேலையில்லாதவன். கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போய் தாராளமா செட்டிலாகிடுவேன். ஜாக்கிரதை." என்றவன் கத்தியை தூரயெறிந்து ஆள்காட்டி விரலால் பத்திரமென்றான்.

    அருளை தவிர்த்து அடிவாங்கியவர்கள் அவனின் அடியின் வலிமையை அறிந்திருந்தாரென்றால், கழுத்தில் கத்தியை வைத்து அங்கும் இங்கும் கையை கீறியதில் அருளின் மனதில் உயிர் பயத்தை விதைத்தான்.

      "இளையமான் காணோம் நீயும் உங்க தாத்தாவும் வந்தப்பிறகு தான் மாயமானார்." என்று அருள் கையில் வழிந்த குருதியை அதிகமாக வெளியேற்றிடாமல் தடுத்தபடி கூறினான்.

    "இளையமான் எங்க தாத்தாவோட பிரெண்ட். ஏன்டா... அந்த கிழவன் சக்கர நாற்காலில தானே இருந்தார். எப்படி தப்பிச்சிருப்பார்..

   அதுவும் உங்களை மாதிரி ஆட்களோட பிடியில் இருந்து? ஆமா அவர் ஏன் உங்க பிடியிலேயே இருக்கணும் எனக்கு புரியலை. என்ன பிரச்சனை.. நானும் முதல்லயிருந்தே பார்க்கறேன். என்னவோ மாதிரி திருட்டு தனம் தாண்டவமாடுது.

      எதுக்கு வயசுபிள்ளையை தேடறிங்க? எதுக்கு பல்லு போன கிழவனை பிடிச்சி வச்சிக்கிட்டு இருந்திங்க. எனக்கு இதுவரை ஏன் எதுக்குனு கேட்க தோணலை. கேட்க வச்சிடாதிங்க?" என்று வெளியே போக விரட்டினான்.

    அருளிடம் மற்றவர்கள் பதிலை எதிர்பார்க்க அருளோ குருதி வழிந்த பயத்தில் வெளியே போனான்.

     "என்னடா பொசுக்குனு கையை நீட்டிட்ட?" என்று சுப்ரமணியம் கேட்டு பேரன் முன் அமர்ந்தார்.

   வாட்டர் பாட்டில் ஓன்றை எடுத்து மடமடவென அருந்தியவன், முழு மூச்சாக குடித்து காலி பாட்டிலாக வைத்துவிட்டு, "என்ன நினைச்சிட்டு இருக்காங்க? நானும் எப்பவும் போல பொறுமையா இருக்க ட்ரை பண்ணினேன். ஓவரா ஆடறாங்க தாத்தா. அந்த அருளுக்கு மேகமலையிலேயே தாவடையில ஓன்னு போட்டிருக்கணும். அப்ப அவளுக்காக பொறுமையா போனேன். அதான் இங்கவரை வந்து சீன் விடறான்." என்று பொறுமினான்.

    "இந்த கோபம்.. இந்த கோபம் தான்டா.. ஒரு வேலையிலையும் உன்னை தக்க வைக்க மாட்டேங்குது." என்று தனஞ்செயன் கூறினார். 'வந்துட்டார் திட்டறதுக்கு மட்டும்' என்று ஹரிஷ் வாயை மூடியபடி அங்கும் இங்கும் விழியை நகர்த்தினான்.

   "இத்தனை நாள் இன்டர்வியூ எடுக்கறவங்கள்ல எவனையாவது அடிச்சிட்டு வந்துட்டு இருந்தான். இப்ப வீட்டுக்குள்ளயே அடிக்க ஆரம்பிக்கறான். இது நல்லதுக்கே இல்லை.
    முதல் முதல்ல வேலை செய்த ஆபீஸ்ல, கூட ஓர்க் பண்ணற பெண்ணிடம் மேனேஜர் மிஸ்பிஹேவ் பண்ணிட்டான்னு அடிச்சிட்டான். அவன் வேலையை விட்டு அனுப்பினப்ப கூடவே மேலிடத்தை அடித்ததா ரீசன் எழுதி சர்டிபிகேட் தந்துட்டான்.
   இது நாள் வரை அந்த காரணத்துக்காகவே வேலை சரியா கிடைக்கலை. இதுல கலிவரதன் ஆட்கள் மேல கை வச்சிட்ட. அவன் அடுத்த செகண்ட் ஏதாவது வந்து ஏழரை கூட்டப்போறான் பாரு." என்று தனஞ்செயன் ஆரம்பித்த கணம், "இங்க பாருங்க... என் கூட வேலை செய்த அந்த பொண்ணு அழுத்துட்டு போனப்ப எனக்கு என் வேலை முக்கியமா படலை. அந்த இடத்துல அம்மாவோ தங்கையோ இப்டி நம்ம வீட்டு பொண்ணு இருந்தா என்ன ரியாக்ட் பண்ணிருப்பேனோ அதான் பண்ணேன்.

அப்பதிலருந்து இப்பவரை எனக்கான வேலை கிடைக்கலைனு நானும் பீல் பண்ணலை.

    என் கை நீளும் தான். தப்புன்னா அடிவெளுப்பேன். என்னால பிரச்சனை வரும்னா சொல்லுங்க மேன்ஸ் ஹாஸ்டல்ல போய் தங்கிக்கறேன். சும்மா... கலிவரதன்னு பூச்சாண்டி காட்டாதிங்க. அவன் யாராயிருந்தா எனக்கென்ன?" என்று திமிராய் கேட்டான்.

   "டேய்.... என்ன பேச்சு பேசற?" என்று காஞ்சனா மாமனாரிடம் வந்து "பாருங்க மாமா எப்படி பேசறான்னு" முறையீட்டார்.
  
   "அவன் பெயருக்கு ஏற்றாப்போல இருக்கான் மா. ஹரிஷ்னாலே *பல வித சோதனைகளை கடந்து தடைகளை உடைத்து வெற்றி பெறுபவர்கள்.* என்று தானே அர்த்தம். என் பேரன் எல்லா சோதனையை கடந்து, தடையை உடைத்து, வெற்றி பெறுவான். நீ முட்டைக்குழம்பை ஊத்தும்மா சாப்பிடுவோம். வயிறு கபகபனு இருக்கு." என்று சுப்ரமணியம் பேரனை பற்றி கவலையின்றி அவன் மீது நம்பிக்கை கொண்டவராய் பேசினார்.

    இம்முறை தனஞ்செயன் மகனிடம் வாதாடவில்லை. தந்தையையும் மகனையும் பெருமையாகவே பார்வையிட்டார்.

    எனக்கும் ஒரு பிளேட் என்பது போல ஒரு தட்டு மட்டும் தனியாக தானாக இருக்கைக்கு வந்தது, குழம்பிலிருந்த முட்டையும் எடுக்கப்பட்டது.  ஹரிஷ் உதடு முறுவல் புரிந்து "யாஷி?" என்று அருகே சென்றான்.

  சில நிமிடத்தில் அந்த இருக்கையில் இளையமான் அமர்ந்திருந்தார்.

     "மான்... இளையமான்" என்று தோழன் மணி மகிழ்ந்து கூப்பிட அவரை கண்டு நகைத்தார் இளையமான்.

   "இளையமான்" என்று கட்டியணைத்து தோழனை ஆரதழுவினார்.

    "பேத்தி எங்கடா?" என்று ஹரிஷ் கேட்க எண்ணியதை தாத்தாவே கேட்டார்.

   "நான் இங்க இருப்பான்னு வந்தேன் டா. நீயென்ன என்னை கேட்கற?" என்று இளையமான் பதில் வினா தொடுத்தார்.

   "அங்கிள் அவ கொலம்பியா நாட்டில் கிரீன் கார்ட் ஹோல்டர் தானே. அதனால அந்த நாட்டு குடிமகளாகவும் தமிழ்நாட்டில் அவளுக்கு ஆபத்து என்றும் அவளுக்கு ஏதாவது என்றால் சிலர் மேல தான் சந்தேகம் என்று எப்.ஐ.ஆர். பதிவு செய்து விட்டு கமிஷனரிடம் ஒரு நேரிடையான புகார் கொடுக்க சொன்னேன்.

   அதை செய்துட்டா, அந்த நாட்டு பொண்ணு என்ற கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்னு நான் தான் ஐடியா தந்தேன். அரசியல்வாதியோட மோதறது நமக்கு பெரிய விஷயமில்லையா.

  அதோட ரவிதாஸ் அவளை சந்திக்க ஆசைப்பட்டா அவரிடம் பேச அப்பாயிண்மெண்ட் கேட்க சொன்னேன்.

    ஏன்னா.. ரவிதாஸ் தங்கை தான் கலிவரதன் மனைவி. அவன் பணத்தை வேண்டுமின்னா பதுக்க சொல்லி கலிவரதனிடம் கொடுத்திருக்கலாம்.
  
   தங்கையை தங்கை கணவனே கொல்லறதுக்கு கூட்டாயிருக்க மாட்டான். தங்கையை கொன்றது ரவிதாஸுக்கு தெரிந்தா அவங்க இருவரை மோதவிட்டா போதும். மீதியை அவனுங்களே பார்த்துப்பாங்க." என்று தனஞ்செயன் கூறிமுடிக்க, ஹரிஷோ கோபமாய் அவர் முன் நின்றான்.

    "ஏன் தாத்தா உங்களுக்கு மறையற வித்தை தெரியும்னா முதல்லயே நீங்களும் மறைந்து யாஷிதாவை காப்பாத்தியிருக்கலாம்ல. ஏன் இப்படி இத்தனை நாட்கள்?" என்று புரியாமல் கேட்டான்.

   "என் மந்திர புக்கால் ஒருத்தர் தான் இன்விசிபிளா மாத்த முடியும். முன்ன பேத்தியை மாத்திட்டு புக்கை மறைச்சி வைக்க பார்த்தேன்.

   ஆனா என் கையில இருந்த புக்கை அவனுங்க கிழிச்சிட்டா? அந்த நேரத்துல யாஷிதா மறையும் போது அவளிடம் நீட்டவும் அவளும் புரியாம வாங்கிட்டா.

    திரும்ப இந்த புக் வேண்டியதா இருந்தது. அதனால தான் அவளை பழையபடி மாத்தினேன்.

   உடனே நானும் மறைந்து தப்பிச்சா உங்க மேல சந்தேகம் வரும்னு நீங்க இங்க போனதா கணக்கிட்டு நான் மறைந்து இப்படி இங்க வந்தேன்.
  
    அந்த அருளும் நட்ராஜ் ஆட்களோட மத்த கைத்தடிங்களும் இங்க உன்னை அடிக்க வந்து நீ மிரட்டியதை பார்த்தேன். அதான் அந்த நேரம் எண்ட்ரி போடாம வேடிக்கை பார்த்து இப்ப வந்தேன்." என்று உணவை அள்ளி சாப்பிட்டார்.

   "டேய் கேள்வி கேட்காம சாப்பிடுங்கடா. என் பிரெண்டையும் சாப்பிட விடுங்க" என்று சுப்ரமணியம் அதட்டவும் ஹரிஷ் சாதத்தில் கை வைத்தான்.

   அதன் பின் சுப்ரமணியமும் இளையமான் தாத்தாவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

    ஹரிஷ் மட்டும் யாஷிதா திரும்ப இங்கே வருவாளா?' என்று சிந்தித்து அதனை இளையமானிடம் கேட்க தயங்கினான்.

  போலீஸ் மூலமாக கலிவரதன் ஆட்களுக்கு போன் பேக்ஸ் என்று பறந்தது.
   ரவிதாஸுக்கும் ஒரு தகவல் போய் சேர்ந்தது. அவள் அவனை சந்திக்க வேண்டுமென்றதை தெரிவித்திருந்தாள்.

    அருளோ கலிவரதனிடம் "பொடிப்பையன் இல்லைனா... பாக்சிங் எல்லாம் கத்துட்டு இருப்பான். அடியே ஒரு தினுசா தான் இருந்துச்சு.

   அன்னைக்கு இன்னோசெண்டா இருந்தான். ஏன் அடிக்கிறப்ப கூட பச்ச குழந்தையா தான் இருந்தான்.

  ஆனா கத்தியை வீசறப்ப கோபம் கண்ணு மண்ணு தெரியாம வந்துடுச்சு." என்று பேச, கலிவரதனுக்கு ஒரு போன் கால் வந்தது.

போலீஸ்காரன் ஒருவன் -'யாஷிதா என்ற கிரீன் கார்ட் பொண்ணவள் தொடுத்த குற்றத்தை கேட்டான். கூடுதலாக 'ரவிதாஸின் நேரடி சந்திப்பு வேண்டுமென்று' நச்சரிப்பதாக கூறினார்.

     "மச்சானை எதுக்கு பார்க்கணும்னு சொல்லறா?" என்று குரல் அதிர கேட்டான் கலிவரதன்.

   "தெரியலைப்பா. ஒரு வேலை காம்பர் மைஸ் பண்ணறாளோ என்னவோ? அந்த பொண்ணு வெளிநாட்டு பொண்ணு. ஒருவேளை இப்ப தான் யாரு எவருனு தெரிந்து பணத்தை எதிர்பார்த்து டீலிங் பேசுமோ என்னவோ." என்று கலிவரதன் யூகித்ததை கூறினான் அந்த கமிஷனருக்கு கீழ் பணிபுரியும் அதிகாரி. 

  அவனை பொறுத்தவரை ரவிதாஸ் தங்கை ரஞ்சனியை கொன்றதை அவள் காணவில்லை. பணத்தை பதுக்குவதாக தான் போலீஸை கேட்டால் நாலு எலும்பு துண்டை போட எண்ணினான்

-தொடரும்

பிரவீணா தங்கராஜ்



கருத்துகள்

  1. வெரி வெரி நைஷ்மா, எப்படியோ ஒரு வழியாக இளைய மானும் தப்பிச் சுட்டார். இனி யாஷிதா அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியும்???

    பதிலளிநீக்கு
  2. Dhanajeyan. Uncle super ah na idea than kuduthu irukaru Harish yasi sollama pona kobathula inga vandha rowdy ah adi veluthutan ah

    பதிலளிநீக்கு
  3. ம்கூம்... நினைப்புத்தான் பிழைப்பை கெடுக்குமாம்.. உனக்கு கண்டிப்பா கொடுப்பினை இருக்குடா மாமியார் வீட்டு களி தின்ன.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥 - 2

தீவிகை அவள்🪔 வரையானல் அவன்🔥 -3

பிரம்மனின் கிறுக்கல்கள்

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1