மர்ம நாவல் நானடா-12
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அத்தியாயம்-12
அருளோ ஹரிஷ் சொன்ன கதையை அப்படியே கலிவரதனிடம் விவரித்தான்.
"என்ன அண்ண பண்ணறது. நிஜமாவே அவன் லவ் பண்ணி வந்தானா? இல்லை விஷயம் தெரிந்து பம்மறானானு ஒன்னும் புரியலை." என்று தனியாக வந்து கேட்டான்.
"டேய்... விஷயம் தெரிந்து வந்தவனா இருந்தா இந்நேரம் போனை வச்சி ஏதாவது ஓரு மெயில் ஐடி ஓபன் பண்ணி சேனலை ஆரம்பிச்சு நான் சொன்ன வாக்கு மூலமான ஆதாரத்தை கூவி கூவி வித்திருப்பான். ஏதோ இடிக்குது...
இவனுக்கு அந்த பொண்ணு வேற யாருனே தெரியலைனு சொல்லற.
ஒருவேளை அந்த இளையமான் அந்த யாஷிதாவுக்கு வரன் பார்த்து அந்த பொண்ணிடம் சொல்லிருந்தா, அந்த பொண்ணு இந்த பையலிடம் நூல் விட்டு எப்படி கேரக்டர்னு டெஸ்ட் வச்சிருக்குமோ என்னவோ." என்று கலிவரதன் கூறியதில் அருளோ கூர்ந்து கவனித்தான்.
"சாத்தியம் இருக்கு அண்ண. ஏன்னா இளையமானுக்கும் இவனுக்கும் தொடர்பு இருக்கே" என்று ஆமோதிப்பாய் பேசினான்.
கலிவரதனோ "நீ என்ன பண்ணற? அவனை அலோக்கா தூக்கிட்டு சென்னைக்கு வந்துடு. இங்க இளையமானையும் இவனையும் மீட் பண்ண வைப்போம். நம்மிடம் இளையமான் வாயை திறக்க மாட்டேங்கிறான். இந்த பையனிடம் பேசினா மாட்டுவான்." என்று கூறவும் அப்படியே செய்வதாக வாக்கு தந்து ஹரிஷை இழுத்தான்.
"இன்னமும் எங்க இழுக்கறிங்க அண்ண?" என்று பம்மினான்.
"இளையமானை பார்த்து யாஷிதாவை கட்டிக்க கேட்கணும்னு சொன்ன? அவரை பார்க்க போகலாம்" என்று கூறினான் நட்ராஜ்.
"எங்கயிருக்காரு." என்று கேட்க, "கூடவா சொல்லறேன்" என்று அழைத்து சென்றனர்.
"நான் அந்த பொண்ணை பார்த்ததில்லை. இருங்க அதுல பேஸ் தெரியுதானு பார்க்கறேன்." என்று அருள் கிழித்தெறிந்த பேப்பர் துண்டுகளை எடுத்தான். பேப்பர் முகவடிவமைப்பை கிழித்து இருக்க சிறு சிறு துண்டுகள் மட்டும் கையில் இடம்பெற, அருளோ "எவ்ளோ பெரிய பிரச்சனை ஓடுது. மூஞ்சியை பார்க்கணும் முகறையை பார்க்கணும்னு" என்று இழுத்து சென்றான் அவன்.
கிழிந்தபேப்பரை பாதியை பேண்ட் பேக்கெட்டில் சொறுகிட அருளின் வண்டியில் சைக்கிளை போட்டு தங்கியிருந்த அறைக்கு வண்டியை செலுத்தினார்கள்.
மதிய உணவு ஆர்டர் செய்து ஹரிஷ் மற்றும் ரஞ்சனை அவர்கள் கண் பார்வையிலேயே வைத்து கொண்டார்கள்.
ஹரிஷ் தான் நெளிந்தபடி இருந்தான். ரஞ்சனோ விஷயம் தெரியாததால் அவர்களோடு சேர்ந்து நன்றாக முழுகோழி வறுவலையும், மீன் வறுவல், மட்டன் பிரியாணி சிக்கன் கிரேவி இறா தொக்கு, சுறா புட்டு, நண்டு ரசமென வகைவகையாய் உணவை பகிர்ந்து கொண்டான்.
"மாப்பிள சும்மா சொல்ல கூடாது டா. நல்லா வயித்துக்கு வஞ்சனையில்லாம வாங்கி தர்றாங்கடா. பேசாம இவங்களோட சேர்ந்துக்கலாமானு பார்க்கறேன். பாரு இப்படி டேபிள் ஃபுல்லா வகைவகையா சாப்பாடு, ஜம்முனு திண்ணமா, ஜிம்முனு உடம்பை வச்சி, யாரையாவது மிரட்டணுமானு வாழ்க்கை நல்லாயிருக்கும் போல டா." என்று எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றியது போல பேசினான்.
ஹரிஷோ 'உண்மை தெரிந்தது தலை வெட்டி கையில தருவானுங்க. இவன் வேற ஜம்முனு ஜிம்முனு' ரைமிங் காமெடி பண்ணிட்டு.
ஹரிஷ் உன் லைப்பே மர்மங்கள் கலந்த காமெடியா போகுது டா. கொஞ்சம் காதல் ரொமான்ஸுனு உருவம் தெரியலைனாலும் அவளோட லவ்வை சொல்லிட்டாவது வந்திருக்கலாம்.
அவளிடம் உதவி பண்ணறதா சொல்லிட்டு இங்க ஊர் பூரா லவ் பண்ணறேன்னு சொல்லறேன்.
நிஜமாவே லவ் பண்ணறேன்னு சொல்லிட்டாவது வந்திருக்கலாம்.' என்று உணவை பிசைந்தபடி உருவமற்றவளுக்காக உருகினான்.
"சாப்பிடு டா சென்னைக்கு கிளம்ப வேண்டாம்." என்று மண்டையை தட்டினான்.
"ஏங்க... நேத்து தான் வந்தோம். தூங்கி எழுந்து இங்க சுத்தி பார்க்கலாம் வந்தா அடி பின்னிட்டிங்க. இப்ப தான் சாப்பாடுலாம் வாங்கி தந்து பிரெண்ட் ஆகிட்டிங்க. இன்னிக்கு நைட்டே கிளம்பணுமா? சுத்தி பார்க்க வேண்டாமா?" என்று ரஞ்சன் கேட்கவும் நட்ராஜனோ அவனும் ஆசையாக அருள் பக்கம் திரும்பினான்.
ஹரிஷோ தலையிலடித்தபடி, 'மாட்டினா சங்கு ஊதி பாடை கட்டிடுவாங்க இதுல சுத்திபார்க்க கேட்கறான் பாரு' என்று நண்பனை முறைத்தான்.
யாரும் குளிக்கவில்லை என்பதால் வரும் வழியில் இருந்த அருவியில் குளிக்க மட்டும் அனுமதித்தான் அருள்.
ரஞ்சனும் தடியன்களோடு நட்பாகி குளியலில் ஐக்கியமாகி வரும் வழியில் பெண்களை சைட் அடித்து கொண்டு, ஏதோ நண்பர்கள் கேங்க் சுற்றுலாவில் செய்யும் சேட்டைகளை செய்தபடி வந்தார்கள்.
இறுக்கமாய் இருப்பது என்னவோ ஹரிஷும் அருளும் தான்.
ஹரிஷ் குளிக்க சென்றபோது யாஷிதா போட்டோவை கிழித்த பேப்பரோடு சென்றாதால் பேப்பர் ஈரத்தால் நசநசத்து போனது.
அந்த கவலையில் இறுக்கமாய் இருந்ததாக தோன்ற அதையே தொடர்ந்தான்.
அருளோ கலிவரதன் கூறியதால் எதற்கும் ஹரிஷிடம் ஒரு கண்ணை பதித்து வந்தான்.
தங்குமிடம் வந்ததும் "பெட்டி படுக்கையை எடுத்துட்டு ஏறக்கட்டு நைட்டே கிளம்பி அடுத்த நாள் காலையில அங்க இருக்கறோம்" என்று அவசரப்படுத்தினான்.
அதனால் வேறுவழியின்றி யாஷிதாவை சந்திக்க நேர்ந்தால்..?
அவளிடம் காதலை பகிர்ந்தால்...?
அவளை இவர்கள் உயிரோடு விட்டால்..?
மீண்டும் இங்கே வரும் பாக்கியம் அமைந்தால்..?
இப்படி பல கேள்வியை தாங்கி வண்டியில் அமர்ந்து மேகமலையை முழுமையாக தரிசிக்காமல் கடந்தான்.
"ஏன்டா அதென்ன பொண்ணுங்களை பார்க்காம லவ் பண்ணுறிங்க?" என்று மருது கேட்கவும் பதில் சொல்லென்பது போல தலைமையிடம் கொண்ட அருள் பார்த்தான்.
"அதெல்லாம் சிலருக்கும் அமையும் சிலருக்கு அமையாது." என்று ஹரிஷ் கூறிவிட்டு அங்கு சென்றால் என்னாகும் என்ற நிலையில் தவித்தான்.
இளையமானை வேறு காட்டுவதா சொல்கின்றார்கள். நிஜமாகவே உயிரோடு இருக்கின்றாரா? அல்லது இங்கிருந்து அழைத்து சென்று அங்கே உப்புகண்டம் போட்டு ஊறவைத்து தன்னை கொல்வார்களா?
சாகடிக்க முடிவு கட்டினால் மேகமலையே இவர்களுக்கு வசதி. சென்னை அதற்கு தோதாகாது.
நிஜமாகவே இளையமானை சந்திப்பதாக தான் தோன்றுகிறது.
ஒரு வேளை இவர்கள் கட்டுப்பாட்டில் இளையமான் இருந்தால் தான் போய் பேசினால் எப்படி எடுத்துக் கொள்வார்? என்று தீவிரமாக யோசித்தான்.
நல்ல வேளையாக வண்டியோட்டும் வேலையை தரவில்லை. தங்கள் வண்டியையும் இந்த காட்டான்களே ஓட்டி வருவதாக கூறினார்கள்.
அவர்களுக்கு ஹரிஷ் ரஞ்சன் தங்களை விட்டு ஓடிவிடுவார்களோயென்று ஐவரும் மாற்றி மாற்றி இரு வண்டிகளை ஓட்டினார்கள்.
ரஞ்சனும் ஹரிஷும் நிம்மதியாக இரவு உணவை முடித்து நன்றாக துயில் கொண்டார்கள்.
ஹரிஷ் வீட்டிலோ உறக்கம் பறிப்போயிருந்தது. இரண்டு பேர் தனஞ்செயன் இல்லாத போது கத்தியை கையில் வைத்து வீடு முழுக்க யாஷிதாவை தேடினார்கள்.
"எங்க அந்த பொண்ணு. இளையமானோட பேத்தி?" என்று காஞ்சனா கழுத்தில் கத்தியை வைக்க சுப்ரமணியமோ திகைத்தார்.
இதில் "ஏய் கிழவா... உன் பேரன் சும்மாவா மேகமலைக்கு போனான். உண்மையை சொல்லு?" என்று இங்கும் கிடுக்குப்பிடி போட்டு கத்தி முனையில் கேட்டனர்.
ஹரிஷின் பக்கம் கடவுள் இருந்திருப்பார் போல, "தம்பிகளா... இளையமான் பேத்தியை என் பேரனுக்கு கட்டிக்க கேட்டது என்னவோ உண்மை தான். ஆனா அந்த பொண்ணு இங்க இருக்க பிடிக்கலைனு கொலம்பியா பக்கம் யாராவது மாப்பிள்ளை பார்க்க சொன்னதா இளையமான் சொன்னான். மத்தபடி இளையமான் பேத்தி எங்கனு எனக்கு தெரியாது. ஏதோ வீடு விற்கணும்னு சொன்னான். நான் விலை கேட்டப்ப எனக்கு தோத விலை மலியவும் என் பையனிடம் சொல்லி வாங்கினேன். மத்தபடி அவன் உடல்நிலையை விசாரிச்சுட்டு வந்தது மட்டும் நான். என் மருமகளை விட்டுடுப்பா. என் பேரன் ஏதோ டூருக்கு போனதா தான் சொன்னான். எந்த பொண்ணையும் பார்க்க போகலை. அதுவும் இளையமான் பேத்தியை அவன் கண்ணால கூட பார்த்ததில்லை." என்று கெஞ்சினார்.
அலைப்பேசி வாயிலாக ஒன்றுவிடாமல் கேட்ட கலிவரதனோ, அந்த பொண்ணு இல்லைனா விட்டுட்டு வாங்கடா. நாளைக்கு அந்த கிழவனை இளையமானை பார்க்க வரச்சொல்லிட்டு வாங்க" என்று கட்டளையிட, அப்படியே அதனை சுப்ரமணியத்திடம் ஒப்பித்தார்கள் கைத்தடிகள்.
காஞ்சனாவோ நடந்தவையை தனஞ்செயன் வந்ததும் விவரித்தார்.
"இப்ப என் பையன் எங்கப்பா இருக்கான்?" என்று பாசத்தில் பதபதப்பில் கேட்டார்.
சுப்ரமணியமோ வந்து சென்ற ஆட்களை கண்டு, திக்பிரமை பிடித்தவராய் இருந்தார்.
இதுவரை இளையமான் உடல்நிலை காரணமாக வீட்டை விற்று அதில் வந்த தொகையில் மருத்துவம் பார்க்கின்றான் என்று எண்ணினார். போதாதற்கு யாஷிதா இளையமானின் வற்புறுத்தலில் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டாளென்று முடிவில் இருந்தார்.
இன்று நடந்த கூத்தை கண்டப்பின் இளையமான் தன்னிடம் ஏதோ சொல்ல வந்து மறுகி இலைமறையாய் எதையோ தெரிவித்திருக்கின்றானென புரிந்தது.
இதில் இளையமான் பேத்தி எங்கே? நடுவில் ஹரிஷ் ஏன் மேகமலைக்கு சென்றான்? மேகமலைக்கு தான் சென்றானா?
"அப்பா.. என்னப்பா எதுவும் பேசாம இருக்கிங்க. என் பையன் எங்கப்பா.? அவன் வேலைக்கு எல்லாம் போக வேண்டாம். என் கண் முன்ன ஆடிப்பாடி இருந்தா போதும். ஹரிஷ் எங்கப்பா?" என்று உலுக்கவும் சுப்ரமணியமோ நிதானத்திற்கு வந்தார்.
"ஏன்கிட்ட எப்பவும் எதுனாலும் சொல்வான் டா. ஆனா இந்த முறை எதுவும் சொல்லலை." என்று கைவிரித்தார்.
"என் பையன் போகறப்பவே மனசு அடிச்சுக்கிச்சு.'' என்று காஞ்சனா கண்ணை கசக்கினார்.
சுப்ரமணியமோ மருமகள் அழுவதை தாளாமல் "அழாதம்மா எனக்கென்னவோ என் பேரன் வெட்டியா ஊர் சுத்த போகலைனு மனசுக்கு தோனுது." என்று உள்ளுணர்வால் அறிந்தவையை உரைத்தார் அவர்.
யாஷிதாவோ இவர்களுக்கு என் தாத்தாவை எப்படி தெரியும்? அப்படின்னா என் தாத்தா என்னை இங்க அனுப்பியது என் சேப்டிக்கும் எனக்கு உதவிக்கு இங்க யாராவது வருவாங்கனும் தானா?
இதுல ஹரிஷை வேற எனக்கு கல்யாணம் பேசி, நான் அவனை விரும்ப மாட்டேன்னு தாத்தாவா முடிவு பண்ணியிருக்காரா? என்று அவள் ஒருபுறம் சுயநினைவின்றி சிந்தனையில் மூழ்கினாள்.
கத்தியோடு ஆட்கள் வந்ததிலேயே அவள் பயந்துவிட்டாள். ஹரிஷ் மாட்டிவிட்டானா? அவனுக்கு ஏதும் ஆகிடக்கூடாதென்று இறைவனை வேண்டினாள்.
இதில் தனஞ்செயன் வாய் ஓயாமல் ஹரிஷின் நிலைமை என்னவென்று பயந்திட யாஷிதாவுக்கு கலக்கம் அதிகரித்தது.
ஹரிஷின் போனோ சுவிட்ச் ஆப். ரஞ்சன் போனோ அருள் அடித்த அடியில் போன் கீழே விழுந்திட கண்ணாடி உடைந்து செயலிழந்து போனது.
"ஏன்ப்பா... உங்க பிரெண்ட் இளையமானை பார்க்க நாளைக்கு வரச்சொல்லிட்டு போறாங்களே? அப்ப மேகமலைக்கு நீங்களும் கிளம்பறிங்ளா?" என்று கேட்டார் தனஞ்செயன்.
"இளையமான் மேகமலையில் இல்லையேப்பா. அவன் தான் இங்க இருக்கானே." என்று கூறவும் யாஷிதா தன் கார்டியன் இளையமான் தாத்தா உயிரோடு இருக்க ஆனந்தமாய் மகிழ்ந்தாள்.
ஹரிஷ் போன் எடுக்கவேயில்லை. சுவிட்ச் ஆப் என்று வருது." என்று தனஞ்செயன் காஞ்சனா இருவரும் புலம்பவும் யாஷிதா ஆனந்தம் தடைப்பட்டது.
அவளுக்குமே ஹரிஷை நேரில் சந்திக்கும் ஆவல் அதிகரித்தது. தனக்காக யார் என்று அறியும் முன் உதவி செய்கின்ற நல்லவனை அவள் நேசித்தாள். நேசம் காதலாகுமா?
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
Ippsdi twist vachitnga sisy but nice going aduthu ilaiya maan ah partha tha therium adutha move
பதிலளிநீக்குஅட கொலையை பார்த்தா... வீடியோ எடுத்தா சரி... ஆனா இவ எப்படி இன்விசிபிள் ஆனா...? இளையமான் சயின்டிஸ்ட்டா..?
பதிலளிநீக்குIpadi oru twist ah expect pannala harish than yashi ku.illayaman partha mapillai ah
பதிலளிநீக்குநல்லவர்களுக்கு நல்ல காலம் கட்டாயம் வரும்.
பதிலளிநீக்குமிகவும் சுவாரசியமாக அருமையாக போகிறது கதை.
சூப்பர்
பதிலளிநீக்கு