மர்ம நாவல் நானடா-23 (முடிவுற்றது)

  அத்தியாயம்-23    யாஷிதா அவனின் முனங்கல் கேட்டு மாடி ஹாலில் நடந்தவள் திரும்ப, வேகமாய் வந்தவன் அவளை இடித்து, அணைத்து உருண்டப் பின்னே சுதாரித்தான்.    அவள் மீது தன் தேகத்தை மொத்தமாய் சரித்திருந்தான். அந்த களோபரத்திலும் அவள் தலைக்கு முட்டுக்கொடுத்து அவள் சிரத்தை தாங்கியிருந்தது வலது கை. இடது கையோ அவளது இடையை வளைத்திருந்தது.   அவளோ சுற்றம் மறந்திருக்க, ஹரிஷின் கணம் தாளாமல் எழ முயன்றாள். ஹரிஷே வேகமாய் பதறிவிட்டு எழுந்திட, இருவருக்கும் மூச்சு வாங்கியது.    "நான் என்ன இன்னும் இன்விசிபிளாவா இருக்கேன்." என்று யாஷிதா கேட்க, "இ.. இ..ல்லை என்று தலையாட்டவும் அவனது முகமாறுதல் அவளுக்குள் ரசிப்பை ஏற்படுத்த, அளவிடாத காதலை நெஞ்சில் எடுத்துரைத்தது.    இதற்கு மேல் மனக்கடலில் காதல், கடலணை  உடையவும், யாஷிதா அவன் காலரை பற்றி இழுத்து, அலமாரி கதவை திறந்து, உள்ளே நுழைந்து சாற்றினாள்.      "உன்கிட்ட நிறைய பேசணும். என்னால இதுக்கு மேல மறைக்க முடியலை.     ஏதாவது கிறுக்குதனமா பேசிட்டு பிறகு நீ பின்வாங்கிட்டா? அதனால கேட்கவே தயக்கமாயிருக்கு. ஆனா கேட்காமலும் இங்கிருந்து போக முடியலை. நானும் இந்த பேச

மர்ம நாவல் நானடா-6

 அத்தியாயம்-6

   "அடச்சீ... முதல்ல சொல்றதை கேளு." என்று யாஷிதா திட்டவும், "உனக்கு என்ன வயசு?" என்று கேட்டான்.

    "23" என்று கூறினாள் யாஷிதா.

    "எனக்கு 25... இந்த டா போட்டு பேசறது எனக்கு பிடிக்காது. அதை மீறி மரியாதை ஒரு சதம் குறைந்தது, நீ பேசறதை காதுல வாங்க மாட்டேன்." என்று மிரட்டினான்.

    "என்ன பயம் போயிடுச்சு போல" என்று கேட்டவளின் முகம் என்ன அபிநயம் பிடித்திருக்குமென ஹரிஷ் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நக்கலாக கேட்பது உரைத்து.

   "நீ தான் பேய் இல்லையே... நான் ஏன் பயப்படணும்?" என்று கேட்டான்.

    யாஷிதாவோ "நான் பேய் கிடையாது. ஆனா உன்னை பைத்தியமாக்க என்னால முடியும். நீ யாரிடமாவது இங்க ஒரு பொண்ணு இருக்கானு சொன்னா நம்புவாங்களா? ஆனா நான் நீ குடிக்கயிருந்த காபியை குடிச்சி உங்கப்பாவிடமே திட்டு வாங்கி தந்தவ. சோ... மரியாதை அதுவா வந்தா வாங்கிக்கோ. இப்ப கதையை கேளு." என்றாள்.

    "முடியாது ஆல்ரெடி திட்டு வாங்கறது எனக்கு புதுசில்லை. நீ மரியாதை தந்தா நான் கேட்பேன்" என்று கூற, 'காரியம் பெரிதா வீரியம் பெரிதா' என்பதை சிந்தித்த யாஷிதாவின் மூளை அவனிடம் சரணடைந்தது.

      "ஓகே... அண்ணானு கூப்பிட்டு நடந்ததை சொல்லவா?" என்றதும், "ஒரு நிமிஷம்" என்றவன் 'பார்க்க எப்படியிருப்பானு தெரியாது. ஒரு வேளை அழகான பொண்ணா இருந்து அண்ணானு கூப்பிட்டா மனசு தாங்காது ஹரிஷ். அதுக்காக மரியாதையையும் விட்டு தந்துடாதே.' என்று தனக்குள் பேசி முடிவெடுத்தவனாய் "வாங்கண்ணோ போங்கோண்ணா எதுவும் வேண்டாம். கால் மீ ஹரிஷ் போதும்." என்று கூறிவிட்டு நடந்தவையை மேல தொடர கூறினான்.

   'அண்ணானு கூப்பிட வேண்டாம்னு எம்புட்டு பில்டப் ஹரிஷ்னு கூப்பிட சொல்லறான்.' என்று யூகித்து கதையை தொடர்ந்தாள்.

    To be continue FLASHBACK

    "ஹாசினி வீட்லயிருந்து சைக்கிளில் வந்தேன்."

அன்று நடந்தவை:

இடம் : தேனி மாவட்டம் மேகமலை

    யாஷிதா அந்த சாலையில் தென்றல் காற்றோடு, மிதிவண்டியைனில் பயணம் செலுத்த, வழியில் பல விலையுயர்ந்த கார்கள் சர்சர்ரென்று அவளை தாண்டி சென்றது.

  இத்தனை கார்கள் இந்த பகுதியில், இப்படி வேகமாக எங்கே செல்கின்றதென்றும், யார் வருகின்றார்? எதற்கு வருகின்றார்?  என்றவொரு ஆர்வத்திலும் தான் முதலில் பின் தொடர்ந்தாள்.
 
    இந்த நள்ளிரவில் வயசு பெண் இப்படி தொடர்வது சரியல்ல. ஆனால் இவ்வூரில் இருக்கும் குழந்தைக்கான மழலையர் மாதயிதழான 'சுட்டிஸ் உலகம்'' ஒன்றில் 'கார்டூன் அனிமேஷன்' பணியை செய்பவள்.

  மாதயிதழில் சின்ன குழந்தைகள் வாசித்தாலும், மாதயிதழ் தானே. அதில் ஒரு பகுதியில் வேலை என்பதாலோ என்னவோ, தன்னை ரிப்போர்ட்டராய் எண்ணியே தைரியமாக இந்த இருளில் பயணித்தாள் யாஷிதா.

  இது வழக்கமான பயணமல்ல. இன்று இதே ஏரியாவில் இருக்கும் அவளது தோழியின் பிறந்தநாளுக்கு சென்றுவிட்டு 'லேடிபேர்ட்' சைக்கிளில் திரும்புகின்றாள்.

  யாஷிதாவுக்கு அப்போது தெரியவில்லை தன் வாழ்க்கையை தலைகீழாக புரட்டும் சம்பவம் இன்னும் சில மணித்துளியில் நிகழப்போவதை. அது தெரியாமல் விளையாட்டு போக்கில் வினையை தேடினாள் காரிகையவள்.

       சற்று தூரத்தில் மேகமலையில் இருந்த ஒரு பெரிய பங்களாவில் அந்த கார் நுழைவதை கண்டாள். அதனால் மிதிவண்டியை வேகமாக இயக்கினாள். தென்றல் காற்று பலமாக வீசியது.

   காரிலிருந்து ஆட்கள் இறங்கினார்கள். பார்க்க ஒவ்வொரு ஆட்களுமே 'ஜிம்பாடி' தேகத்தில் இருந்தனர்.

    'எம்புட்டு உசரமா அரக்கனாட்டும் இருக்கானுங்க.' என்று மனதில் எண்ணி மதிற்சுவரோரம் பக்க கதவு சின்னதாகயிருக்க, அந்தபக்கம் வந்து சாலையிலிருந்தவாறு எக்கி பார்த்தாள். அவள் நெற்றியில் இலைச்சறுகுகள் வந்து காணவிடாமல் முதலிலேயே மறைத்தது.

   இந்த சிலப்பதிகாரத்தில் கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு காலடியில் வைக்கும் போது, மதில் மேற்சுவரில் இருந்த கொடிகள் அவ்விருவரையும் வரவேண்டாமென சொல்வது போல, இங்கே யாஷிதாவை இந்த இலை சறுகுகள் காற்றில் வந்து இந்த காட்சிகளை காணாதே வீட்டுக்கு செல் என்பதாக மறைத்தது.

    விதி யாரை விட்டது. இந்த நிமிடம் இது நிகழ வேண்டுமென்று நாம் பிறக்கும் முன் அந்த இறைவன் சிரத்தில் எழுதி தான் பூமிக்கு அனுப்பி வைத்தான்.

    யாஷிதா தன் நெற்றியில் மறைத்த இலைசறுகை எடுத்து விட்டு, சிகை கற்றைகளையும் செவிமடலுக்கு பின்னால் ஒதுக்கி அப்புறப்படுத்தி அக்காட்சியை கண்டாள்.

   அடுத்த நொடி யாரையோ இரத்தமும் சதையுமாக காரிலிருந்து யாரோ எட்டி உதைக்க விழுந்திருந்தான்.

     யாஷிதா கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. எட்டி உதைத்த அந்த பெரிய மனிதனை கண்டு. நிச்சயம் பெரிய பிரபலமே. அந்த வெள்ளை வேட்டி சட்டை உறுதியாக கூறியது.

    மிதிவண்டியில் ஒற்றை காலை 'பெடலில்' வைத்து தரையில் காலூன்றி இருந்தவள் வலது கையை எடுத்து வாயை மூடினாள்.

  இடது கை இன்னமும் மிதிவண்டியை பிடித்திருந்தது. ஏதோ பெரிய சம்பவம் நிகழப்போகின்றதென தாரகை அவளுக்கு உள்ளுணர்வு உணர்த்த,  வேகமாய் மிதிவண்டியை சத்தமில்லாமல் நிறுத்திவிட்டு தன் 'ஜீன்ஸ் பேண்டில்' இருந்து அலைப்பேசியை எடுத்தாள்.

      இது போன்ற பல சம்பவங்கள் நடக்கையில் நாயகி மாட்டிக்கொள்வது அலைப்பேசியின் 'ரிங் டியூனால்' அதனால் முதலிலேயே 'சைலண்டில்' மாற்றி விட்டு 'கேமிரா'வை எடுத்தாள். அதிலும் 'பிளாஸ் லைட்'டை அணைத்துவிட்டே, 'வீடியோ' எடுக்க ஆரம்பித்தாள்.

       பெண்ணவள் புத்திசாலியாக தான் அனைத்தும் செய்தாள். அங்கு நடந்தவையை அதிர்ச்சியும் ஆச்சரியமாக பார்த்து பயந்தபடி காணொளியாக எடுத்தாள்.

    ஏற்கனவே எங்கேயோ கத்தியால் கிழித்து, குரூரமாய் அடித்து வெளுத்திருப்பதும், அவன் முகமும் அணிந்திருந்த கிழிந்த உடையும் இரத்தம் சொட்டுவதில் புரிந்தது பேதையவளுக்கு.

   இதில் காரணம் காரியம் எல்லாம் மாமனிதன் அவனே வாய் வார்த்தையாக ஒவ்வொன்றாய் கூறவும் இதயத்தின் 'லப்டப்' ஓட்டம் அதிகமானது. இதுவரை அடித்த ஆட்கள் யாரென அறிந்தவள் எதற்கு அடிக்கின்றனர் என்றும், யாரை அடிக்கின்றனர் என்றும் அறிந்ததும் அந்த ஜீவனுக்காக கவலைக் கொண்டாள்.

   இரத்தமும் சதையும் கிழிந்து, இரத்தம் வழிந்து கிடப்பவன் ஒரு 'போலீஸ்காரன்'. போலீஸ்காரனையே இப்படி வதைக்கின்றனரே சாமான்யன் கிடைத்தால்? அந்த எண்ணம் ஏற்பட்ட அடுத்த நிமிடமே அவளுக்கு நாவறண்டது.

  மேலும் சட்டென போலீஸ்காரனின் கண்கள் யாஷிதா பக்கம் வந்து நிலைக்க கண்டு, பயம் வராமல் இருக்குமா? கைகள் நடுங்க அதனை மறைந்து இருந்து காணொளியாக எடுத்தவளுக்கு இங்கிருந்து ஓடிவிடும் எண்ணம் முளைத்தது.

ஏனென்றால் சாரமாரியாக அந்த 'போலீஸ்காரனை' அடித்ததில் தலை தொங்கியது. அதாகப்பட்டது அந்த மனிதனின் உயிர் 'கதம் கதம்' என்று நிச்சயம் தெரியும். கடைசியாக அவ்விழிகள் அவளின் விலோசனங்களை தான் சந்தித்தது.

   "இந்த பிணத்தை குழிதோண்டி, புதைங்க டா. கூடவே பனைமரத்தையோ தென்னமரத்தையோ நட்டு வைங்கடா. அப்ப தான் காலத்துக்கும் எவனும் அவ்ளோ ஈஸியா இடத்தை தோண்ட முடியாது. மரத்துக்கு மதிப்பு தந்து இந்த இடத்தை நோண்ட மாட்டாங்க. செய்த பாவத்துக்கு மரத்தை நட்டதா கழியட்டும்" என்று அந்த 'மாமனிதன்' கூறினான்.

   மாமனிதனின் சொற்களுக்கு அந்த அரக்கன் போலிருக்கும் ஜிம்பாடி ஆட்களோ அடிமையாக தலையசைத்தனர்.

   காற்று பலமாக அடித்து. முன்பு தென்றலாய் அனுபவித்தவளுக்கு இந்த காற்று கூட அச்சத்தை வாறியிரைத்தது.
 
   நாம் எண்ண நினைப்போமோ அது சில நேரம் அப்படியே நடந்திடும். அது நல்லதாகவும் இருக்கலாம். கெட்டதாகவும் அமையலாம்.

  யாஷிதாவுக்கு கெட்டதாக அமைந்தது. ஆம் காற்று பலமாக வீசவும் மிதிவண்டி கீழே விழுந்து பலத்த சத்தமிட்டு ஒலியெழுப்பியது.

     யாஷிதா அனைத்தும் பார்த்தவளுக்கு இனி இங்கே இருப்பது உசிதமல்ல என்று கிளம்ப தான் தயாராக திரும்பினாள்.

  மிதிவண்டி விழவும் வீட்டுக்கு அடியெடுத்து வைக்கும் மாமனிதன் திரும்பினான். பிணத்தை புதைக்க குழி தொண்ட மண்வெட்டி கடப்பாறை எடுத்த ஜிம்பாடி ஆட்கள் அந்த திக்கிற்கு திரும்பினார்கள்.
 
    யாஷிதா சட்டென அலைப்பேசி கையோடு திரும்ப, "யாரோ வீடியோ எடுத்துட்டாங்க பிடிங்க டா" என்று கத்தவும் யாஷிதா தனது மிதிவண்டியை எடுத்து பெடல் செய்து அவ்விடம் விட்டு அகல நினைத்தாள்.

    ஜிம்பாடியில் சிலரோ ஓட்டத்தில் பிடிக்க முனைய இருவரோ 'காரை' இயக்க ஆரம்பித்தனர்.

     யாஷிதா உயிரை பிடித்தபடி ஒரு கையில் போனை பத்திரப்பதடுத்தி வேகத்தை கூட்டினாள்.

     ஆனால் காரில் வந்தவர்கள் அவளை நெருங்கியிருந்தனர்.

    அவளை எட்டி எட்டி கழுத்தை பிடிக்க, அவளது அலுவலக டேக் அவர்கள் கையில் சிக்கியது.

   அதனை வெறித்தவனோ, "அடேய்.. 'சுட்டிஸ் உலகம்' பத்திரிக்கையில வேலை பார்க்கறா." என்று கூற, இனி இவளை சாதாரணமாக விடமுடியாதென்று மாமனிதனுக்கு அலைப்பேசியில் அழைத்து தகவல் கூறினான்.

   மறுபக்கமோ, "முடிச்சிடு... காரை ஏத்தி இடிச்சிடு. அந்த போன் நம்ம கைக்கு வரணும். அவ பத்திரிக்கையில இருக்கறதால நிச்சயம் வீடியோ எடுத்திருப்பா. நான் வேற வாக்குமூலமா நடந்ததை பேசிட்டேன். அதை அழிக்கணும்" என்று கூற "காரியத்தை முடிச்சிட்டு கூப்பிடறேன் சார்" என்று அணைத்தான்.

    யாஷிதாவோ மிதிவண்டியில் பயணிக்க, எதிராளியோ காரில் இயக்கியதால், அந்த விபத்து நிகழ்ந்தது.

   யாஷிதா தூக்கி எறியப்பட்டாள்.

      மிதிவண்டி எங்கோ சென்று விழுந்தது. யாஷிதா தலையை பிடித்தபடி போனை இறுக்கி பிடித்திருந்தாள்.

   கூடவே கைப்பையையும் எடுத்து மெதுவாக தள்ளாடி எழுந்தாள்.

   இருட்டில் மலை முகட்டில் விழுந்தவள் உருண்டு வந்ததால் காரிலிருந்து இறங்கி வந்து பார்த்தவர்களுக்கு அவள் எந்தபக்கம் உருண்டாலென்று சட்டென அடையாளம் காணமுடியவில்லை.

   டேய் போன் டார்ச்சை ஆன் பண்ணி பாருங்க" என்றதும் இதயத்தின் மத்தியில் கை வைத்து மெதுவாய் சத்தமின்றி ஊர்ந்திட ஆரம்பித்தாள்.

    கொலுசுகளோ வளையல்களோ எதுவும் அணிந்து காட்டிக் கொடுக்கவிட்டாலும் சறுகுகள் இலைகள் என்று லேசாக சத்தமிட யாஷிதாவை காட்டிவிட்டது.

   "அவளை பிடிங்கடா" என்ற வார்த்தை அத்தனை பயத்தை தருமென்று அன்று தான் உணர்ந்தது.

  ஓட்டமெடுத்தவள் எத்திசை செல்கின்றோம், பள்ளம் மேடு உள்ளதா? என்று ஆராயாமல் ஓடினாள்.

       அவளை துரத்தி வந்தவர்களும் பின் தொடர்ந்து வந்தார்களே தவிர யாரும் பின்னடையவில்லை.

   'கடவுளே காப்பாத்து ப்ளிஸ்' என்று இறைவனை மனதார தொழுதாள்.

   பிறை நிலவு மட்டும் வானில் ஒளியை உமிழவும், டார்ச்சை வைத்திருந்தவன் கல் தடுக்கி விழ அவ்விடம் ஒளியை இழந்தது.

   இது தான் தனக்கு கடவுள் தப்பிக்க தந்த நிமிடம் என்று உணர்ந்தவளோ சட்டென எதையும் யோசிக்காமல் உருளத் துவங்கினாள்.

   "டேய் லைட்டடி.. அவயெங்கயோ ஓடறா? இந்த பக்கம் சீக்கிரம் டா. ஒரு போனை ஒழுங்கா பிடிக்க மாட்ட?" என்று ஒருவன் கத்தவும், போனை கை நழுவியவன் எடுத்து திரும்ப சுற்றிலும் பெண்ணவளை காணவில்லை.

   "எந்தபக்கம் ஓடினானு தெரியலை. ஷிட்... ஷிட் ஷிட். ஃபுல் ஷிட்" என்று வெறித்தனமாக கத்தினான்.

    இந்த மூவரில் அதிகமாக கோபமும் வேகமும் கொண்டவன் அவன். மற்றவர்கள் சுற்றி முற்றி பார்த்து, "எந்தபக்கம் அண்ண போகறது?" என்று கேட்டதும் "ஆளுக்கு ஒருபக்கம் போங்க. கையில கிடைச்சா யோசிக்கவேண்டிய அவசியமேயில்லை. கொன்னுடுங்க. அதோட அவ போன்... அவ போன் முக்கியம். அதை பத்திரமா வாங்கிடுங்க. புரிஞ்சுதா" என்று அதட்டினான்.

    யாஷிதாவிற்கு கேட்கும் அளவிற்கு தான் அந்த தடியனின் கட்டை குரல் இருந்தது. ஆதலால் தெள்ளதெளிவாய் தாரகை அவளுக்கு புரிந்துவிட்டது.

   இவர்கள் கையில் சிக்கினால் இறப்பு உறுதியென்று தோன்றியது.

    தன்னை பாதுகாத்து கொண்டு அதே சமயம் இந்த வீடியோவை யாரிடம் சேர்ப்பது?

    தற்போது எல்லாம் டிரெண்டிங் வீடியோ, வைரல் வீடியோ, என்று அவரவர் தாங்களாகவே தங்கள் யூடுயூப் சேனலில் பதிவேற்றம் செய்து கொள்கின்றனர்.

    அது போல செய்யலாம். மற்றவரை நம்பும் திடம் இல்லை. மேலும் தனக்கிங்கே யாரை தெரியும்.

பத்திரிக்கை துறையில் வேலை செய்தாலும் கார்டூன் அவதாரத்தை தாளில் போட்டு படம் பார்த்து கதை சொல்லும் விதத்தில் இயங்கும் சிறு மாதயிதழ். இதில் இவரை பற்றி எந்தளவு பதிவிடலாம்? இல்லையேல் தங்கள் அலுவலகத்தில் வேறெந்த நியாயமான பத்திரிக்கை ஆட்களிடம் கொடுத்து இதை பற்றி ஹாசினியிடம் விவாதிக்கலாம்.

  உயிரோடு இருந்து நாளை தன்னை 'சுட்டிஸ் உலகம்' பத்திரிக்கை அலுவலகத்தில் யாரும் தன்னை தேடிவராமல் இருந்தால்....

   நிச்சயம் தேடி வராமல் இருக்க கொலை செய்தவன் ஒன்றும் முட்டாளில்லை.

   அதே போல இன்று இரவே தன் உயிர் தன் உடலில் தங்குமா என்பதே அரிது' என்றவளின் உள்ளம் தனது கார்டியன் இளையமானை எண்ணியது.
  
    எப்படியாவது அவரிடம் கொஞ்ச நேரம் பேசவேண்டும். இத்தனை காலம் அவரிடம் பேசாமல் தண்டித்ததற்கை ஒரு மன்னிப்பை கேட்க வேண்டும். அந்த மன்னிப்பு மட்டும் கேட்காவிட்டால் இறந்தாலும் என் மனம் சாந்தியடையாது.' என்று அவரை சந்திக்க முடிவெடுத்தவளாக பெரிய கல்லை எடுத்து அவளுக்கு எதிர்புறம் வீசியெறிய மூவரும் அந்த பக்கம் சென்றார்கள்.
  
    இருட்டில் யாஷிதா சத்தமின்றி சாலையை கடந்து வேறு புதருக்குள் சென்று ஒடி ஒளிந்தாள்.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ் 






கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥 - 2

தீவிகை அவள்🪔 வரையானல் அவன்🔥 -3

பிரம்மனின் கிறுக்கல்கள்

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1