மர்ம நாவல் நானடா-18
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அத்தியாயம்-18
அதிகாலை ஆறுமணிக்கு டிங்டிங் என்று நோட்டிபிகேஷன் வந்தது. அதனை தொடர்ந்து போன் கால் unknown நம்பரிலிருந்து அழைப்பு வர, அரையுறக்கத்தில் எடுத்து காதில் வைத்தாள்.
"ஹலோ யாஷிதாவா?" என்றதும் "எஸ் ஸ்பீக்கிங்" என்றாள்.
"நான் ரவிதாஸ் அண்ணனோட பி.ஏ பேசறேன். நீங்க ஏதோ அண்ணனை பார்க்கணும்னு சொன்னதா அவர் சொன்னார். பத்தரைக்கு அப்பாயின்மெண்ட் கொடுத்திருக்கார். உங்களை வரச்சொன்னார்." என்று கூறவும் சட்டென போர்வையை தளர்த்தி, "ரியலி தேங்க்யூ... கண்டிப்பா வர்றேன்" என்று கூறினாள்.
அலைப்பேசியை எடுத்து கொண்டு கீழே படியில் தடதடவென வந்தாள்.
"தாத்தா... ரவிதாஸ் பத்தரை மணிக்கு அப்பாயின்மெண்ட் தந்திருக்கார். நான் போய் சந்திச்சுட்டு வந்திடறேன்." என்று உற்சாகமாக வந்தாள்.
"தனியாவா?" என்று கேட்டு இளையமான் யோசனைவயப்பட்டு நின்றார்.
தனஞ்செயன் நான் வேண்டுமின்னா என்று கேட்க வாயெடுக்கும் முன், "நான் கூட போறேன் தாத்தா" என்று போர்வையை விலக்கி எழுந்தான்.
ஏற்கனவே ஹரிஷ் அருளையும் மற்ற நால்வரை வெளுத்ததை வைத்து யாஷிதாவோடு செல்ல தலையாட்டினார்.
"போலீஸ் வேண்டாமா தாத்தா" என்று ஐயமாய் கேட்டாள்.
"நாம நினைக்கிற மாதிரி நீதி நேர்மை என்ற விரப்பான போலீஸை கதையிலையும் படத்திலும் பார்க்கலாம். நிஜத்தில நமக்கு எதிரானவங்க கூட கைகோர்த்து பணத்தை வாங்கிட்டு கமுக்கமா நம்ம முதுகுல குத்தறவங்க தான் அதிகம்.
மத்தபடி ஆறடி தேகமும், உத்தியோகத்துக்கான உடற்கட்டும், கெத்தா எந்த போலீஸும் இல்லை என்பது தான் நிதர்சனம்.
எதையும் பேஸ் பண்ணற தகுதியானவன் ஒருத்தனும் தைரியமும் இருந்தா போதும்மா." என்று இளையமான் கூறவும் போனை இடது கையால் தாளமிட்டபடி ஹரிஷை கண்டு மென்னகைத்தாள்.
ஹரிஷ் கொட்டாவி விடுத்து கையால் மறைத்தபடி அவளை காணவும் யாஷிதாவுக்கு அவன் செய்கைகள் மென்னகையை வரவழைத்தது.
'சோ ஸ்வீட்' என்று மனதில் ரசித்தாள்.
வேகமாக எழுந்து, "நான் பல்விலக்கி குளிச்சிட்டு ரெடியாடிட்டு வந்துடறேன்" என்று படிகளில் தாவினான்.
அவன் குளித்து வரும் நேரம், சூடான காபியை பருகினாள் யாஷிதா.
"அது என்னோட காபி மக்" என்று கடைசி படிகளில் நின்றவாறு கூறவும், "பழகியதுல மறந்துட்டேன்" என்று கூறியவள் குடித்து முடித்து அவள் தயாராக மாடிக்கு விரைந்தாள்.
அதே காபி மக்கில் காபி ஊற்றி குடித்து முடித்தான்.
காஞ்சனாவோ மகனின் காதல் விளையாட்டை ரசித்தாலும் உள்ளுக்குள் அவனுக்கு ஏமாற்றம் தாக்குமோயென்ற எண்ணமே சுணக்கம் தந்தது.
நேற்று வரும் போதே சில உடைகள் தேவைகள் என வாங்கி வந்திருக்க யாஷிதா ரவிதாஸை சந்திக்க தயாராய் வந்தாள்.
ஹரிஷ் சாப்பிட்டு முடித்திருக்க யாஷிதா மெதுவாய் விழுங்கினாள்.
வீட்டு ஆட்கள் எல்லாம் "பார்த்து போங்க. ஏதாவதுனா உடனே தகவல் சொல்லுங்க." என்ற ரீதியில் வழியனுப்ப, பைக்கில் ஜோடியாய் ஹரிஷ் யாஷிதா அமர்ந்து பயணித்தனர்.
இருபக்கம் கால் போட்டு யாஷிதா அமர்ந்திட, ஹரிஷ் அவன் பாட்டிற்கு எப்பொழுதும் போல் செல்லும் வேகத்தில் பறந்தான்.
வேகத்தடை என்றவொன்று வந்ததும் யாஷிதா மோதியப்பின்னே வேகத்தை குறைத்தான்.
மன்னிப்பு என்றவொன்றை ஹரிஷ் கேட்கவில்லை. ஆனால் அவன் தெரியாமல் செய்தவையே.
யாஷிதாவோ மெதுவாய் நகர்ந்து தள்ளி அமர்ந்தாள். அதன் பின் வேகம் விவேகமாய் பயணித்தான்.
ரவிதாஸ் அவனது தனிபட்ட அலுவலகத்தில் தான் அழைத்திருந்தான்.
கலிவரதனும் அங்கே வழியிலேயே நின்றிருந்தான்.
கூடவே அவளை துரத்தியவர்கள் கலிவரதன் பின்னால் நின்று கோபத்தை காட்டினார்கள்.
யாஷிதா கைகள் தானாக ஹரிஷை தீண்டியது.
அவளின் பயத்தை கண்டு பார்வையை மறுபுறம் கவனித்தவன், "ஒன்னும் பயப்படாதே. உனக்கொன்னா இன்னொரு நாடும் தேடும்னு அவனுக்கு தெரியும்." என்று ரிசப்ஷனில் அமர்ந்தார்கள்.
மணி பத்துபத்து:
"பணம் தான் வேண்டுமின்னா என்னிடமே பேரம் பேசியிருக்கலாமே பாப்பா. எதுக்கு பயந்த? சாகடிச்சிடுவேன்னு உதறிடுச்சா?" என்று கேட்டு யாஷிதா அருகே அமர போனவனை, "உன்னிடம் ஏதுடா அவ்ளோ பணம். நீயே அன்னகாவடி. ரவிதாஸ் இல்லைனா நீ ஜீரோ. அவன் பணத்தை நீ எப்படி பேரம் பேசி தந்திருப்ப?. கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பியா?
அவள் பயந்தது உண்மை தான். இனி பயப்பட மாட்டா." என்று மென்கோந்தை மென்றவன் கையிலிருந்த சூயிங்கம்மை அவன் அமர இருந்த இடத்தில் வைத்துவிட்டு, திமிராய் இருந்தான்.
எச்சியாக மென்ற மென்கோந்தில் அமர கலிவரதன் பைத்தியமில்லை. அதோடு யாஷிதாவோடு பிரச்சனை கூடாதென்பது ரவிதாஸ் ஆணை.
மணி பத்து இருபது நகரும் நேரம் ரவிதாஸ் அந்த கட்டிட அலுவலகத்தில் நுழைந்தான்.
கூடவே அவனது பி.ஏ நூல் பிடித்து சென்றான்.
மணி ஆகவும் யாஷிதாவை அழைத்தனர். அவனோடு ஹரிஷும் வந்தான். இருவரையும் தரவாக சோதனை செய்து உள்ளே விட்டார்கள். கலிவரதனும் கையோடு உள்நுழைந்தான்.
ரவிதாஸ் பெண்ணவளின் நெஞ்சுபகுதியில் இருந்த பட்டனை தான் துளைத்தான்.
யாஷிதாவோ நெஞ்சில் கைவைத்து முகம் திருப்ப, "ஏன்மா... பட்டன் கேமிரா ஏதாவது வச்சிருந்தா சொல்லிடு. அதான் பார்த்தேன். வேறொன்னுமில்லை. தப்பா நினைக்காதே. முன்ன மாதிரியா... விளையாட்டு துறை அமைச்சர். நமக்கு பெயரும் பதவியும் முக்கியம் உட்காரு" என்று இருக்கையை காட்டினான்.
"இது யாரு லவ்வரா?" என்றதற்கு மறுக்கவில்லை. ஆமென்றும் தலையாட்டவில்லை.
"அவரை வெளியே போக சொல்லுங்க. நாம பிரைவேஸியா பேசணும். எனக்கு அவரை பிடிக்கலை" என்று ஹரிஷ் கலிவரதனை சுட்டி காட்டி குறிப்பிடவும், ரவிதாஸ் மச்சானை வெளியே போக கூறினான்.
"மாப்பிள்ளை நான் போகணுமா?" என்று கலிவரதன் நாசூக்காய் கேட்டார்.
"உனக்காக தான் மச்சான் இவங்களை கூப்பிட்டு வச்சி பேசி பணத்தை இறைக்க போறேன். நீ வெளியே இரு. ஒன்னும் பிரச்சனையில்லை. தங்கச்சியை கட்டிக் கொடுத்திருக்கேன். உன்னை கூண்டுக்குள்ள அனுப்பிட்டு கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டேன்." என்று நம்பிக்கையாய் பேசி அனுப்பினார்.
கலிவரதன் கோபமாய் சென்றதும், ஹரிஷ் யாஷிதா இருவரும் நன்றாக அமர்ந்தார்கள்.
ஹரிஷ் லேப்டாப்பை எடுத்து வீடியோவை காட்டினான்.
"தம்பி இரண்டாயிரம் ரூபாய் நோட்டை பதுக்கியது நாங்க தான். இந்த பிள்ளை வேண்டுமின்னா கொலம்பியாவா இருக்கலாம் நீங்க இந்தூர் தானே? உங்களுக்கு தெரியாதா?
பதுக்கின பணத்தை இப்ப மாத்தறதுக்கு வேலையும் நடந்துட்டு இருக்கு. அதுவொன்னும் பிரச்சனையில்லை. மாட்டிக்காம நேக்கா பணத்தை திரும்ப எப்படியும் நாங்களே மாத்திடுவோம்." என்று இதெல்லாம் நடக்குமென்று ஊர்ஜிதமாக கூறினார். அந்தளவு நம்பிக்கை.
"ஓ... அப்படியா... அப்ப அந்த போலீஸ்காரர் டெத்துக்கு?" என்று கேட்டான் ஹரிஷ்.
"ஹரிஷ்... நாம பேச வந்தது எதுக்கு?" என்று யாஷிதா தடுத்தாள்.
"பொண்ணு சரியா பேசவருது. இருங்க தம்பி." என்று ரவிதாஸ் யாஷிதா பக்கம் திரும்பினார்.
"எவ்வளவு பணம் வேண்டும்மா? கூச்சப்படாம சொல்லு" என்று ஊக்கினார்.
யாஷிதாவோ "சார் வீடியோவை சரியா பார்த்திங்களா?" என்று கேட்டாள்.
"ஏன்மா.. என்ன இருக்கு அதுல.. மேகமலை எஸ்டேட் வீடு, கலிவரதன் அந்த தடியன்கள், கட்டுகட்டான பணத்தை கார்ல பதுக்கியது. கூடுதலா அந்த உதவாக்கரை போலீஸ்." என்று வரிசையாய் கூறினார்.
"ஏன்சார் வீடியோல அந்த சிவப்பு கார் டோர் பக்கம் ஒருமுறை திரும்ப பாருங்க" என்று திருத்தினாள் யாஷி.
என்ன பார்க்கணுமாம்? என்று தான் அலட்சியமாய் பார்த்தார் ரவிதாஸ்.
வீடியோவை மறுமுறை ஓடவிட்டு பார்க்க அதில் முகமாற்றம் அடைந்தார். "என்னோட தங்கை சந்தனா. அச்சோ.. இவ எப்படி?" என்று பதறியபடி எழுந்தார்.
"சார் ப்ளீஸ்.. உட்காருங்க" என்று யாஷிதா கலிவரதனுக்கு கேட்டு ஏதேனும் செய்திடுவானோயென பரிதவித்தாள்.
"என்ன சார் ஆக்டிங்கா? உங்க தங்கை விரும்பிய ராஜ்கிரண் என்ற போலீஸ்காரன் இறந்தப்ப எந்த ரியாக்ஷனும் தரலை. ஆனா கூடபிறந்த ரத்தம் என்றதும் துடிக்கிறிங்க." என்று எகத்தாளமாய் கேட்டான்.
"ஹரிஷ்" என்று யாஷிதா அதிர்ந்து திரும்ப, "இது கிளைக் கதைமா, நீ கலிவரதன் என்றதும் நான் ஃபுல் ஹிஸ்டரி சர்ச் பண்ணிட்டேன். அங்க ரஞ்சனோட போனேன். இங்க விமலை இந்த டீடெய்ல் கலெக்ட் பண்ண சொல்லிருந்தேன். அப்ப கிடைத்த காதல் கதை.
உங்க தங்கையும் ராஜ்கிரணும் விரும்பியது தெரிந்தும் நீங்க அவங்களை பிரிச்சி கலிவரதனுக்கு கட்டிவச்சிங்க.
இப்ப இரண்டு பேரும் சந்திக்க போய் நல்ல காதல் கள்ளகாதலா மாறிடுச்சு. கோபத்துல கலிவரதன் இரண்டு பேரையும்போட்டு தள்ளி மேகமலையில புதைக்க சொன்னிங்க அப்படி தானே?" என்று கேட்டதும் ரவிதாஸ் கையை பிசைந்தான்.
"தம்பி... என் தங்கை சந்தனா ராஜ்கிரணை விரும்பியது உண்மை. நான் அவங்களை பிரிச்சி தான் கலிவரதனுக்கு கட்டிவச்சேன். ஆனா இரண்டு பேரையும் சேர்த்து கொல்ல சொல்லலை.
ஆக்சுவலி கலிவரதன் அன்னைக்கு போன் பண்ணினான். பணத்தை கார்ல ஏத்திட்டு போறப்ப ஒரு போலீஸ் பார்த்துட்டான் அதனால கதையை முடிச்சிடவானு கேட்டான். நானும் அவ்ளோ பணத்தை பதுக்கறதை பார்த்துட்டான். வெளியே தெரிந்தா இந்த பதவியும் நல்ல பெயரும் போயிடும் பேரம் பேசிப்பாரு மசியலைனா சாகடிச்சிட சொன்னேன். அவ்ளோ தான்.
இந்த பொண்ணு வீடியோ எடுத்திடவும் இது மாதிரி அடிச்சி கொல்லறப்ப ஒரு பொண்ணு வீடியோ எடுத்துடுச்சு. அவளையும் கொன்றுட்டு இங்கயே புதைக்கணும் தேடினேன் அந்த பொண்ணு காணோம். எங்கயாவது புகார் அளித்து பிரச்சனை வந்தா கவனிச்சிக்கோனு ரெக்வஸ்ட் பண்ணினான்.
நானும் அதனால தான் எல்லாயிடத்திலும் தெரிந்தவங்களிடம் சொல்லி வச்சேன். மத்தபடி சந்தனா இறந்தது எனக்கு தெரியாது. அவ ஏதோ பிரெண்ட்ஸ் கல்யாணத்துக்கு போயிருக்கானு சொன்னான்." என்று அழுது வேகமாக ஆவேசமாய் எழுந்தான்.
"ஒரு நிமிஷம்... இந்த கொலைக்கு அப்ப நீங்க காரணமில்லை?" என்று ஹரிஷ் கேட்க, "போலீஸ்காரன் கொலைக்கு நான் காரணம். அது ராஜ்கிரண் இல்லைனாலும், ஆனா தங்கச்சிய நான் கொல்ல சொல்லலை. என் தங்கைனா எனக்கு ரொம்ப பிடிக்கும்." என்று கூறி அழுதார்.
பி.ஏ ஓடிவந்தார். இத்தனை நாள் சேவை செய்தவர். நம்பிக்கை விசுவாசி. "சார்... சார் கலிவரதன் சாருக்கு தங்கச்சி விரும்பியது தெரிந்திருக்கு" என்று கூற, "ஆமாடா... அந்த ஓடுகாலி காதலிச்சது தெரிந்து தான் தாலி கட்டினேன். ஆனா என் கண்ணுல மண்ணை தூவிட்டு அவங்க இரண்டு பேரும் பிளான் போட்டா சும்மா விடுவேனா?" என்று இதுவரை மறைந்திருந்து கேட்ட கலிவரதன் கதவை எட்டி உதைத்து வந்திருந்தான்.
ஹரிஷ் யாஷிதாவை தன் பக்கம் நகர்த்தி நின்றான்.
"ஏன்டா என் தங்கையை கொன்ன?" என்று ரவிதாஸ் கேட்க, "நீ ஏன் மச்சான் உன் ஓடுகாலி தங்கையை எனக்கு கட்டிவச்ச? அவ என்ன பண்ணினா தெரியுமா? உன் வீட்லயிருந்து பணத்தை என் கார்ல மாத்திட்டு கீழே காரேஜ்ல விட்டுட்டு போனேன். அவ கார் எடுக்க வந்து பணத்தை பார்த்துட்டா... என்னோட இருந்தாலும் அவளுக்கு அவ காதலன் நினைவு தான் வந்துதாம். அதனால அவனை போன் போட்டு அழைச்சி பணத்தை எடுத்துட்டு போக பிளான் பண்ணியிருந்தா.
ராஜ்கிரணும் போலீஸ் உடுப்புல அப்டியே வந்து காரை அபேஸ் பண்ணிட்டு உன் தங்கையையும் அபேஸ் பண்ண பார்த்தான்.
வண்டி மூவ் ஆனதுமே எனக்கு சிக்னல் வந்துடுச்சு.
நான் லொகேஷன் பார்த்து வண்டியை தேடிபிடிச்சி அமுக்க, என் பொண்டாட்டி அவ முன்னால் காதலனோட ஓடிப்போறா. அவபோனா கூட அனுதாபத்துல உன் கூடவே இருந்து அரசியல்ல ஒரு இடத்துல வந்துடுவேன். ஆனா பணமும் போகுது. அதான் என்னை ஏமாத்த பார்த்த இரண்டு பேரையும் கொன்னு புதைக்க முடிவெடுத்தேன்.
உன் தங்கையை முதல்லயே கத்தியால நெஞ்சு குத்தி சாகடிச்சிட்டேன். அதனால தான் கார்ல தூக்கிபோட்டுட்டு போலீஸ்காரனை மட்டும் வச்சி வச்சி சாகடிக்க செய்தேன். என்னிடம் இல்லாதது அவனிடம் என்ன இருக்கு என்ற ஆத்திரம்.
புதைக்கிறப்ப போலீஸ்காரன் தான் இருந்தான். பணத்தை திறந்து வைத்த கார் இருக்கவும் நான் பேசியதும் பணத்தை பதுக்கறதை பத்தி தான். உன் தங்கை ஓடியது தான் சென்னை டூ மேகமலையிலேயே போறப்பவே பேசி களைச்சிட்டேன்.
இந்த பொண்ணு வீடியோ எடுத்தது ராஜ்கிரண் கொன்னதை தான்.
ஆனா என் கிரகம் உன் தங்கை செத்ததும் சேர்ந்து வீடியோல பதிவாகிடுச்சு." என்று விரிவுரையாக பேசினான்.
ரவிதாஸன் கலிவரதனையும் அவன் ஆட்களை அடிக்க ஏவ, கலிவரதன் ஆட்கள் ரவிதாஸை குத்த சென்றனர். இரண்டு பக்கமும் விசுவாசிகள் ஒருத்தருக்கு ஒருத்தர் நன்றி கடனை ஆற்றும் விதமாக அடிதடியில் குதித்தார்கள்.
இரு கும்பலுக்கும் கத்தி குத்து சண்டைகள் ஜோராக போனது.
ஹரிஷ் இதை தான் எதிர்பார்த்தான்.
ரவிதாஸ் அலுவலகம் என்பதால் அவன் ஆட்கள் அதிகமாக இருக்க கலிவரதன் அடிக்கடி தோல்வி தழுவும் விதமாக சண்டைகள் இருந்தது.
ஏற்கனவே கலிவரதன் ஆட்களில் அருளும் அவனை சார்ந்த கும்பலும் ஹரிஷிடம் வாங்கிக்கட்டிய அடிகளால் அவனை ஏதும் செய்யாது தவிர்த்தனர்.
யாஷிதாவோ ஹரிஷ் பின்னால் மறைந்து மறைந்து வேடிக்கை பார்க்க, அவளோ, பேஸ்புக் லைவ் போட்டு விட்டாள்.
ரவிதாஸ் அலுவலகத்தில் மாமனும் மச்சானும் அடித்து கொள்வது லைவாக 4ஜீ 5ஜீ என்று மத்திய அரசாங்கம் வரை பரவியது.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
Harish sema brilliant ah move panni.irukan adei yei sandai ah niruthuga ya nega live stream ah oditu irukiga
பதிலளிநீக்குவாவ்...! ரெண்டு பேருமே செய்த ப்ரிலியணட். அதுவும் ரணகளத்துலேயும் குதுகலம்ங்கற மாதிரி லைவ் டெலிகாஸ்ட் வேறயா.. சூப்பர்.
பதிலளிநீக்குSuper Harish and yashis move...live vera semma👌👌
பதிலளிநீக்குஎல்லோரும் ரசிக்க லைவ் வாக வீடியோ காட்சிகள். சூப்பர். புத்திசாலித்தனமான நகர்வு. மிக மிக அருமை.
பதிலளிநீக்குசூப்பர் மா
பதிலளிநீக்குசூப்பர். ... ஹரிஷின் நகர்வு நைஸ்... லைவ் வேற செம சீன்
பதிலளிநீக்குWaiting for next eppi wt happened sis
பதிலளிநீக்குSuper... Waiting for next update
பதிலளிநீக்கு