மர்ம நாவல் நானடா-23 (முடிவுற்றது)

  அத்தியாயம்-23    யாஷிதா அவனின் முனங்கல் கேட்டு மாடி ஹாலில் நடந்தவள் திரும்ப, வேகமாய் வந்தவன் அவளை இடித்து, அணைத்து உருண்டப் பின்னே சுதாரித்தான்.    அவள் மீது தன் தேகத்தை மொத்தமாய் சரித்திருந்தான். அந்த களோபரத்திலும் அவள் தலைக்கு முட்டுக்கொடுத்து அவள் சிரத்தை தாங்கியிருந்தது வலது கை. இடது கையோ அவளது இடையை வளைத்திருந்தது.   அவளோ சுற்றம் மறந்திருக்க, ஹரிஷின் கணம் தாளாமல் எழ முயன்றாள். ஹரிஷே வேகமாய் பதறிவிட்டு எழுந்திட, இருவருக்கும் மூச்சு வாங்கியது.    "நான் என்ன இன்னும் இன்விசிபிளாவா இருக்கேன்." என்று யாஷிதா கேட்க, "இ.. இ..ல்லை என்று தலையாட்டவும் அவனது முகமாறுதல் அவளுக்குள் ரசிப்பை ஏற்படுத்த, அளவிடாத காதலை நெஞ்சில் எடுத்துரைத்தது.    இதற்கு மேல் மனக்கடலில் காதல், கடலணை  உடையவும், யாஷிதா அவன் காலரை பற்றி இழுத்து, அலமாரி கதவை திறந்து, உள்ளே நுழைந்து சாற்றினாள்.      "உன்கிட்ட நிறைய பேசணும். என்னால இதுக்கு மேல மறைக்க முடியலை.     ஏதாவது கிறுக்குதனமா பேசிட்டு பிறகு நீ பின்வாங்கிட்டா? அதனால கேட்கவே தயக்கமாயிருக்கு. ஆனா கேட்காமலும் இங்கிருந்து போக முடியலை. நானும் இந்த பேச

மர்ம நாவல் நானடா-13

 அத்தியாயம்-13

      அடுத்த நாள் ஏழுமணிக்கு சென்னை வந்து சேர, அதுவரை ஏசி காரில் சொகுசாக ஹரிஷ் உறங்கி வழிந்தான்.

      அருள் வந்து ஹரிஷ் தோளைத்தட்டி எழுப்ப, அவனோ "யாஷிதா சும்மாயிரு. தூங்கலாம்... அட்லிஸ்ட் கனவுலயாவது முகம் காட்டு" என்று அருளின் கையை எடுத்து கன்னத்தில் ஒற்றினான்.

   அருளை கடந்து சென்ற இருவர் ஹரிஷ் காருக்குள் கையை பிடித்து இழுக்கவும், தினுசாக பார்க்க அருளோ "ஏய்.. சீ.. கையை விடுடா. என்னமோ மாமியார் வீட்ல சொகுசா படுத்த மாதிரி இருக்க. போறவர்ற பொண்ணுங்க என்னை அசிங்கமா பார்க்கறாங்க." என்று கன்னத்தில் தட்டினான்.

    "ஆஹ்... ஏன் அண்ண அடிக்கறிங்க. பொண்ணுங்க பார்த்தா நீங்களும் சைட் அடிங்க." என்று கொட்டாவி விடுத்து எழுந்தான்.

   "கருமம்... சென்னை வந்துடுச்சு முதல்ல எழுந்து பல் விலக்கி காபி குடி. இளையமானை பார்க்கணும்னு பறந்தியே" என்று கூறுவதே கிலியை ஏற்படுத்தியது.

     மனதில் 'நல்லதே நினை நல்லதே நடக்கும்' என்ற தாத்தாவின் போதனை நெஞ்சில் வந்து தெம்பூட்டியது.

    தன் கூட வந்த பாவத்திற்கு ரஞ்சன் பலிகாடாக மாறக்கூடாதென்று யோசித்தான்.

   ரஞ்சனை பார்த்து "அண்ணா... அவனை விட்டுடுங்க. வேலைக்கு போவான் எனக்கு வேலையில்லை. பொறுமையா இளையமானை பார்த்து யாஷிதாவை கேட்டுக்கறேன்" என்று ரஞ்சனை அனுப்ப திட்டமிட்டான்.

    கலிவரதனும் ஏற்கனவே ஹரிஷ் வீட்டு ஆட்களை மிரட்டியதால் தேவையற்று மற்றொரு குடும்பத்தின் வாரிசை மிரட்டவோ கொலை செய்யவோ வேண்டாமென துரத்திட கூறினான்.

   ரஞ்சனை போக கூற, அவனோ ஹரிஷை வெறித்தான்.

  என்னயிருந்தாலும் நண்பனை விட்டு எப்படி செல்வதென்று கவலை கொண்டான்.

   ஹரிஷோ "தைரியமா போடா இளையமான் தாத்தாவை பார்த்துட்டு வருவேன்." என்று கூறி திடமாய் அனுப்பினான். அரை மனதாக தான் ரஞ்சன் கிளம்பினான்.

   ஹரிஷிற்கு காபி டிபன் என்று வாங்கி தர கூச்சப்படாமல் பயம் காட்டாமல் வாங்கி சாப்பிட்டான்.

   ஒருவேளை அறையில் அடைத்தாலோ, யாஷிதா போல மாயமாய் மறைய வைத்தாலோ பசிக்கு என்று உடனே போராட வேண்டாமே என்று எண்ணினானோ என்னவோ. யாராயிருந்தாலும் அரை சான் வயிற்று முக்கியம். அதை நிரப்பவில்லை கத்தி கூச்சலிட்டு நம்மை வதக்கிவிடும்.

    கலிவரதனின் தனிப்பட்ட இடத்தில் வந்தப்பிறகும் பயமின்றி இருந்தான்.
கரைவேட்டிகள் கூட்டமில்லை. மாறாக பாடிகார்ட்ஸ் சிலர் அங்கு தான் உலாவிக் கொண்டிருந்தனர்.

    ஹரிஷ் சுற்றி பார்வையை பதித்தபடி வந்தவனுக்கு பயத்தை கூட்டும் வகையில் சுப்ரமணிய தாத்தா இருக்கையில் அமர்ந்திருக்க கண்டான்

   "தாத்தா" என்று ஒடினான். ஹரிஷை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்த்து எவ்வித ஆபத்துமில்லையென்று நிம்மதி பரவிய பின், பளீரென்ற அறையை பரிசாக தந்தார்.

    "தாத்தா." என்று திகிலடைந்து எதற்கு அடித்தாரென்று குழம்ப, "ஏன்டா... எங்கயாவது போனா சொல்லிட்டு போக மாட்ட? மேகமலைக்கு எதுக்கு போன? நேத்து இரண்டு தடியன்கள் வந்து உங்க அம்மா கழுத்துல கத்தியை வச்சி யாஷிதா எங்க எங்கனு ஒரே மிரட்டல். உங்கப்பா உனக்கென்ன ஆனதோ ஏதானதோனு பயந்து கிடக்கான்.

   ஏதோ யாஷிதாவை விரும்பி அவளை தேடி போனதா சொன்னியாமே.

   அவதான் என் சிநேகிதனை மதிக்காம, உன்னையும் பார்க்காம ஓடிட்டாளே. நீ ஏன்டா காதலிச்ச? ஊர்ல உனக்கு பொண்ணா இல்லை. இளையமானை புரிஞ்சிக்கிட்டு வராதவ உன்னிடம் போன்ல பழகிட்டு வருவாளா? நீ வேற முகத்தையும் பார்க்கலையாமே. அப்படியிருக்க எதுக்கு டா இந்த டூர்.

  ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு வந்து சேரு. ஏதோ என் பிரெண்ட் இளையமானை பார்க்க வந்தேன். உன்னையும் பார்த்தாச்சு. அவனை பார்த்துட்டு இனி நம்ம வேலையை கவனிப்போம்.
 
     இளையமான் தலையெழுத்து அவன் பேத்தி கடைசிவரை அவனிடம் பேச மாட்டா, அவனுக்கு ஒன்னுனா வரமாட்டா வரவே மாட்டா." என்று கூறிமுடிக்க, ஹரிஷிற்கு தான் இதென்ன புது கதை என்று அப்பாவியாக நோக்கினான்.

   சுப்ரமணியமோ கையை கட்டி இரண்டு விரலால் புஜத்தில் தாளமிட, ஹரிஷிற்கு ஏதோ புரிய துவங்கியது.

   பெரும்பாலும் தனஞ்செயன் திட்டினால் இந்த லுக்கை அவர் கொடுப்பார். அப்படி கொடுத்தால் அவர் பேசுவதில்  அன்னப்பறவையை போல தனக்கானதை பிரித்தெடுத்து கொண்டும், சூழ்நிலைக்கு தகுந்தவாறு நடயென்று அர்த்தம்.

   தற்போது ஹரிஷ் கன்னத்தில் கை வைத்து தாத்தா பேசியதை ஓட்டி பார்த்தான்.

    "உங்க பிரெண்ட் இளையமான்?" என்று கேள்வியாய் கேட்க, "ஆமா டா..  ஏதோ போனமுறை பீபி சுகர் டெஸ்ட் பண்ண வந்தப்ப ஆம்புலன்ஸில் ஸ்டக்சர்ல வந்தான்.
 
    நானும் என்ன ஏதென விசாரிக்க, யாஷிதா என்னோட பேத்தி என்கூட பேச மாட்டேங்கிறா. இத்தனை காலமா ஏதோ விட்டுட்டேன். இப்ப என் காலம் முடியறதுக்குள் கல்யாணம் பண்ண பார்த்தா கல்யாணத்துக்கு மறுப்பு சொல்லிட்டா.

      அட்லீஸ்ட் வீட்டையாவது விற்று அவ பேர்ல போடணும் தெரிந்த பார்ட்டி யாராவது இருந்தா சொல்லுனு கேட்டான். நானும் வீட்டை எவ்வளவுக்கு விற்கப்போறனு கேட்டுவைக்க, நமக்கு தோதுபட விலை இருக்கவும், இளையமானிடமிருந்து வீட்டை வாங்கினேன்.

   வாங்கியதுலயிருந்து எந்த பிரச்சனையும் இல்லை.

   இப்ப என்னடானா எவனோ வந்து யாஷிதா எங்க எங்கனு கத்தறான்." என்று கூறி அருகே பேச கிசுகிசுக்க வந்தவரிடம் "தாத்தா... அதெல்லாம் பேசாதிங்க. இளையமானை பார்க்கணும் அவர் பேத்தி எங்கனு கேட்கணும். என்னோட அவ லவ் டயலாக் விட்டுட்டு இப்ப டாட்டா காட்டுவாளா?" என்று தன் ஷர்டை இழுத்து விட்டான். அதில் எலக்ட்ரானிக் டிவைஸ் இருக்க, சுப்ரமணியமோ பார்த்து பேசவேண்டுமென அறிந்து கொண்டார்.

     அருள் ஹரிஷ் அறியாமல் தான் இந்த டிவைஸை சட்டையில் மறைத்தான். ஹரிஷ் இந்த டிவைஸ் வைத்ததும் கண்டறிந்துவிட்டான். அந்த அழகில் தான் அருள் வைத்தது.

   முகம் கழுவி நீர் அருந்த சர்க்கியூட்டில் நீர் பட்டதும் லேசான மின்அதிர்வில் அப்பொழுதே கண்டறிந்தாலும் எடுத்துவிடவில்லை.

     இருவரும் புரிந்து கொண்டது போல இளையமானும் புரிந்து பேசுவாரா? அவரை காணும் ஆவலில் தேடினான்.

    ஹரிஷையும் சுப்ரமணியத்தையும் இளையமான் இருக்கும் அறைக்கு அழைத்து சென்றார்கள்.
 
   இளையமான் சாதாரணமாக நோயாளி போல சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். முன்பு நண்பனை சந்தித்தபோது படுத்தபடுக்கையில் கண்டார். இன்று சக்கரநாற்காலி அவ்வளவு தான் வித்தியாசம். முகத்தில் அதே அழுத்தம்.

   இம்முறை சுப்ரமணியத்திற்கு இளையமான் என்ன காரணத்திற்காக வீட்டை தன்னிடம் ஒப்படைத்தானென்றும், தன்னிடம் என்ன பேச முயல்கின்றானென்றும் தெளிவாய் விளங்கியது.

     கலிவரதன் ஆட்கள் கத்தி வைத்து மிரட்டி சென்றதும் உடனடியாக தனஞ்செயனிடம் பேசி வீட்டுக்கு வரவைத்தார் காஞ்சனா.

    தனஞ்செயனிடம் நடந்தவையை விவரித்ததும் அவர் மைந்தனை பற்றி கவலைக்கொண்டார்.

  அக்கணம் கொரியர் வந்து சேர்ந்தது. தனஞ்செயன் தான் கொரியரை பார்த்து கையெழுத்திட்டு வாங்கியவர் நெற்றி முடிச்சோடு வீட்டுக்குள் வந்து டேபிளில் வைத்தார்.

   "என்னதுங்க?" என்று காஞ்சனா கணவரின் முகமாற்றத்தை வைத்து கேட்டார்.

    "ஹரிஷுக்கு மேகமலையிலருந்து அவனே அனுப்பியிருக்கான்." என்று கதவை தாழிடக் கூறி அதனை பிரித்தார். காஞ்சனா அவசரமாய் கதவுகளை தாழிட்டு ஜன்னலை மூடினார்.

   போன் அட்டைப்பெட்டியில் கவரை போட்டு சுற்றியிருக்க பிரித்தார்.

     "பழைய போன்?" என்று தனஞ்செயன் அதனை எடுத்து பார்த்தார்.

   சார்ஜர் போட்டு அதனை இயக்க பாஸ்வோர்ட் கேட்டு திறக்க மறுத்தது.

    யாஷிதாவோ அங்கும் இங்கும் தவித்தபடி, "இது இது என் போன். எனக்காக ஹரிஷ் அந்த கோவில் பக்கத்துல இருக்கற மைல்கற்களுக்கு போய் எடுத்து இங்க அனுப்பியிருக்கான்." என்று கத்தாத குறையாக கூறினார்.

   யார் காதிலும் விழவில்லை. 'அய்யோ... இந்த ஹரிஷ் எப்ப வருவானோ?' என்று தலையிலடித்து சோர்ந்தாள்.

    "எதுக்கு தான் ஹரிஷ் அங்க போயிருக்கான். அப்பா உண்மையை சொல்லுங்க. எப்பவும் போல உங்க பேரனை காப்பத்த முயற்சிக்காதிங்க. இங்க நானுமே அவனை காப்பாத்தணும்னு பார்க்கறேன்
அவன் எங்கயோ மாட்டிக்கட்டு உதைப்பட்டு சாககூடாது" என்றதும் காஞ்சனா "அய்யோ என் பையன்?'' என்று அலறாத குறையாக பயந்தார்.

   சுப்ரமணியமோ "தனா நிஜமாவே இந்த முறை அவன் என்னிடம் எதுவும் சொல்லலைடா. ஆனா நடக்கறதெல்லாம் பார்த்தா ஏதோ காரணகாரியமில்லாம இல்லை.

    இன்னிக்கு வந்தவங்க இளையமான் பேத்தியை தேடி, அவளை எங்கனு கேட்டாங்க. இதுல ஹரிஷ் அந்த பொண்ணை பார்க்காமலே விரும்புவதா பேசினாங்க.

    அவனுமே மேகமலைக்கு தான் போய் இந்த போனை கொரியர் பண்ணிருக்கான்.

   இதுலயிருந்து ஒன்னு தெரியுது. இளையமான் ஏதோவொரு காரணத்துக்கு தான் வீட்டை விற்றுயிருக்கான். அதோட யாஷிதாவுக்கு ஹரிஷ் ஏதோ உதவி செய்யறான்.

   எனக்கென்னவோ ஹரிஷுக்கு யாஷிதா எங்கயிருக்கானு தெரியும் போல." என்றதும் யாஷிதாவுக்கு நெஞ்செல்லாம் நிறைந்தது.

  "இது இது தான் தாத்தா... பக்கத்துல வந்துட்டிங்க... அப்படியே திங்க் பண்ணுங்க. திங்க் திங்க்." என்று யாஷிதா காதுகிட்ட வந்து கத்தவும், அவரோ காதருகே ஈ கத்துவதாக உணர்ந்து காதை தேய்த்து கொண்டார்.

    அச்சோ நான் பேசறது இவங்க காதுல ஏதோ ஸ்பீக்கர் எரையிற(இறைச்சல்) மாதிரி கீச்கீச்னு கேட்கும் போலயே. இப்ப நான் எப்படி நான் இங்க இருப்பதை தெரிவிக்க?" என்று அங்கும் இங்கும் மூவரை சுற்றி சுற்றி வந்தாள்.

   யாஷிதா போனோ சார்ஜர் ஏறவும் 'டிங் டிங் டிங்' என்று தொடர் ஓசையெழுப்பி இத்தனை நாட்களாய் வந்த அலைப்பேசி அழைப்பு, குறுஞ்செய்தி வாட்ஸப் மெஸேஜ் ட்விட்ட்ர, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் என்று வரிசையாக சோஷியல் மீடியாவின் நோட்டிபிகேஷன் வந்தது.

  மூவருமே அந்த போனை பார்த்து முடிக்க இது தான் சாக்குயென்று யாஷிதாவோ அந்த போனை எடுத்து, பாஸ்வோர்டை போட்டு போனை உயிர்பித்து, மடமடவென மெஸேஜை தட்டினாள்.

     தொலைப்பேசி சார்ஜரில் போட்டபடி அந்தரத்தில் தொங்கியதையே வாய் திறந்து ஆவென கண்டவர்கள். அந்த தொலைப்பேசியில் மடமடவென டைப்பிங் சவுண்ட் கேட்கவும் ஆடிப்போனார்கள்.

    யாஷிதாவோ மடமடவென சிலதை டைப் செய்து மூவரின் முன் நீட்டினாள்.

   காஞ்சனாவோ பயந்தபடி "என்னங்க இது? போன் தானா தொங்குது. டைப் ஆகுது" என்று கணவர் தனஞ்செயன் தோளை தொட்டார்.

    "பயப்படாதே காஞ்சனா" என்று கூறிவிட்டு போன் அருகே வந்தார்.

   "இங்கிலிஷ்ல ஏதோ அனுப்பியிருக்கு. ஹரிஷா இருப்பானா" என்று காஞ்சனா அழுதார். மகன் இறந்து ஆத்மாவாக பேச துடிக்கின்றானோ என்று.

     'அச்சோ... என்னால தமிழ்ல டைப் பண்ண தெரியாதே' என்று யாஷிதா கவலைக்கொள்ள, "நான் படிக்கறேன் காஞ்சனா. கொஞ்சம் பொறுமையா இரு." என்று போன் முன் படிக்க ஆரம்பித்தார்.

   "Hi Uncle Aunty and Grandpa. I am Yashita. Your friend's Ilayaman granddaughter. I'm not die. I'm invisible. Ilayaman's grandfather did this. I have a problem.  Harish was the first to find me." என்று அனுப்பியதை வாசித்தார்.

    "அப்பா... உங்க பிரெண்ட் இளையமானோட பேத்தி இங்க தான் இருக்காளாம். ஆனா உருவம் தெரியாம இருப்பதா சொல்லறா. அவளை அப்படி செய்தவரும் இளையமான் தாத்தா தான்னு சொல்லறா.

   ஹரிஷுக்கு இந்த பொண்ணு யாஷிதா இங்க இருப்பது தெரியுமாம்." என்று மொழிபெயர்த்து தந்தார்.

    மீண்டும் டைப் செய்யும் ஓசைக் கேட்டது. யாஷிதா தான் மொத்த நிகழ்ச்சியையும் கொஞ்சம் கொஞ்சமாய் டைப் செய்து அதை தனஞ்செயனிடம் காட்டி முடித்தாள்.

     ஹாசினி பிறந்தநாளுக்கு போனது முதல், கொலையை கண்டதும், தடியர்கள் துரத்தியதும், மாயமாய் மறைந்து இங்கே ஹரிஷை சந்தித்து, அவனின் பார்வையில் உணர வைத்து, உதவி கேட்டு, தற்போது ஹரிஷ் எதற்கு சென்றான் என்பது நடந்தவையை டைப் செய்து காட்டி மொத்தமும் கூறிவிட்டாள்.

    நிசப்தமான ஹாலில் மூவரும் ஸ்தம்பித்திருந்தனர். யாஷிதாவோ ஏதேனும் வழி கிடைத்து உருவம் பெற்றிட துடித்தாள்.

   "அச்சோ... ஏதாவது பேசுங்களேன்" என்று குறுஞ்செய்தியை காட்டி யாஷிதா கேட்டதும், "அப்பா... உங்க பிரெண்ட் எப்படி இந்த பொண்ணை மாயமா கண்ணுக்கு தெரியாம பண்ணினார்?" என்று கேட்டார் தனஞ்செயன்.
 
    அவருக்கு இந்த ஒன்று தான் உறுத்தியது. அதை தவிர அனைத்தும் நம்புவதாக தோன்றியது.
  
     இப்பவும் யாஷிதா என்ற பெண் தங்களோடு மறைந்து இருக்கின்றாளென நம்ப முடியவில்லை.

   "நான் நம்புவேன் என் பிரெண்ட் இளையமானை நான் நம்புவேன்." என்று சுப்ரமணியம் பெருமையாக பேசினார்.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்




கருத்துகள்

  1. மிக மிக அருமையாக சுவாரஸ்யமாக போகிறது கதை.

    பதிலளிநீக்கு
  2. Super super unmai therinjiduchi . Harish enna achi thatha unmaiya sollanum yashitha ku oru vali kedaikanum pavam . Sikram vali sollunga sisy

    பதிலளிநீக்கு
  3. ஏன்னா, அவர் ப்ளாக் மேஜிக் செய்றது ஹரிஸோட தாத்தாவுக்கு ஆல்ரெடி தெரிஞ்சிருக்கும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥 - 2

தீவிகை அவள்🪔 வரையானல் அவன்🔥 -3

பிரம்மனின் கிறுக்கல்கள்

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1