மர்ம நாவல் நானடா-23 (முடிவுற்றது)

  அத்தியாயம்-23    யாஷிதா அவனின் முனங்கல் கேட்டு மாடி ஹாலில் நடந்தவள் திரும்ப, வேகமாய் வந்தவன் அவளை இடித்து, அணைத்து உருண்டப் பின்னே சுதாரித்தான்.    அவள் மீது தன் தேகத்தை மொத்தமாய் சரித்திருந்தான். அந்த களோபரத்திலும் அவள் தலைக்கு முட்டுக்கொடுத்து அவள் சிரத்தை தாங்கியிருந்தது வலது கை. இடது கையோ அவளது இடையை வளைத்திருந்தது.   அவளோ சுற்றம் மறந்திருக்க, ஹரிஷின் கணம் தாளாமல் எழ முயன்றாள். ஹரிஷே வேகமாய் பதறிவிட்டு எழுந்திட, இருவருக்கும் மூச்சு வாங்கியது.    "நான் என்ன இன்னும் இன்விசிபிளாவா இருக்கேன்." என்று யாஷிதா கேட்க, "இ.. இ..ல்லை என்று தலையாட்டவும் அவனது முகமாறுதல் அவளுக்குள் ரசிப்பை ஏற்படுத்த, அளவிடாத காதலை நெஞ்சில் எடுத்துரைத்தது.    இதற்கு மேல் மனக்கடலில் காதல், கடலணை  உடையவும், யாஷிதா அவன் காலரை பற்றி இழுத்து, அலமாரி கதவை திறந்து, உள்ளே நுழைந்து சாற்றினாள்.      "உன்கிட்ட நிறைய பேசணும். என்னால இதுக்கு மேல மறைக்க முடியலை.     ஏதாவது கிறுக்குதனமா பேசிட்டு பிறகு நீ பின்வாங்கிட்டா? அதனால கேட்கவே தயக்கமாயிருக்கு. ஆனா கேட்காமலும் இங்கிருந்து போக முடியலை. நானும் இந்த பேச

மர்ம நாவல் நானடா-7

 அத்தியாயம்-7

   உயிரை பிடித்து கொண்டு ஓடினாள் என்று பேச்சிற்கு கூறுவது யாஷிதாவின் வாழ்வில் இந்த நொடிக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.

       ஒரு பெரிய மரத்திற்கு பின்னால் ஒளிந்து மூச்சு வாங்க நின்றாள்.
   அலைப்பேசியில் இளையமான் என்ற எண்ணிலிருந்து கால் பதிவு வரவும் ஏற்றாள்.

   "என்னை... என்னை இங்க துரத்தறாங்க" என்று மூச்சு வாங்க கூறவும் "என்னம்மா ஆச்சு? எங்கயிருக்க?" என்று பதறியவரிடம் அவள் பார்த்த விஷயத்தை ஒன்றுவிடாமல் சுருக்கமாக உரைத்தாள்.

     கலிவரதன் என்பவன் ராஜ்கரண் என்ற போலீஸை அடித்து கொலை செய்து இருக்கின்றான். காரணம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டினை பதுக்கி வைத்து அதை இடமாற்றம் செய்யும் போது ராஜ்கரண் பார்த்து விட்டதாலும், கலிவரதன் செய்த கொலையையும் ராஜ்கரண் நேரில் கண்டதாக அவனையும் கொலை செய்ததாக கூறினாள். யாஷிதாவுக்கு அரசியல்வாதி என்ற வகையில் தெரிந்துவிட்டது. மற்றவிவரம் யாஷிதா அறிந்ததில்லை. யாரை கொலை செய்தானென்று தெரியாது. பணம் எங்கே பதுக்கி வைத்தானென்றும் தெரியாது.

இளையமானோ "அச்சோ... இப்ப எங்கயிருக்க சொல்லு நான் உடனே வர்றேன்" என்றவரிடம், "இல்லை நீங்க வராதிங்க... நான் உடனே அங்க வர்றேன். நாம வேறிடம் போகணும். அங்கிருந்தா எப்படியும் என் வேலை பார்க்குற இடத்துல நான் எங்க தங்கியிருக்கேன்னு கண்டுபிடிச்சி வரலாம்.

   இங்கயிருந்து எப்படியாவது தப்பிச்சு அங்க வந்துடுவேன். இந்த போன்.. போனை நான் மறைச்சி வச்சிட்டு வர்றேன். இல்லைனா நான் மாட்டினா இதை வாங்க என்னை சாகடிக்கலாம்.

    நான் உங்களிடம் பேசாம இருந்ததுக்கு சாரி." என்றாள் அழுதுக்கொண்டு.

  இளையமானிடம் பலத்த அமைதி நடக்க, "கலிவரதன் ரொம்ப பெரிய ஆளு. நீ இங்க வாடா அம்மு. உனக்கு எந்த ஆபத்தையும் நான் நெருங்க விடமாட்டேன்." என்று வாக்கு தந்தார்.

   யாஷிதாவும் போனை துண்டித்து கண்ணீரை சிந்தினாள்.

    சாகும் போது மற்றவர்களின் அன்பை நிராகரித்து நடந்தது தற்போது முள்ளாய் நெருடியது.

    இன்னமும் சற்று ரோட்டிற்கு இந்த புறம் தன்னை தேடி வரவில்லை அதனால் உடனடியாக சென்று மறைந்திட துடித்தாள்.

    யாஷிதா அந்த புதரில் நடந்து வந்ததும், சற்று தள்ளி குறுக்கு பாதை தெரிய நடந்தாள்.

    அங்கு ஒரு ஐய்யனார் போல சிலை கண்ணில் தெரிந்தது. சரியாக நேரம் பன்னிரெண்டு நெருங்க அந்த சிலையின் எதிர்புறம் நிறைய  சின்னசிறிதாக கற்கள் மட்டும்  இருந்தது. கற்களின் பக்கவாட்டில் வலது புறம் மைல் கற்கள் இருக்க அங்கே குழித்தோண்டினாள்.

   போனை எடுத்து தோழி ஹாசினி கொடுத்த கேக் டப்பாவிலிருந்த கேக்கை விசிறிவிட்டு, அதில் அவள் கழுத்திலிருந்த ஸ்கார்பை கொண்டு துடைத்தாள்.

    பின்னர் போனை பத்திரமாய் சுவிட்ச் ஆப் செய்து அந்த கேக் கொண்டு வந்த ஸ்வீட் பாக்ஸில் போட்டு ரப்பரை மாட்டி புதைத்தாள்.

    வேகமாய் மண்ணை தூவிவிட்டு சுற்றிமுற்றி மணலை சாதாரணமாய் பிம்பம் காட்டி விட்டு செடிகளின் இலைகளை மேலே தூவினாள்.

    "அண்ண... இங்கயொரு கோவில் சிலையிருக்கு. கோவிலுக்குள்ள ஒளிஞ்சிட்டு இருப்பாளோ" என்றவன் குரலில் திடுக்கிட்டவளாய் எழுந்து சத்தமின்றி பதுங்க ஆரம்பித்தாள். கோவிலுக்குள் இருவர் செல்ல வெளியே ஒருவர் போன் டார்ச்சை தொலை தூரம்வரை காட்டி பெண்ணவளை தேடினான்.
 
     யாஷிதா இதற்கு மேல் மறைந்தால் அகப்படுவோமென ஓட்டமெடுத்தாள்.

  ஏதோ அசைவு தெரிய வெளியே நின்றிருந்தவன் மட்டும் ஓசை வந்த இடம் தேடி ஓடி தூரத்தினான்.   

    யாஷிதாவை ஒருவன் பின் தொடர, தங்கள் வீட்டின் பின் கேட்டில் வந்து சேர்ந்தாள். முன் வாசலில் இளையமான் கைத்தடியை பிடித்தபடி பதற்றமாய் நின்றிருந்தார். அவருக்கு கலிவரதன் பெயர் மட்டும் அல்ல மற்ற ஜாதகமும் அத்துபடி.

     "அம்மாடி அம்மு..." என்று குரல் கொடுக்க சுற்றி முற்றி பார்த்துவிட்டு, "வீட்டுக்குள்ள போங்க" என்று கார்டியனை தள்ளிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.

  "இளையமான் கதவை பூட்டி இருந்தார். நான் வீட்டுக்குள்ள கதவை திறந்து போறதை ஒருத்தன் பார்த்துட்டான்.

   வேகமா பின்னாடியே வந்தான். இளையமானிடம் வேறெதும் பேசறதுக்கு கூட நேரமில்லை.

   என்னை கொன்னுடுவாங்கனு நான் புலம்பிட்டு இருந்தேன்.

   என்னை மீறி யாரையும் உன்னை நெருங்க விடமாட்டேன்னு இதோ இந்த புக்கை எடுத்து ஏதோ மந்திரம் போல செய்தார்.

    நீ யாருக்கும் தெரிய மாட்ட, பாதுகாப்பான வீட்ல இருப்ப, ரொம்ப பயப்படாதே... இந்த தடியன்கள் போனதும் உன்னை திரும்ப அழைச்சிடுவேன்னு வாக்கு தந்து நம்பிக்கையா பேசினார்.

   என்னை ஒரு ரூம்ல போட்டு மந்திரம் உச்சரிகாக அடுத்த செகண்ட் இங்க வந்துட்டேன். எப்படி வந்தேன்? இளையமான் என்ன பண்ணினார்? ஒன்னும் தெரியாது. ஏதோ மர்மமா இருக்கு.

   இங்க வந்து ஒரு மாசம் ஆகுது. பக்கத்துல பில்டிங் கட்டறவங்களுக்காக ஒருத்தர் டீ எடுத்துட்டு வருவார். பசிச்சா அதை தான் குடிப்பேன். அதோட இந்த தெருவுல போறவர்ற உணவுகளா பச்சை காய்கறி, பழங்கள் ஐஸ், டீ, மக்காசோளம் இப்படி எது வருதோ அதை போய் திருடி திண்ணுட்டு இருப்பேன்.

     என்னால இந்த வீட்டை தவிர்த்து எங்கயும் போக முடியலை. சப்போஸ் அப்படி போக முடிஞ்சாவது நான் மேகமலைக்கு போய் இளையமானுக்கு என்னாச்சுனு தெரிஞ்சிருப்பேன். அப்படியில்லைனா ஹாசினியிடம் பேச முயற்சி பண்ணியிருப்பேன்.

    எங்கயும் போகாத நிலையால இங்கயே கைதி மாதிரி... இல்லை பேய் மாதிரி சுத்தறேன்.
  என்னை காப்பாற்று ஹரிஷ்...  என் நார்மல் லைப்பா வாழ எனக்கு உதவி பண்ணு" என்று அழுதாள்.

   ஹரிஷ் மேனி சிலிர்க்க ஆடியிருந்தான். அவள் கூறிய கதையை கேட்டு அல்ல. தன்னை அணைத்திருக்கின்றாளென்று அவனால் உணர முடிந்தது. இளைஞன் அவன் பெண்ணவள் அணைப்பை உணரவும் ஆடிப்போயிருந்தான்.

   உறக்கத்திலிருக்கும் போது ஹரிஷ் கைகள் அங்கும் இங்கும் தழுவி அணைத்ததை யாஷிதா அறிந்தவள். ஆனால் ஹரிஷிற்கு அது போல நிகழ்ந்ததே தெரியாதே.

    இதுவே முதல் முறை ஸ்பரிசம் உணர்கின்றான்.

   "ஹரிஷ்... ஹரிஷ்... நான் சொன்னதை நம்பினியா இல்லையா. என்னை காப்பாத்துவியா?" என்று உலுக்கவும் பெண்ணவளின் உருவமற்ற மென்கைகள் அவள் தீண்டலால் உணரவும் திக்குமுக்காடி போனான்.

   ஹரிஷ் இதுவரை கூட படிக்கும் பெண்ணிடம் கூட இத்தனை நெருக்கமாய் நின்று கைகள் தீண்டியதில்லை.
   முதல் முறையாக பெண் அணைப்பதும் தீண்டுவதும். வயது தீயில் தகித்தவனின் மீது பெட்ரோல் ஊற்றிய பெருமை யாஷிதாவையே சேரும்.

   "யா..யா...யாஷிதா... இப்ப நான் என்ன பண்ணணும்னு சொல்லு உதவி பண்ணறேன். அதோட அந்த வீடியோல என்னயிருக்குனும் சொல்லு." என்றதும் யாஷிதா நிதானமடைந்து யோசித்துயிருக்க வேண்டும். அதனால் அவள் கைகள் தானாக லேசாக ஹரிஷிடமிருந்து தள்ளி சென்றதை உணர்ந்தான்.

    "எனக்கு எப்படி நீ உதவி பண்ணுவனு தெரியலை ஹரிஷ்.

   மேகமலைக்கு நீ போய் இளையமானை சந்திச்சு பாரு. அவர்... அவர்.. அவர் உயிரோட இருப்பாரா?" என்று முகம் பொத்தி அழுதாள்.

   விசும்பல் சத்தம் மட்டும் கேட்க எங்கனம் சமாதானம் செய்வானவன்.

   "யாஷிதா... வருத்தப்படாதே. இளையமான் என்ன செய்தார்னு தெரியலையே... நான் மேகமலைக்கு போய் பார்க்கறேன். இப்ப தூங்கு. கலிவரதன் வெள்ளை வேஷ்டி கொண்டவன் யாருனு பார்க்கறேன்.." என்று கூறினான்.

    மூக்குறியும் சப்தம் கேட்டது அதில் அவள் கண்ணை துடைப்பதை ஆத்மார்த்தமாய் யூகித்தான்.

    மெத்தையில் படுக்கும் நேரம் நேற்று தன்னை அணைத்து உறங்கியது பேய் அல்ல பெண்ணா? என்ற ரீதியில் சிந்தனைக்குள் விரிந்தது.

     நேரம் பார்த்து மெத்தையில் படுத்ததும், "நீ.. நீயும் பெட்ல தான் இருக்கியா?" என்று தயக்கத்தோடு கேட்டான்.

   "நேத்து வரை... இப்ப இல்லை" என்றாள்.

  "ஏன்.. உனக்கு தான் தரையில படுத்து பழக்கமில்லையே." என்று கேட்டு முடிக்க, "நீ வருவதற்கு முன்ன முழுக்க தரையில தானே தூங்குவேன். அப்பதிலருந்து பழகிடுச்சு." என்று கூறவும் ஹரிஷ் ஏதோ ஏமாற்றம் கொண்டவனாய் தலையணையை கட்டிக்கொண்டான்.

   யாஷிதாவோ "தரையிலயே படுத்துப்பேன்னு சொல்ல முடியாது." என்று கூறியவளிடம் "என்ன சொல்ல வர்ற?" என்று குழப்பமாய்க் கேட்டான்.

    "ஒன்னும் சொல்ல வரலை... எதுனாலும் உன் பிரெண்ட்ஸிடம் சொல்லி உதவி கேட்காதே. அது போதும் நீ தூங்கு. மேகமலைக்கு எப்ப போற?" என்று தன் காரியத்தை கேட்டு நின்றாள்.
   
   "இப்ப தானே சொல்லிருக்க. யோசிக்கறேன்... எப்படியும் வேலை வெட்டி இல்லை. டூர் போறேன்னு சொல்லிட்டு போகணும். இந்த போக வர்ற செலவு நேரமும் ஆகும். அப்பாவிடம் தான் முன்ன போய் நிற்கணும். ஆல்ரெடி அப்பாவுக்கும் எனக்கும் ஒத்து வரலை. அவர் என்னை திட்டிட்டே இருப்பார்." என்று கவலைகளை அடுக்கினான்.

    "ஆமாமா.. நீ ரொம்ப நல்லவன் பாரு. என்னிடமே அங்கிளை பத்தி தப்பா பேசாதே. அவர் சரியா தான் திட்டுறார்.

   நீ வீட்டுக்கு வர்றப்பவே டெம்போ டிரைவர் பேசியதை கேட்டேன்.

   டிரைவரிடம் என்ன சண்டை போட்ட? இதுல ஆரனோட ஆடிட்டு இருக்க.
   இதுல.. சார் தண்ணி அடிச்சிட்டு வீட்டுக்கு வந்து ஒன்பது மணிக்கு எழுந்துப்பியாம். அங்கிள் திட்டாம இருக்கணும்னா என்ன லாஜிக்?

    ஆன்ட்டியும் தாத்தாவும் உன்னோட எதிர்காலம் ப்ரைட்டா மாறணும்னு ஆசையா இருக்காங்க." என்றதும் ஹரிஷின் குரல் உள்ளுக்குள் சென்றது.

   "நான் என்ன வச்சிட்டே வஞ்சகம் பண்ணறேன்." என்றவன் திரும்பி கொண்டான்.

   யாஷிதா அவன் திரும்பவும் நமுட்டு சிரிப்பொன்றை உதிர்த்து காலாட்டி படுத்தாள்.

   சிறிது நேரம் கடந்து யாஷிதா நிம்மதியாய் உறங்கினாள்.
  ஹரிஷ் எழுந்தவன் கால் மணி நேரம் கடந்ததும் "யாஷிதா... யாஷிதா... தூங்கிட்டியா?" என்றான்.

  நிசப்தமாக இருந்து பதில் வராமல் போகவும், 'என்னை நம்பி என்னிடம் இதை விவரிச்சிருக்கா? நான் இப்ப எப்படி இதை கையாள போறேன்.

   நேர்ல ஒரு பொண்ணுக்கு உதவுவது வேற... அம்மாவிடம் இவளை காட்டி ஊருக்கு போகலாம்.  இவ கண்ணுக்கே தெரியாம இருக்கா. நான் என்னனு சொல்லி இங்கிருந்து கிளம்பி மேகமலைக்கு போவேன்.

    இதுவரை என் லைப்ல எந்த விதமான ஆக்ஷன் சீன் இல்லை. நானா சந்தோஷமா வாழறேன்.

  நல்ல வேலை இல்லை, எனக்குனு ஒரு சுய அறிமுகம் கிடையாது. ஆனாலும் என்னை நம்பி ஒருத்தி உதவி கேட்டுட்டா... நான் இந்த உதவியை செய்து கொடுக்கணும்.

   கலிவரதன் யாரு என்னனு டீடெய்ல் பார்த்துடணும்.

   இங்கிருந்து எப்படியாவது அப்பா அம்மாவிடம் சொல்லிட்டு மேகமலை போய் சுட்டிஸ் உலகம் நடத்துற ஹாசினியை சந்திச்சு அங்கிருந்து இளையமானை தேடி போய் பார்த்தா வேலை முடியும்.

   இவளையே மாயமா மறைய வச்சவர் நிச்சயம் அவரையும் தற்காத்துட்டு இருப்பார். ஆனா ஏன் யாஷிதாவை பார்க்க வரலை. ஒரு வேளை அந்த இளையமான் இறந்துட்டுயிருந்தா யாஷிதா நிலை?" என்றவன் அந்த புத்தகத்தை கண்டான்.

   பூட்டு போட்டுயிருந்த அந்த புத்தகம் அவன் பார்வைக்கு மர்ம நாவலாக தோன்றியது.

   இவளை பற்றிய மர்மங்கள் விடுபடாமலே போய்விட்டால்....?!
  
    நினைக்க நினைக்க உறக்கம் தொலைத்தவனாய் நின்றான் ஹரிஷ்.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்.




கருத்துகள்

  1. உருவமற்றவள்
    உதவி கோருகிறாள்.....அவளை
    உணர முடிந்தவன்
    உள்ளம் நெகிழ்ந்தது... ஹரிஷ்
    யாஷித்தாவை காப்பாற்றும் முயற்சியில் சிந்திக்க.....
    காத்திருப்போம் நாமும்....

    பதிலளிநீக்கு
  2. இப்ப அந்த இளையமான் உயிரோட இருக்காரா, இல்லையான்னு தெரியலையே..?

    பதிலளிநீக்கு
  3. Appo illayaman enna aanaru uyir oda irundha kandipa ival ah kootitu poi iruparu oru vela andha rowdies ada chi ethuvum.vachi irupagalo

    பதிலளிநீக்கு
  4. ஹரீஷ் யாஷித்தா நிலைமை பரிதாபத்துக்கு உரியது தான். ஆனால் ஹரீஷ் ஹீரோ அல்லவா.......என்ன செய்கிறான் என்று பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥 - 2

தீவிகை அவள்🪔 வரையானல் அவன்🔥 -3

பிரம்மனின் கிறுக்கல்கள்

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1