மர்ம நாவல் நானடா-23 (முடிவுற்றது)

  அத்தியாயம்-23    யாஷிதா அவனின் முனங்கல் கேட்டு மாடி ஹாலில் நடந்தவள் திரும்ப, வேகமாய் வந்தவன் அவளை இடித்து, அணைத்து உருண்டப் பின்னே சுதாரித்தான்.    அவள் மீது தன் தேகத்தை மொத்தமாய் சரித்திருந்தான். அந்த களோபரத்திலும் அவள் தலைக்கு முட்டுக்கொடுத்து அவள் சிரத்தை தாங்கியிருந்தது வலது கை. இடது கையோ அவளது இடையை வளைத்திருந்தது.   அவளோ சுற்றம் மறந்திருக்க, ஹரிஷின் கணம் தாளாமல் எழ முயன்றாள். ஹரிஷே வேகமாய் பதறிவிட்டு எழுந்திட, இருவருக்கும் மூச்சு வாங்கியது.    "நான் என்ன இன்னும் இன்விசிபிளாவா இருக்கேன்." என்று யாஷிதா கேட்க, "இ.. இ..ல்லை என்று தலையாட்டவும் அவனது முகமாறுதல் அவளுக்குள் ரசிப்பை ஏற்படுத்த, அளவிடாத காதலை நெஞ்சில் எடுத்துரைத்தது.    இதற்கு மேல் மனக்கடலில் காதல், கடலணை  உடையவும், யாஷிதா அவன் காலரை பற்றி இழுத்து, அலமாரி கதவை திறந்து, உள்ளே நுழைந்து சாற்றினாள்.      "உன்கிட்ட நிறைய பேசணும். என்னால இதுக்கு மேல மறைக்க முடியலை.     ஏதாவது கிறுக்குதனமா பேசிட்டு பிறகு நீ பின்வாங்கிட்டா? அதனால கேட்கவே தயக்கமாயிருக்கு. ஆனா கேட்காமலும் இங்கிருந்து போக முடியலை. நானும் இந்த பேச

மர்ம நாவல் நானடா-9

 அத்தியாயம்-9

   முதுகுப்பையை மாட்டி தனஞ்செயன் முன் நின்றான் ஹரிஷ்.

    "அவ்ளோ சொல்லியும் வெட்டியா இருக்கறவனை டூருக்கு அனுப்பி வைக்கிறிங்க. என்னவோ பண்ணுங்க. இதான் கடைசி... இதுக்கு மேல சல்லி பைசா என்னிடம் கேட்கட்டும்" என்று பணத்தை கோபமாக கொடுத்துவிட்டு அகன்றார் தனஞ்செயன்.

  காஞ்சனாவோ "அவ்ளோ சொல்லியும் இந்த டூர் முக்கியமா ஹரிஷ். இரண்டு பேர் ஊர்சுத்தி பார்க்க?" என்றதும் "அம்மா... போயிட்டு வந்து பேசறேன் மா." என்று கூறி அகன்றான்.

   செல்லும் போது மேல் தளத்தில் மாடியை கவனிக்க, "நான் இங்க தான் இருக்கேன்" என்று காதுமடலை உரசியது யாஷிதா குரல்.

   சுப்ரமணிய தாத்தா கைசெலவுக்கு பணத்தை எடுத்து வர சென்றிருக்க, "யாஷி... கெட்டில் ரூம்ல இருக்கு. தண்ணி பிடிச்சி பால் பவுடர் கலந்து காபி குடி. சக்கரை காபிபவுடர், ஸ்நாக்ஸ், பிரட்-ஜாம், கப் மேகி, சாக்லேட் இப்படி நொறுக்குதீணி எல்லாம் கப்போர்டுல போட்டு பூட்டி வச்சிருக்கேன். சாவி உன் புக் இருக்குற இடத்துல இருக்கு. இரண்டு நாள் தாங்கும். அம்மாவிடமோ தாத்தா அப்பாவிடம் உன் சித்து வேலையெல்லாம் காட்டி எதுவும் பயமுறுத்திடாதே. நான் இளையமானோட வந்துடறேன்." என்று நம்பிக்கையாக பேசியவன் அதிர்ந்து போனான்.

     யாஷிதா அணைத்திருப்பது உணர ஆரம்பித்தான். அவள் கைகள் தோளை அணைத்திருக்க, தோள்வரை புரண்ட கூந்தலில் சில கன்னத்தில் தாடியோடு ஓட்டியது. யாஷிதா ஒல்லி தேகமில்லை. அளவான முன்னழகு அவன் நெஞ்சில் பதிந்திருக்க கைகள் அவளை அணைத்துக்கொள்ள துடித்தது.

  இதையெல்லாம் ஸ்பரிசத்தில் உணர்ந்தாலும்  சிலையாக நின்றிருந்தான். "ஐ மிஸ் யூ ஹரிஷ். நீ திரும்பி வர்ற வரை என் உயிர் துடிச்சிட்டு இருக்கோம். நான் பயந்துட்டே தான் அனுப்பறேன். எதுவும் தெரிய முடியாத இக்கட்டுனா, நீ திரும்பி வந்துடு. நான் இப்படியே கூட வாழ்ந்து செத்துடறேன்" என்று கலங்கிய குரலில் யாஷிதா பேசுவதை கேட்டு, "யாஷி... தாத்தா" என்றதும் அணைப்பை தளர்த்தி அகன்றாள்.

"வயிற்றுக்கு வஞ்சனை பண்ணாத. நல்லா சாப்பிடு" என்று பணத்தை சட்டை பாக்கெட்டில் திணித்தார்.

    சுப்ரமணிய தாத்தாவை அணைத்து விடுவித்தான்.

   ரஞ்சனோ காரில் பாட்டு கேட்டு ஹரிஷிற்காக காத்திருந்தான்.
  
    ஹரிஷ் காரில் ஏறவும் தாத்தா கையசைத்து விடைத்தந்தார்.

   ஹரிஷ் சென்றதும் அவனை பின் தொடர்ந்து ஒரு கார் சென்றது. மற்றொரு காரில் இரண்டு அடியாட்கள் அமர்ந்து வீட்டை கவனித்தார்கள்.

    ஹரிஷ் சென்றதும் சுப்ரமணியதிடம் "எங்கப்பா போறான். இதுநாள் வரை கிரிக்கெட் சினிமா தியேட்டர் பீச்னு சுத்திட்டு இருந்தான். இதுயென்ன புது பழக்கம் டூருக்கு. அதுவும் விமல் இல்லாம. இவங்க இரண்டு பேர் மட்டும். எனக்கு எதுவும் சரியாபடலைப்பா. மனசுக்கு சஞ்சலமாவே இருக்கு" என்று தனஞ்செயன் நவிலவும் அதையே காஞ்சனாவும் ஆமோதித்தார்.

     சுப்ரமணிய தாத்தாவோ "எத்தனையோ விதத்துல வேற வேற முறையில கேட்டுட்டேன். எங்க போறேன்னு சொல்லலை, எதுக்குனும் சொல்லலை.

   என்னால ரொம்ப வற்புருத்தி கேட்கவும் முடியலை தனஞ்செயன்.

  பேப்பரை பாரு.... டிவியை பாரு... இந்த காலத்து பசங்களிடம் அதட்டி கேட்டா, வீட்டை விட்டு ஓடிடறாங்க.

    நேத்து பேப்பர்ல எட்டாவது படிக்கிறவன் அம்மா அதட்டி திட்டவும் கோபத்துல ஊண்டியல் காசை எடுத்துட்டு மதுரைக்கு போற பஸ்ல ஏறி உட்கார்ந்துட்டான். ஒரு வாரம் கழிச்சு போலீஸ் கம்பிளைன் பண்ணி அழுது, தவிச்சி அந்த பையனே போன் பண்ணியிருக்கான். அதுக்கு பிறகு மதுரையில ஒரு உறவினரிடம் கோவில்ல போய் பையனை மீட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்காங்க.

    நேத்து டிவில.. வேலைக்கு போகலைனு திட்டிட்டே இருந்த வீட்ல ஒருத்தன் தூக்குல தொங்கிட்டான்.

  இப்ப உயிரோட இல்லை... பசங்கனு இல்லை... பொண்ணுங்களும் எங்க போனாங்க ஏது போனாங்கனு தெரியாத அளவுக்கு தான் இந்த உலகம் இயங்குது. எத்தனை பேர் பெத்தவங்களை விட்டுட்டு, கோபத்துல எத்தனை குழந்தைங்க தனியா வாழுதோ?!

   அதுல ஒருத்தரா நம்ம ஹரிஷ் இருக்க வேண்டாம். என் காலம் முடியறவரை என் பேரன் சந்தோஷமா இருக்கட்டும். என் காலத்துக்கு பிறகு அவனை திட்டுவிங்களோ என்னவோ உங்க பாடு." என்று வருத்தமாய் சுப்ரமணியம் உரைத்து தனியறைக்கு சென்றார்.

    சுப்ரமணியம் பேசியதை ஆத்மார்த்தமாய் உள்வாங்கி காஞ்சனாவோ கலங்கிவிட்டார்.

   பூஜையறையின் முன் வந்து, "என் பையனுக்கு நல்லவழி காட்டு. அவனோட வாழ்க்கையில அவன் பணக்காரனோ லட்சாதிபதியோ இருக்க வேண்டாம்.

சந்தோஷமா ஒரு வேலை, அவனுக்குனு அவனுக்கு பிடிச்ச பொண்ணு குழந்தை குட்டினு சாதாரண வாழ்க்கையை நிறைவா தந்தாலே போதும்." என்று குலதெய்வ புகைப்பட சட்டகம் முன் வேண்டி ஒரு வெள்ளை
கைக்குட்டையில் மஞ்சளில் போட்டு எடுத்து பத்து ரூபாய் நாணயத்தை முடிச்சிட்டு குங்குமம் வைத்தபடி கடவுள் சட்டகம் முன் வைத்து வழிபட்டார்.
 
    தனஞ்செயனோ தந்தை பேச்சிலும் மனைவி செய்கையிலும் ஏதோ ஒரு அழுத்தத்தை உணர்ந்து அமைதியாக சென்றார்.

   அவருக்கு மட்டும் ஹரிஷை திட்ட ஆசையா என்ன? ரிட்டயர்மெண்ட் வயது நெருங்குகிறது. பெரியவனுக்கு இருபத்தியேழு வயதில் திருமணம் முடித்து இதோ முப்பத்திநாலு வயதில் ஒரு குழந்தை ஆரனை பெற்றிருக்கின்றான்.

    ஹரிஷ் இரண்டாவது குழந்தை ஒன்பது வருடம் கழித்து பிறந்தவன். செல்லக்குழந்தையாக வளர்ந்து ஆளானவனே.

   இன்னமும் இதே போல வழிநடத்தினால்... தந்தை போல அவர் நீண்ட நாட்கள் வாழ்வாரென்று கேள்விக்குறியே. இந்த காலம் வேறு தான்.

    தனஞ்செயன் ரிட்டயர்மெண்ட் வாங்கும் முன் ஹரிஷை ஒரு வேலையில் நல்ல சம்பளத்தில் காண ஆசைக்கொண்டார்.

   வெகு சில மக்களின் கனவுகளும் ஆசைகளும் மிதமிஞ்சி போனால் நல்ல வேலை நிறைவான குடும்பம் ஒரளவு வசதி அதை தான் ஹரிஷ் விஷயத்தில் தனஞ்செயன் எதிர்பார்த்திருப்பது.
 
    ஹரிஷ் அதை தாண்டி மர்மத்தின் முடிச்சை அவிழ்க்க சாதாரணமாக சென்றதை அவனுமே அறிந்ததில்லை.

       யாஷிதா உறைந்தவளாய் இருந்தாள். இளையமானை விடுத்து தானும் பிரிந்து தான் இருக்கின்றோம். அவருக்கு என்ன வருத்தங்கள் மனதை வதைத்ததோ என்று கண்ணீர் வழிந்தது. அதை துடைக்க தான் ஹரிஷும் இல்லை.

   ஹரிஷ் காரோட்டியபடி வில்லங்கத்தை விலைக்கு வாங்க பயணித்தான்.

   "மாப்பி.... காதலிச்சதா சொல்லறியே அந்த பொண்ணு பெயர் என்ன மாப்பி?" என்று துருவ ஆரம்பித்தான்.

    என்ன பெயர் கூறுவதென்று தயங்கியவன் யாஷிதா பெயரை தவிர்த்து ஒரு பெண்ணின் பெயரும் மண்டைக்குள் ஓடவில்லை.

   "யாஷிதா டா. வேற நாடு." என்று கூறவும், "வேற நாடா? எந்த நாடு? அப்ப மேகமலைக்கு ஏன் போற?" என்று மீண்டும் ரஞ்சன் துருவினான்.
  
   "டேய்.... அவ மேகமலைக்கு வந்திருப்பதா தெரியும். நேர்ல பார்க்கலாம்னு போறேன். அவ்ளோ தான் டா. சும்மா வர்றியா" என்று அதட்டினான்.

   "ஏன் மச்சி விமலை கழட்டிவிட்ட?" என்று கேட்டதற்கு "சொல்லறேன்.. சொல்லறேன். அங்க போனதுக்கு பிறகு சொல்லறேன்." என்று காரை விரைவுப்படுத்தினான்.

   தனக்கு பின்னால் தன்னை தொடர்ந்து வந்த காரை அவன் கவனிக்கவில்லை.

    ஹரிஷ் செல்லும் இடத்தை தொலைப்பேசி வாயிலாக அப்டேட் செய்தான் அவன்.

   "அருள்... அந்த பொண்ணு யாஷிதா இப்பவரை எங்கனு தெரியலை. அந்த ரூம்ல போய் ஆளை காணோம். இடத்தை சல்லடை போட்டு பார்த்தாச்சு. சுரங்க பாதையோ, மறைவான கதவோ, எதுவுமே அங்கயில்லை. கண்ணுல மண்ணை தூவிட்டு எங்க ஓடினாளோ ஓடுகாலி.

    ஒரே ஆறுதல் இப்ப வரை எந்த விதத்திலயும் என்னை பத்தி நியூஸ் வரலை. அவ பயந்துட்டு கொஞ்ச நாள் கழிச்சி வெளியே வருவானு பார்த்தா அதுவுமில்லை. அந்த நாய் எங்கப்போய் தொலைஞ்சதோ?   

    ஏதோ இப்ப தான் அந்த வீட்டில் இருந்த பையன் மேகமலைக்கு போறான். அவனை விடாம துரத்தி பிடி. அந்த பொண்ணு எங்கயிருந்தாலும் தூக்கிடு. இந்த இடைப்பட்ட நாள்ல என்னை ஒவ்வொரு நிமிஷமும் பதட்டத்துலயே வச்சிட்டு இருக்கறவளை சிதைத்து சாகடிக்கணும்" என்று ஆவேசமாய் பேசினான் கலிவரதன். 

   அருள் என்ற கைத்தடியோ "அதெல்லாம் பிடிச்சிடலாம்யா. அநேகமா அவளோட பாய் பிரெண்ட் தான் இந்த ஹரிஷா இருப்பான்." என்று யூகித்து பேசினார்கள்.

     குறுட்டாம் போக்கில் ஒரு கதை அதுவாக யாஷிதா ஹரிஷை நகர்த்தியது.

   ஹரிஷ் போனில் குகூள் மேப்பில் பத்து மணி நேரப்பயணம் என்று காட்டியது. ஆனால் தற்போது தான் செங்கல்பட்டை தாண்டினான்.

   இன்னமும் திருச்சி விழுப்புரம் திண்டுக்கல் வத்தலைக்குண்டு என்று கடக்க வேண்டும். அதையும் தாண்டி சென்றாக வேண்டியது.

  ஹரிஷ் லேசாய் துவள ஆரம்பித்தான். ரஞ்சனிடம் வண்டியை ஓட்ட கொடுத்தான்.

    அசதியாக தோன்றினால் ஜூஸும் டீயும் என்று வயிற்றை நிரப்பி, காலார நடந்து சற்று சோம்பலை நீக்கி பயணத்தை துவங்கினான்.

     இங்கேயாவது பரவாயில்லை மேகமலையில் அதிக போக்குவரத்து இல்லையென்று அறிந்ததால் பழக்கமற்ற இடத்தில் காரை எப்படி ஓட்டுவதென்ற மலைப்பு இப்பொழுதே அவனை மலைக்க வைத்தது.

    அந்த எண்ணங்கள் மனதில் எழும் நேரமெல்லாம் யாஷிதா அணைப்பை நெஞ்சுக்குள் மனகண்ணில் கொண்டு வருவான்.

    கடைக்கண் பார்வை தன்னில் கண்ணியவள் காட்டினாலே ஆண்மகன் சிலிர்த்து கொண்டு செய்யயியலாத காரியத்தை கூட செய்யும் வல்லமை பெற்று விடுவான். பெண்ணவளின் அணைப்பு அவனின் சோம்பலையும் மலைப்பையும் ஓடவைத்தது.

   ரஞ்சனோ யாஷிதா என்ற பெயரை போட்டு முகநூலில் பெண்ணவளை தேடினான்.
 
  "ஏன் மாப்பி பேஸ் புக்ல யாஷிதானு எவளும் இல்லையேடா. நீ எவளை விரும்பற? ஒரு வேளை பெயரை மாத்தி வச்சிருக்காளோ? யாஷிதானு போட்டா இதோ இந்த மூஞ்சிங்களா வருது." என்று போனை ஹரிஷ் முன் காட்டினான்.

   "டேய்... அதுல எவளும் இல்லை. சும்மா அவளை பத்தி தேடாதே. அவளை நேர்ல பார்த்து சொல்லறேன்." என்று கடுப்பில் மொழிந்தான்.

   "டேய்.. யாஷிதா பெயர் வச்ச ஃபிகர் எல்லாமே நல்லாயிருக்காங்க." என்று வரிசையாக ஹரிஷ் சொன்னதையும் தாண்டி அந்த பெயர் கொண்ட பெண்களின் டிபியை பார்த்து வந்தான்.

    மதியவேளை ஆரம்பிக்கவும் உணவு விடுதியில் நிறுத்தி பிரியாணியை ஆர்டர் கொடுத்தான். கூடவே சிக்கன் வறுவலும் மீன் பொரிச்சதும் என்று ஆர்டர் செய்து ருசிக்க, "ஹரிஷ்... மேகமலையில எங்க தங்கப்போறோம்" என்று கேட்டான்.

    ஹரிஷோ "முதல்ல போய் சேருவோம்டா மத்ததை அப்பறம் பார்க்கலாம்." என்று நிதானமாக ஹோட்டலை வெறித்தான்.

    யாஷிதா சொன்ன 'ஜிம்பாடி தேகம், அரக்கன் போன்றதொரு உயரம், ஒரே விதமான ஆடைகள் என்று கூறியது தற்போது அவனுக்கு பின்னாலிருந்த கோஷ்டிக்கு பொருந்திப்போக, 'இந்த ஹல்க்(hulk) மாதிரி உருவத்துல இருக்கறவங்களை பார்த்தாலே அல்லு விடுது. இது போல தான் அவனுங்க இருப்பாங்க. நான் எல்லாம் எந்த மூலைக்கு? எதை நம்பி கிளம்பினேன்னு சத்தியமா தெரியலை. பேசாம இளையமான் இறந்துட்டார்னு சொல்லிட்டு இனி உன்னை உருவத்துல மாத்த முடியாதுனு சொல்லி தப்பிச்சிடலாம். ஆனா... என்னவோ என்னால அப்படி பொறுப்பை தட்டி விட முடியலை.' என்று மனதுக்குள் புலம்பினான்.

     அருவுருவமாக இருப்பவளை காண துடித்தது மனம். இந்த ஒன்றிற்காக இத்தனை தூர பயணமா? என்று கூட தோன்றியது.
  
    எப்படியும் அழகான ஒரு பெண்ணாக இருந்தாலும் உனக்கென்ன? என்றது அவன் இதயம்.

   "காதல் எப்படி பாடாய் படுத்துதுனு பார்றேன். சும்மாயிருந்த உன்னை சுத்தல்ல விடுது. அதான்டா காதலுக்கு மிகப்பெரிய சக்தியிருக்குனு சொல்லறாங்க. எனக்கெல்லாம் எங்க வாய்க்குது. ஹாய் சொன்னாலே ஏதோ ப்ளார்ட் பண்ணறதுக்காக மட்டும் வர்றேன்னு நினைச்சி அடுத்த செகண்ட் பிளாக் பண்ணிடறாளுங்க. அதுக்கெல்லாம் முகராசி இருக்கணும்." என்று ரஞ்சன்  வெளிப்படையாங புலம்பினான்.

   'காதலா... யாஷிதாவோடு? முகம் தெரியாதவளோடு?' என்று நகைத்தான் ஹரிஷ்.

    "பார்றேன் காதலியை பத்தி பேசினா அழகா சிரிக்கற" என்று ரஞ்சன் ஹரிஷை ஓட்டி விட்டான்.

  ஹரிஷோ ரஞ்சன் பேசுவதை தடுக்காமல் ரசித்து சிரித்தான். 

    இந்த விளையாட்டு எல்லாம் எதுவரை என்று அறியாத விதி கூடவே தான் சுற்றியது. அந்த அருள் என்ற அரக்கர்களின் கூட்டத்தோடு.

   அருளோடு நான்கு பேர் அங்கே முழுக்கோழியை ஆர்டர் செய்து வெட்டு வெட்டியபடி, யாஷிதாவை கண்டதும் அவளோடு சேர்த்து ஹரிஷை வெட்டி வீழ்த்த காத்திருந்தனர்.

-தொடரும்.
 பிரவீணா தங்கராஜ். 
    
   
 




கருத்துகள்

  1. மிக மிக அருமையாக சுவாரஸ்யமாக போகிறது கதை.

    பதிலளிநீக்கு
  2. கண்ணாலே பார்க்காத காதலிக்கே இந்த பாடு..! பார்த்திருந்தா...? ம்..
    நிரந்தரமான வேலை கிடைக்கலைன்னாலும்
    இந்த காதல் வந்து பாடாய் படுத்திறது. ஆனா, இவன் போற காரியம் ஜெயமாகுமா ?இல்லை வாலண்டன்ரியா போய் வான்டட்டா ஆகிடுவானோ.??

    CRVS or CRVS2797

    பதிலளிநீக்கு
  3. Romba payamavum interesting kavum irruku sis pavam Harish samalipana kubdarkala...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥 - 2

தீவிகை அவள்🪔 வரையானல் அவன்🔥 -3

பிரம்மனின் கிறுக்கல்கள்

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1