மர்ம நாவல் நானடா-23 (முடிவுற்றது)

  அத்தியாயம்-23    யாஷிதா அவனின் முனங்கல் கேட்டு மாடி ஹாலில் நடந்தவள் திரும்ப, வேகமாய் வந்தவன் அவளை இடித்து, அணைத்து உருண்டப் பின்னே சுதாரித்தான்.    அவள் மீது தன் தேகத்தை மொத்தமாய் சரித்திருந்தான். அந்த களோபரத்திலும் அவள் தலைக்கு முட்டுக்கொடுத்து அவள் சிரத்தை தாங்கியிருந்தது வலது கை. இடது கையோ அவளது இடையை வளைத்திருந்தது.   அவளோ சுற்றம் மறந்திருக்க, ஹரிஷின் கணம் தாளாமல் எழ முயன்றாள். ஹரிஷே வேகமாய் பதறிவிட்டு எழுந்திட, இருவருக்கும் மூச்சு வாங்கியது.    "நான் என்ன இன்னும் இன்விசிபிளாவா இருக்கேன்." என்று யாஷிதா கேட்க, "இ.. இ..ல்லை என்று தலையாட்டவும் அவனது முகமாறுதல் அவளுக்குள் ரசிப்பை ஏற்படுத்த, அளவிடாத காதலை நெஞ்சில் எடுத்துரைத்தது.    இதற்கு மேல் மனக்கடலில் காதல், கடலணை  உடையவும், யாஷிதா அவன் காலரை பற்றி இழுத்து, அலமாரி கதவை திறந்து, உள்ளே நுழைந்து சாற்றினாள்.      "உன்கிட்ட நிறைய பேசணும். என்னால இதுக்கு மேல மறைக்க முடியலை.     ஏதாவது கிறுக்குதனமா பேசிட்டு பிறகு நீ பின்வாங்கிட்டா? அதனால கேட்கவே தயக்கமாயிருக்கு. ஆனா கேட்காமலும் இங்கிருந்து போக முடியலை. நானும் இந்த பேச

மர்ம நாவல் நானடா-15

 அத்தியாயம்-15

     இளையமானுக்கு நேற்றே கலிவரதன் வந்து காச்சிமூச்சென கத்தி யாஷிதாவை பற்றி கேட்டான்.

   அவரின் அதே மௌவுனம் கண்டு சினம் துளிர்க்க, "உன் பேத்தியோட காதலன் ஹரிஷ் மேகமலைக்கு போயிருக்கான். எங்க ஆளுங்க பாலோவ் பண்ணிட்டு இருக்காங்க. எப்படியும் அவளை கண்டுபிடிச்சிட்டோம். உன் கண் முன்னவே கொன்று புதைக்கறேன் பாரு." என்று ஆங்காரமாய் கத்தினான்.

அப்பொழுதே இளையமானுக்கு ஒரு  நம்பிக்கை. எப்படியும் யாஷிதாவை அறிந்துயிருப்பானென ஊகித்தார். இதில் சுப்ரமணியமும் சேர்ந்து வந்ததில் மகிழ்ந்தார்.
   யாஷிதா இன்விசிபிள் என்றால் அதை மாற்றியது தான் என சுப்ரமணியம் அறிந்திருப்பான் என்பதே.

       சுப்ரமணியத்தை கண்டதும் "வா மணி.. நல்லாயிருக்கியா? வீடு பிடிச்சிருக்கா? உன் பையன் பெரிய பேரன் சின்னவன் நீ என்று தங்க வசதியா இருக்கா?" என்று கேட்டார் இளையமான். நாசூக்காய் கொலைகளை பற்றி பேசவேயில்லை.

    "நான் நல்லாயிருக்கேன் இளையமான். பெரிய பேரன் எங்க கூடயிருக்கான். அவன் தனிக்குடும்பம் தான். கீழே தயா-மருமக ஒர் அறை, நான் ஒர் அறை. மேல் ரூம்ல ஹரிஷ். சௌவுகரியமா இருக்கு.

    சின்ன குறை என்னனா... உன் பேத்தி யாஷிதாவை இவன் முகநூல்ல லவ் பண்ணினானாம். யாஷிதா தானடா பெயரு." என்று பேரனை கேட்க, ஆ... ஆமா தாத்தா. அப்படி தான் புக்ல இருந்து சொன்னா. ஐ மீன் பேஸ்புக்" என்று இளையமானிடம் ஆமோதிப்பாய் தெரிவித்தான்.

  இளையமானோ கண்டறிந்தவராக புன்னகை உதிர்த்தார். அப்படியென்றால் பேத்தி பற்றி உரைத்தது ஊர்ஜிதமானது. நான் தான் இப்பொழுது சரியாக தொடர்புபடுத்தி பேசி புரிய வைக்க வேண்டும்' என மேற்கண்ட பேச்சை கவனித்தார்.

   "ஆஹ்... யாஷிதா டா... என் பேரன் அவளை நேர்ல பார்க்கணும்னு தொல்லை பண்ணி மேகமலைக்கு போயிருக்கான். அங்க உன் பேத்தியில்லை. அவளை தேடி போனவனிடம் எங்கயிருக்கானு வெளியே இருக்கறவனுங்க ஒரே இம்சை.

    சொல்ல சொல்ல கேட்காம இவனை வேற இழுத்துட்டு வந்துட்டான் ஒரு தடியன்.

   உன் பேத்தி கட்டிக்க கேட்டு மறுத்துட்டா. அவ இவனிடம் பேசி சாட் பண்ணிருக்காப்பா. இப்ப அவயெங்கனு தேடறான். கொஞ்சம் அவயெங்கனு சொல்லேன்." என்று கெஞ்சினார்.

    "ஹரிஷ்... அவயெங்கனு எனக்கும் தெரியாதுப்பா." என்று உரைத்தார்.

   இம்முறை ஹரிஷ் கோபம் கொண்ட இளைஞனாக மாறி, காதலிச்சு ஏமாத்திட்டு காணாம போவா... அவளை தேடி போனா என்னை யார் யாரோ அடிச்சி கூட்டிட்டு வர்றாங்க.

  ஒரு பொண்ணை நேசித்தது குத்தமா சார்.... இந்த நெஞ்சுல அவளை தேவதை மாதிரி பீல் பண்ணி வாழ்ந்தேன் சார். வாழ்ந்தேன். ஏமாத்திட்டா..." என்று டிவைஸிலேயே கையை வைத்து அழுத்த அது பட்டென உடைந்து கீழே விழுந்தது. ஒரு நொடிக்கும் குறைவாக அதனை கவனித்த இளையமான், தன் உடையில் கேமிரா பட்டன் உள்ளதென காட்டினார். சட்டென அமைதியானால் அதற்கும் ஏதாவது கேள்வி துளைகள் பிறக்குமென, "சார் எனக்கு என்ன பண்ணுவிங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது. எனக்கு யாஷிதா வேணும். அவளை நேர்ல கொண்டு வாங்க. ப்ளிஸ்.. அவளை கொண்டு வந்திங்கன்னா எனக்கு அருள் அண்ணா மூலமா தகவல் சொல்லுங்க." என்று முறையிட்டான்.

    இளையமானோ இளைஞன் வாயிலிருந்து வந்த வார்த்தையை கண்டு முறுவல் புரிந்து "மறுபடியும் அந்த புக்ல தேடுப்பா... பேஸ்புக்ல... நீ கேட்கறதுக்கு அவ ஆன்சர் பண்ணலைனா என்னிடம் கொண்டா நான் எங்கயிருக்கனு கேட்கறேன். தாத்தாவிடம் பதில் தராம எங்கப்போவா." என்று கூறினார்.

  "புக்." என்று ஹரிஷ் வீட்டிலிருப்பதை மெல்லமாய் கேட்க, சுப்ரமணியமோ கையில் வைத்திருந்த தண்ணீர் பொத்தல் பையை தொட்டார். 

   இங்கு வரும் முன் அதையும் தண்ணீர் எடுத்து வைத்தார். குங்குமம் குமுதம் புத்தகத்தோடு அதுவும் சேர்த்து இருந்தது. தண்ணீர் பொத்தலோடு புக் எடுத்து சென்று பயணத்தில் அமரும் நேரம் வாசிப்பார். காஞ்சனா தைய்த்து கொடுத்த பை.
   
    இங்கு வரும்போதே அதை எடுத்து வந்தார். நட்ராஜ் தான் சுப்ரமணியத்தை சோதனை செய்தது. ஹரிஷ் ஒரு பக்க  புலம்பவும், தன்னை யானை தாக்கி மிரட்டிய கணத்தில் ஓடிவந்து உதவியதிலும், மேகமலையிலிருந்து அவன் அமைதியாக வந்த பழக்க தோஷத்திலும், என்பது வயதான முதியவரிடம் குமுதம் குங்குமம் பழைய டைரி போன்றதொரு புக்கும், கூடுதலாக மாத்திரை பெட்டி, கண்ணாடி வைக்கும் பெட்டி, தண்ணீர் பொத்தல் என்றிருக்க புரட்டி பார்த்து அனுப்பினான்.

    அலைப்பேசி டிவைஸ் என்று ஏதேனுமிருந்தால் அலாரம் அடித்திருக்கும். இது புத்தகம் என்பதால் அவ்வளவு தான் மதிப்பளித்து நட்ராஜ் பெரிதுபடுத்தவில்லை.

    சுப்ரமணியமோ சட்டென சிந்தித்தவராய் தன் பையை எடுத்து இளையமான் அருகே வந்து, "தண்ணி வேணுமா இளையமான். குடி" என்று புகட்டியபடி பையை சுட்டிகாட்டினார்.

   இளையமானோ இமைமூடிதிறந்து நான் பார்த்துக்கறேன் என்றார்.

   தண்ணீரை அருந்திவிட்டு, "நான் வர்றேன் இளையமான். வீட்ல பேரனை காணாம தனஞ்செயனும் காஞ்சனாவும் பயந்துயிருப்பாங்க.

   பேத்தி மனசு வச்சா... மீண்டும் சந்திக்கலாம்" என்று கட்டியணைத்து விடைப் பெறுவதாக தலையாட்டினார்.

      அவர்கள் சென்ற அடுத்த நொடி சக்கர நாற்காலியில் இருந்தவர். அந்த புக்கை எடுத்தார் முன்னால் மறைத்து வைத்தால் சட்டை பட்டனில் கண்டறிவார்களென, பின்னால் முதுக்குக்கு பின் ஒளித்து வைத்தார்.

     சுப்ரமணியமோ "தனிக்கட்டை என்பதால இப்படி கேர்டேக்கர் வச்சி அவனை கவனிச்சிக்கறான். ஆனா ஒவ்வொருத்தனுங்களும் நல்லா திண்ணு கொழுத்தவனுங்களா இருக்காங்க. மாசம் என்ன சம்பளமோ? நல்ல வேளைடா.. எனக்கு வீட்ல மருமக  கவனிக்கறா. நீ கூடயிருக்க." என்று பேசி செல்ல நட்ராஜும் அருளும் சுப்ரமணியத்தை முறைத்து தள்ளினார்கள்.

    "வெளியே வந்தவர் கையை பார்த்து "அச்சோ என் தண்ணிபாட்டில் வச்சிருக்கற பை." என்று தலையில் கைவைக்க, "இரு... நானே எடுத்துட்டு வர்றேன்" என்று அருள் கிழவனையும் பேரனையும் முறைத்து கொண்டு சென்றான்.

  தனியாக வந்த அருளோ "என்ன சார் ஏதாவது தெரிந்ததா? என்ன பேசினாங்க. அந்த பொண்ணு இருக்குற இடம்? அந்த இளையமான் கிழவன் கொலையை பத்தி பேசினானா சார்." என்று ஆர்வத்தில் கேட்க, "அடச்சீ.. அவனை அனுப்பிட்டு வா?" என்று கலிவரதன் எரிந்து விழுந்தான்.

   இதுவரை கலிவரதன் பெயரை சுப்ரமணியமோ ஹரிஷோ எடுக்கவில்லை. அதனாலோ என்னவோ தப்பித்தனர்.

    இளையமானை மற்றவர்கள் சக்கர நாற்காலியில் தள்ளி சென்றிருந்தார்கள்.

    அருளோ பையை ஆராய்ந்து ஒன்றும் இல்லாது ஹரிஷிடம் தூக்கி போட்டான்.

  ஹரிஷ் கேட்ச் பிடித்தவனாக "நான் அப்ப வரட்டுமா அருள் அண்ணா?" என்று கேட்டான்.

   அருளோ கலிவரதனிடம் அவர்களை போக கூறியதன் உத்தரவால் அனுப்பினான்.

    நேராக வெளியே வந்த ஹரிஷும் சுப்ரமணியமும் சென்ட்ரலில் நுழைந்தார்கள். ஏதேனும் டிவைஸ் அவர்கள் அறியாது இருந்தால் காட்டி கொடுக்கும் பொருட்டு அலாரம் அடிக்கிறதா என்று பாதுகாப்பு பொருட்டு இருக்கும் மின்தடுப்பு வழியே நுழைந்து ஆராய எந்தவித டிவைஸும் இல்லை என்றதும் ஹரிஷ் நிம்மதியானான்.

     "தாத்தா நான் யாஷிதாவுக்காக போனது எப்படி தெரியும்? ஜிம்பாடி ஆட்கள் வீட்டுக்கு வந்து பேசியதாலயா?" என்று தாத்தாவுக்கு தெரிந்துவிட்டதே என கேட்டான்.

    "அவனுங்களால தான். அதான் சொன்னேனே. உங்கம்மா கழுத்துல கத்தி வச்சி அந்த பொண்ணை தேடினாங்க. இல்லையென்றதும் போயிட்டிங்க. ஆனா அதுக்கு பிறகு உங்கப்பா வர கூடவே நீ அனுப்பின கொரியர் வந்துச்சு.

    யாஷிதா போன் வந்ததும் அதை எடுத்து டைப் பண்ணி அவ இருப்பதை சொன்னா. இளைமான் அவளை இப்படி மாத்தியதை, கவிவரதன் கொலையை, நீ ஹெல்ப் பண்ணறதை, உங்கப்பாவுக்கு பிறகு தான் நிம்மதி." என்று உரைத்தார்.

     "தாத்தா... இப்ப புக் எடுத்துட்டு எப்படி கொடுக்கணும். தடியன்களை நினைச்சாலே வயிறு எரியுது." என்றதும், "கொடுத்துட்டேன் டா. இந்நேரம் இளையமான் கையில் இருக்கும்" என்றார் அவர்..

    "எப்படி தாத்தா?" என்றதற்கு தண்ணி பாட்டில் வைத்த பையை எடுத்து காட்டினார்.

   இருவரும் மெட்ரோ டிரெயினில் ஏறிட முடிவெடுத்தனர். சுப்ரமணியம் தாத்தா படிகளில் நடக்க, ஹரிஷ் தானியங்கி படியில் கால் வைக்க முயல, வேகமாய் ஒரு பெண் ஹரிஷை மோதி நிமிர்ந்தாள்.

    "சாரி வேண்டுமின்னே மோதலை." என்றதை கூட அவள் காது கொடுத்து கேட்கவில்லை. அவனும் அப்பெண்ணை சரியாக பாராது தாத்தாவை கைப்பிடிக்க தேடினான்.

    என்னை மோதின மாதிரி வயசானவங்களை மோதினா அவ்ளோ தான். இந்நேரம் படில உருண்டிருப்பார் எங்க தாத்தா' என்றவன் முனங்கிட, அப்பெண் திரும்பி பார்த்து, "ஹரிஷ்?" என்று வாய் திறவாமல் உச்சரித்தாள்.

     இதேயிடத்தில் என்றால் ஆபத்துயென்று, முதலில் தான் செய்ய வேண்டியதை செய்து விட்டாலொழிய தனக்கு பாதுகாப்பு சேருமென தனஞ்செயன் கூறியதை செயல்படுத்த விரைந்தாள் யாஷிதா.

    ஆம் அங்கே உருவத்தோடு தன் தேகத்தோடு, நடமாடும் மனிதர்களை போலவே மீண்டும் மீண்டு வந்திருந்தாள் யாஷிதா.

  இளையமான் முதுகுக்கு பின்னாலிருந்த புக்கை எடுத்தவராக தன் மந்திர விந்தைகள் புரிய ஹரிஷ் வீட்டில் இருந்த யாஷிதா கண்ணுக்கு புலப்பட்டாள்.

   காஞ்சனாவோ "யா..யாஷிதா?" என்று கேட்க, "இருக்கேன் ஆன்ட்டி சொல்லுங்க. நீங்க வெட்டி வச்ச வெண்டாக்காய் எடுத்து மென்னுட்டு இருக்கேன்." என்று அவளது செயலை கூறினாள். அது தானே அடையாளம் என்பதாக.

     "என்னங்க... இங்க வந்து பாருங்க யாஷிதா கண்ணுக்கு தெரியறா. அவ குரலும் நல்லா கேட்குது." என்று காஞ்சனா கத்த, தனஞ்செயன் வந்து பார்த்துவிட்டு கண்ணை நம்பாமல் கசக்கினார்.

    அதன் பின்னரே யாஷிதா தன் உருவம் தெரிகிறதா என்று அவரிடம் கேட்க, காதில் போட்டிருக்கும் இயரிங்கஸ் முதல் கலர் டிசைன் கூற யாஷிதா சந்தோஷப்பட்டாள்.

    மணி தாத்தா மூலமா இளையமான் தாத்தா என்னை இப்படி திரும்ப மாத்திட்டார். இப்ப நான் கலிவரதன் ஆட்களோட பார்வையில் பட்டால் என்னை கொலை பண்ணிடுவாங்க, அதுக்குள்ள இந்த ஆதாரத்தை எப்படி என்ன செய்யறது." என்று திகைத்தாள்.

    தனஞ்செயன் திட்டமிட்டு தர யாஷிதா அதனை செயல்படுத்தவே இத்தனை வேகம்.

    ஹரிஷிற்கு தான் யாஷிதாவை இனம் காணமுடியாது இரண்டு நிமிடத்தில் வரும் மெட்ரோ பயணத்திற்கு காத்திருந்தான்.

    யாஷிதாவோ அவளுக்கு இருக்கும் வேலைகள் தலைக்கு மேலாக இருக்க அந்த மெட்ரோ ரயிலை விட வேகமாக இயங்கினாள்.

    வீட்டிற்கு ஹரிஷ் வந்து சேர்ந்ததும், தாய் தந்தையரை கூட பொருட்படுத்ததாது, "யாஷி... போன் கிடைச்சுதா, உங்க தாத்தாவை பார்த்தேன். ஏய் எங்கயிருக்க?" என்று அறையில் வந்து கத்தி தேடினான்.

    ஒரு வேளை கீழே தான் இருக்காளோ? நாம தான் புயலை போல மேல வந்துட்டோமா? என்று "யாஷி யாஷிதா." என்று கூப்பிட்டான்.

   "அந்த பொண்ணு உருவம் வந்ததும் கிளம்பிட்டா டா.?" என்று காஞ்சனா கூறியதும் ஹரிஷ் அதிர்ந்தான்.

   "என்னம்மா சொல்லற கிளம்பிட்டாளா? நீ பார்த்தியா யாஷிதாவை?" என்று அதிர்ச்சி மறையாமல் கேட்டான்.

    "ஓ... பார்த்தேனே... நல்லா தக்காளி பழம் மாதிரி செவசெவனு இருந்தா. தோள்வரை முடி, ஆளும் ரொம்ப பருமனும் இல்லை. ஒல்லியும் இல்லை. முகலட்சனமா இருந்தாளே." என்று கூறியதும் சோபாவில் தொப்பென அமர்ந்தவன்.

   'நிஜமாவே போயிட்டாளா? அதுக்குள்ள போயிட்டாளா? அவளுக்காக உதவி பண்ண போன என்னை பார்க்கணும்னு தோணலையா?' இப்படி தான் மனப்பாரத்தில் ஹரிஷ் இருந்தான்.

    -தொடரும்.

பிரவீணா தங்கராஜ் 


கருத்துகள்

 1. ஹரீஷ் பாவம் .யாஷித்தா பத்திரமாக அவனிடம் சேர்த்து விடுமா.......நல்ல அருமையான நகர்வு.

  பதிலளிநீக்கு
 2. Super super..... யாஷிக்கு தெரியும் தானே ஹரிஷ்ச இப்படி பார்த்தும் பேசாம போய்..... எங்க மாட்ட போறாலோ

  பதிலளிநீக்கு
 3. Harish feel panrathu ah pakka kastam ah iruku ippo yashitha andha thadiuanuga kita mattama irukanum nu.thonuthu

  பதிலளிநீக்கு
 4. Aiyo pavam harsh skrm aan kanla yashi ah kaminga pakatum. Avlo help panirukan Yashi avana pakama poitale

  பதிலளிநீக்கு
 5. எப்படியோ ஒரு வழியாக யாஷிதா உருவம் கிடைத்தது விட்டது. கலி வரதன் &ஆட்களிடம் சிக்காமல் திரும்ப பத்திரமாக ஹரீஸ் வீட்டுக்கு வந்துசேர்வாளா????

  பதிலளிநீக்கு
 6. சூப்பர். ... சீக்கிரம் யாஷிதா ஹரிஷ் கிட்ட வந்திடு

  பதிலளிநீக்கு
 7. அச்சோ..பாவம் ஹரிஷ்..!
  முகம் பார்க்கா காதல்... திரும்ப கிடைத்திடுமா..?

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥 - 2

தீவிகை அவள்🪔 வரையானல் அவன்🔥 -3

பிரம்மனின் கிறுக்கல்கள்

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1