Posts

Showing posts with the label சிறுகதை

காயத்ரி

Image
                                                    காயத்ரி     இரண்டு பக்கமும் கொரனா தடுப்பு வைத்து அந்த தெருவில் பெரிய வாகனங்கள் போக விடாமல் அடைத்தனர்.     அந்த மூன்றடுக்கு கட்டிடத்தில் ஹாட் ஸ்பாட் போட்டு முடித்திருக்க, ஆம்புலன்ஸில் ஒருவரை ஏற்றி சென்றனர்.   மற்றவர்கறையும் முகமூடி அணிந்து கடத்தி சென்றனர். பார்க்க அப்படி தான் தோன்றியது. கவலை தேய்ந்த முகத்தோடு மூன்று கட்டிட மனிதர்களும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றனர்.     ஒருவருக்கு வந்த கொரானா மற்ற குடுத்தினருக்கு பரவுவதாக ஆய்வு செய்ய தனியாக பெரியவர்களை அழைத்து சென்றது. இருவருக்கு தொற்று ஊர்ஜிதமாக அவர்களை அங்கேயே பிடித்து வைத்து கொண்டனர். மற்ற இருவருக்கு இல்லையென அனுப்பி வைத்தார்கள். மேலும் இருவருக்கு தொற்று உள்ளது தங்களாகவே தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் இங்கே அதிக வார்டு இல்லையென கூறி சென்றனர்.    காயத்ரி அவர் கணவன் சிவகுமார் ஆஸ்பிடலில் தனிதனிப்பிரிவில் சிகிச்சை எடுத்தனர்.      காயத்ரி சிவகுமார் அருகே செல்ல முடியவில்லையே என்று கவலை தோய்ந்து இருந்தார். வளர்ந்த இரு பெண்கள் ஓசூரில் கல்லூரி படிக்க சென்றிருந்தனர். இருவரும் சேர

மத்தாப்பூ மலரே

Image
  மத்தாப்பூ மலரே      வீட்டில் அப்பொழுது தான் பறித்து தொடுத்த பூவை கட்டி தலையில் இரட்டை ஜடையில் சூடியிருந்தாள் மலர். அதன் வாசம் பேருந்தில் அனைவரையும் ஒர் கணம் சுவாசத்தில் நுகர வைத்திருப்பது என்னவோ உண்மை.      மலரோ எட்டி எட்டி பின் இருக்கையை கண்டவள் தன் தாய் செல்வியை சுரண்டினாள்.     "அம்மா... அம்மா... அங்க ஜன்னல் சீட் காலியா இருக்கு போலாமா?" என்றாள்.     செல்வி திரும்பி பார்த்து சரியென்று சம்மதிக்க பேருந்தில் இருவர் இருக்கையில் மூவராய் அமர்ந்திருந்த மலருக்கு ஜன்னலிருக்கை அதுவும் தானும் தாயும் மட்டும் என்று சவுகரியமாக அமர்ந்தாள்.      "அம்மா... டவுன்ல இருக்கற பெரிய கடைக்கு தானே போறோம்" என்று மீண்டும் தன் கேள்விக்கு பதிலை தெளிவுப்படுத்தி கொண்டாள்.      "ஆமா டா குட்டி" என்று தாடை பிடித்து கொஞ்சினாள்.       "அம்மா அம்மா மருதாணி பறிச்சு வச்சியா?" என்று அடுத்த கேள்வியை கேட்டாள்.     இரவானால் பாம்பு பூச்சி வந்திடுமென அம்மா பறிக்க தயங்குவாரென ஏற்கனவே பறித்து விட்டனரா என்ற விவரம் கேட்டாள்.         "சாயந்திரம் பூ பறிக்கறப்பவே ப

பனித்தல்

Image
     பனித்தல்      மழையின் தூறல் மெல்ல மெல்ல பூமியை தொட்டு முத்தமிட முதலில் ஆசையாய் நனைந்த தளிர்மலர் நேரமெடுக்கவும் பெரிதாய் சாரலடிக்கவும் சுற்றி முற்றி பார்த்தாள். அங்கே பெரிய மரம் குடைப் போல அவை மட்டுமே இருக்க, அங்கு போய் பாதுகாப்பாய் நின்றாள்.      பள்ளியிலேயே இருந்திருக்கலாமோ? வெளியே வந்து பிறகே ஆறாவது படிக்கும் தளிரின் மூளையில் உதித்த கேள்வி இது. பள்ளிக்கூடம் விட்டு சற்று தள்ளி வந்து விட்டாளே.      அந்த பள்ளிக்கூடம் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே இருக்கும் இடைநிலை பள்ளி. அதனால் கூட்டம் உடனே கலைந்து ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடியது.    எதிரே சற்று தள்ளி நோட் புத்தகம் விற்கும் அண்ணாச்சி இருந்தார். பாதிக்கு மேல் சாரலடிக்க அதனை எடுத்து கடைக்கு உள்பக்கம் விரசாக அடிக்கினார். தளிர்மலர் இருக்கும் மரத்துக்கு எதிரில் கடையிருக்க அங்கே எழுதும் அட்டைகள் நனைவதை கண்டாள்.        தளிர்மலரோ, "அங்கிள் ரைட்டிங் பேட் நனையுது பாருங்க. சாக்லேட் எல்லாம் பாக்ஸில இருக்கு. அது மர அட்டையில செய்தது. நனைந்தா ஊறி உப்பிடும்" என்றதும் "தேங்க்ஸ் மா தேங்க்ஸ் மா" என்று அதை முதலில் எடு

குளம்பி வாசம் வீசுதே

Image
     குளம்பி வாசம் வீசுதே     தன் கைகடிகாரத்தை நொடிக்கு ஒரு முறை பார்த்து கொண்டு அந்த காபி ஷாப்பில் காத்திருந்தாள் ஸ்ரீமதி.        கிருஷ் இன்னமும் வர தாமதமாக்கி கொண்டிருந்தான்.      அந்த மழை காற்று வேறு ஸ்ரீமதியை சில்லிட வைத்தது. அவனின் எண்ணங்களை அசைப்போட வைத்தது. மழைக்கும் அவனுக்குமான பொருத்தம் அவளுக்கு மட்டுமே தெரியும்.     இதே போல ஒர் கார்காலத்தில் தான் முதல் முறை கிருஷ்ணாவை மதுராவில் கண்டாள். அன்றைய நாட்களை இன்றும் நினைவு சாரலில் மீட்டெடுத்தாள்.    சின்னதாய் துளிதுளியாய் மழை பொழிந்திருக்க அதில் நனைந்தாள் ஸ்ரீமதி.       கூடவே தந்தை சிவம் செய்து கொடுத்த கப்பலை நீரில் வைத்து அது செல்லும் பக்கம் தானும் பார்த்துக் கொண்டே, எதிரே வருபவரையோ சுற்றி இருப்பவரையோ கூட அறியாமல் அதன் போக்கில் சென்று ஒரேயிடத்தில் ஒர் சிறுவனின் தலையில் இடித்து நிமிர்ந்தாள்.      அவனும் ஸ்ரீமதி போல கப்பலை விடும் நோக்கத்தில் அவளை பார்க்காமல் இடித்து கொண்டான். நிமிர்ந்து இருவரும் முறைத்து கொள்ள, இருவரின் கப்பலும் ஒரே நேரத்தில் அந்த மேடான தெருவிலிருந்து கீழிறங்கும் பாதையில் கப்பல் அடித்து செல்லப்பட

செந்நீர் துளிகள்

Image
        செந்நீர் துளிகள்   பனிக்காற்று சில்லென்று ஊசியின்றியே உடலில் குத்தியது.     பனிப்புகை எதிரே வருபவர்களை நிதானித்து தான், கண்டுயுணர்ந்திட நிமிடங்கள் எடுத்தது.      தன் கைகளால் சூடுபரக்க தேய்த்து கன்னத்தில் ஒற்றி எடுத்தாள் தனிஷ்கா.      "சூடா ஏதாவது சாப்பிட்டா நல்லாயிருக்கும் மேம்... வண்டியை நிறுத்திட்டு சாப்பிடுவோமா?" என்று தன் கல்லூரி பேராசிரியர் நிர்மலாவிடம் தனிஷ்கா கேட்டு முடித்தாள்.      "நோ... இங்க நிறுத்தினா நாம போக வேண்டிய இடத்துக்கு ரீச் ஆக நேரமெடுக்கும். இன்னும் அரை மணி நேரம் கழித்து ஹரியானா பார்டர் கிராஸ் பண்ணிட்டு பஞ்சாப் நுழைவு வந்ததும் தான் பிரேக். அதுவரை எங்கயும் நிறுத்தப் போறதில்லை." என்று பின்சீட்டிலிருக்கும் அவளுக்கு திரும்பாமலே இடது கையை ஆட்டி ஆட்டி பேசி முடித்து வலது கையால் தலைக்கு முட்டுக் கொடுத்து, போனை எடுத்து மணியை பார்த்தார்.      மணி ஆறானது. ஆனாலும் பனி விலகாமல் இருக்க, கல்லூரி மாணவிகளை இப்படி அரை இருள் நேரத்தில் எங்கும் நிறுத்தி சாப்பிட வாங்கி தர மறுத்ததார் நிர்மலா. அதையே ஆமோதிப்பதாக ஜானகியும் புன்னகைத்தார்.       தனிஷ்காவோ உப்ஸ்ஸ்...

பரிதவிப்பு

Image
    *பரிதவிப்பு* அந்த பேருந்தில் தட்டை ஏந்தி அறுபது வயது முதியவர் பிச்சை கேட்டு கொண்டிருந்தார்.     கல்லூரி திறந்து முதல் வருடம் செல்ல பயணித்திருந்தாள் தீபா. இந்த நிகழ்வை கண்டதும் உள்ளுக்குள் அந்த பரிதவிப்பு உதித்தது.      மெல்ல மெல்ல தன் பர்சில் அப்பா தனக்கு கேன்டீனுக்கு கொடுத்த பணம் இருந்தது. அதில் சில்லறையும் கணத்திருந்தது.       ஐந்து இரண்டு ரூபாய் நாணையத்தை எடுத்தவள் அந்த முதியவர் அருகே வந்ததும் போட முடிவெடுத்தாள். ஆனால் அவளுக்கு முன்னேயிருந்த சீனியரோ,"எப்பா... மாசத்துக்கு பத்து முறை வந்திடறார். உடல்நிலை நல்லா தானே இருக்கு. வேலை செய்ய வேண்டியது தானே" என்று முணங்குவது ஜன்னலோரம் பின்னிருக்கையில் இருந்த தீபா செவியிலும் விழுந்தது.     எடுத்ததை போடலாமா வேண்டாமா? என்ற குழப்பம் தாக்க, இரண்டு ரூபாய் நாணையத்தை கைகளில் மறைத்து கொண்டாள்.      இவளருகே வந்த முதியவர் தட்டை நீட்டியபடி இரண்டு மூன்று பேர் யாசகமாக போட்டிருந்த நாணையம் மின்னியது அது போதுமென படியில் இறங்கி கிளம்பியிருந்தார்.      தீபா கையிலிருந்த நாணையம் இறுக பற்றியிருந்ததில் நனைந்திருந்தது. அந்த நாணையத்

ஒளியும் ஒலியும்

Image
    இன்று காலையில் எழுந்ததும் சன் மியூசிக் வைத்து விட்டு பாலை காய்ச்சி அடுப்பை பற்ற வைத்தாள் அதிதி. அதில் வரும் விளம்பரத்தை பொருத்து கொள்ளாது உடனே மாற்றினாள் மகள். அதில் சிங்க பெண்ணே என்று பாடல் அதிர மகள் உதடு தானாக பாடல் கூடவே  இணைந்தது.        வித்யுத் வருகையில் ரிமோட் கை மாற அடுத்து 'இசையருவி'யில் மெல்லிய கீதமாக பாடல் ஒலிக்க அதில் அதிதி வித்யுத் பார்வை பரிமாற்றம் இதழோரத்தில் புன்னகை அரும்ப    அவர்களின் 90 கிட்ஸ் வரிசையில் இதுவும் ஒன்று.  மறக்க இயலாத நிலை. சினிமாவின் பாடல் இசையில் அந்நாளை எண்ணி பார்த்தது. இப்பொழுது போல பாடல் ஒளிபரப்பி கொண்டு இருக்க மாட்டார்கள். வாரம் ஒரு முறை அரை மணி நேரம் பாடல்.        வித்யுத் எட்டு வயதில் ஒளியும் ஒலியும் பார்க்க ஆர்வமாக அமர ஆறு வயது அதிதி அவனோடு விளையாட கூப்பிட்டபடி அழுதாள்.         சின்னசிறு அழுகை கொண்ட அந்த தளிரான அதிதியின் அழுகையில் பெரியவர்கள் "வித்யுத் பாப்பா அழறா வேடிக்கை பார்க்கற என்ன?" என்று வித்யுத் கேட்டதும் தாமதம்.      "அப்பா அவ விளையாட கூப்பிடறா எனக்கு ஒளியும் ஒலியும் பார்க்கனும்" என்று வாரத்தில