பொழுதை கொஞ்சம் களவாடு

பொழுதை கொஞ்சம் களவாடு 'பூ வைத்தாய் பூ வைத்தாய் பூவுக்கோர் பூவைத்தாய்...' என்று 'அருவி' ஹம் செய்து கொண்டே கணினியில் தன் பாஸ்வோர்ட் லாகினை செய்தாள். லாகின் செய்த அடுத்த நொடி, 'ஹாய் பிரெண்ட்ஸ் இன்னிக்கு காலேஜ்ல எனக்கும் என் பிரெண்ட் ராணிக்கு முட்டிக்கிச்சு. எப்ப பாரு எல்லாரிடமும் லூஸ் டாக் விடுவியா. என் லவ் பிரேக்அப் ஆகிடுச்சுனு நீயேன் மற்ற பிரெண்டிடம் சொன்னயென்று ஒரே திட்டு. நான் என்ன பிரெண்ட்ஸ் பண்ணறது. நீங்களே சொல்லுங்க. என்னோட இன்னொரு பிரெண்ட் ராணி லவ் எப்படிடி போகுதுனு கேட்டா. நான் அவங்களுக்குள் சில பிரச்சனை அதனால பிரேக்அப் என்று சொன்னேன். இரண்டு பேருமே பிரெண்ட்ஸ் நான் பொய் சொல்ல முடியுமா. எனக்கு மனசுல பட்டதை தான் சொன்னேன். அதுக்கு போய் நீயொரு லூஸ் டாக் அதுயிதுனு சொல்லி திட்டிட்டா. நீங்களே சொல்லுங்க பிரெண்ட்ஸ் உண்மையை பேசறது தப்பா. என்னோட நேச்சரே இதான். மனசுக்கு பட்டதை சொல்வேன். மனசுல ஒன்னும் திடீரென பொய்யும் வராது. ராணி போறப்ப இந்த பழக்கத்தை மாத்திக்கோனு அட்வைஸ் வேற. நீங்களே சொல்லுங்க. நான் என் குணத்துக்கு மாறா மாறணு...