தூய்மை தேடல்
முதுமை கொண்ட வயதுக்கு இதமான தென்றல் தேடலானது . மழலை கொண்ட பிஞ்சிற்கு கடலில் மணல் வீடே தேடலானது . காதல் பூத்த அரும்பிற்க்கு அலை தீண்டலே தேடலானது . சுண்டல் விற்கும் உழைப்பாளிக்கோ வியாபார விற்பனையே தேடலானது . வெண்மேக கொண்ட போர்வைக்கோ பூமி தூய்மை தேடலானது . -- பிரவீணா தங்கராஜ் .