Posts

அகிம்சை

நீண்ட நேரம் பேரம் பேசி ஒரு வழியாகமுடிவானது காந்தி முகம் கொண்ட தாள்கள் கை மாறியது அகிம்சைக்கு எதிராக வன்முறையாட்கள் இறக்கி போராட்ட களத்தினை கலைப்பதற்கு...          -- பிரவீணா தங்கராஜ் .            

வறுமை - கல்வி - துளிப்பா

   கல்வி துளிப்பா – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

தானம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய வறுமைக் கோட்டின் கீழ் தான் வசிக்கும் நிலைமை பணத்தை சேகரிக்க தோன்றாத எண்ணம் உணவையாவது மதியத்திற்கு சேகரித்து பழஞ்சோறாக்கி யிருக்கலாம் அதையும் ரோட்டில் யிருந்த நான்கு நாய்குட்டிக்கு தானம் அளித்து தானத்தை சேகரித்து கொண்டனர் மதியத்திற்கு மதிய வயிறை காயா போட்டு                            -- பிரவீணா தங்கராஜ் .

மலர்ச்சியில்லை

மலர்ந்த பூவின் நடுவே மலர்ச்சியில்லை பூக்காரனுக்கு பூக்கள் விற்பனை ஆகாததால்...            -- பிரவீணா தங்கராஜ் . 

இளநீர்

இளநீர் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

* உயிர்த்திசை*

 கோடிட்டு காட்டினேன் நீ இரு உயிரென மேடிட்ட வயிறை தடவியே நாமொருயிர் என்றாய்...! உண்ணாமல் தவிர்த்தாய் ஒவ்வாது என்றதும் உலகமே நானாக மாறித்தான் போனாய்... ! மரணவலி கொடுத்து நான் வந்தாலும் மகிழ்ச்சியோடு வரவேற்றாய் குதூகலத்தோடு பாகாய் உருக செய்யும் அன்பை பாரினில் வேறு யார் தருவார் ? ஏக்கம் நிறைந்த பார்வை நான் காண எட்டாத உயரமென்றாலும் வாங்கி தருவாய்...! உண்ணும் உணவு ஒரு பிடி என்றாலும் உன்னை மறந்தே எனக்களிப்பாய்...! உன் தியாகமும் , பாசம் கலந்த தவிப்பும் உறைவிடமாக இருப்பேன் எந்நாளும் உயிர்த்திசையாக இருப்பவளே... ! உயிராய் என்னை சுமந்தவளே ...!                                       -- பிரவீணா தங்கராஜ்               * அம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப்போட்டிக்கு எழுதியது .                 

பயம் ஓடியது

கோரமான பற்களதில் இரத்தம் வழிந்த திட்டுக்கள் கண்களை கண்டாலே  பயப்பந்து வயிற்றில் பிரள எதற்குக் கொன்றது ? ஏன் கொன்றது ? எத்தனிக்க இயலாத காட்சிகள் அப்படியே உள்வாங்கிய மகளின் மனதில் விளக்கு பொத்தானைப் போடாத அந்த அறைக்குச் செல்ல கால்கள் தயங்கியே நிற்க அச்சத்தில் கைகளும் சில்லிட்டுயிருந்தன சீக்கிரம் கிளம்புயென்று விரைவுப்படுத்திய போது அந்தப் பார்வையே சொல்லிவிட்டது நிமிடத்தில் கண்ட பேய் படத்தின் பாதிப்புயென்று 'சரி வா' என கை கோர்த்து அழைத்துச் சென்ற மகளிடம் 'இப்ப மட்டும் பேய் வராதா' யென்ற கேள்விக்கு பதிலாக 'அம்மா நீங்க இருக்கீங்க' யென்ற பதிலில் சிலிர்த்து விட்டது என்ன வார்த்தை கூறி மீதி முடிப்பதென்று ...                                -- பிரவீணா தங்கராஜ் .  

விடாமுயற்சி

வெற்றியெனும் வாகை பூச்சுட விடாமுயற்சி யெனும் விதையை தூவிவிடு....! ஒருநாள் முளைக்கும் விடியல் பிறக்கும் அந்நாள் வரை அசராது முயன்றிடு ...!   தோற்பதை கணக்கில் எண்ணாதே எண்ணத்தை ஏணியாக்கி விடாது முயன்று வெற்றிக்கனியை பறித்து விடுவாய்...! உன்னில் நம்பிக்கை உள்ளவரை வெற்றி உனக்கென காத்திருப்பது நிஜமே...!                     -- பிரவீணா தங்கராஜ் .

அன்பு மகள்

Image
ஏழுவர்ணம் போதவில்லை வர்ணங்களை கூட்டுகின்றாள் அன்பு மகள்.             --பிரவீணா தங்கராஜ்.

பெண்மையின் அழகு

தத்தித் தத்தி நடந்து வந்து தங்கத் தமிழை நீ மொழிந்து தாமரையாய் சிரிக்கும் பேதையழகு குட்டிக் குட்டி குறும்புச் செய்து கள்ளத்தனம் மறைத்து வைத்து கதைகள் பல கூறிடும் பெதும்பையழகு சுட்டி தனம் செய்ததெல்லாம் சுருக்க செய்திடும் அச்சமது சடுதியில் மாறிய மங்கையழகு பார்த்ததை கேட்டதை உண்மையென பிரித்து பார்க்கா  நெஞ்சமது பாசவலையில் விழுந்துடும் மடந்தையழகு இது சரி இது தவறுயென இன்னது வகுத்து இன்னலை களைத்து இதிகாசம் எடுத்துரைக்கும் அரிவையழகு கற்று தேர்ந்த அறிவினை கனிந்தே எடுத்துரைத்து இல்லறத்தை காவியமாய் பேணிடும் தெரிவையழகு ஒப்பனையும் , உடலழகும் பெரிதென ஒப்புதலை ஏற்காது அன்பு இதயமது ஒப்பற்ற தாய்மையே பேரிளம் அழகு வரிகளை ஓவியமாய் வயிற்றில் பெற்ற தாய்மையே பெண்ணினத்தின் பேரழகு                                                         -- பிரவீணா தங்கராஜ் .