Posts

🌹 உலகமே உதயம் எதனில் 🌹

பட்ட மரத்தின் வேருக்கு பூக்கள் பூக்க செய்ய பயோதரம் விடும் கண்ணீர் திவலை யெதற்கு....?! தன் கூட்டின் மேல தான் இடா முட்டைக்கும்  தாயாய் அடைகாக்கும் காகம் எதனால்...?! முட்டி மோதி கொள்ளும் உறவுகள் பந்தமெனும் கூடும் விழாவில் ஒன்றுபட்டு புன்னகைப்பெதனால்...?! பிடியள்ளி உண்ணும் சாதம் பிள்ளை வந்து முன்னிற்க பாசமாய் உணவளிப்பதும் எதனால்...?! எங்கோ கேட்கும் திரிவூர்தி ஓசையது எங்கோ மூலையில் ஒரு மனம் வேண்டிடுவதும் எதனால்...?! எதனால்... எதனால்... உலகமே உதயம் எதனில் தேடிட... அன்பே நீ கரைந்திடு  தாய் தந்தைக்காய்...! பாசமே நிறைந்திடு சகோதரத்துவமாய்...! நேசமே விதைத்திடு உறவும் நட்புமாய்...! காதலே கலந்திடு காவியமாய்...! உலகமே உதயம் அன்பில் - அதை உணர்த்தியே சொல் உன்னில்.                               -- பிரவீணா தங்கராஜ். பயோதரம்--மேகம் திவலை-----மழைத்துளி திரிவூர்தி---ஆம்புலன்ஸ்

பாலுமில்லை சீனியுமில்லை

Image
பாலுமில்லை சீனியுமில்லை இல்லாத குழவித் தூளில் சூடுப் பறக்க ஆற்றி எதிரிலும் யாருமில்லாத யிடத்தில் நீட்டியப்படி குழவியை தேனீர் என்கின்றாள் சிரிப்புடன் குட்டிமகள் வாங்கிப் பருகியவாறு   திருப்பி தருகின்றனர் உங்கள் கண்களுக்கு தெரியாத கடவுள்கள். -- பிரவீணா தங்கராஜ்.

மழலையின் மொழி...

Image
எண்களை அழுத்திவிட்டு இறைவனின் குறைகளை கேட்டு முடிக்கின்றாள் ஆறுதலாக மழலையின் மொழியால்... -- பிரவீணா தங்கராஜ்.

நாள்காட்டி அட்டை

நாட்களை விழுங்கியவன் மெலிந்து கிடக்கின்றான் நாள்காட்டி அட்டை.           -- பிரவீணா தங்கராஜ்.                  

bye bye 2018 welcome 2019

Image
இன்னுமொரு வாரமே என்னை விட்டுப் பிரிய போகின்றாய்...! நான் கலங்குவதாக யில்லை உன்னை சந்தித்தப் போது எத்தகைய ஆர்வம் கலந்து எதிர்பார்ப்போடு சந்தித்தேனோ... அதே ஆர்வத்தோடு வழியனுப்ப போகின்றேன் நான் தான் நானே தான் நீ எனக்கு கொடுத்த இன்பத் துன்பத்தையும்  அன்பும் அழுகையும் ஏமாற்றத்தையும் ஏக்கத்தையும் வித்தியாச அனுபவங்களையும் ஏற்றுக் கொண்டு நிறைவான காதலோடு உன் பிரிவுக்கு தலை வணங்கியே பிரியா விடை தருகின்றேன் உன்னைப் போலவே எண்ணில் கலக்க வரவிருக்கும் இவ்வாண்டை அதே ஆர்வத்தோடு சந்திக்க தயாராகின்றேன்.            -- பிரவீணா தங்கராஜ்.

வரிகள் வடிக்கும் காதலி- காதல் பிதற்றல் 44

நிலவு பார்த்து கவிதை பேசும் கவிஞன் அல்ல உன் நினைவு எண்ணி வரிகள் வடிக்கும் காதலி நான்                     - பிரவீணா தங்கராஜ்.

காதல் பிதற்றால்-44

பிரபஞ்சத்தின் அத்தனை சந்தோஷமும் என்னிடம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை என்னிடம் இல்லை அது எல்லாமே வெறுமை என்றே உரைப்பேன் நான் ஒன்றும் மேதை அல்ல உன் ஒற்றை சொல்லிலும் உன் ஓரப்பார்வையிலும் உன் மென்னகையிலும் உள்ளது எந்தன் பிரபஞ்சத்திற்கு ஈடான சந்தோஷம்...               - பிரவீணா தங்கராஜ்.

என் இறப்பு எவ்வளவோ - காதல் பிதற்றல் 43

உன் ஒற்றை மவுனம் உன் பார்வை திருப்பம் உன் புன்னகை துடைத்த முகம் இவையெல்லாம் இல்லாத உன்னை காண்கையில் என் இறப்பு எவ்வளவோ மேல்.                                - பிரவீணா தங்கராஜ்.

எந்தன் உயிர் தோழியே...!

எனக்கொரு நண்பி இருந்தாள்  எந்நாளும் துணையாய் இருந்தாள் எச்சி பண்டம் என்பதெல்லாம் எங்களுக்குள் இல்லை எனலாம். மதங்கள் விழுங்கிய தோழமையே... மலர் போலவே பூஜித்தாள் தன்னலமில்லா ... துரோகமில்லா... நேர்மையானவள் தவறு செய்தால் சுட்டிக்காட்டவும் திறமையிருந்தால் தட்டிகொடுக்கவும் தவறாத தங்கநிலவுவள் எந்தன் மகிழ்வை விரும்புபவள் எந்தன் நலனை நாடுபவள் நாட்கள் எங்களை பிரித்தாளும் நினைவில் என்றும் நீங்காதவள்...                      --பிரவீணா தங்கராஜ் .

பூட்டி வைத்த காதலது

Image
என் இதயம் சென்று திரும்பும் உன் மூச்சுக் காற்று அறிந்தும் கூறவில்லையா உன்னிடம் ?! என் கண்கள் பார்த்துத்  திசையை மாற்றிக் கொள்ளும் உன் ஈர்ப்பு கண்கள் உணர்த்தவில்லையா ?! உன் இதயத்திடம் கண்களிலிருந்து இதயத்திற்கு என் காதலை கடத்திச் செல்லும் இரத்தச் செல்களை பாதியிலே வழிமறித்து புறக்கணிப்பது யார் ? உன் மூளையா ? நித்தமும் என் தேடலை உணர்ந்தே உன் பாதையை மாற்றிடாது வந்திடும் உன் கொலுசொலி பாதம் உன் தடத்தை பின்பற்றும் என் வன்பாதம் செல்லுதே... பஞ்சபூத நிலமவன் கதைக்கவில்லையா ?! யார் தான் சொல்வது ? எந்தன் இரும்பு இதயத்திலும் பூட்டி வைத்த காதலது மென் பூவுடையாளானா உன்னை கண்டு சரணடைத்ததை....!                                  -பிரவீணா தங்கராஜ் .