உவகை கொள்(ல்)
உவகை கொள்(ல்) ஓலா ஆட்டோ அந்த குறுக்கு சந்தில் செல்ல எதிரே லாரி வண்டி வரவும் ஓரமாய் நின்று வழிக் கொடுத்து பின்னரே இரண்டு நான்கு தெரு உள்ளுக்குள் வளைந்து வளைந்து சென்று லொகேஷன் காட்டிய அந்த வீட்டின் முன் நின்றது. பேசியபடி பணத்தை நீட்ட ஆட்டோக்காரன் பெற்று கொண்டு சென்றான். "இந்த வீடானு செக் பண்ணு ஷாலினி" என்றான் தீபக். "இரண்டு பக்கம் வாழை மரம் இருக்கு. புது வீடு... இதுக்கு மேல என்ன செக்கிங் தீபக்" என்று தன் மேடிட்ட வயிற்றை பிடித்தபடி கூறினாள். "எல்லா வீடும் புதுசா தான் இருக்கு மா." என்றதும் சின்ன முறைப்பை பனிசளித்து பரிசுப்பொருளை எடுத்து நுழைந்தாள். "ஏ... ஷாலு... வா வா. காலையிலேயே வருவனு பார்த்தேன். வாங்க அண்ணா" என்று அழைக்க தன் மாமன் மகள் நதியா வாங்கிய புதுமன புகுவிழாவிற்குள் அடியெடுத்து நுழைந்தாள் ஷாலினி. "வீடு ரொம்ப அழகாயிருக்கு" என்று ஷாலினி கூறவும் "தேங்க்ஸ் எ லாட் மா. இந்தா வெல்கம் டிரிங்க். செக்கப் எல்லாம் போறியா. இது எத்தனாவது மாதம்" என்று நதியா கேட்டு பழச்சாற கொடுத்