***பழமைக்கு உயிர்கொடுப்போம்***
கூடைப்பின்னி கூவிவிற்று
குறையின்றி வாழ்ந்தநாளது
பதமாய் செய்த பானையது
பக்குவமாய் நீருற்றி
நோயின்றி வாழ்ந்தநாளது
மஞ்சப்பை எடுத்துச் சென்று
மளிகையில் மலிவாய்
வாங்கிச் சென்றநாளது
பழமையை புறம்தள்ளி
பாட்டனின் சொல்லை முறித்து
நெகிழிப்பை வரவேற்று
நோயினையும் ஏற்றோம்
மக்காத நெகிழியோ
மறையாது தங்கிட
எம்பூமியின் பசுமையழிய
நாமே பூத்தூவி விட்டோம்
அதை மாற்றிடவே ,
பழமைக்கு உயிர் கொடுப்போம்
பூமியை நலமுறச் செய்வோம் .
-- பிரவீணா தங்கராஜ் .
குறையின்றி வாழ்ந்தநாளது
பதமாய் செய்த பானையது
பக்குவமாய் நீருற்றி
நோயின்றி வாழ்ந்தநாளது
மஞ்சப்பை எடுத்துச் சென்று
மளிகையில் மலிவாய்
வாங்கிச் சென்றநாளது
பழமையை புறம்தள்ளி
பாட்டனின் சொல்லை முறித்து
நெகிழிப்பை வரவேற்று
நோயினையும் ஏற்றோம்
மக்காத நெகிழியோ
மறையாது தங்கிட
எம்பூமியின் பசுமையழிய
நாமே பூத்தூவி விட்டோம்
அதை மாற்றிடவே ,
பழமைக்கு உயிர் கொடுப்போம்
பூமியை நலமுறச் செய்வோம் .
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment