நியாயம் கேட்க மாட்டாயா...

குதப்பிய பான்பராக்
எச்சியை நடைபாதையில்
முகசுழிப்பின்றியே
துப்பிச் செல்ல
அஷ்டகோலமானது
என்முகமே..
அவனை நிறுத்தி தட்டி கேட்க
நேரமில்லை பெரும்பான்மையினருக்கு...
என்னையும் சேர்த்தே .
அவனோ பாதம் மறைந்து நடந்தே செல்ல
நானும் என் பேருந்தில் ஏறினேன்.
மனசாட்சி மட்டும் ஏறாது
என்னிடம் கேட்டது
நியாய அநியாய கேட்க மாட்டாயா...?
அதனிடம் சொன்னேன்
நான் கேட்க தயார்
நான் ஏறும் இந்த பேருந்து
எனக்காக காத்திருக்குமா...? என்றேன்
பணியில் நேரம் கடந்து சென்றால்
அலுவலத்தில் வசவு தவிர்த்து
வரவேற்பாரா ? என்றேன்
மனசாட்சி கூட அமைதியாகி
என்னிடமே வந்து பயணம் செய்தது
நியாயம் மட்டும்
காற்றில் அலைகளாக
யாரிடம் வாதிடவென்று
அலைந்து கொண்டு இருக்கின்றன .
                        -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...