வெற்றிப் பெறாகாதல்

தொடர் அலைப்பேசி சிணுங்களில்
அடுப்பை அணைத்து வைத்தப்படி
தொடுதிரை விசையை நகர்த்திட 
' ஹலோ ' என்ற குரல் ஒலித்தன
தட்டுத் தடுமாறி நழுவவிடச் சென்ற
கைப்பேசியை அழுத்திப் பிடித்தப்படியே
'ம்' என்ற ஒற்றை வார்த்தை உதிர்த்தேன்
அந்தப் பக்க அலைப்பேசி மவுனம் காத்தன
அதிலேயே என்குரலை அறிந்ததை அறிந்தேன்
நீண்ட வினாடிக்குப் பின் நலம் விசாரித்து,
என் மகவினை பற்றி அறிந்துக் கொண்டு
சொல்லவந்ததையும் சொல்லி முடித்தன.
வேறொன்றுமில்லை வரும் நன்னாளில்
அலைபேசியின் பேசிய குரலின்
பிள்ளைக்கு பெயர் சூட்டு விழாவாம்
அழைப்பு விடுத்திட்டு பெயரையும் சொல்லினர்
அதுவொன்றும் ராசியான பெயரில்லையென
சொல்வதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டது
அந்த நன்னாளுக்கு நிச்சயம் வரமாட்டேயென
அறிந்தேயிருந்தன அந்த குரல் .
அலைப்பேசி வைத்துவிட்டு அரை நாழிகை
அதையே இமைக்க மறந்து பார்த்திருந்தேன்
அது எப்படி பூக்களால் வருடிய உணர்வும்
ஈட்டியால் குத்திய ரணமாக்கும் உணர்வும்
ஒரு சேர தாக்கி கொண்டிருக்கின்றன
இதயத்தினுள் வெற்றிப் பெறாகாதல் .
                                   --  பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...