பறந்து திரிந்து ...

பறந்து திரிந்து விளையாடிய பருவமது
பகையென்றால் என்னவென்று அறியாதது
ஆற்றில் குளித்தும் , மரத்தில் தொங்கியும்
அரசயிலை தண்டை கண்ணாடியாய் பொருத்தியும்
கூடிவிளையாடி குதூகலித்த இனியனாள்
கூட்டான்சோற்றில்  பொங்கி வழிந்தன
ஒற்றுமை யெனும் உலகத் தத்துவம்
காக்காகடியில் பண்டங்கள் பகிர்ந்து
கவலை இன்னதென அறியாது வளர்ந்தோம்
அன்பு மட்டுமே இங்கு உண்டு
ஆதரவாய் தோழன் தோளுண்டு
பாசாங்கு இங்கில்லை பதவிசனமும் இங்கில்லை
பண்புகளோ தானாக நல்விதமானது
சூரியனுக்கே சவால் விட்டு பனிரெண்டை
பால்நிலவாக நினைத்தது உண்டு
திரும்ப கிட்டாத பாக்கியம்
நினைவில் மட்டும் தித்திப்பாய்...
                                               --பிரவீணா தங்கராஜ் .



Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...