முகவரியில்லா முதிர்கன்னி

இதோயிந்த காற்றை நீ சுவாசித்திருப்பாய்...!
இதோயிந்த அலையிலும் நீ கால் பதித்திருப்பாய்...!
இதோயிந்த உணவை நீயும் ருசித்திருப்பாய்...!
இதோயிந்த நிறம்கூட உனக்கு பிடித்தாயிருக்கலாம்...!
இதோயிந்த பாடல் கூட நீ கேட்டு ரசித்திருப்பாய்...!
இதோயிந்த வழியாய் நீ பயணித்தீர்ப்பாய்...!
எனக்கான நீ பிரபஞ்சம் அழியும் முன்
ஜாதகம் பார்க்காது , வரதட்சணை கேட்காது ,
நிறம் , படிப்பு பொருட்படுத்தாது...!
கரியநிற மேனிகொண்ட பெயரையும் எழுதறியாத
பிறந்ததிகதி கூட தெரியாத ஏழ்மை கொண்ட
முகவரியில்லா முதிர்கன்னியை
தேடிக்கொண்டு இருப்பாய் ... என்னைப் போலவே...!
                         -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...