அம்மா
பாலும் சோறும் நீ பிசைந்து
பாசமதிலே நீ குழைத்து
நிலவுக்காட்டியே சோறூட்ட
நீ வேண்டும் அம்மா...
மடிமீது நான் சாய
நித்திரையில் தலைக்கோதி
நெற்றியிலே இதழ்ப்பதித்து
புன்னகைத்தே காத்திடுவாய்...
என்னப்பிடிக்கும் ஏதுப்பிடிக்கும்
என்பதெல்லாம் நானறியும் முன்னாலே
நீயுணர்ந்து செயல்படுவாய்...
தோழியாய் கதைகதைத்து
முதல்தோழியாய் மாறிப்போவாய்...
இடையில் எனை அமர்த்தி
விழியில் வழிநடத்து
நான் உலகம் பார்ப்பதற்கும் .
-- பிரவீணா தங்கராஜ் .
பாசமதிலே நீ குழைத்து
நிலவுக்காட்டியே சோறூட்ட
நீ வேண்டும் அம்மா...
மடிமீது நான் சாய
நித்திரையில் தலைக்கோதி
நெற்றியிலே இதழ்ப்பதித்து
புன்னகைத்தே காத்திடுவாய்...
என்னப்பிடிக்கும் ஏதுப்பிடிக்கும்
என்பதெல்லாம் நானறியும் முன்னாலே
நீயுணர்ந்து செயல்படுவாய்...
தோழியாய் கதைகதைத்து
முதல்தோழியாய் மாறிப்போவாய்...
இடையில் எனை அமர்த்தி
விழியில் வழிநடத்து
நான் உலகம் பார்ப்பதற்கும் .
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment