வலி என்னுள்ளே ...
அர்த்தமற்ற பேச்சுயென்று
நீ புறம்தள்ளும்
ஒவ்வொரு மறுபேச்சிலும்
இதெல்லாம்
தேவையற்ற வேலைகளென
நீ பாதணி மாட்டி
அலுவலகம் சென்றதும்
எண்ணிலடங்கா வலியேந்தியே
தவிக்கின்றேன்
மணி மூன்றை காட்டிய பிறகும்
சாப்பிட மனமின்றி
சாப்பிட்டாயா கேட்க யாருமின்றி
தனியுலகில் நேரங்களின்
வெறுமையை
எனக்குள்ளே ஜிரணித்தும்
ஏற்றுக்கொண்ட பிறகே
மாலையில்
உந்தன் சிறு முயற்சியும்
வானளவு புகழ்கின்றேன்
வலி என்னுள்ளே இருக்கட்டும்
நீயறியா வேண்டாமென ....
-- பிரவீணா தங்கராஜ் .
நீ புறம்தள்ளும்
ஒவ்வொரு மறுபேச்சிலும்
இதெல்லாம்
தேவையற்ற வேலைகளென
நீ பாதணி மாட்டி
அலுவலகம் சென்றதும்
எண்ணிலடங்கா வலியேந்தியே
தவிக்கின்றேன்
மணி மூன்றை காட்டிய பிறகும்
சாப்பிட மனமின்றி
சாப்பிட்டாயா கேட்க யாருமின்றி
தனியுலகில் நேரங்களின்
வெறுமையை
எனக்குள்ளே ஜிரணித்தும்
ஏற்றுக்கொண்ட பிறகே
மாலையில்
உந்தன் சிறு முயற்சியும்
வானளவு புகழ்கின்றேன்
வலி என்னுள்ளே இருக்கட்டும்
நீயறியா வேண்டாமென ....
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment