மும்மதம்
மசூதி அருகே இருக்கும்
அன்வர்பாய் கடையில்
கறியை கவ்விய
காக்கையொன்று
பெருமாள் கோவில் கோபுரத்தில்
உண்டு முடித்து
தேவாலயத்தின் மணிக்கூண்டில்
இளைப்பாறி
ஏழையொருவன் கூரை வீட்டின்
அருகே உள்ள அதன் மரக்கூட்டிற்கு
சென்றே விட்டது .
அதனிடம் யார் சொல்வது
மும்மதத்தினையும்
கலந்தே விட்டாயென்று...!
-- பிரவீணா தங்கராஜ் .
அன்வர்பாய் கடையில்
கறியை கவ்விய
காக்கையொன்று
பெருமாள் கோவில் கோபுரத்தில்
உண்டு முடித்து
தேவாலயத்தின் மணிக்கூண்டில்
இளைப்பாறி
ஏழையொருவன் கூரை வீட்டின்
அருகே உள்ள அதன் மரக்கூட்டிற்கு
சென்றே விட்டது .
அதனிடம் யார் சொல்வது
மும்மதத்தினையும்
கலந்தே விட்டாயென்று...!
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment