Posts

🐜எறும்புகள் பேசினால்...🐜

நில் நில் மனிதா ..! சற்றே கூர்ந்துப் பார் பாதசாரியில் பணிந்தே செல்கின்றேன் பருக்கையை உதாசீனமாக தவற விட்டாய் சஞ்சீவி மலைப் போல் சுமந்துக் கொண்டு நடக்கின்றேன் எனக்கு அவை தான் தேவாமிர்தம் சேமிக்கின்றேன் உணவினை சுறுசுறுப்பாய் கடக்கின்றேன் நிமிடங்களை நேர்வரிசையில் நடக்கின்றோம் ஒருவித ஒழுங்கோடு இதெல்லாம் உன்னிடமில்லாதது தான் எறும்பாய் எனக்கு வித்திட்ட வாழ்வில் உன் பாதம் பட்டாலே மரணமென்றாலும் நான் கலங்குவதில்லை நில் நில் மனிதா ...! சற்றே கூர்ந்துச் செல் எனக்கும் ஒரு காதலியிருப்பாள் எனக்கும் குடும்பம் குழந்தையிருக்கும் உந்தன் அலட்சியம் எந்தன் வாழ்வை பலிகொள்வதா ..?! நில் நில் மனிதா ..! சற்றே கூர்ந்துப் பார்த்துச் செல் . எறும்புகளான நாங்களும் உங்கள் உலகில் தான் வாழ்கின்றோம் .                  -- பிரவீணா தங்கராஜ் . 

⚡ மணல் கோட்டை⚡

Image
வந்தவ ரெல்லாம் நல்லது செய்வாரென விழித்துக்கொண்டே நாட்டிற்காக கனவுக்கண்டேன் வருவோர் போவாரெல்லாம் பதவியேற்றனர் வளத்தை இழந்தே போகின்றன எந்நாடு வல்லரசு நாடென வலித்து சொல்லிட வேண்டவில்லை வளத்தை மாத்திரம் எஞ்சியிருக்க ஆசைக் கொண்டு கோட்டை கட்டினேன் மணற்கோட்டையாய் சிதைத்திடவே செய்தீரே...!                        -- பிரவீணா தங்கராஜ் .

அக்கோடைமழை ...

யாவரும் எதிர்பார்த்த அக்கோடைமழை யதார்த்தமாக பொழிந்துக் கொண்டுயிருக்கின்றன துளியாய் துளித்துளியாய் ... முதலில் கடுகளவு சிந்திய அத்துளி எஞ்சிய மரத்தின் இலையிலிருந்த வாகன தூசுகளையும் மாசுகளையும் சற்று பெருந்தூரலால் கழுவி சுத்தம் செய்தன பின்னர் கருப்பு தார்சாலை முழுதும் அச்சரால் பரவியே போயின மழையின் பெருந்தூரலால் ஆங்காங்கே மாடியில் எடுக்கப்படாத துணிகள் முழுதும் நனைந்தன நீருக்கு தவித்த மக்கள் அக்கோடை மழையை கண்டு சிலர் முகம் சுளிக்க கப்பல் விட காகிதம் தேடின சில குழந்தைகளும் குழந்தை மனமும் கவிதை பாடின சில கவிஞன் உள்ளம் காக்கை கூட மரத்தில் அமர்ந்தவாறு தொப்பலாய் நனைந்து தன் கண்களை உருட்டி உருட்டி மழையை விழி விரிய கண்டுயிருந்தன அந்த தெருவோரமிருந்த குடிசையில் படுத்துறங்க இடமின்றி எங்கே எங்கே மழைநீர் ஒழுகுமோ அங்கங்கே தட்டு முட்டு பாத்திரங்கள் தேடியபடி வைத்தே  அம்மழையை அப்பொழுதும் வேண்டி ரசித்தபடி இன்னும் இருக்கின்றன டிஜிட்டல் இந்தியா .                                           -- பிரவீணா தங்கராஜ் .  

நிமிர்ந்து பார்த்திடு மகனே!

Image
  உன் தாயின் வயிற்றில் அமர்த்தலாக அமர்ந்தப் போதே நான் நெஞ்சில் யுன்னை சுமக்கத் தயாரானேன் செவிலியுன்னை துணிச் சுற்றித் தர பெற்றுக் கொண்டேன் மகனே குழந்தையான உன்னைமட்டுமல்ல எந்தன் யுலகத்தையும் எச்சியொழுக புரியாமொழியில் நீ பேசிட நானோ ஜென்களின் தலைவன் பேச்சிக்கு கட்டுப்பட்டவன் போல கிடந்தேன் தளிர் நடையில் மொட்டு கையில் என் சிகையினை பிடித்திழுத்து நீ செய்யும் குறும்புகளில் நான் கோமாளியாய் நனைந்தேன் உன் ஏக்கப்பார்வை போகும் திசையெல்லாம் என் மனக்குறிப்பில் எழுதி உனக்கே அறியாது ஆச்சரியமூட்டும் பரிசாகத் தர வியப்பில் விழிகள் விரிய குதூகலிப்பாய் தேரில் சிங்கத்தின் மேல் பவனி வரும் அம்மனை காண தோளில் உனையேற்றியே ரதமாவேன் அக்கணம் குழம்புவது என்முறை தேரில் வருவது இறையா ?! அல்லது தோளில் அமர்ந்திருக்கும் நீ இறையா ?! காய்ச்சலென கட்டிலில் இமை மூடி உறங்குவது நீ சோம்பியிருப்பது நான் . பள்ளிச் சென்று பாடம்படித்து கேள்விகள் பல எழுப்புவாய்...! மெத்த படித்த நானோ எதற்கும் பதில் தெரியாதது போல பாவலா செய்திட முல்லை சிரிப்பில் அப்பாவிற்கு ஒன்றும் தெரியாதென ஜம்பமாய் விடை சொல்வாய் எ

பெண்ணே...!

கவிதையின் நயம் கண்டு  காகிதம் சிலிர்ப்பதில்லை சிற்பத்தின் எழில் கண்டு  உளிகள் உணர்வதில்லை ஓவியத்தில் மிளிரும் வண்ணத்தை   தூரிகைகள் கண்டதில்லை வாசமுணர்ந்து பூக்கள்  மணப்பதில்லை பெண்ணே உன் சக்தியை  நீயும் உணர்ந்ததில்லை                    --பிரவீணா தங்கராஜ் .

பூக்கள் கேலிப் பேசுகின்றன

பூங்காவினுள் நுழைந்ததுமே பூக்கள் கேலிப் பேசுகின்றன ஆயிரம் கதைப் பேசியதேயிடம் அயலார் போல எண்ணமிட செய்தது அதேயிருக்கையில் அமர்வு ஆனால் அன்று போல் துள்ளலில்லை மனக்குன்றல் மட்டுமே அன்று தந்தையின் கண்ணில் அகப்பட்டோம் காதலனோடு இல்லத்தில் சிறைப்பட்டேன் தற்கொலை நாடகம் வெற்றி பெற்றன கூடவே ஜாதி மதம் பணம் பகட்டு குடும்ப கௌரவமெல்லாம் கரம் பற்றினேன் தோற்று போயின ஒரு உண்மை காதலும் இரு மனமும் அன்றுயமர்ந்த அதேப் பூங்கா பூக்கள் கேலிச் செய்கின்றன அன்று பிடித்த கரம் இல்லையென்று                -- பிரவீணா தங்கராஜ் .

இது கணிதமல்ல வேதியல் -காதல் பிதற்றல் 35

*காதல் பிதற்றல் * கவிதை எழுதி காதலை கதைக்க தெரியாதுயென திரையிசை மென்பாடலை ஒலிக்கவிட்டு கந்தப்பார்வை வீசுகின்றாய் அப்பார்வை சொன்னதடா ஓராயிரம் காதல் கவிதைகளை எனக்காக மட்டுமே நீ எழுதியதாக .               *** வட்ட வடிவ தோசைகள் பிய்த்து ஊட்டுகையில் இதயம் வடிவம் பறக்கின்றது இது கணிதமல்ல வேதியல் ...                  -- பிரவீணா தங்கராஜ் .

துளி துளியாய் - காதல் பிதற்றல்- 34

நீ என்னுள் எப்பொழுது நுழைந்தாய் என்று யோசித்து யோசித்து களைப்பு அடைத்து விட்டேன் நீயோ துளி துளியாய் இப்படி யோசிக்க வைத்து தான் என்னுள் நுழைந்தாய் யென்பதை அறியாது              -- பிரவீணா தங்கராஜ் .

நீக்குகின்றேன் மீன் செதில்களை

அக்கடை கடக்கும் போதெல்லாம் ஒவ்வாமை தான் எனக்குள் நாசியினை கைக்குட்டையால் நுகர்ந்துகொண்ட பின்னும் ஒவ்வாமை சமிக்ஜை போகாது அத்தகைய பாவையான யென்னிடம் மீன் போன்ற கயல்விழி போன்றவளேயென்ற ஏக வெள்ளித்திரை வசனத்தை பேசியே அன்பை கொட்டிவிட்டாய் காதல்யெனும் மரத்தை வளர்த்துவிட்டாய் அதனாலோ என்னவோ எனக்கு பிடிக்காத அக்கடையின் வாடையை சகித்துக் கொண்டு வாங்கி விடுகின்றேன் உன் தாயின் கை பக்குவத்தில் பாதியாவது வரவேண்டுமென்ற ஆசையுடன் நீக்குகின்றேன் மீன் செதில்களை .                                        -- பிரவீணா தங்கராஜ் .

பருகும் தேனீர்

Image
ஒரு மிடறு பருகி முடித்தேன் தித்திக்கின்றது தேனீர் அன்றொருனாள் உன்னிடம் பேசியருந்திய அதேயினிய நினைவுகள் அடுத்த மிடறு பருகினேன் சிறிது கசந்தன அதே தேனீர் நீ விலகி சென்ற கசந்த நினைவுகள் அதே தேனீர் ருசி மாறின உன் நினைவுகள் மட்டுமே என் வாழ்வை இனிமையாக்குவதோ கசப்பாக்குவதோ முடிவெடுக்கின்றன யென்பதை அடுத்த மிடறில் உணர்ந்தேன்.         --பிரவீணா தங்கராஜ்.