👸 மகள் என்னும் வரம் 👸
மென்பாதங்கள் மடியில் உதைத்து மொட்டாய் பூமிக்கு வந்த பொக்கிஷமவள் கண்ணனின் குறும்பைக் கொண்டு பிறந்த ராதை அவள் அல்லி ராணி பட்டம் பெறும் அடம் பிடிக்கும் கள்ளியவள் ஒரே இடத்தில் அமர்ந்திடாது சிறகை விரிக்கும் வண்ணத்துப்பூச்சியவள் மென் பாத கொலுசுகள் சலசலத்திடும் வீணையவள் சீனிப் பெட்டி எடுத்துத் தின்னும் நவீன கண்ணனின் குறும்பை எடுத்து இயம்பும் சூட்டிகையவள் இரு சக்கர வாகனத்தைக் கூட பறக்கும் ரதமாக மாற்றிடும் தேவதையவள் அவள் குறும்பைக் குறிப்பெடுக்க வானத்தின் வெள்ளை தாள் போதாது என் செல்ல மகளே... வரமாக வந்த தேவதையே...! -- பிரவீணா தங்கராஜ் .