எனது இறைவன்
வாக்குவாதங்கள் நீண்டன கடவுளில் சிறந்தவர்
யாரென்று
வீடே போர்களமாய்...
அதிர
பொருட்கள் சேதாரம்
கூடுதலானது
இறைவன் ஒருவனே
என்றேன் நான் .
செவிமடுக்க செய்யாது
வாய்த்தகராறு
கைதகராறாக மாறியது .
இனியும்
காவல் உத்தரவுயிடாவிட்டால்
நிலைமை கட்டுக்கு அடங்காதென
அப்பா வரும் நாழியிது
இருவரும் சொல்பேச்சை
கேட்டால் சிறந்தது
என்றதும் அடக்கினர் .
உணவு விழுங்கி
உறக்கம் தழுவினர்
உறக்கத்தில்
இறைவன் ஒருவனே
என்பதை எடுத்துரைத்தனர்
அக்கா தங்கை இருவரின்
கைகோர்த்தபடி ...
-- பிரவீணா தங்கராஜ் .
யாரென்று
வீடே போர்களமாய்...
அதிர
பொருட்கள் சேதாரம்
கூடுதலானது
இறைவன் ஒருவனே
என்றேன் நான் .
செவிமடுக்க செய்யாது
வாய்த்தகராறு
கைதகராறாக மாறியது .
இனியும்
காவல் உத்தரவுயிடாவிட்டால்
நிலைமை கட்டுக்கு அடங்காதென
அப்பா வரும் நாழியிது
இருவரும் சொல்பேச்சை
கேட்டால் சிறந்தது
என்றதும் அடக்கினர் .
உணவு விழுங்கி
உறக்கம் தழுவினர்
உறக்கத்தில்
இறைவன் ஒருவனே
என்பதை எடுத்துரைத்தனர்
அக்கா தங்கை இருவரின்
கைகோர்த்தபடி ...
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment