*வானக்கடலில் ஓடி விளையாடுவோம்!!*

வானவில்லை ஏணியாக்கி
மேகத்திரை விலக்கிச் சென்று
வானக்கடலில் ஆடி மகிழ்வோம்
குட்டிப் பெண்ணோ வானகடலில்
நட்சத்திர மீன் பிடித்து சிரிக்கையிலே...
சுட்டி பையன் நிலவுதனை
எட்டி உதைத்து  மகிழ்ந்திடவே...
வானக்கடலில் மேக அலையில்
சிப்பி பொருக்கி களித்திடுவோம்
கற்பனை யில்லா கனவில்லாது
சிறகை விரித்தே பறந்திடுவோம்
வானவில்லின் ஏணியினை வாசமிக்க
மலரினைக் கொண்டு அலங்கரிப்போம்
நிஜ உலகுக்கு செல்லாது இங்கேயே
நிஜமாய் வானக் கடலில் ஆடிமகிழ்வோம் .
                             -- பிரவீணா தங்கராஜ் . 


Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...