பைத்தியக்காரன்

பணத்திற்கும் பகட்டிற்கும்
பரவசமில்லா பரதேசியவன்
இருக்குமிடம் தெருச் சாலை
உடுத்துமாடை கிழிசல் என்றெல்லாம்
கவலைப்படாத ஜென்மம் அவன்
சொர்க்கம் , நரகம், இன்பம், துன்பம்
உணவு, உறக்கம், உறவு
இத்யாதிகளை துச்சமென எண்ணுபவன்
பணத்தை கூட காகிதமென்பவன்
ஞானியின் சிந்தனையுடைய இவனை
ஞானியென்று கூறுவர் சிலரே
பலருக்கோ இவனொரு
பைத்தியக்காரன்
அப்படியெனில்
ஞானிக்கும் பைத்தியக்காரனுக்கும்
வித்தியாசமில்லையோ..?!
                            -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...