நடைபாதை கடைகள்

கூவி கூவி விற்றாலும்
கூறுக் கட்டி வைத்தாலும்
இன்று பறித்த காய்கனியை
வாங்க  மறுப்பதேனோ ...?
நாட்கள் வாரங்களாகின
குளிரூட்டப்பட்ட அறையில்
வளமாக அமர்ந்துக் கொண்டு
தோள்பைக்கும் சேர்த்தே
காசை வசூலிக்கும்
இடத்தில் தான்
வாங்கத் தோன்றுமோ ?
ஏன்
விற்பவனின் கசங்கிய ஆடையும்
அழுக்குப்  படிந்த முகமும் ,
குளிர்அறையில் இருப்பவனுக்கு
இல்லையென்றா...?!
இரண்டில் நமக்கு
ஆரோக்கியம் எதுவோ ?
யாமறிவேன்
யாருமறிவனரோ பரம்பொருளே !
          --பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1