வாடகை தாயாக....



அவள் பெண்னென்று
இன்று தான் அறிந்தேன்
உணவினை நேரந்தவறாது
கொடுப்பது மட்டுமே
என் கடமையென
நினைத்தேன்
உணவு கொடுப்பதற்கும்
காரணமுண்டு
அவளும் ஒருவிதத்தில்
மாற்றுத்திறனாளி தான்
ஏதோ
ஒரு விபத்தாகக்கூடும்
அதில் தான்
அப்படி
உடலை ஊனம் செய்திருக்கும்
இப்பொழுது அந்தக்கதை
சொல்லவரவில்லை
தனித்திருக்கும் அவளிடம்
தாய்மையின் வெளிப்பாடை
கண்டேனின்று
அவள் கூட்டில் கண்ட முட்டைகளே
அதற்கு சாட்சி
ஒரு பக்கம் இறக்கையிழந்து
நீண்டதூரம் பறக்கயியலாதவளின்
கூட்டில் முட்டைகள் .
அவளுக்கு தெரியும் அது தன்
முட்டைகள் இல்லையென்று
இருப்பினும் அடைகாக்கிறாள்
ஒருவேளை
குயில் குழந்தைக்கு
வாடகை தாயாகயிருக்க
முடிவு செய்திருப்பாளோ ....?!

                -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...