மாயா கண்ணன்

மாயா கண்ணனின் அழகில் மயங்கிய
மாது ராதையே... கண்ணனே... உன்
மனதைப்  பறித்து போன மன்மதேனே...
கருமைதான் உன் நிறமென்றாலும் மங்குவதில்லை
காதலுமென்றும் அளவில் குறைவதில்லை
இதயத்தில் அமர்வாய்... இடையினை தொடுவாய்...
இணைவாய் தருவாய் உன் போன்ற உருவிலொரு சிசுவாய்
உந்தன் அணைப்பொன்றை பெற துடித்திடவே
உந்தன் ராதையை ஏங்கச் செய்கின்றாய்....
நாவில் ருசியில்லை... நலிந்தும் போனேனே...
நாமெனும் பந்தத்தில் மீண்டும் துளிர்ப்போமே...
கோபியர்  கொஞ்சும் கண்ணனே - நீ
கோகுலத்தில் சீதைக்கு உரியவனாகவே வந்திடு!
கொஞ்சும் தமிழில் கதை அளாவி
வஞ்சமின்றியே காதல் மழை பொழிந்துவிடு !
கண்ணன் ராதை காதலை போல்
காவியத்தில் என்றும் பெயரை நிலைநாட்டுவோம் .

                                           --பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...