நான் பெண்
மென்சாரால் மேகத்தினுள் இறங்கி
மென்பாதத்தில் தேடி ஓடி வந்திட ,
அதற்கு கண்ணாமூச்சி காட்டியப்படி
அரசுப் பயணியர் நிழற்குடையில் ஒதுங்கிட,
என்னை போலவே சிலர் மென்சாரலுக்கு
கண்டு உவகையோடு உள்வந்தனர்.
சொட்டு சொட்டாய் சொட்டுகையிலே - என்
சொர்க்கமாக கண்டுலயித்தேன்- எங்கிருந்தோ
துர்நாற்றம் புகை வந்துவீச திரும்பினேன்
துருவனோருவன் புகைத்துக் கொண்டுயிருந்தான்
மழையென்றால் என்போன்றோர் இரசிக்க
மண்போன்றோர் புகைப்பார் போல
நமக்கேன் வம்பென பேருந்தினை எதிர்நோக்கினேன்
நங்கையொருத்தி வயிற்றில் சிசுவோடு இரும்பிட
இம்முறை அமைதிகாக்க மனமொப்பவில்லை...
இதே ஆணாக பிறந்திருந்தால் தவறை எடுத்துரைபேனோ ?
நான் பெண்ணாக பிறந்துவிட்டேனே ...😔
நானெனும் உள்மனம் சினத்தைமட்டும் தகிக்க
கனல்களை கண்களில் கொண்டு வந்தேன் -என்
கண்களில் அவன் தவறை கண்டு உணர்ந்தானோ ?!
அவனே ' சாரி சிஸ்டர் ' என்று ஆங்கிலத்தில்
நயமாக சொல்லி நகர்ந்தே போய்த்தொலைந்தான்
நானும் உணர்ந்தேன் அப்பொழுதுதான்
ஆணின் பேச்சில் புரியவைக்கும் ஒன்றை
பெண்ணின் பார்வை கூட உணர்ந்திட இயலுமென்று
இம்முறை நிமிர்ந்த நடையுடன் கூறிக்கொன்டேன்
என் மனதிடம்-நான் பெண்ணாக பிறந்துவிட்டேனென்று 😊.
-- பிரவீணா தங்கராஜ் .

Comments
Post a Comment