யாசகம்
அவன் யாசகம் கேட்டு கொண்டியிருந்தான்
அருகில் இருக்கும் பேருந்தில் தான்
பலரும் சில்லறை கொடுக்க தயங்கினர்
பள்ளிமாணவன் தோற்றமாதலால்
சிலரின் கருத்தோ படிக்கும் வயதில் பிச்சையா ?
சிலரின் எண்ணமோ உடலின் நலமிருக்க எதனால் ?
அவனிடமே கேட்டுவிட்டேன் .
யாருமில்லாத அவனுக்கு
திருடி பிழைக்க மனமில்லையாம்
அதற்கு பிச்சைக்காரனாக
இருப்பதே மேலானதென
சொல்லி இடம் பெயர்ந்தான்
வேறேங்கே பிச்சை கேட்டுத்தான் ....
நீங்கள் கேட்பது புரிகிறது
நீ என்ன செய்தாய் .... கேள்வி எழுப்பாதீர்கள்
என்னால் இயன்றது
ஒரு நாணயத்தை வழங்கினேன்
வேறு என்ன செய்ய
வேலை தேடும் இளைஞன் நான் .
-- பிரவீணா தங்கராஜ் .
அருகில் இருக்கும் பேருந்தில் தான்
பலரும் சில்லறை கொடுக்க தயங்கினர்
பள்ளிமாணவன் தோற்றமாதலால்
சிலரின் கருத்தோ படிக்கும் வயதில் பிச்சையா ?
சிலரின் எண்ணமோ உடலின் நலமிருக்க எதனால் ?
அவனிடமே கேட்டுவிட்டேன் .
யாருமில்லாத அவனுக்கு
திருடி பிழைக்க மனமில்லையாம்
அதற்கு பிச்சைக்காரனாக
இருப்பதே மேலானதென
சொல்லி இடம் பெயர்ந்தான்
வேறேங்கே பிச்சை கேட்டுத்தான் ....
நீங்கள் கேட்பது புரிகிறது
நீ என்ன செய்தாய் .... கேள்வி எழுப்பாதீர்கள்
என்னால் இயன்றது
ஒரு நாணயத்தை வழங்கினேன்
வேறு என்ன செய்ய
வேலை தேடும் இளைஞன் நான் .
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment