உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...-5

💟(௫) 5 பரிதியின் கதிர் அங்கே இருக்கும் இடமெல்லாம் வெளிச்சம் தர மித்திரன் சோம்பலுடன் எழுந்தான். இன்று ருத்திராவை பிரிய வேண்டும். துர்வசந்திரன் எந்த நங்கையை தேர்ந்து எடுத்து பலியிட போகின்றானோ அதனை தடுத்து அவனை அங்கே முன்னே அமர்த்தி அவனின் எண்ணத்தை கலைய வேண்டும்.... இத்தனையும் முடியுமா? அவனும் நானும் பயின்றது ஒன்றல்லவா... அவன் என்னை மாற்றி விட்டால்? இல்லை பிறப்பு என்பது எமக்கு முன்னால் அவதரித்து இருக்கலாம்.... ஆனால் எம்மை வீழ்த்த ஒருவன் பிறப்பெடுக்க வேண்டுமெனில் அது யாம் பெற போகும் சேய்களாக தான் இருக்க முடியும் என்றவனின் பார்வை ருத்திரா வதனதில் நின்றது. ''ருத்திரா... எமது பயணம் தொடர வேண்டும் உம்மை...'' என்றே தயங்க ...