ஓ... பட்டர்பிளை அந்த அறைக்குள் அவளை தள்ளி விடாத குறை தான். உள்ளே வந்தவளின் பார்வை அந்த அறையின் தோற்றத்தில் அச்சத்தை கொடுத்தது. அதிலும் அவனை காணுகையில் உடல் நடுக்கம் கூட கண்டது. அழுது முரண்டு செய்திட கூடாது என்ற அறிவுரையில் கண்ணீரை கட்டுப்படுத்தி நின்றாள். ''என்ன அங்கயே நிற்கற, இங்க வா'' என்ற குரல் தெளிவாக வந்து இவளை அடைந்தது. அவள் தயங்க, அவனோ முரட்டு தனமாக அவளின் கையை பற்றி மலர் மஞ்சதில் அவளின் அனுமதியின்றி கட்டி அணைத்தான். அவனை இதுவரை இரண்டு முறை பார்த்து இருக்கின்றாள். சில நாட்களாக போனில் பேசியிருகின்றாள். ஆனாலும் அவனின் பண்போ, குணநலனோ அறிந்திராத பேதை இவளுக்கு, இவனின் அணைப்பு பஸ்ஸில் தெரியாதவன் சீண்டும் ஒவ்வாமை தான் முன்னே வந்தது. அவள் குமட்டி கொண்டு விடுபட, அவனோ என்னாயே தள்ளி விடறியா என்றே மலரிதழில் வலிக்க வலிக்க முத்தமிட்டான். அவள் எவனோ ஒருவன் எச்சி என்ற அருவருப்பு கூடவே வர தன் ஒட்டு மொத்த பலத்தை கொண்டு அவனை தள்ளி நிறுத்தினாள். இது போதுமே... ஆண்மகன் என்ற அகம்பாவத்தை கிளர்த்து விட, பெண்ணவளினை மென்மையாக பதவிசமாக கையாளும் முதலிரவில் ...